சனி, 22 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் , புதுவருட வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களின் வீடுகளில் இயேசு பிறந்த மாட்டுக்  கொட்டகையை அப்படியே அமைத்து,  பெத்லகேமில் பிறந்த இயேசுவின் இருப்பிடத்தை  அவரவர் வீடுகளில் கொண்டு வந்துவிடுவார்கள். இந்த குடில் வைக்கும் பழக்கம் 1223 -ம் ஆண்டு இத்தாலி நாட்டின் பிரான்சிஸ் அச்சி  என்ற புனிதரால்  தொடங்கி வைக்கப்பட்டதாம். 

சிறு வயதில் கிறிஸ்துவர்கள் வீடுகளுக்கு இந்த குடில் அமைப்பைப் பார்க்க  ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து வருவோம்.  ஒவ்வொரு வீட்டில் மிக எளிமையாக, சில வீடுகளில்  வெகு அலங்காரமாய் எல்லாம் வைத்து இருப்பார்கள்.
                               
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் போய் இருந்தோம் மாமாவீட்டு பக்கம்  உள்ள படக்கடையில் அனந்தபத்மநாபன் படமும், இயேசுவின் குடிலும் விற்பனைக்கு வைத்து இருந்ததைப் படம் எடுத்தேன்.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்

Image may contain: one or more people, people standing and outdoor

தம்பி மகள் வளைகாப்பு விழாவிற்கு தென்காசி போனோம் 12ம் தேதி.  அப்போது போகும் வழியில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் உள்ள அனுமன் கோவில் போனோம்.

கடையநல்லூர்  தாலுகாவில் இருக்கிறது. தென்காசியிலிருந்தும் சங்கரன் கோவிலிலிருந்தும் போகலாம்.

திங்கள், 17 டிசம்பர், 2018

இறை அருள் கிடைக்கும் மார்கழி

மார்கழி அதிகாலையில் குளித்து, தன் வீட்டிலும் கோலம் போட்டுவிட்டு ஐயனார் கோவிலிலும் வந்து கோலம் போடும் கோதையர்கள்
சிறு பெண்கள் இப்போது  இப்படி காலையில் எழுந்து கோவிலுக்கு வந்து கோலம் போடுவதைப் பாராட்டவேண்டும். நான் பாராட்டினேன். அவர்களுக்கு மகிழ்ச்சி, வெட்கம் கலந்த புன்னைகையுடன் அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். அவர்களிடம் கேட்டுக்கொண்டு அவர்கள் கோலம் போடுவதைப்  படம் எடுத்தேன்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சனி, 1 டிசம்பர், 2018

சிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது


எங்கள் வீட்டில்  முனியா குருவி  கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று.

புள்ளிச்சில்லை (முனியா பறவை)  

இந்த பறவை எங்கள் வீட்டில் கூடு கட்டியது பற்றி எழுதிய  பதிவுக்கு  ஸ்ரீராம் கொடுத்த பின்னூட்டம்.

//பறவைகளுக்கு தெரிந்திருக்கிறது.. தங்களுக்கு பத்திரமான இடம் எது என்று! நன்றாய் கூடுகட்டி, அழகாய் பிள்ளை பெற்று சௌக்கியமாய்க் கிளம்பட்டும்.//

ஸ்ரீராமின் வாக்கு படி அழான பிள்ளை செளக்கியமாய்  கிளம்பி பறந்து போனது . (ஒன்று மட்டும் இன்று பறந்து போனது.)

வெள்ளி, 23 நவம்பர், 2018

அண்ணாமலைக்கு அரோகரா!

விழா நாயகர் லிங்கோத்பவர்

திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதைக் காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

திங்கள், 19 நவம்பர், 2018

புதன், 14 நவம்பர், 2018

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்மகன் இந்த முறை நவராத்திரிக்கு  சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.
கந்தன் கருணையில் வரும் காட்சியை    முருகனும், சூரனையும்  பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து இருந்தான்.   நவீன பொம்மலாட்டம். கொலுவிற்கு வந்த குழந்தைகள் , பெரியவர்கள் ரசித்தனர். நீங்களும்
பார்த்து விட்டு எப்படி என்று சொல்லுங்கள்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

கந்தவேள் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று 6 வது நாள் .

முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு.

காலம் காலமாய் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முடிவில் நல்லது வெற்றிபெறும். தீயவை அழியும் என்பது நீதி.  அதுதான் கந்த சஷ்டி விழா நமக்கு உணர்த்தும் பாடம்.
சிவபக்தனாக இருந்தாலும் ஆணவத்தால் பாலகன் என்று ஏளனம் புரிந்து அவரை எதிர்த்து யுத்தம் புரிந்து, உடல் பிளவுபட்டு ஒரு பாதி சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறினாலும் முருகனை எதிர்த்து போர் புரிந்தான், அவைகள் மீது திருநோக்கம் செய்து சாந்தப்படுத்தித் தஞ்சம் அடைய வைத்துச் சினம் கொண்ட சேவலையும், செருக்குற்ற மயிலையும் தன்னிடம் பற்றுக் கொண்ட ஞானியாக மாற்றினார் முருகன்.

பகைவனுக்கும் அருளிய கருணை வள்ளல். சேவலைத் தேரில் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.


திங்கள், 12 நவம்பர், 2018

வருவான் முருகன் தருவான் அருளை

முருகன் வருகைப் பாடல் :-
பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்டவருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம் பூணவருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண் முகத்தோடணைத்துச் சீராட்டி
முத்தமிடற்கு வருக எதிர் மொழிகண் மழலை சொல வருக
தன்னெறில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினல்மை
சாத்தவருக மேலாகத் தானே வருக தேவர் தொழு
மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
வளஞ்சேர் பழனிச்  சிவகிரி வாழ் வடிவேல் முருகா வருகவே.

கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று 5 வது நாள்
இந்தப் பதிவில் இரண்டு பாடல்களைக் கேட்போம். இரண்டும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்கும் போகும் பாதையை நன்னெறிப் படுத்தவும்- இறைவன் வழிபாடு. கந்தன் அன்பும் கருணையும்  இந்த இருபாடலில் விளக்கமாய் இருக்கிறது, எது உண்மைப் பொருள் எது நிரந்தரமானது எல்லாம் இந்தப் பாடலில் விளக்கமாய் இருக்கிறது.

ஞாயிறு, 11 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம்- 4கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று நான்காவது நாள்  முருகனுக்கு உகந்த காவடிச் சிந்து பாடல்களைக் கேட்கலாம்  இந்த பதிவில்.

அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூடப் பாடிச் சாதனை புரிந்தவர்.
அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார். காவடிச் சிந்து, வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர்.
- விக்கிப்பீடியா
                                      
                                              பாடியவர் சுதா ரகுநாதன்

சனி, 10 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம் -3


கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று மருதமலை முருகையா பாடலை ரேடியோ சிட்டியில் வைத்தார்கள். மதுரை சோமு அவர்களின் குரலும், பாடல் வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையும் எல்லாம் சேர்ந்து கேட்கும் போது கண்ணில் நீர்துளிர்க்க வைக்கும் பாடல்.

இந்தப் பாடலைத்தான் இன்று  பகிர எண்ணி இருந்தேன். கீதா அவர்களின் பதிவு அதைக் கண்டிப்பாய் போட வேண்டும் எண்ணத்தை வளர்த்து விட்டது. ஸ்ரீராமுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அவர் வியாழன் எழுதிய பதிவு நிறைய பேரை எழுத ஊக்கப்படுத்துகிறது. நன்றி ஸ்ரீராம், நன்றி கீதா.

வெள்ளி, 9 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம் - 2

மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - டி,எம் .எஸ் அவர்கள் பாடல்.

இன்று கந்த சஷ்டி இரண்டாவது நாள். என்ன எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது காலை ரேடியோ சிட்டியில்  இந்தப் பாடலையும் வைத்து சஷ்டி கவசம் இயற்றப்பட்ட வரலாறு சொன்னார்கள். இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும்.

