எங்கள் வீட்டு ஜன்னல் வழியே பறவைகளைப் பார்த்து ரசிப்பதைப் பகிர்ந்து வருகிறேன். இந்தப் பதிவில் குருவிகள். மீண்டும் குருவிகள் குஞ்சு பொரித்து இருக்கிறது. வீட்டைச் சுற்றி குருவிகள் சத்தம் கொடுத்துக் கொண்டு சுற்றித் திரிகிறது, உணவு எடுத்து குஞ்சுகளுக்கு கொடுக்க.
கொடிக் கம்பியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் குருவி
கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து வேறு குருவி என்று கத்திப் பேசும் குருவி
கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து விட்டு அமர்ந்து இருக்கும் குருவிகள்.
டி.வி கேபிள் ஒயர் அதற்குப் பிடித்த ஊஞ்சல்.
இங்கு இருந்து நான் நிற்பதை கொஞ்சமும் பயம் இல்லாமல் வேடிக்கை பார்க்குது . இப்போது கொஞ்சம் பழகி விட்டது.
கூட்டுக்குள் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் குருவி.
மேலே உள்ள அத்தனை படங்களும் காணொளியாக இருக்கிறது குருவி கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துச் சண்டை இடுவது இருக்கிறது.
குழந்தைகள் தொட்டிலில் இருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்ப்பது போல் கூட்டுக்குள் இருந்து எட்டிப்பார்க்க ஆரம்பிக்கவில்லை, இப்போது மைனா வேறு எல்லாச் சுவர்ப் பொந்துகளிலும் எட்டிப்பார்க்குது, அது கூடு கட்டவோ அல்லது குஞ்சுகளைக் கொத்திச் செல்லவோ?-தெரியவில்லை அதனால் குருவிகள் குஞ்சுகளுக்கு எச்சரிக்கை கொடுத்து விட்டது போலும் வெளியே எட்டிப்பார்க்கக் கூடாது என்று. உள்ளே இருந்து சத்தம் மட்டும் போடுது குஞ்சுகளின் சத்தம் கேட்கும் கேளுங்கள் .
இரண்டு காணொளியும் சின்னது தான், பார்த்துச் சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று. முன்பு குஞ்சுகள் எட்டிப் பார்த்து உணவு வாங்கிக் கொள்ளும் காணொளியைப் பகிர்ந்து இருக்கிறேன். அதே இடத்தில் தான் மீண்டும் கூடு கட்டி இருக்கிறது. பழைய சேகரிப்புகளை வெளியே தள்ளி விட்டு மீண்டும் புது தேங்காய் நார்களைக் கொண்டு வந்து வைத்து மீண்டும் கூடு அமைத்து இருக்கிறது. முன்பு ஒரு குஞ்சு கீழே விழுந்து விட்டது.
எல்லா குஞ்சுகளும் பத்திரமாய் பறந்து போக வேண்டும் .
வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------------------------
எங்க வீட்டு ஜன்னல்லயும் குருவி கூடு கட்டி இருக்கு. கிட்ட போனாலே, அதோட குழந்தைகளை தூக்கிடபோறேன்னு லபோதிபோன்னு ஒரே கத்து.
பதிலளிநீக்குவணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
நீக்குஆமாம் , ஏதாவது பறவை பக்கத்தில் வந்தாலே பயங்கர கூச்சல் போடும்.
மைனாவை கண்டால் அதிகமாய் கத்தும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ஆகா... அழகான சிட்டுகள்...
பதிலளிநீக்குபுது வாழ்வைத் தொடங்கியிருக்கின்றனவா?...
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
திருச்சியில் இருந்தபோது குருவிகள் வீட்டுக் கண்ணாடியைக்கொத்தும் ஆனாலிங்கு பெங்களூரில் குருவிகளே அருகி விட்டது
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குஅம்மா வீட்டீல் கண்ணாடி பீரோவில் வந்து அடிக்கடி கொத்துவதைப் பார்த்து அம்மா பீரோ கண்ணாடிக்கு திரை தைத்து போட்டார்கள் குருவியின் அலகு வலிக்குமே என்று.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//எல்லா குஞ்சுகளும் பத்திரமாய் பறந்து போக வேண்டும்//
பதிலளிநீக்குஉயர்ந்த எண்ணங்கள் காணொளி கண்டேன் சகோ.
