செவ்வாய், 16 அக்டோபர், 2018

கொலுப்பார்க்க வாங்க -5

நவராத்திரி பதிவாய் கோவில்கள், வீடுகளில் வைக்கும் கொலுவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 

இன்று  மதுரை சொக்கலிங்க நகர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் கொலு.
இந்த கோவிலில் சரஸ்வதிக்குத் தனி சன்னதி உள்ளது சிறப்பு.  மீனாட்சி சொக்கநாதர், சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி,  அனுமன்,  நவக்கிரகம் , தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சப்தமாதர்கள் 
மற்றும் ஐயப்பன் தனிச் சன்னதியில் இருக்கிறார். ஐயப்பன் சன்னதி மாதப்பிறப்பு மட்டும் தான் நடை திறக்கப்படும் . அன்று  காலை, மாலை திறந்து இருக்கும் மற்ற நாள் நடை சார்த்தி விடுகிறார்கள். ஐயப்பனுக்குப் பின்புறம் மஞ்சமாதா இருக்கிறார். பைரவரும் விநாயகரும் அரசமரத்தடியில் இருக்கிறார். கருப்பண்ணசாமி இருக்கிறார். எல்லாவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது.


அம்மன்  மீனாட்சி அலங்காரத்தில்

மூலவர் மீனாட்சி, சொக்கநாதர் முன் புறத்திலேயே  உற்சவ அன்னை கொலுவீற்று இருக்கிறாள் அதனால் இடைவெளியேதான் இவர்களைப் பார்த்து வணங்க வேண்டும்.
பக்கத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளாய் இருப்பார் அவர் சன்னதிக்குள் கொலு வைத்து இருக்கிறார்கள்.இருக்கும் இடத்தில்  கச்சிதமாய் வைத்து விட்டார்கள். கம்பிவழியாகத்தான் படம் எடுக்க முடிந்தது.
உள்ளேயிருந்து இப்படித்தான் எடுக்க முடியும். மழை இல்லாமல் இருந்தால் வெளியே  வைப்பார்கள். இப்போது திடீர் திடீர் என்று மழை பெய்கிறது அதனால்  உள்ளேயே!
சிவன், பார்வதி நாரதர்.  நாரதர் நல்ல விஷயமாய் சிவனைப் பார்க்கவந்து இருக்கிறார் என்று நம்புவோம்.

கருடன் மீது அன்புடன் பக்தர்களுக்கு வரம் அருள பவனி வருகிறார் . புரட்டாசி மாதம் கருட சேவை  பல கோவில்களில் நடைபெறும்.
அடியார்கள் படும்துயர் துடைக்க ஓடி ஓடிக் களைத்து ஓய்வு எடுக்கும் போது  இதமாய்க் கால்களைப் பிடித்து விடும் அன்னை லட்சுமி. தாமரையில் நான்முகன்

மாமனைப் போல் மருமகனும் பள்ளிகொண்டு இருக்கிறார்
திருமணக் காட்சி.
கிரிக்கெட் விளையாடும் செட் நடுவில் அன்னை பார்வதி

கண்ணன் ராதை இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து பார்வை இடுகிறார்கள் கிரிக்கெட்டை.

இருக்கும் இடத்தில் எளிமையான கொலு .  அம்மனுக்குத் தினம் ஒரு அலங்காரம். நாங்கள் போன அன்று மீனாட்சி அலங்காரம்   பார்த்தது மனநிறைவு.

வாழ்க வளமுடன்.
-----------------------------------------------------------

20 கருத்துகள்:

 1. அழகிய படங்கள் சகோ
  கண்ணனும், ராதையும் கிரிக்கெட் பார்ப்பது ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   பதிவை ரசித்து கருத்து சொனனதற்கு நன்றி.

   நீக்கு
 2. பார்க்கப் பார்க்க திகட்டாதபடிக்கு கொலு பொம்மைகள்...

  இவற்றையும் பார்த்து மகிழும்படிக்குப் பதிவில் வழங்கியதற்கு மகிழ்ச்சி..

  நலமே வாழ்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது போல் கொலு பொம்மைகளை பார்க்கப் பார்க்கப் திகட்டாது.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. கொலு நல்லா இருக்கு. படங்களும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
   கொலு பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 4. நாரதர் எப்பவும் நல்ல விஷயங்களுக்காகத்தானே கலக்கம் செய்வார்! எனவே நல்ல விஷயம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்.

   நீக்கு
 5. கருட வாகனப் பெருமாளும் பாற்கடல் பெருமாளும், பாம்பணை பள்ளிகொள் விநாயகரும்... எல்லாமே அருமை.

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம், எல்லாமே நன்றாக இருக்கிறதா மகிழ்ச்சி.
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ஒவ்வொரு காட்சியும் மிக அழகு. கம்பி வழியாக அருமையாக எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள். பள்ளி கொண்ட விநாயகர் வித்தியாசமான காட்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   பள்ளி கொண்ட விநாயகர் இருக்கும் ஆனால் பாம்பணைமேல் துணைவியுடன் வித்தியாசமானது இல்லையா?
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. ரொம்ப அழகு மா...

  பார்க்கவே வியப்பா இருக்கு...

  மத்த பதிவுகளை இனி தான் பார்க்கணும் மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
   வாங்க முடிந்த போது பாருங்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. கல்யாண செட் அப்படியே எங்க வீட்டில் இருந்தது போலவே இருக்கு. சொக்கலிங்க நகர் எங்கே இருக்குனு தெரியலை. இப்போப் புதுசா வந்திருக்கா? அங்கேயும் ஒரு சொக்கநாதர் கோயிலா? நான் சரியாப் படிக்காமல் முதலில் பழைய சொக்கநாதர் கோயில்னு நினைச்சுட்டேன். அப்புறமாத் தான் கவனிச்சேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்க்ம கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   சொக்கலிங்க நகர் பைபாஸ் ரோடு காளவாசல் பக்கம்.
   பழமையான கோவில்தான்.

   நீக்கு
 11. விநாயகர் பள்ளி கொண்ட கோலம் அருமை. மிச்சம், மீதி எல்லாம் நாளைக்கு! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க மெதுவாய், வித்தியாசமான பொம்மைகள் இருப்பதைதான் எடுத்தேன்.
   விநாயகர் பள்ளி கொண்ட கோலம் புதுமையாக இருந்தது.

   நீக்கு