சனி, 22 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் , புதுவருட வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களின் வீடுகளில் இயேசு பிறந்த மாட்டுக்  கொட்டகையை அப்படியே அமைத்து,  பெத்லகேமில் பிறந்த இயேசுவின் இருப்பிடத்தை  அவரவர் வீடுகளில் கொண்டு வந்துவிடுவார்கள். இந்த குடில் வைக்கும் பழக்கம் 1223 -ம் ஆண்டு இத்தாலி நாட்டின் பிரான்சிஸ் அச்சி  என்ற புனிதரால்  தொடங்கி வைக்கப்பட்டதாம். 

சிறு வயதில் கிறிஸ்துவர்கள் வீடுகளுக்கு இந்த குடில் அமைப்பைப் பார்க்க  ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து வருவோம்.  ஒவ்வொரு வீட்டில் மிக எளிமையாக, சில வீடுகளில்  வெகு அலங்காரமாய் எல்லாம் வைத்து இருப்பார்கள்.
                               
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் போய் இருந்தோம் மாமாவீட்டு பக்கம்  உள்ள படக்கடையில் அனந்தபத்மநாபன் படமும், இயேசுவின் குடிலும் விற்பனைக்கு வைத்து இருந்ததைப் படம் எடுத்தேன்.
எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் முதியோர் இல்லத்தில் வைத்து இருக்கும் குடில். பச்சைப்பயிறு போட்டு  இருந்தார்கள் செடிகள் வளர . நான் எடுத்த போது அப்போதுதான் அமைத்துக் கொண்டு இருந்தார்கள் இப்போது நன்றாக வளர்ந்து இருக்கிறது, மீண்டும் கேட்டுப் படம் எடுக்க கஷ்டமாய் இருந்தது; போகவில்லை.( கதவு எப்போது பூட்டி இருக்கும்)
                                       

கிறிஸ்துமஸ் மரம். முதியோர் இல்லத்தில் வைத்து இருந்த மரம்.

500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தார்கள். 1841 -ம் ஆண்டுஇங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை  அறிமுகப்படுத்தினார்.

மனிதன் முதலில் இயற்கையை வழிபடும்போது மரத்தையும் வழிபட்டார்கள் என்று நினைவூட்டுவது போல் மரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து அதில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் எல்லாம் வைப்பார்கள். ஏழை எளியோருக்கு, உறவு, நட்பு என்று எல்லோருக்கும் அதில் பரிசு பொருட்கள் இருக்கும். குழந்தைகள் பெற்றோர்களிடம் முன்பு கேட்டதை அவர்களுக்குத் தெரியாமல் வாங்கி வைத்து இருப்பார்கள்.   இன்ப அதிர்ச்சிதர மரத்தின் அடியில் பரிசுப் பொருளை  வைத்து கிறிஸ்துமஸ் அன்று  கொடுத்து குழந்தைகளை மகிழ வைப்பார்கள்.

என் மகன் வீட்டிலும் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் மரம் வைப்பான். நண்பர்களை அழைத்து விருந்து அளிப்பான்.ஒவ்வொரு வருடமும் அவன் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு யாராவது ஒரு நண்பரின் குடும்பம் இருக்கும். நாங்கள் போய் இருந்தபோது  என் மருமகளின் தோழி குடும்பத்தினருடன் வந்து இருந்தார்.

அவர்கள் நியூயார்க்கில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போனதையும் அவர்கள் நன்கு உபசரித்ததையும் முன்பு பதிவு போட்டு இருந்தேன். அவர்களுடன்  நிறைய இடங்களை சுற்றிப்பார்த்தோம். அந்தப் பதிவுகளை இன்னும் போட நேரம் வரவில்லை.

இந்த ஆண்டு மகனுடன் பணிபுரிந்தவர்  வந்து இருக்கிறார் குடும்பத்துடன்,(வேறு ஊருக்கு மாற்றலாகி போய் விட்டார். ) இன்று அவருடன் பணிபுரிந்தவர்கள் அவரைப் பார்க்க வருவதால் அப்படியே அதை கிறிஸ்துமஸ் விடுமுறை நாளாக மாற்றிக் கொண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு உணவு தயார் செய்து கொண்டு வருவார்கள், மருமகள், இட்லி, சாம்பார், சட்னி , நிலக்கடலை சாட், மசாலா ,பூரி, உருளைக் கிழங்கு மசாலா செய்து இருக்கிறாள்.  


  
ங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில்  மரத்தில் தொங்கவிடப்பட்ட கிறிஸ்துமஸ் நட்சத்திரம்.

அரேபிய நாடான சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று அரசர்களுக்கு இறை இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அப்புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்படுகிறதாம்..

