ஞாயிறு, 26 ஜூன், 2022

மார்ட்டின் லூதர் கிங் தேசிய பூங்கா -2


மார்ட்டின் லூதர் கிங் தேசிய பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை


 அட்லாண்டாவில் உள்ள மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா .  முந்தின பதிவின் தொடர்ச்சி. மேலும் சில தேசிய பூங்கா படங்கள். இந்த பதிவில் இடம்பெறுகிறது.


 
காந்தியின் சிலை இருக்கும் மேடையில்  மார்டின் லூதர் கிங் காந்தியை பற்றி சொன்ன வாசகமும், காந்தியின் கை ராட்டையும் இடம் பெற்று இருக்கிறது.


கருப்பு காந்தி

//டென்னசியில் 1968 - ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ஆம் நாள் மாலை  வெள்ளையினத் தீவிரவாதி மார்டின் லூதர் கிங்கை துப்பாகியால் சுட்டான். அப்போது அவர் வயது 39.  அவர் மறைவிற்கு  உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செய்து  அவரை கருப்பு காந்தி என்று அழைத்தார்கள்.

மரணத்திற்கு தயாராகும் போதும் அவர் நம்பிக்கையிழக்கவில்லை. "அவரது உரை முழுக்க விரவியிருக்கும் கருத்து: " நாம் பெருமைகொள்ள நிறைய இருக்கிறது" என்பதுதான். "நான்  இறந்தாலும் , நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்.  வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அருகில் நம்மை இட்டுச்செல்ல என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன்."//

சரித்திரம் படைத்த நல்ல மனிதர் வாழ்க!

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
==========================================================

ஞாயிறு, 19 ஜூன், 2022

மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா

அட்லாண்டவில்  உள்ள மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா

மகனுக்கு  "தந்தையர் தின வாழ்த்துகள்"சொன்னேன்.

அப்போது மகன் எங்களுக்கு திங்கள் விடுமுறை தினம் .  என்றான் எதற்கு என்று கேட்ட போது  ஜூன் 19 பற்றி சொன்னான்.19ம் தேதி ஞாயிறு விடுமுறை தினமாக   போய்விட்டதால்   திங்கள் விடுமுறை என்றான். 

 தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

வியாழன், 16 ஜூன், 2022

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்மதுரை கோச்சடையில் இருக்கும் பழமையான கோவில் ரண தீர பாண்டியர் காலத்து பழைய கோவிலாம்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அதற்கு முன் இந்த கோவிலில் தான் நடைபெற்றதாம். மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இருந்துதான்  புட்டு தோப்பில் நடைபெற்று வருகிறது.
 
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு கோவித்த சடையான் என்பதே இப்போது கோச்சடை என்று அழைக்கபடுகிறதாம்.

ஞாயிறு, 12 ஜூன், 2022

விசாகன் வினைகள் தீர்ப்பான்


திருப்பரங்குன்றம் 

இன்று காலை நடந்த பால் அபிஷேக படம் அண்ணன் மகன் அனுப்பினான்.

அருணகிரிநாதர் அருளிய திருப்பரங்குன்றம் திருப்புகழ் .
இந்த காணொளியில் முருகன் கோயில் தெப்ப உற்சவம் தெரிகிறது. சிறிய பாடல்தான் கேளுங்கள்.

இன்று வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் மிக சிறப்பாக இருக்கும். திருப்பரங்குன்ற முருகனுக்கு  என் தங்கை வீட்டில் தான் முதன் முதலில்  அபிஷேகம் செய்வார்கள். அப்புறம் தான் மற்றவர்கள் அபிஷேகம் நடக்கும் முருகன் அருளால்  பல தலைமுறைகளாக  நடத்தி வருகிறார்கள்.

என்னை அழைத்தாள் . ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஊரிலிருந்து உறவினர் வருகை, மற்றும் உடல் நிலையும் சரியில்லை அதனால் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து முருகனுக்கு வைத்து  வழிபட்டு விட்டேன்.


செவ்வாய், 7 ஜூன், 2022

கோடை விடுமுறைமீசைக்காரர்

கோடை விடுமுறை முடிந்து குழந்தைகளுக்கு பள்ளி ஆரம்பிக்க போகிறது.  இப்போது கோடைக்கால விடுமுறையில் தங்கை வீட்டுக்கு வந்த அவள் பேரக்குழந்தைகள் நாம் சிறுவயதில்  ஆசைபட்டு சுவைத்த ஜவ் மிட்டாய் , தேன் மிட்டாய், கமர்கட் .  வித விதமான ஐஸ்கள் எல்லாம் வாங்கி மகிழ்ந்தார்கள். நான் தங்கைவீட்டுக்கு போன போது  பேரக்குழந்தைகள் ஜவ் மிட்டாய் வாங்கியதை சொன்னார்கள், போட்டோ எடுத்தீர்களா? என்று கேட்டவுடன்  எனக்கு பிடிக்குமே என்று என் தங்கை மகள் இந்த படங்களை அனுப்பி வைத்தாள்.

ஞாயிறு, 5 ஜூன், 2022

காலை பொழுதை மகிழ்வாக்கும் பறவைகள்


 
காலை பொழுதில் பறவைகளை பார்க்கும் போது என் மனம்  மகிழும்.  மனதை உற்சாகமாக வைத்து கொள்ள உதவும்.
கவலையாக இருந்தால் அதை போக்க உதவி செய்யும் இந்த பறவை பார்வை.   அதிகாலையிலும், மாலை சூரியன் மறையும் போதும் பறவைகளின் ஒலி அதிகமாய் கேட்கும். அதிகாலை இனிமை.  அடையும் போது(கூடு செல்லும் போது) மிகவும் கூச்சலாக இருக்கும். காலை பொழுது குயில் கூவும். சில பறவைகள் பாடும்.