வியாழன், 8 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம்திருவேடகம் செல்லும் பாதையில்  இருந்த கோவில்


முருகனுக்கு உகந்த விரதங்கள் மூன்று. வாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் செவ்வாய்க் கிழமை விரதம்,  நட்சத்திரத்தை வைத்து கடைப்பிடிக்க வேண்டிய விரதம் கார்த்திகை விரதம், திதியை வைத்து கடைப்பிடிக்கப்படுவது சஷ்டி விரதம்.

முருகனுக்கு உகந்த விழா கந்தசஷ்டி விழாவாகும்.  சூரபன்மனைச்  சம்ஹாரம் செய்த வைபவத்தைக் கொண்டாடுவது கந்தசஷ்டி விழா.

இன்று கந்த சஷ்டி தொடக்க நாள்.  கந்தன் பெருமைகளை, பாடல்களைப் பாடி விரதம் இருப்பார்கள். தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்னே சஷ்டி விழா வந்து விடும். 

தீபாவளி பலகாரங்களை மறந்து மன வைராக்கியத்தோடு  கந்தனை நினைத்து வேண்டும் வரங்களைத் தரச்சொல்லி விரதம் இருப்பார்கள்.
ஆறு நாளும் மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் சிலர். ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்பவர்கள்  உண்டு, அவர்கள் காலையும், மாலையும் பால் பழம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு. சூரசம்காரம் அன்று முழுவது உணவு அருந்தாமல், மறுநாள் விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். ஆறு நாளும் சாப்பிடாமல் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருப்போரும் உண்டு.

செவ்வாய், 6 நவம்பர், 2018

சில நினைவுகள்

தீபாவளி நினைவுகள் - அத்தை மாமா அவர்களின் நினைவுகள் தீபாவளி நாளான இன்று  மனதை நிறைத்து இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு ஊருக்குப்போய் அத்தை மாமாவுடன் கொண்டாடுவது இதுவரை வழக்கம். இப்போது அவர்கள் இல்லாததால் ஊருக்குப் போகாமல் இருப்பது  மனதுக்கு வேதனை அளிக்கும் விஷயம். இம்முறை நான்கு தினங்கள் விடுமுறை .எல்லோரும் உறவுகளுடன் பன்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்து இருப்பீர்கள். நானும் கொஞ்சம் என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

காலை இந்த பஜ்ஜி, வடை, சுசியம், இட்லி  இவைகளை அவர்கள் கையால் செய்தால் தான் ஆனந்தம். மதியம் நாங்கள் சமைப்போம் , அவர்கள் ஒய்வு எடுத்துக் கொள்வார்கள் மகன்களுடன்  உரையாடி. 

இந்த நினைவுகளை தொகுப்பாய் மகன் எங்கள் குடும்ப வாட்சப் குழுவில் அனுப்பி மகிழ்ந்தான். நான் இதை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

புதன், 31 அக்டோபர், 2018

இருள் விலக்கும் பண்டிகை

மகன் வீட்டு வாசலில்  ஆலோவீனுக்கு வைத்து இருந்தது. டிராகன் போல் பல், நாக்கை நீட்டிக் கொண்டும் இருக்கும் பொம்மை  மகனே செய்தது.டிராகன் வாயிலிருந்து புகை வருவது போல் செய்து இருந்தான்.

நாங்கள் ஆலோவீன் கொண்டாட்டத்தைப் போன  ஆண்டு மகனுடைய ஊரில்  கொண்டாடி மகிழ்ந்தோம். அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

திங்கள், 29 அக்டோபர், 2018

தோசை அம்மா தோசை !


குருணை தோசை , முழு உளுந்து தோசை என்பார்கள். முன்பு வீட்டில் நெல் அரைத்து அரிசி  எடுப்பார்கள், அப்போது அரிசியை   முழு அரிசி தனியாக, குருணை தனியாக எடுத்து வைத்து இருப்பார்கள், அதிலும் சிறு குருணை, தனியாக, பெரிய குருணை என்று எடுத்து வைத்து இருப்பார்கள். அதில் பச்சரிசிக் குருணை, புழுங்கல் அரிசிக் குருணை என்று தனித் தனியாக எடுத்து வைப்பார்கள். 

அந்த குருணைகளில் விதவிதமாய் உணவுகள் செய்வார்கள், காய்ச்சல் வந்தால் குருணைக் கஞ்சி செய்வார்கள், உப்புமா செய்வார்கள். குருணைத் தோசை செய்வார்கள். மீதி குருணைகள் பறவைகள், எறும்புகளுக்கு உணவாகும்.

 இப்போது நாம் குருணை, கல் நீக்கிய முனை உடையாத  முழு அரிசி வாங்கி கொண்டு இருக்கிறோம். அதனால் குருணைத் தோசை என்று சொல்லாமல் முழு உளுந்து  தோசை என்று சொல்கிறோம்.
வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஜன்னல் வழியே!எங்கள் வீட்டு  ஜன்னல் வழியே  பறவைகளைப் பார்த்து ரசிப்பதைப்    பகிர்ந்து வருகிறேன். இந்தப் பதிவில் குருவிகள். மீண்டும் குருவிகள் குஞ்சு பொரித்து இருக்கிறது. வீட்டைச் சுற்றி குருவிகள் சத்தம் கொடுத்துக் கொண்டு சுற்றித் திரிகிறது, உணவு எடுத்து குஞ்சுகளுக்கு கொடுக்க.

வியாழன், 25 அக்டோபர், 2018

அன்னாபிஷேகம்

Image may contain: people standing, plant, food and indoor
ஐப்பசி மாதத்தில்  பெளர்ணமியன்று சிவபெருமானுக்கு  அன்னாபிஷேகம் செய்வார்கள்.  இந்த அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டால்  உணவுப் பஞ்சம் ஏற்படாது என்றும் சொல்வார்கள். 

வெள்ளி, 19 அக்டோபர், 2018

கொலுப்பார்க்க வாருங்கள் -7

அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம்  கழுத்து நகை பட்டை(காசுமாலை)   கணவர் செய்தது.

கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா நிறைவு அடைவதால் சில நவராத்திரி நினைவுகள்.
ஒவ்வொரு வருடத்தில் என் கணவர்  சரஸ்வதி பூஜைக்கு அம்மன் செய்வார்கள்  அதில் சில   அம்மன்களைப் பார்க்கலாம்.  மஞ்சள் அரைத்து அம்மன்  முகம் செய்வது வழக்கம் எங்கள் குடும்பத்தில்.  அதை மாற்றி சந்தனத்தில் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்கள் என் கணவர்.  திருவெண்காடு, மாயவரத்தில் கண் கொசு நிறைய மழைக்காலத்தில் வரும் அது அம்மனை மிகவும் தொந்தரவு செய்தது அதனால் சந்தனத்தில் செய்தார்கள்.

புதன், 17 அக்டோபர், 2018

கொலுப் பார்க்க வாருங்கள் - 6
நவராத்திரிக்கு   கோவில்களில், வீடுகளில் உள்ள  கொலுவைத் தொடர் பதிவாக பதிவு செய்வதைப் பார்த்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தத் தொடரில் கடல் கடந்து வந்து இருக்கும் கொலு படங்கள்.

மகனின் நண்பர் வீட்டில் உள்ள கொலு படங்கள்.

போன வருடம் நாங்கள் நவராத்திரிக்கு மகன் ஊரில் இருந்தோம் அப்போது கொலுவிற்கு நிறைய நண்பர் வீடுகளுக்குப் போய் கொலு பார்த்து வந்ததைப் பதிவு செய்து இருந்தேன்.

போன வருடம் போக முடியாத நண்பர்கள் வீடுகளுக்கு  இப்போது போய் வந்து  நாங்கள் பார்க்க படங்கள் அனுப்பினான் மகன், அதை இங்கு நீங்கள் பார்க்க இங்கு பதிவாய்.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

கொலுப்பார்க்க வாங்க -5

நவராத்திரி பதிவாய் கோவில்கள், வீடுகளில் வைக்கும் கொலுவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 

இன்று  மதுரை சொக்கலிங்க நகர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் கொலு.
இந்த கோவிலில் சரஸ்வதிக்குத் தனி சன்னதி உள்ளது சிறப்பு.  மீனாட்சி சொக்கநாதர், சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி,  அனுமன்,  நவக்கிரகம் , தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சப்தமாதர்கள் 
மற்றும் ஐயப்பன் தனிச் சன்னதியில் இருக்கிறார். ஐயப்பன் சன்னதி மாதப்பிறப்பு மட்டும் தான் நடை திறக்கப்படும் . அன்று  காலை, மாலை திறந்து இருக்கும் மற்ற நாள் நடை சார்த்தி விடுகிறார்கள். ஐயப்பனுக்குப் பின்புறம் மஞ்சமாதா இருக்கிறார். பைரவரும் விநாயகரும் அரசமரத்தடியில் இருக்கிறார். கருப்பண்ணசாமி இருக்கிறார். எல்லாவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

திங்கள், 15 அக்டோபர், 2018

கொலுப் பார்க்க வாங்க -- 4


இன்று  மதுரை சோமசுந்தரம் காலனி  கற்பக விநாயகர் கோவில் கொலு 
இக்கோயில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கிறது. எல்லா விழாக்களும் சிறப்பாய் நடைபெறும். பிள்ளையார், சாய்பாபா, துர்க்கை, அனுமன், பெருமாள், மீனாட்சி, சொக்கநாதர், நவக்கிரங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன், பைரவர், ஐயப்பன்  சண்டிகேஸ்வரர்  என்று எல்லோரும் அருள் பாலிக்கும் கோயில்  .

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சனி, 13 அக்டோபர், 2018

கொலு பார்க்க வாருங்கள் -2
"கொலு பார்க்க  வாங்க" தொடர் பதிவில் இன்று இரண்டாவது நாள். நேற்று ஜெயநகர் பிள்ளையார் கோவில் இன்று "பொன்மேனி பொய்சொல்லா அய்யனார் கோவில்" கொலு  பாருங்கள்.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

கொலு பார்க்க வாருங்கள் -1

Image may contain: one or more people
நவராத்திரி  கொலு  என்றால் கோவில்களில். வீடுகளில் பார்ப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். பெரியவர் முதல் சிறியவர் வரை  கொலு பார்ப்பதில் ஆவலாக இருப்பார்கள்.

ஒவ்வொரு படியிலும் கொலுபொம்மைகளை  அமைக்கவேண்டிய விதி முறைகளை  எல்லோரும் சொல்லிக் கொண்டு இருந்தாலும்  அவரவர்களுக்கு மனதில் தோன்றிய மாதிரி அடுக்கி அழகு பார்ப்பதும் உண்டுதானே!

எங்கள் வீட்டில் இந்த வருடம் கொலு இல்லை. அடுத்தவருடம் பொளச்சிக் கிடந்தா இறைவன் அருளால் கொலு வைப்போம்.

பொளச்சிக் கிடந்தா வரேன் தாயி ! என்ற பதிவில் எங்கள் வீட்டுக் கொலுவைப் பார்க்கலாம்.

கோவில்களில், வீடுகளில் வைத்த கொலுவைப் பார்த்து மகிழ்ந்து எடுத்து வந்த படங்களை வரும் நாட்களில் பார்க்கலாம். என்னுடன் கொலு பார்க்க வருவீர்கள் தானே!

திங்கள், 8 அக்டோபர், 2018

ஜன்னல் வழியே!

கீழே என்ன செய்கிறாய்? மேலே வா 
இங்கும் உணவு இருக்கு மேலே வா

திங்கள், 1 அக்டோபர், 2018

முதியோர் தினச் சிந்தனைகள்.அக்டோபர் முதல்தேதி சர்வதேச முதியோர்தினம்  

நான் முன்பு போட்ட முதியோர் தினப் பதிவுகளைப் படித்துப் பார்த்தேன். அதிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.   

  கனவில் வந்த காந்திஜி  என்ற பதிவில்    முதியோர் பற்றிய    கேள்விக்கு   என் பதில்.

கனவில் வந்த காந்திஜி  என்ற தொடர் பதிவு
 தேவகோட்டை கில்லர்ஜி   அழைப்பு . ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை அழைத்தார்கள் அப்படி என்னை அழைத்தவர் சகோ துரை செல்வராஜூ அவர்கள்.

4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

//முதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால்  நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள்.

 அவர்களில் ஏழை முதியோர்கள், ஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்கக் கூடாது என்று அரசாங்கமே  அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க  உணவு, உடை, மருத்துவ வசதி,  அன்பாகப் பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.//

சனி, 29 செப்டம்பர், 2018

காட்சி தந்த பெருமாள்


கன்னடிய பெருமாள்  திருக்கோவில் பழனியிலிருந்து தெற்குத் திசையில் கொடைக்கானல் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் அதிகம் செல்லாத சிறு திருக்கோவில்.இக் கோவில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ளது. இதைச் சிறு குன்று என்றும் சொல்லலாம்.

திருவிளையாடல் சினிமாவில் பார்வதி சிவன் விளையாடிய விளையாட்டை,
கோபித்துக் கொண்டு வந்த முருகனுக்குச் சொல்வார் , அதன் பின் முருகனைச் சமாதானம் செய்து அழைத்துப்  போவார். போகும் முன்  இனி
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார். அப்படிப் புகழ் பெற்ற பழனியில்  மாமன்   பெருமாளும்  இருக்கிறார்.அந்த இடம் தான் கன்னடிய பெருமாள் கோவில்

முற்காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்குச் சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர்த் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையைக் கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைக்காலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .
நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலைச் சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டுப் பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.

சனி, 22 செப்டம்பர், 2018

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை

செளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில்   ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள்  கோவில்

நான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்  சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று   நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள்.  தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில்  இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால்  இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும்  கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.  

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கூடல் அழகர் தரிசனம்

அஷ்டாங்க விமானம்

மங்களா சாஸனம் :-
திருமங்கை யாழ்வார்
திருமழிசையாழ்வார்

//கோழியும் கூடலும்கோயில்கொண்டகோவலரேஒப்பர், குன்றமன்ன
பாழியந்தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம்  எண்ணில் மாகடல் போன்றுளர்,கையில்வெய்ய
ஆழியொன்றேந்தி ஓர் சங்குபற்றி அச்சோ ஒரு வரழகியவா!//
--திருமங்கையாழ்வார்.

அழைப்பான் திருவேங்கடத்தானைக்காண
இழைப்பான் திருக்கூடல்கூட- மழைப்பே
ரகுவிமணி வரன்றிவந்திழிய யானை
வெருவியரவொடுங்கும்வெற்பு.
-- திருமழிசையாழ்வார்.


ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பெருமாள் தரிசனம்.

அருள்மிகு கூடல் நகர் திருக்கோயில்
நாங்கள் உள்ளே போகும்போது பந்தல் போட ஆரம்பித்தார்கள்.

வியாழன், 13 செப்டம்பர், 2018

பிள்ளையார் பிள்ளையார் !

மனிதர்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவது பிறந்த நட்சத்திரம் வைத்து. கடவுளர்களுக்குத் திதியை வைத்து.  ஆவணி சதுர்த்தி -பிள்ளையார் பிறந்த நாள். இப்படி இன்று காலையில் தொலைக்காட்சியில் 'இன்று நாள் எப்படி' என்று சொல்பவர் சொன்னார். பிள்ளையார் பிறந்தநாள் மிகச் சிறப்பாய்க்  கோலாகலமாய்க் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.  

.
பாதையோரம் இரட்டைப் பிள்ளையார்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பாரதியார் கவிதைகள்.

பாரதியின் நினைவு நாள். இன்று.
அவரை நினைவு கூர்வோம்.                 காலைப் பொழுது (மாயவரம் மொட்டை மாடியில் எடுத்த படம்.)

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், 
புன்மை யிருட்கணம் போயின யாவும், 
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, 
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன் 
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம 
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே 
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! 

புதன், 5 செப்டம்பர், 2018

குழந்தைகள் உலகம் தனி உலகம்!

Image may contain: 2 people, people standing, tree and outdoor
சிறுவர்களின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!
கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாடி
மகிழ இந்த ஐயனார் குதிரைகளும் காத்து இருக்கிறதோ!
குழந்தைகளே மகிழ்ந்திருங்கள்! வாழ்க வளமுடன்.

சின்னஞ் சிறு வயதில் விளையாட்டில் மட்டுமே கவனம் இருக்கும்  எல்லா குழந்தைகளுக்கும் காலை முதல் இரவு வரை விளையாட்டுதான்.
புதுப் புது விளையாட்டுக்கள் , அலுக்காத விளையாட்டுக்கள்.

சனி, 1 செப்டம்பர், 2018

கிரிதர கோபாலா!


நடுவில் இருக்கும் மீரா என் மகன் வாங்கித் தந்தான் கொலுவுக்கு பல வருடங்களுக்கு முன். 
கண்ணன் ராதை, கண்ணன் இரண்டும் மாயவரம் நட்புகள் வாங்கித் தந்தது கொலுவுக்கு.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

ஓவியர் மாருதி அவர்களின் பிறந்த நாள்.ஓவியர் மாருதி அவர்கள்


அற்புத ஓவியர் மாருதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(எனது 'கண்மணி' நாவலுக்கு அவர் வரைந்திருந்த அழகோவியம்!)

முகநூலில் கே.பி. ஜனார்த்தனன்  அவர்கள் ஓவியர் மாருதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிஇருந்தார். அவர் கதைக்கு ஒவியர் மாருதி வரைந்த இந்தப் படத்தையும் போட்டு இருந்தார்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பிறந்தநாள்! இன்று பிறந்த நாள்!

பேரன் அழைப்பது போல் மருமகள் செய்த கேக்  ஏ.டி தாத்தா என்று தான் அழைப்பான்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ஏரிக்கரையோரம்

'
கண்மாயிலிருந்து திரும்பி வரும் வழியில் கண்ட விழாப் படங்கள் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன்.

புதன், 22 ஆகஸ்ட், 2018

மாடக்குளம் கண்மாய்

மாடக்குளக் கண்மாய்  இருபக்கமும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

ஆடிப்பெருக்கும் கோவில் விழாக்களும் பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம். 

 மாடக்குளக் கண்மாயைப் பார்த்துவிட்டு வரலாம் என்று  அப்படியே  போனபோது  கண்மாயின் நிலை,  வழியில் கண்ட விழாக்  கோலாகலம் , கபாலீஸ்வரி கோவில், மலையடிவாரத்தில் உள்ள கோயில் ஆகியவை அடுத்த பதிவில்  என்று  தொடரும் போட்டேன்.


--------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 15 ஆகஸ்ட், 2018

பாரததேசம் என்று பெயர் சொல்லுவோம்.
புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம்.


பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

-மகாகவி பராதியார்

அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்!


 வாழ்க வளமுடன்.
-----------------------------------------------------------------------------------

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ஆடிப்பூரம்

ஆண்டாளின் வரலாறு சொல்லும் படம். (பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாகக் கோதை அவதரித்தாள்.

அன்னவயல்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல்பதியம் இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச்சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்லபல்வளையாய்!  - நாடி நீ
வேங்கடவற்குஎன்னைவிதியென்ற இம்மாற்றம்
நாம்கடவாவண்ணமேநல்கு.

- உய்யக்கொண்டார் அருளிச் செய்தவைவிகடனில் என் சேகரிப்பு.

துளசிவனம்
ஆண்டாள் அவதரித்த துளசி வனம் 
ஸ்ரீ வில்லிபுத்தூர்க் கோவில்  என்ற என் பழைய பதிவில் விரிவாக எழுதி இருக்கிறேன் படங்களும் நிறைய இருக்கிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.
                                                         வாழ்க வளமுடன்.