வாழ்க வளமுடன்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குகாணொளி பார்த்தமைக்கும், கருத்துக்கும் நன்றி.
அழகு... மனம் முழுக்க பரவசம்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குமனம் முழுக்க பரவசம் என்று கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சி.
குருவி இனங்கள் அருகி வரும் இக்காலத்தில், படங்களை பார்ப்பதற்கே மகிழ்வாக இருக்கிறது சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல் குருவி இனம் அருகி வருகிறது எனும் போது அவற்றைப் பார்ப்பதே மகிழ்ச்சிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நீங்கள் படம் எடுப்பது தெரியாமல் தன்பாட்டுக்கு விஷமம் செய்துகொண்டிருக்கின்றன போலும்... ஜன்னல் கண்ணாடியில் அதன் உருவம் தெரிகிறதா? அதைப் பார்த்து கத்துகிறதோ? காணொளியும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குநான் பார்ப்பது தெரிந்தாலும் இப்போது கொஞ்சம் பழகி விட்டது.
ஜன்னல் கண்ணாடியில் அதன் உருவம் தெரிகிறதே ! பார்த்தீர்கள் தானே!
//கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து வேறு குருவி என்று கத்திப் பேசும் குருவி//
இப்படி படத்துக்கு கீழ் எழுதி இருக்கிறேன் ஸ்ரீராம்.
காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அழகிய புகைப்படங்கள்!! ' விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த சிட்டுக்குருவி போல!" என்ற பாரதியின் நினைவு வரும்போதே கூடவே ' முதல் மரியதை 'யில் 'ஏ குருவி' என்று பாடும் நடிகர் திலகம் நினைவும் வருகிறது!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
நீக்குஎனக்கும் இந்த பாடல்கள் நினைவுக்கு வந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சிட்டுக்குருவிகள் என்னமா அழகா இருக்காங்க ..கள்ளம் கபடமற்ற அழகான முகங்களும் பார்வையும் .அம்மாவை பார்த்து குழந்தைங்க பயப்பட மாட்டாங்க அக்கா .குருவி குழந்தைங்க உங்ககிட்ட நல்லா பழகிட்டாங்க ..ஊஞ்சல் எல்லாம் ஆடறாங்கன்னா அவ்ளோ சந்தோஷத்தில் இருக்குங்க
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்குகுருவிகள் கொஞ்சம் பழகி விட்டார்கள். இல்லையென்றால் திரைசிலை விலக்கி பார்த்தாலே பறந்து விடுவார்கள் . இப்போது கதவு கிட்ட நின்றாலும் அப்படியே இருக்கிறார்கள். அவர்களுக்கு தனியாக சர்வீஸ் ஏரியா பக்கம் உள்ள ஜன்னலில் உணவு வைப்பேன். எப்போதும் அந்த ஊஞ்சல் ஆடுவது பிடிக்கும் குருவிகளுக்கு.
உங்கள் உற்சாகமான கருத்துக்கு நன்றி.
/// இந்தப் பதிவில் குருவிகள். மீண்டும் குருவிகள் குஞ்சு பொரித்து இருக்கிறது. வீட்டைச் சுற்றி குருவிகள் சத்தம் கொடுத்துக் கொண்டு சுற்றித் திரிகிறது, உணவு எடுத்து குஞ்சுகளுக்கு கொடுக்க.///
பதிலளிநீக்குஓஒ ஹா ஹா ஹா அப்போ கோமதி அக்கா வீட்டில் கலகலப்புக்குக் குறைவில்லை:)..
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குஆமாம் அதிரா, எங்கள் குடியிருப்பு வளாகமே இப்போது கல கல் தான்.
அதுவும் என் வீட்டை சுற்றிதான் அதிக கல கலப்பு. அதற்கு வைக்கும் ஜன்னலில் உணவு இல்லையென்றால் ஜ்ன்னல் கிட்டே வந்து அதிகமாய் குரல் கொடுக்கும்.
முதல் படட்த்ஹில் இருப்பதும் 2ம் படத்தில் இருப்பதும் சிட்டுக் குருவிகள்தானே.. ஆனா வித்தியாசம் இருக்கு..
பதிலளிநீக்குகரண்ட் வயர்களுக்குள்ளேயும் ஒராள் போயிருக்கிறா பார்க்கப் பாவமாக இருக்கு..
முதல் படத்தில் உள்ள குருவியும் 2ம் படத்திலும் உள்ளது சிட்டுக்குருவிதான். ஆண் குருவி, பெண் குருவி வித்தியாசம் இருக்கும்.
நீக்குமுதல் குருவி கொஞ்ச தூரத்தில் நல்ல வெளிச்சத்தில் இருக்கு. ஊஞ்சல் ஆடும் குருவிகள் உள்ள இடத்தில் மேல் கூறை உள்ளது அதனால் வெளிச்சம் குறைவு.
அது கரண்ட் பெட்டி இல்லை. கேபிள் ஒயர் பெட்டி அதனால் பயம் இல்லை.
நிறைய தடவை குஞ்சு பொரித்து பறந்து போய் விட்டது.
//கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து விட்டு அமர்ந்து இருக்கும் குருவிகள்.//
பதிலளிநீக்குஓ கூடு கட்டியிருப்பதும் வயர்களுக்கிடையிலோ.. ஹையோ கரண்ட் ஏதும் லோக் ஆனால்ல்...
//கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துச் சண்டை இடுவது இருக்கிறது.//
ஆஆஆஆ அது அக்குருவியாரின் நிழலோ.. படத்தில அது இன்னொரு குருவி என நினைச்சேன் ஹா ஹா ஹா..
தன் நிழல் தோற்ற்த்துடந்தான் சண்டை யிடுகிறது.
நீக்குஅந்த ஜன்னலில் எல்லா பறவைகளும் அலகால் மோதும்.
நேற்று காக்கா கத்திக் கொண்டு கொத்திக் கொண்டு இருந்தது காமிராவை எடுத்து வருவதற்குள் பறந்து விட்டது.
இரு வீடியோவும் துலக்கமாக இருக்கு.
பதிலளிநீக்கு//எல்லா குஞ்சுகளும் பத்திரமாய் பறந்து போக வேண்டும் //
நானும் பிரார்த்திக்கிறேன். ஆனா கிட்டப் போய்க் குஞ்சுகளைப் பார்க்க முடியாதோ? அது உயரத்திலயோ இருக்குது?... சிட்டுக்குருவிகள் பார்க்க எல்லாமே அழகுதான்..
என் வீட்டுக்கு எதிர்வீடு என்பதால் பார்க்க முடிகிறது.என் வீட்டு ஜன்னல் என்றால் எடுக்கவே முடியாது. என் வீட்டில் வேறு குருவி கூடு கட்டி இருக்கிறது அது முனியா குருவி
நீக்குஅதைப் பற்றி இன்னொரு பதிவில்.
உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி அதிரா. அவைகளை பால்கனி வழியாக பார்த்து ரசித்து வாழ்த்திக் கொண்டு இருக்கிறேன். ஒரு தடவை கீழே விழுந்த குருவி என் பால்கனிக்குள் வந்து கொஞ்சம் கத்திக் கொண்டு இருந்தது தாய், தந்தை குருவிகள் கத்தி கூக்குரல் கொடுத்துக் கொண்டு இருந்தது. முட்டி மோதி உண்வை வாங்கி சாப்பிடும் குஞ்சு சீக்கீரம் பறந்து விடும் . உணவை வாங்க முடியாத குருவி கொஞ்சம் மெதுவாய் பறந்து போகும். சிட்டுகுருவிகள் எல்லாஅம் அழகுதான். அவைகளுக்கும் எவ்வளவு கஷ்டம்!
கீழே விழுந்த குருவியை கூட்டுக்குள் கொண்டு வர முடியாது. பக்கத்தில் இருந்து சத்தம் கொடுக்கவே முடியும் அதற்குள் பருந்து, காக்கா வந்தால் குஞ்சை கொத்தி போய் விடும். அதுதான் பத்திரமாய் பறந்து போக வேண்டும் என்றேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சிட்டுக்குருவிகளைப் பார்த்தாலே அத்தனை சந்தோஷமாக இருக்கும். நம்முடனேயே வாழ்ந்தால் இன்னும் எவ்வளவு சந்தோஷம். கூட்டுக்குள் குஞ்சுகள் சத்தம் கொலுசொலி போல ச்சிலுங் ச்சிலுங் என்று கேட்க ஆசையாக இருக்கும். ஒருமுறை கூடு கட்டி நல்ல முறையில் குஞ்சு பொரித்துவிட்டால் தொடர்ந்து அதே இடத்தைத் தேடிவரும். உங்கள் ஆதரவில் தொடர்ந்து சிட்டுக்குருவியினம் பல்கிப் பெருகட்டும்.
பதிலளிநீக்குவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல்தான் திரும்ப திரும்ப வருகிறது.
பழைய படுக்கையை அது வெளி தள்ளுவதே அழகு, மீண்டும் பலநாள் கட்டும்.
குருவிகள் இனம் அழியாமல் இருந்தால் இந்த சமயத்தில் வரும் டெங்கு காய்ச்சல் எல்லாம் வராது. அவை கொசு முட்டைகளை உணவாக எடுத்துக் கொள்ளுமாம்.
இப்போது நம்முடன் பழகி சாதம் சாப்பிட பழகி விட்டது. ஒரு பருக்கையை அதன் அலகில் வைத்துக் கொண்டு பார்ப்பது அழகு.
உங்கள் ஒண்ட வந்த பிடாரிகள் தொடரை நினைத்து கொள்வேன். மைனா தான் மிகவும் தொந்திரவு செய்கிறது குருவிகளை. மற்றும் பறவைகளுடன் சண்டையிடுகிறது. அதுகளூக்குகுள்ளும் சண்டைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான காணொளி. சிட்டுக்குருவிகளின் ஆனந்தமும் குரலும் கேட்க மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குகோமதி மா. குடும்பம் பூரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.
நானும் மின்சார போர்ட் என்று பயந்தேன். நல்ல வேளை கேபிள் தானா.
கலகலப்புக் குறையாமல் பரம்பரை வளரட்டும். வாழ்த்துகள் மா.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்தில் குருவி குடும்பம் பூரித்து சந்தோஷமாய் இருக்கும்.
பரம்பரையும் வளரும். கேபிள் இணைப்பு பெட்டிதான். அதனால் பயமில்லை.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ரசனையான படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
சிட்டுக்குருவிகள் மனிதர்களோடு இணைந்து வாழும் இயல்பு கொண்டது. பழகி விட்டால் அருகேயே அமர்ந்து கொள்ளும். குஞ்சுகள் எவ்விதமானப் பிரச்னையும் இல்லாமல் நல்லபடி பறந்து செல்லப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குசிட்டுக்குருவிகள் மனிதர்களை தேடி அடைக்கலமாய் வந்த காரணத்தால் தான் அதற்கு அடைக்கலக்குருவி என்ற பெயரும் உண்டு.
உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
குடியிருப்புகளில் குடிபுகும் பறவைகள் மனிதர்களுக்குப் பழகி விடுகின்றனவோ! புறாக்கள் கண்டு கொள்ளாமல் நிற்கும். குருவிகளும் அப்படித்தான் போலும். படங்களும் காணொளிகளும் அருமை. கண்ணாடியில் உருவம் கண்டு கீச்சிடும் குருவி, சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுடியிருப்புகளில் குடிபுகும் பறவைகள் மனிதர்களுடன் பழகி விட்டது என்று சொல்ல முடியாது,
நாம் அதை தொட முடியாத தூரத்தில் இருந்து கொண்டு பார்க்கிறது.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ரொம்ப அழகு ....படமும் காணோளியும்
பதிலளிநீக்குவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.