வெள்ளி, 9 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம் - 2

மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - டி,எம் .எஸ் அவர்கள் பாடல்.

இன்று கந்த சஷ்டி இரண்டாவது நாள். என்ன எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது காலை ரேடியோ சிட்டியில்  இந்தப் பாடலையும் வைத்து சஷ்டி கவசம் இயற்றப்பட்ட வரலாறு சொன்னார்கள். இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும்.

கந்த சஷ்டி பாடலை எழுதியவர்  பாலன் தேவராய சுவாமிகள். இவர் சிறந்த முருக பக்தர்.  அவர் பிறப்பு, எங்கு பிறந்தார் என்பது எல்லாம் சரியாகத்  தெரியவில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.
இந்தப் பாடல் எழுதியது பல  ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். இப்பாடல் எழுதப்பட்ட இடம் பற்றிக்கூறும்போது சிலர் பழனி என்றும் சிலர் திருச்செந்தூர் என்றும் சொல்கிறார்கள்.

வரலாறுகள் எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதொரு கவசம் அவரால் கிடைத்து இருக்கிறது. மக்களை உடல் துன்பம், மனத்துன்பத்திலிருந்து ஆறுதல் படுத்த.

ஆறுபடை வீடுகளுக்கும்  கவசம் பாடல் எழுதி இருக்கிறார். அவற்றில் திருச்செந்தூர் கவசம் தான் மிக புகழ் பெற்றது. அதற்கு முக்கிய காரணமும் உண்டு.

பாலன் தேவராய சுவாமிகள் வயிற்று வலியால் மிகவும் கஷ்டப்பட்டார், எந்த வைத்தியத்தாலும் அவர் வயிற்றுவலி குணமாகவில்லை. திருச்செந்தூர் வந்தார் செந்திலாண்டவரை தரிசனம் செய்ய.

                                  திருச்செந்தூர்  ( நான் எடுத்த படங்கள்.)
அப்போது கந்தசஷ்டி விழா நடந்து கொண்டு இருந்தது, அதைப்பார்த்தவுடன் , சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார். 

                                     
(தெய்வம் படத்தில் சீர்காழி, கோவிந்தராஜன் அவர்களும் டி.எம் .செளந்திராஜன் அவர்களும் பாடிய பாடல். இதில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இந்தப் பதிவுக்கு பொருத்தம் என்று போட்டு இருக்கிறேன் நட்புகளே! பாருங்கள்.)

                       
                                                    திருச்செந்தூர் கடல்.
கடலில் நீராடி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார் அப்போது முருகப்பெருமான் அவருக்குக் காட்சி தந்து  சஷ்டி கவசம் பாடும் படியும் சொன்னார். இதற்குத்தான் இறைவன் தேவராயரை திருச்செந்தூர் வரவழைத்து   இருப்பார் போலும்  வயிற்றுவலியை கொடுத்து .

பாலன் தேவராயரும் உடனே திருச்செந்தூர் சஷ்டி கவசம் பாடி விட்டார்.
அடுத்த 5 நாட்களில் மற்ற படைவீடுகளுக்கும் கவசம் பாடி விட்டார். இப்படி தனக்குக் கவசம் பாட வைத்து தேவராயர் வயிற்றுவலியைப் போக்கினார்.

பாடலை எங்கு அரங்கேற்றுவது என்று சுவாமிகள் நினைத்தபோது சென்னிமலையில் அரங்கேற்றம் செய்யச் சொன்னார் கனவில் வந்த முருகன்.
சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப் பட்டது என்பதும் செவி வழி செய்திதான்.

நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே  படித்து  இருக்கிறேன், மற்ற படைவீடுகளின் சஷ்டி கவசங்களைத் தேடி இந்த கந்த சஷ்டி நாளில் படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

மற்ற ஐந்து படை வீடுகளுக்கான கவச நூல்கள் பின்வருமாறு, திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்; பழனிப்பதி வாழ் அப்பன் கவசம்; திருவேரகம் வாழ் தேவன் கவசம்; குன்றுதோறாடும் முருகன் கவசம்; பழமுதிர்ச் சோலை பண்டிதன் கவசம் என்பன.