முன்பு நட்சத்திரங்களை வீடுகளில் அவர்களே செய்து தொங்கவிடுவாரகள். 

எங்கள் அண்ணன் முங்கில் குச்சிகளையும், கலர் பேப்பர்களையும் வைத்து நட்சத்திரம் செய்வார்கள்; பொங்கலுக்குத்  தொங்கவிடுவார்கள் வீட்டின் முன்பு.

                                                      
                                                  பனி பொழிந்து இருக்கும் வீடு
                                         
                                     தேவதை கிறிஸ்துவின் வரவை எதிர்பார்த்து
இந்தப் பொம்மையைப் பார்த்தவுடன் சிறு வயதில் என் மகன் தேவதூதுவனாக நடித்த  நினைவு வந்து விட்டது.


 இயேசுவின் பிறப்பை  அறிவிக்கும் தேவதூதனாகப்  பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில்.  மழலை மொழியில்  கைகளை மேலே தூக்கி வைத்துக் கொண்டு " பயப்படாதிருங்கள்! இதோ எல்லா  மக்களுக்கும் பெரு மகிழ்ச்சி தருகிற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இன்று ஆண்டவராகிய மேசியா என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்; குழந்தையை துணிகளில்  சுற்றி முன்னணையில் படுக்க வைத்திருக்கக் காண்பீர்கள்;  இதுவே உங்களுக்கு அடையாளம் "
என்று சொன்னான்.

அப்போது காமிரா இல்லை படம் எடுக்கவில்லை. பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாப் படங்கள் எடுத்து ஜெர்மனில் இருக்கும் தாளாளர் அம்மாவுக்கு அனுப்புவார்கள்.  பள்ளி வளாகத்தில் பலகையில் வைத்து இருப்பார்கள் ஆண்டு முழுவதும் , அடுத்த ஆண்டு வேறு வைப்பார்கள்.

அப்புறம் வரும் ஆண்டுகளில் வந்த  கிறிஸ்மஸ் விழாவில்  நடனம் ஆடினார்கள் என் பெண்ணும் , என் மகனும்.  பள்ளியில் போட்டோ எடுத்து விருப்பபட்டவர்கள் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்றார்கள் . ஒவ்வொரு ஆண்டும் படங்களை  வாங்கினோம்.

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே

இந்த பாட்டுக்கு என் பெண், மகன் இருவரும் ஆடி இருக்கிறார்கள் பள்ளியில்.
மேலே இருக்கும் பாடல் பி.சுசீலா அவர்கள் மிக அழகாய் பாடி இருப்பார்.
கீர்த்தனை பாடல் வலைத்தளத்தில் எடுத்து போட்டு இருக்கிறேன் அவர்களுக்கு நன்றி.

                                                          
போன ஆண்டு மகன் வீட்டில் இருக்கும்போது கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் விற்கும் கடையில் எடுத்த படங்கள்.

                                            
சான்டா கிளாஸ் எனப்படும் வெள்ளைத்தாடி, சிவப்புத் தொப்பி ஆடையில் வரும்  தாத்தா கிறிஸ்துமஸ் காலத்தில் கடைவளாகம், தேவாலயங்களில் , இருப்பார். கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிவருபவர்களில் ஒருவர் இந்த உடை அணிந்து வருவார். குழந்தைகளுக்கு சாக்லேட் தருவார்.

பரிசுப் பொருட்கள் அடங்கிய மூட்டையை முதுகில்  தூக்கிக் கொண்டு நள்ளிரவில் புகைக்கூண்டு வழியாக வருவார் வீடுகளுக்கு,  குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களைத் தந்து செல்வார், என்ற நம்பிக்கை  அந்தக் கால குழந்தைகளுக்கு இருந்தது.

 இந்தக் கால குழந்தைகளுக்கு இப்படிப் பார்க்கும் தாத்தாக்கள் உனக்கு என்ன பரிசு பொருள் வேண்டும் என்று கேட்கிறார்  குழந்தைகள் சொன்னவுடன் நான் வருவேன் உங்க வீட்டுக்கு  பரிசுப் பொருளோடு கிறிஸ்துமஸ் அன்று என்று சொல்கிறார். அதைக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா கொடுத்ததாக வாங்கி வைக்கிறார்கள் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில்.


                         
இந்தப் படம் விலங்குக் காட்சிசாலையில் "ஒளித் திருவிழாவில்"  கலந்து கொள்ள  கிறிஸ்துமஸ் தாத்தா  வந்து இருந்தார்.

அவரோடு படம் எடுத்துக் கொள்ளலாம்.  பணம் கொடுக்க வேண்டும்.  அப்படி எடுத்த படம்.

                                                  
                                                    இது ஒரு வருடம் எடுத்த படம்.

                                                 

போன ஆண்டு மகன் வீட்டில்

(பக்கத்து வீட்டில் வைத்து இருந்தது) பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதி 

பக்கத்து வீடுகளில் ஒரு வீட்டில் கள்ளிச் செடியும் கிறிஸ்துமஸ் குல்லா அணிந்து இருக்கிறது.

                                       
                                                              மகனின் பக்கத்து வீடு
தாத்தா கையில் உள்ள அட்டையில்  Happy Holidays என்று போட்டு இருக்கு.  விடுமுறை நாளை மகிழ்ச்சியோடு சொந்தங்கள் , நட்புகளுடன் மகிழ்வாய்  இருங்கள்.

கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஏஞ்சல், மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

விடுமுறைக்கு எல்லோரும் உறவினர். நண்பர் வீடுகளுக்குச் செல்வீர்கள். அதனால் இப்போதே அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும் சொல்லிவிடுகிறேன். இறை அருளால் வரும் ஆண்டு மகிழ்வான,  ஆண்டாய் இருக்கட்டும். அனைவருக்கும் எல்லா நலங்களையும், வளங்களையும் தரட்டும்.மாயவரத்தில் இருக்கும் போது ஒவ்வொரு ஆங்கிலப் புதுவருடத்திற்கும்  கங்கை கொண்ட சோழபுரம் போவது வழக்கம்.  பெருவுடையாரும், பெரியநாயகியும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் புத்தாண்டில் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

                                                      வாழ்க வளமுடன்.


----------------------------------------------------------------------------------------------------------------------------

60 கருத்துகள்:

 1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊ கிரிஸ்மஸ் கேக் எனக்குத்தான்:)... ஓஓஓஓஓ லலலாஆஆஆஆஆஆ.....:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   கேக் இல்லாமல் கிறிஸ்மஸ் வாழ்த்து போட்டு விட்டேன்.
   உங்களுக்கு கிறிஸ்மஸ் கேக் தருகிறேன்.

   நீக்கு
 2. கிரிஸ்மஸ் கதை பகிர்ந்தது அருமை... மதத்தைத்தாண்டி எல்லோருமே குதூகலித்து எல்லோர் வீடுகளிலும் கொண்டாடும் ஒரு பண்டிகை கிரிஸ்மஸ்தான், முக்கியமாக வெளிநாட்டில் இது எல்லோர் வீட்டிலும் இப்போ கொண்டாடப் படுகிறது.. நாங்களும் ட்ரீ வைட்த்ஹு விட்டோம்ம்.. இன்னும் கிஃப்ட் பக் பண்ணி முடியவில்லை, நேற்றுத்தான் எனக்கும் ஹொலிடே விட்டது[ஸ்கூல்] இனித்தான் அனைத்து வேலைகளும் பார்க்கோணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, நீங்கள் சொன்னது போல் மதத்தைதாண்டி எல்லோரும் குதுகலித்து கொண்டாடும் பண்டிகைதான்.
   நான் , என் குழந்தைகள் எல்லாம் கிறித்துவ பள்ளியில் படித்தோம்.
   அக்கம், பக்கம் கிறித்துவ நண்பர்கள் உண்டு. ஸ்ண்டே கிளாஸ் சென்று பாடி பைபிள் பரிசு பெற்று இருக்கிறேன்.

   நிறைய பாடல்கள், வசனங்கள் சொல்வேன்.
   உங்கள் வீட்டு விழாவிற்கு என் வாழ்த்துக்கள்.   நீக்கு
 3. படங்கள் அத்தனையும் அழகு.. சன்ராவுடன் எடுத்த படம் அழகு.. ஞாபகார்த்த சின்னம். எங்கள் வீட்டிலும் ஒவ்வொரு வருடமும் பிள்ளைகளை சன்ராவுடன் விட்டு எடுத்தோம் ஒரு 7,8 வயசுவரை.. பின்பு தாம் பேபி இல்லை என மறுத்து விட்டார்கள்.. :). இப்போதெல்லாம் நான் மட்டும் தான் ட்ரீ வைக்கோணும்.. லைட்ஸ் போடோணும் என அமளிப்படுவேன்ன்.. என்னை ஏதோ வேற்றுலகவாசிபோலவே பார்க்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரனை பிறந்தது முதல் இப்போதுவரை சன்ராவுடன் படம் எடுத்து இருக்கிறான்.

   இனி அவனும் உங்கள் குழந்தைகள் சொல்வது போல் சொல்லலாம்.

   மகன் வீட்டில் இப்போது எல்லோரும் வருவதால் உற்சாகமாய் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

   //இப்போதெல்லாம் நான் மட்டும் தான் ட்ரீ வைக்கோணும்.. லைட்ஸ் போடோணும் என அமளிப்படுவேன்ன்.. என்னை ஏதோ வேற்றுலகவாசிபோலவே பார்க்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:)..//

   இதே உற்சாகத்துடன் எப்போதும் இருங்கள் குழந்தைமனம் எல்லோருக்கும் கிடைக்காது.
   குழந்தைகள் பார்ப்பதை பொருட்ப்படுத்த வேண்டாம்.

   நீக்கு
 4. கோமதி அக்காவை உந்த ஒரேஞ் சாறியுடன் வேறு படத்தில் பார்த்திருக்கிறேனே.. அழகாக இருக்கிறீங்க... ஏஞ்சல்.. அஞ்சுவுக்கு தூது சொல்றேன்:) இல்லை எனில் அவ இதைப் பார்க்கும் வாய்ப்புக் குறைவே:)).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த புடவை வேறு அதிரா. நீங்கள் பார்த்த முன்பு பார்த்த் புடவை பாலிகாட்டான் சேலை.
   உங்கள் கருத்துக்கு நன்றி. ஏஞ்சலுக்கு தூது சொன்னதற்கு நன்றி.
   அவர்கள் ஆலயவேலைகள், வாழ்த்து அட்டை தயார் செய்யும் வேலை பண்டிகை வேலை என்று பிஸியாக இருப்பார்தான்.

   உங்கள் உற்சாகமான கருத்துக்களுக்கு நன்றி நன்றி அதிரா.

   நீக்கு
  2. ஆமாம் அக்கா ..பூனை cmail :) cat மெயில் தூது அனுப்பினதாலேயே எனக்கு தெரிஞ்சது :)

   நீக்கு
  3. கார்ட்ஸ் முன்பு செஞ்ச அதே மியூசிக் ஷீட்ஸ் ப்ரிண்ட்ஸ் எடுத்து அதில் குவில்லிங் மரம் செஞ்சேன்க்கா ஒரே மாதிரி 50 கேட்டாங்க உடனே செஞ்சு கொடுத்திட்டேன் ..ஏற்கனவே செய்த மாதிரினாலே படம் எடுக்கல .புது வருஷத்தில் உற்சாகத்துடன் இன்பலாகை திறக்கணும் நானும் ..

   நீக்கு
  4. ஏஞ்ச்ல் மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   புதுவருடத்தில் வலைத்தளத்தை திறந்து நிறைய பதிவு போடுங்கள், வாழ்த்துக்கள்.

   நீக்கு
 5. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா .படங்கள் எல்லாம் அழகு .எங்க மகளும் 11 வயது வரை சாண்டாவுடன் படம் எடுத்துக்கிட்டா .இன்னும் காட்டி சிரிப்போம் :)

  எங்க வீட்டு குடிலின் பொம்மைகள் 16 வருஷமா பத்திரமா வச்சிருந்தோம் ,,ரெண்டு நாள் முன்னாடி எங்க நாலுகால் பொண்ணு ஜெஸ்ஸி எதையோ இழுக்க உடைச்சிட்டா 3 பொம்மைகளை .ஸ்ட்ரோங் க்ளூ போட்டு ஒட்டி வச்சிருக்கோம் ..

  நாங்க சின்னதில் கடுகு விதை கேழ்வரகு விதைகளை விதைத்து குடில் அமைப்போம்
  இப்போ எல்லாமே ரெடிமேடா கிடைக்குது .மண்டே எங்க ஆலயத்தில் லிவிங் நேட்டிவிட்டி ..எல்லாரும் அந்தந்த கேரக்டர்ஸ் போல் ட்ரெஸ் செஞ்சி போய் நிக்கணும் ..மகள் என் பட்டுப்புடவையை எடுத்துக்கிட்டா 3 ராஜாக்களில் ஒருவராக செல்ல :) ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
   மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
   பொம்மைகளை ஜெஸ்ஸி உடைத்து விட்டாளா? பழைய பொம்மைகள் போல் இப்போது உள்ள பொம்மைகள் அவ்வளவு அழகாய் இல்லையே! பழைய பொம்மையை ஒட்டி வைத்து இருப்பது மகிழ்ச்சி.
   நாங்களும் கொலுவிற்கு கேழ்வரகுதான் போடுவோம் பார்க் அமைக்க. முதியோர் இல்லத்தில் அமைத்து இருந்த குடிலில் தான் பச்சைபயிறு பார்த்தேன்.
   ரெடிமேடா கிடைப்பது மகிழ்ச்சி. மகள் ராஜாவாக நடிக்கபோவது அறிந்து மகிழ்ச்சி.
   உங்கள் பிஸியான நேரத்திலும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்.
   மகளும், நீங்களும் செய்த வாழ்த்து அட்டைகளை பதிவில் போடுங்கள் .

   நீக்கு
  2. ஏஞ்சல் குதிச்சுட்டாங்க பாருங்க கோமதிக்கா...

   ஏஞ்சல் ஆஹா கேரக்டர் ட்ரெஸ்...சூப்பர் எஞ்சாய்...

   கோமதிக்கா உங்க படங்களைப் பார்த்தப்ப எனக்கு நாகர்கோவில் நினைவுகள். நான் படித்த பள்ளி மற்றும் இளங்கலை படித்த கல்லூரி கிறித்தவம் என்றாலும் மிக மிக நல்ல கல்விச்சாலைகள். எங்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. நானும் சர்ச் சென்று தொழுதுவிட்டு வருவேன். கிறித்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவி ஒருவர் ஒவ்வொரு வகுப்பாக வந்து சாக்லேட்ஸ் தருவார்...பள்ளி நிகழ்வுகள் ட்ராமாக்கள் எல்லாம் அருமையா இருக்கும்...

   கீதா

   நீக்கு
  3. நானும் சின்ன வயதில் நாகர்கோவிலில் இருந்து இருக்கிறேன். தூத்துக்குகுடி, பாளையங்கோட்டை எல்லா ஊர்களிலும் கிறித்தவ பள்ளிக்கூடத்தில் படித்து இருக்கிறேன்.
   கோவையில் சர்ச் அருகில் வீடு அதனால் சண்டே கிளாஸ் செல்வேன், பாடல்கள் பாடுவேன்.

   உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 6. காலை வணக்கம் கோமதி அக்கா. ஆருத்திரா தரிசன வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   ஆருத்திரா தரிசன வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. புதுவருடத்துக்கும் இப்போதே வாழ்த்து சொல்லி விட்டீர்களா? வெளியூர்ப்பயணமா என்ன? கிறிஸ்த்துமஸ் வாழ்த்துகள், புதுவருட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு போக வேண்டும்.அத்தைக்கு முதல் திதி. (மாமியாருக்கு)
   அதனால் முன்பே வாழ்த்து சொல்லிவிட்டேன்.
   அப்புறம் கிறிஸ்த்துமஸ் விடுமுறையில் எல்லோரும் ஊருக்கு போய்விடுவார்கள் இல்லையா அதனால் இப்போதே சொல்லிவிட்டேன்.

   நீக்கு
 8. நவராத்திரி கொலு பார்ப்பது போல வீடு வீடாகச் சென்று குடில் பார்த்து வருவார்கள் போல... நான் ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்டார் தொங்க விடுவதிப் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நவராத்திரி கொலு பார்ப்பது போல்தான் இருக்கும்.
   நானும் ஸ்டார் பார்ப்பேன் ஒவ்வொன்றையும் ரசித்து.
   மகன் வீட்டில் மிகவும் அலங்காரமாய் குடில் அமைத்து இருக்கிறான் வீட்டில் விருந்தினர் வருகையால் இன்னும் படங்கள் அனுப்ப வில்லை. பழைய படம் தேடவேண்டி இருந்தது.
   இரவு கொஞ்சம் தலைவலி வேறு. அதனால் அடுத்த தடவை போட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

   நீக்கு
 9. படங்களால் நிறைத்து விட்டீர்கள் பதிவை. பார்த்து ரசித்தேன். சுவாரஸ்யமான தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகன் வீட்டுக்குடில் இந்த வருடம் போடவில்லை, பழைய படங்கள் தேட வேண்டி இருந்தது .
   இரவு தலைவலி வேறு அதனால் இன்னொரு பதிவில் போடலாம் என்று தேடுவதை விட்டு விட்டேன்.
   படங்களை பிரித்து போட வேண்டும் என்று நினைப்பேன் , போடாமல் காலம் ஓடுது.

   நீக்கு
 10. பி சுசீலா பாடிய இந்தப் பாடலுடன் எனக்கு வேறு சில பாடல்களும் பிடிக்கும். அவை யாவன :

  அம்மா தேவனின் தாயே... அருளமுதான
  ஸ்ரீ இயேசு நாதருக்கு ஜெயமங்களம்...
  இயேசுராஜா முன்னே போகிறார்
  வானாதி வானங்களில்
  வங்கக்கடலில் ஒருமுத்தெடுத்தேன்
  எந்நாளுமே துதிப்பார்
  மாசிலா கன்னியே மாதாவே உன்மேல்
  அன்னையே ஆரோக்ய அன்னையே
  இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு பிடித்த பாடல் நிறைய இருக்கிறது ஸ்ரீராம்.
   போனவருடம் மகனின் ஊரில் கிறிஸ்த்துவ நண்பர் வீட்டுக்கு போய் இருந்தோம், அப்போது எனக்கு பிடித்த பாடல்களை சொல்லி எல்லோரும் சேர்ந்து பாடிக் கொண்டோம்.
   பள்ளியில் கற்ற பாடல்களை பகிர்ந்து கொண்டோம். நண்பர் மனைவி அழகாய் நான் விரும்பி கேட்ட பாடல்களை பாடி காட்டினார்.

   நீக்கு
 11. ஏஞ்சலுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துள்.

  பதிலளிநீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் , வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 13. அழகிய படங்கள் ரசிக்க வைத்தன...
  படங்களுக்கு கீழே விளக்கங்களும் அருமை

  எமது கிருஸ்துமஸ் வாழ்த்துகளும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 14. அழகிய படங்கள்... அருமையான தகவல்கள்...

  வாழ்த்துகள் அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 15. கோமதிக்கா இன்று ஆருத்ரா தரிசனம்....நல்ல தரிசனம் கிடைத்ததா? இனிதான் நாங்கள் கோயில் போலாம்னு நினைச்சுருக்கோம்...பார்ப்போம்....திருவாதிரை களியும், கூட்டும் செஞ்சு படைத்து சாப்பிட்டாச்சு...இதோ பதிவு முழுவதும் வாசித்து விட்டு வரேன். படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   இன்று மாலைதான் போக வேண்டும்.
   காலை கோவிலுக்கு போகவில்லை.
   அடுத்த ஆண்டுதான் திருவாதிரை களி செய்யவில்லை.
   களியும் கூட்டும் செஞ்சு சாப்பிட்டு விட்டீர்களா மகிழ்ச்சி.
   எங்கள் வீடுகளிலும் காலையே செய்துவிடுவோம்.
   பண்டிகைகள் எல்லாம் அடுத்த வருடம் தான்.
   வாங்க வாங்க .
   மெதுவா படித்து கருத்து சொல்லுங்கள்.

   நீக்கு
 16. அர்ச்ச சிஷ்டை அடையாளங்களாலே எங்களை ரட்சித்துக் கொள்ளும் பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தாலே ஆமென் ஏதோ நினைவில் எழுதியது சரியா தெரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   "உன்னதத்திலிருக்கிற கடவுளுக்கு மகிமையும்
   பூமியிலே சமாதான்மும்
   மனிதர் பேரிலே பிரியமும் உண்டாவதாக !"
   என்பது நினைவு இருக்கிறது.
   நீங்கள் சொன்ன வசனம் சரியா என்பதை ஏஞ்சல்தான் சொல்லவேண்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. கோமதிக்கா நானும் இபப்டித்தான் என் கிறித்தவ தோழிகளின் வீட்டிற்குச் சென்று குடில் பார்த்ததுண்டு. பள்ளி மற்றும் கல்லூரியிலும் குடில் அமைத்து மிக அழகாக அலங்கரித்திருப்பார்கள். ரொம்ப நல்லாருக்கும்...கிறித்தவ கீர்த்தனைகள் பாடுவார்கள். கோயர் பிரிப்பரேஷன் எல்லாம் நடக்கும்.

  உங்கள் படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.

  பேரன் மற்றும் நீங்கள் எல்லோரும் இருக்கும் அந்தப் படம் ரொம்ப அழகா இருக்கு. பேரன் கிறித்துமஸ் தாத்தாவின் மடியில் அமர்ந்திருப்பது பேரனின் சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது எடுத்தது இல்லையா?

  மகன் வீட்டு கிறித்துமஸ் அலங்காரம் அழகு என்றால் பக்கத்து வீடுகளிலும் அழகா இருக்கு. மகன் வீடு அரிசோனா மாநிலமோ....வீட்டு எதிரில் கொஞ்சம் வறண்ட இடம் போல இருக்கே தூரத்தில் மலைகள்....என்றாலும் இடம் அழகா இருக்கு அக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா, சிறுவயதில் மட்டும் அல்ல இப்போதும் குடில் பார்க்க ஆசைதான்.
   நீங்களும் என்னைப்போல் சிறு வயதில் குடில்களை பார்த்து வந்தது அறிந்து மகிழ்ச்சி.
   மகன் அரிசோனா மாநிலம் பீனிக்ஸ்.
   இடம் ரம்மியமாய் இருக்கும். பாலவனபிரதேசமாய் இருந்தாலும்.
   பேரன் சின்ன வயதில் எடுத்த்து.

   நீக்கு
 18. பாட்டு வரிகள் நன்றாக இருக்கிறது.

  மகனும், மகளும் ஆடியது எல்லாம் ஃபோட்டோ இருந்தால் அதை நீங்கள் ஃபோட்டோ எடுத்து இங்கு போட முடிந்தால் போடுங்களேன் அக்கா...

  நானும் ஆடியதும் டிராமாவில் பங்கெடுத்ததும் உண்டு ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்போது எல்லாம் ஃபோட்டோ எடுத்ததில்லை. பள்ளியில் ப்ரின்ட் போட்டு விலைக்குத் தருவார்கள் ஆனால் நான் வாங்கியதில்லை வீட்டில் அனுமதி கிடையாது. நான் வீட்டிற்குத் தெரியாமல்தான் பங்கெடுத்தது என்பதால்....

  அக்கா கிறித்துமஸ் வாழ்த்துகள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  தங்கள் அத்தையின்/மாமியாரின் திதி நல்லபடியாக நடந்திடட்டும். வணக்கங்கள். (ஸ்ரீராமுக்கு நீங்க கொடுத்த பதிலில் அறிந்தேன் அக்கா)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் ஆடிய போட்டோ எல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டேன்.
   வீட்டில் ஏதாவது இருந்தால் போடுகிறேன் கீதா.
   நான் பள்ளி பருவத்தில் நாடகம், நடனம், மறுவேடபோட்டி என்று எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். ஆனால் போட்டோ இல்லை.
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
   அத்தைஅவர்களின் த்திக்கு ஊருக்கு போவதால்தான் முன்பே பதிவு போட்டு விட்டேன்.
   எப்போது அங்க்கிருந்து வருவோம் என்று தெரியாது அதனால் தான்.
   பாட்டு வரிகள் ரசித்தமைக்கு நன்றி.
   உங்கள் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 19. அருமையான பதிவு. அசத்திட்டீங்க. நாங்களும் இம்மாதிரி கிறிஸ்துமஸ் சமயங்களில் ஒவ்வொரு வீட்டின் அலங்காரங்களைக் கண்டு மகிழ்ந்தது உண்டு. எங்க பெண் வீட்டில் ஆர்டிஃபிசியல் கிறிஸ்துமஸ் மரம் வைப்பார்கள். அது புத்தாண்டு தாண்டிக் கொஞ்ச நாட்கள் வரை இருக்கும். ஏஞ்சலுக்கும் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துகள். புத்தாண்டுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே. அப்போ வாழ்த்தலாம் என்றாலும் முன் கூட்டிய வாழ்த்துகளும்!

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  நீங்களும் கிறிஸ்துமஸ் சமயங்களில் ஒவ்வொரு வீட்டின் அழகையும் ரசித்தமைக்கு மகிழ்ச்சி.மீனாட்சி அம்மன் கோவில் போய் விட்டோம் இப்போதுதான் வந்தோம். 100 டிக்கட் வாங்கியும் அம்மனை பார்க்க முடியவில்லை. கூட்டம் அவ்வளவு இருக்கிறது சுவாமியை பார்த்து விட்டு நடராஜரை தரிசனம் செய்து வந்தோம். அம்மன், சுவாமி, பிரியவிடை அம்மன் ஆடிவீதி உலா பார்த்து வந்தோம். கூட்டம் கூட்டம் அப்படி கூட்டம். அம்மனுக்கு நலங்கு வைத்து ஏற்றி இறக்கி நடக்குமாம் அம்மன் ஊஞ்சலில் இருக்கிறார். மக்கள் காத்து இருக்கிறார்கள். நாங்கள் வந்து விட்டோம்.


  மகனும் ஆர்டிஃபிசியல் மரம் வைப்பான் வீட்டுக்குள் அதில் அலங்கார பொம்மைகள் கலர் குண்டுகள், ந்டசத்திரம் எல்லாம் வைத்து அலங்கரிப்பான்.

  ஊருக்கு போவதால் முன் கூட்டியே வாழ்த்துக்கள்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. ஆகா...
  ரம்யமான பதிவு....

  நான் தாமதமாக வந்திருக்கிறேன்...

  இனிய நினைவுகளைப் பகிர்ந்த விதம் அருமை.. அழகு..

  மதங்களைக் கடந்த மனித நேயம்...

  பாரதப் பண்பாடுகளில் இதுவும் ஒன்று

  அன்பின் இனிய நல்வாழ்த்துகளுடன்
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்.
   உங்கள் இனிய கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
   உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் பணியில் மனநிறைவு அடைந்து
   தொடர்ந்து முன்னேறிச்செல்ல வாழ்த்துக்கள்.
   வாழ்க வளமுடன்.

   நீக்கு
 22. புத்தாண்டு வாழ்த்துக்கள், கோமதிம்மா.
  சுவாரஸ்யமான தகவல்கள் என்று ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார். இனி தான் வாசிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.
  உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 24. கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகள் .
  படங்களுடன் அழகிய பகிர்வு.

  மகள்சிறுவயதாக இருந்ததில் இருந்து எங்கள் வீட்டிலும் கிறிஸ்துமஸ் மரம்,குடில் வைத்து அலங்கரிப்போம். இப்பொழுது மகள் வீட்டில் வைக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
   உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
   உங்கள் மகளுக்கு திருமணம் ஆகி விட்டதா? வாழ்த்துக்கள் மகளுக்கு.
   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.

   நீக்கு
 25. பெத்தலையில் பிறந்தவரை - இந்தப் பாடலை நான் 6ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஒரு பெண் பாடினாள். அப்போ மனசுல 'வெத்தலைல எப்படிப் பொறப்பாங்க' என்று நினைத்திருக்கிறேன். பெத்தலஹேமை பெத்தலை என்று பாடினார்கள் என்று பல வருடங்களுக்குப் பின்புதான் புரிந்துகொண்டேன்.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
   'வெத்தலைல எப்படிப் பொறப்பாங்க'
   நல்ல நினைப்புதான்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
   வேலைகள் இருந்தாதால் மதியம் உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கவில்லை
   மன்னிக்கவும்.

   நீக்கு
 26. அன்பின் நலம் வாழ்க...

  பல நாட்கள் ஆகியும் பதிவுகள் எதுவும் இல்லை....

  மற்ற தளங்களிலும் தங்களது வருகை இல்லை...

  புத்தாண்டு பொங்கல் வேலைகளில் மும்முரமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன்...

  வாழ்க நலம்... வாழ்க...

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வலமுடன்.
  நாங்கள் கோவை போய் இருந்தோம்.
  அத்தை அவர்களுக்கு முதலாம் ஆண்டு திவசம்.
  நிறைவு செய்து நேற்றுதான் மதுரை வந்தோம்.
  உங்கள் அன்பான விசாரிப்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. தேடிப் பகிர்ந்த படங்களும் நினைவுகளின் பகிர்வும் அருமை. கிறுஸ்துமஸ் மரத்தின் கதையை அறிந்தேன்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 29. கோமதி அக்கா, நேற்றே வந்து புதுவருட வாழ்த்துச் சொல்லோணும் என இருந்து விடுபட்டு விட்டது, அது எல்லோரும் விடுமுறையில் இருப்பதால், கொம்பியூட்டரில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை.. பிஸியாகப் போகிறது பொழுது.

  இனிய புதுவருட -2019- வாழ்த்துக்கள்.. புது வருடத்தில் நலமோடும் மகிழ்வோடும் இருக்க பிரார்த்திக்கிறேன்ன்ன்.. வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   புதுவருட வாழ்த்துக்களுக்கு நன்றி.
   குழந்தைகள், கணவர் வீட்டில் இருந்தால் அவர்களை கவனிப்புதான் நல்லது நாம் எப்போது வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளலாம்.
   உங்கள் பிராத்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 30. வணக்கம் சகோதரி

  தங்கள் பதிவு படித்தேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தங்கள் மலரும் நினைவுகள் அருமையாக உள்ளது. தாங்கள் கண்டு வந்த கிறிஸ்துமஸ் குடில்கள் படங்கள், மற்றும் அனைத்துப்படங்களும், மிகவும் நன்றாக உள்ளது. நானும்,எனக்கு நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு பதிவாகச் சென்று படித்து கருத்திட்டு வருகிறேன். என் தாமதமான வருகைக்கு தயை கூர்ந்து மன்னிக்கவும்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள். என் பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கும், வாழ்த்துகள் சொன்னதற்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

   //என் தாமதமான வருகைக்கு தயை கூர்ந்து மன்னிக்கவும். //

   மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் கமலா.
   நேரம் கிடைக்கும் போது வந்து பின்னூட்டம் அளிக்கலாம்.
   தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி..

   நீக்கு
 31. கிறிஸ்துமஸ் தகவல்களும் பகிர்வும் அருமை. கங்கைகொண்ட சோழபுரம் படத்தில் அழகா இருக்கீங்க. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு