புதன், 31 மார்ச், 2021

மதி ஒளி



நிலவை அதுவும் பெளர்ணமி நிலவை  எல்லோருக்கும் பிடிக்கும் தானே! அதுதான் நான்  எடுத்த படங்களின்   பகிர்வு.
சந்திரனிலிருந்து  கிடைக்கபெறும் ஒளியின் பெயரே நிலா 

நிலவைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று  கூகுளில் தேடிய போது அருமையான கட்டுரை தினமணியில்    கிடைத்தது.  "நிலாவே வா" வராது !   என்ற தன் கட்டுரையை படித்தால் நிலாவே வா என்று அழைக்க மாட்டார்கள் என்கிறார்.  (மதியின் ஒளி தான் நிலா  என்றால் அதன் ஒளி வீட்டுக்குள் வர அழைக்கலாம் என்று நான் சொல்கிறேன்.)

சூரியனிலிருந்து வரும் ஒளி வெயில் என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளிக்கு நிலா என்றும் பெயரிட்டு அழைக்கிறோம் என்று திரு.  முனைவர் சண்முகநாதன் அவர்கள் நிறைய  இலக்கிய சான்றுகளுடன்   அழகாய் சொல்லி இருக்கிறார் படித்து பாருங்களேன்.

தினமணியில்  கட்டுரையை படிக்க கொஞ்சம் கஷ்டமாய் இருக்கிறது விளம்பரங்கள் வந்து தொந்திரவு செய்கிறது. நகல் எடுத்து ஒட்ட முடியாது. அதனால் சிறப்பான செய்திகளை அறிந்து கொள்ள அங்கு போய் படிக்கலாம்.
ஏற்கனவே படித்தவர்கள் இருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.
படங்களுக்கு கீழே அங்கு படித்தவைகளை பகிர்ந்து இருக்கிறேன்.

வெள்ளி, 26 மார்ச், 2021

அசைபோடும் மனசு



பி.லிட் படிக்கும் மாணவர்களுக்கு பாடமாக  இருந்த புத்தகம். எல்லா கதைகளும் நன்றாக இருந்தது.

என் கணவர் இறைவனிடம் செல்லும் 10 நாட்களுக்கு முன் ஒரு நாள் "இந்த கதை தொகுப்பு  படித்து இருக்கிறாயா?" என்று சிறுகதை தொகுப்பு புத்தகத்தை கொடுத்தார்கள் என்னிடம். சிறுகதைத் தொகுப்பில் உள்ள தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய    "வெயில் கதையை படித்துப்பார் என்றார்கள். அன்று ஏதோ வேலையில் படிக்கவில்லை, மீண்டும் மறு நாள்  அந்த கதையை படித்து விட்டாயா ? என்று நினைவு படுத்தினார்கள். அப்படி என்ன கதை இரண்டு முறை கேட்டு விட்டார்களே ! என்று  முதல் வேலையாக கதையை படித்து முடித்தேன்.  

வியாழன், 25 மார்ச், 2021

கருஞ்சிட்டுக்கள் (Brewer's Blackbirds)

மாலை நேரம் மழை மேகத்தால் வானம் இருண்டு இருந்த நேரம் மகன் வீட்டு தோட்டத்து சுவர் மீதும்,  மதிலை தாண்டி நிற்கும் மரத்தின் மீதும் இருந்த போது எடுத்த படங்கள் ஒரே நாளில் எடுத்த படங்கள்.

வெள்ளி, 19 மார்ச், 2021

வாழ்வை இணைக்கும் பாலம்

 நலம் ,நலம் அறிய ஆவல்


வியாழன், 28 ஜனவரி, 2010

நான் இங்கு சுகமே நீஅங்கு சுகமா?

இந்த பழைய பதிவை மீள் பதிவாக போட காரணம் வல்லி அக்கா எழுதிய நினைவுகள்  பதிவு அதில் நம் நட்புகள் கொடுத்த பின்னூட்டங்கள் கடிதங்கள் வந்த காலத்தை விரும்புவது தெரிந்தது அதனால் இந்த பதிவு ஒரு மீள் பதிவு.

திங்கள், 15 மார்ச், 2021

ஆலங்கட்டி மழை



மாடி  பால்கனியில் குவிந்து இருந்த பனிக்கட்டி மழை(ஆலங்கட்டி மழை) துகள்களை   சேகரித்து எனக்கு காட்ட எடுத்து வந்தான் மகன்

அரிசோனா குறைவான மழை பொழிவு உள்ள பாலைவனப்பகுதி. அங்கும் இந்த முறை இரண்டு நாள் பனிபொழிவு இருந்தது. அது பனிப்பொழிவு இல்லை என்றாலும் பனிக்கட்டி தானே! ஆலங்கட்டி மழை என்கிறார்கள். வெளியே குளிர் இருந்த காரணத்தால்  கரைந்து போகாமல் இரண்டு நாள் இருந்தது.

  படத்தில் இராண்டாவதில்  இருப்பது போலதான் ஆலங்கட்டி மழை பெய்தது.


 பனிபொழிவு சிறிது இருந்த போது  எடுத்த படங்கள் இந்த பதிவில். மற்றும் மகன் முன்பு நியூஜெர்சியில் இருந்த போது  செய்த பனி சிற்பங்களின்  படங்கள் இடம் பெற்று இருக்கிறது.

வெள்ளி, 12 மார்ச், 2021

அன்பும் , நேசமும் தரும் தாவரங்கள்.

மகன் வீட்டில் பூத்த செம்பருத்தி பூ

பூமித்தாய் நமக்காகச் செய்யும் பிரார்த்தனைகளே மலர்கள் !

//நேசிக்கிற குணம் மனித இனத்தோடு  நின்றுவிடவில்லை . மற்ற உயிரினங்களிலும் அது காணப்படவே செய்கிறது. மரங்களை , மரங்களில் பூத்த மலர்களைப் பாருங்கள். காலை சூரியனை பார்த்து சிரிக்கும் செடிகளும் கொடிகளும் மாலையில் மலை முகட்டில் சூரியன் மறைகின்றபோது மெளனமாகி விடுகின்றன.

ஒரு கணம் உட்கார்ந்து இயற்கையோடு தொடர்பு கொள்ளுங்கள். மண்ணுக்குள்ளிருந்து, மரங்களின் அடியாழவேர்களிலிருந்து, உயரத்தில் வெகுவாய் நீண்ட அவற்றின் கிளைகள் வரை மேலெழுவதாய் உணர்வீர்கள்.

தீவிர அன்பு மற்றும் பேராவல் பற்றிய வேட்கையாய், மகிழ்ச்சியையும் ஒளியையும் தருகிற ஏதோ ஒன்றின் மீதான விருப்பமாய் அது இருக்கிறது.
மறைந்துவிட்ட அந்த ஒளியை மீண்டும் பெறுவோம். என்கிற ஆவல். அப்படியொரு ஆழ்ந்த விருப்பம் இருப்பதை மரங்களின் அசைவுகளில் உணர்வீர்கள். விவரிக்க முடியாத அந்த ஒளியை, அமைதியை, அன்பைப் பெறுவதற்காக உங்களுடைய உயிரும் பிரார்த்திக்ககூடும்.//

--ஸ்ரீ அரவிந்தர் அன்னையின் மந்திர மலர்கள்

வியாழன், 4 மார்ச், 2021

பறவைகள்

வாழ்க வையகம் !  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

மகன் வீட்டுக்கு வரும் பறவைகளை பார்ப்பது  மனதுக்கு மகிழ்ச்சி தரும். அந்த பறவைகளை  அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும். கதவை சத்தம் இல்லாமல் திறக்க வேண்டும்.   சிறிதளவு சத்தம் கேட்டாலும் அத்தனையும் பறந்து விடும். இந்த பதிவில் பறவைகளை பார்க்கலாம்.

மணிப்புறா