இவற்றைத் தேட வேண்டும் தேடிப் படிக்க வேண்டும்.இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என்று  சொல்வார்கள்.அப்படியே சோதனைகளைத் தந்தாலும் அதைத் தாங்கும் மனவலிமையைத் தரவேண்டும். 
நன்றி- கூகுள். இந்த படம் மட்டும் கூகுள்.

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய்போற்றி
முன்னியகருணையாறு முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்கா கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே  கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி
-திருச்செந்தூர்ப்புராணம்.
வாழ்க வளமுடன்.


18 கருத்துகள்:

 1. அற்புதமான பாடல்களோடு நல்லதொரு பதிவு சகோ. இப்பாடல்கள் அனைவரும் விரும்புவார்கள்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  பாடல்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என்று சொல்வார்கள்.அப்படியே சோதனைகளைத் தந்தாலும் அதைத் தாங்கும் மனவலிமையைத் தரவேண்டும். ..


  ஏனோ கண் கலங்குகிறது அம்மா இவ்வரிகளில்...

  எல்லாம் அவன் அருள் ..

  மிக அரிய தகவல்கள் அம்மா ...அற்புத படங்களுடன்...

  கந்தா சரணம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

   எல்லாம் அவன் அருள்தான் அனு. நம்மிடம் ஒன்றும் இல்லை.
   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
   கந்தா சரணம்.   நீக்கு
 4. நல்ல பதிவு. பாடல்கள் மிகவும் பிடித்த பாடல்கள். டிஎம்எஸ் குரல் கேட்க வேண்டுமா? அது போல் சீர்காழியின் குரல்!!

  பதிவுக்குப் பாடல்கள் மிக மிக பொருத்தம் ரசித்தோம்.

  படங்களும் மிக மிக அழகு. கந்த சஷ்டி கவசத்தில் பாலதேவராயன் என்று வருமே.

  அவர் வயிற்று வலி வந்து இப்படித் தீர்ந்த கதையும் தெரியும் என்றாலும் மற்ற தகவல்களையும் தெரிந்து கொண்டோம் சகோதரி/கோமதிக்கா

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசிதரன், கீதா , வாழ்க வளமுடன்.
   பதிவையும், பாடலையும் ரசித்து கருத்து சொன்னதற்கு
   நன்றி உங்கள் இருவருக்கும்.

   நீக்கு
 5. இரண்டுமே அருமையான பாடல்கள். புகைப்படங்களும் அருமை. காலை வணக்கம் அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   பாடல்களையும் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   இன்று காலை வணக்கம் சொல்ல வந்தது மகிழ்ச்சி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. அருமையான பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.

  சஷ்டி கவசம் அனைத்தும் உங்களுக்குக் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது போல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள் தான்.
   இன்னும் தேட ஆரம்பிக்கவில்லை கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன் வெங்கட்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. அருமையான பகிர்வு. பாடல்களும் எல்லாம் அருமை! எனக்கும் தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட மற்ற கவசங்களையும் தேடிப் பிடித்துப் படிக்க ஆசை. உங்களுக்குக் கிடைத்தால் பகிரவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   எனக்கும் தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட கவசங்களை படிக்க ஆசை தான், பதிவு, வீட்டுவேலை, கந்தபுராணம், சஷ்டி கவசம் என்று பொழுது போகிறது.
   முருகன் அருளால் சீக்கிரம் தேடி விடுகிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. குல தெய்வக் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் - தரிசனம் செய்து வரும் கோயில்...

  திருச்செந்தூர் சென்றாலே புத்துணர்வு தான்...

  காணொளி வழியாக
  இரண்டு பாடல்களுமே - காலத்தை வென்றவை...

  காக்க காக்க கனகவேல் காக்க!..

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  திருச்செந்தூர் என்றாலே புத்துணர்வு என்பது உண்மை.

  பாடல்கள் காலத்தை வென்றவைதான் பாடிய இருவரின் புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.


  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. படங்களும் பாடல்களும் பகிர்வும் அருமை.

  பதிலளிநீக்கு
 12. வனக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு