திங்கள், 12 நவம்பர், 2018

வருவான் முருகன் தருவான் அருளை

முருகன் வருகைப் பாடல் :-
பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்டவருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம் பூணவருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண் முகத்தோடணைத்துச் சீராட்டி
முத்தமிடற்கு வருக எதிர் மொழிகண் மழலை சொல வருக
தன்னெறில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினல்மை
சாத்தவருக மேலாகத் தானே வருக தேவர் தொழு
மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
வளஞ்சேர் பழனிச்  சிவகிரி வாழ் வடிவேல் முருகா வருகவே.

கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று 5 வது நாள்
இந்தப் பதிவில் இரண்டு பாடல்களைக் கேட்போம். இரண்டும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்கும் போகும் பாதையை நன்னெறிப் படுத்தவும்- இறைவன் வழிபாடு. கந்தன் அன்பும் கருணையும்  இந்த இருபாடலில் விளக்கமாய் இருக்கிறது, எது உண்மைப் பொருள் எது நிரந்தரமானது எல்லாம் இந்தப் பாடலில் விளக்கமாய் இருக்கிறது.
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!


எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!


சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!

முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!


சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு இல்லையே!


எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!


மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!

(தித்திக்கும் தேன் பாகும்)


முருகனருள்
//பாடல் வரிகள் தேடிடும் முருகன்டியார்க்கும்,
தமிழின்பம் நாடிடும்  அன்பருக்கும் உதவியாக... அவனருளால்//!
=நன்றி.

பாடியவர் டி.எம்.எஸ்  அவர்கள் யார் இசைஅமைத்தார்கள் என்று தெரியவில்லை, எழுதியது யார் என்று தெரியவில்லை.

//மறுபடியும் மறுபடியும் கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் பகிர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் அம்மா...//
என்று பின்னூட்டத்தில் நம் வலையுலக சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கேட்டு இருந்தார்கள். அவர்களின் விருப்பப் பாடல் இதுவாகத்தான் இருக்கும்  என்று நினைத்து இந்தப் பதிவில் போட்டு இருக்கிறேன். சரிதானா என்பதை அவர் சொல்ல வேண்டும்.

இன்று காலை அண்ணி வீட்டில் நடந்த காவேரி அம்மன் பூஜையில் கலந்து கொண்டு மாலைதான் வீட்டுக்கு வந்தேன்.
என்ன எழுதுவது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் முருகன் அருள்  திண்டுக்கல் தனபாலன் மூலம்  கிடைத்து விட்டது.

இனிக்கின்ற தேன்பாகும், அமுதமும் நாவிற்குச்  சுவையைத் தருவது இல்லை, கந்தன் என்று சொல்லும் போது அதைவிட இன்பம்.

நாம் எது எதுவோ  இன்பம் என்கிறோம்.  பொன் பொருள், எத்தனை  இருந்தாலும் மெய்ப் பொருளை அறிவது தான் இன்பம்  அதைத் தருவது முருகன் வழிபாடு.

                      தங்க மயம் முருகன்சாந்தி மயம் முருகன எழிற்கோலம்


தங்க மயம் முருகன் சன்னிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்!!
(தங்க மயம் முருகன்)

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே!
அவன் ஈராறு கைகளாம் தாமரையே!
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே!
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே!
(தங்க மயம் முருகன்)

கருணை மழை பொழியும் கருவிழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்!
அமுதம் ஊறி வரும் திருவடிகள் - அவை
அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்!
(தங்க மயம் முருகன்)

பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.

நமக்கு வேண்டியது சாந்தி அதை தருவது முருகனின் சன்னிதானம்.

முருகன் எழில் கோலத்தைப் பார்த்தால் மனதில் சாந்தி  கிடைக்கும். அவரின் கருணை மழையால்  உயிர்கள் தளைக்கும்.  நாம் போகக் கூடிய நல்ல வழி கிடைக்கும் அது உயர்ந்த வழி. அப்போது அங்கு ஆனந்தம் அது நித்தியானந்தம்.
                                            

                                                    வாழ்க வளமுடன்.

28 கருத்துகள்:

 1. வணக்கம்
  அம்மா
  புனிதமான நாளில் அற்புதமான பதிவு கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -த.ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
  நலமா? எப்படி இருக்கிறீர்கள்?
  நீண்ட நாள் ஆகி விட்டதே! உங்களைப் பார்த்து.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. கந்த சஷ்டிக்கொரு திருநாள்... என்று சூலமங்கலம் சகோதரிகள் "முருகனுக்கொரு நாள் திருநாள்" பாடலில் ஒரு வரி பாடுவார்கள். அது நினைவுக்கு வந்தது.

  ஓம் முருகா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   ஆமாம் , குறிப்பிட்ட பாடல் மிக அருமையாக இருக்கும்.
   ஒவ்வொரு மாதமும் ஒரு திருநாள் ஜப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா.

   ஓம் முருகா வா முருகா!
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. அடடே தலைப்பு அருமை.
  இரண்டுமே பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்த பாடல்கள். இப்பாடல்கள் கேட்காதவர்களே இருக்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   உங்களுக்காவும், ஸ்ரீராமுக்காவும் தலைப்பை மாற்றி விட்டேன்.
   தலைப்பை ரசித்தமைக்கு நன்றி.
   ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.இந்த பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. முதல் பாடல் மனதை உருக வைத்து தித்திக்கும் அம்மா...

  இந்த இரு பாடல் உட்பட இன்னும் அழகான பாடல்கள் எனது கணினியில் உண்டு...

  அடியேன் நினைத்தது : ஒரு சினிமா பாடல்... ஜானகி அம்மாவின் உன்னத குரலில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொன்ன பாடல் கண்டு பிடித்து விட்டேன். சிங்கார வேலனே தேவா பாடல்தானே
   காலத்தை வென்ற பாடல் அடுத்த பதிவில் போட்டு விடலாம்.
   நான் கேஸட் வைத்து இருக்கிறேன், சீர்காழி, டி.எம். எஸ் பழைய பாடல்கள் முருகன் பாடல்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. தனபாலன் நீங்கள் தித்திக்கும் என்று சொன்னவுடன் நினைவுக்கு வந்தது டி.எம். எஸ் பாடல் தான்.

   முருகனின் அருள் நாளை அது இடம்பெற வேண்டும் என்று நினைப்பதால் இந்த பாடலை நினைவு படுத்தவில்லை. நாளை திருச்செந்தூர் மிக முக்கியமான நிகழ்வு நடைபெறும் போது ஜானகி அம்மாவின் எவர்கிரீன் பாடலை பதிவில் இடம் பெற திருவுள்ளம் கொண்டு இருக்கிறார் போலும்.

   இன்னொரு பாடல் என்ன என்று சிறு குறிப்பு கொடுத்து இருக்கலாம்.

   நீக்கு
  3. அருமை அருமை அம்மா...

   உங்களின் கருத்துரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...

   பல சிந்தனை பதிவுகளை எழுத வேண்டும் என்று என்றும் நினைக்க வைக்கும் பாட்டு... அரிதான பாடலா இன்னொன்றை கேட்டுவிடப் போகிறேன்... ஆனாலும் இதோ :-

   அரியது கேட்கின் வரிவடி வேலோய்...
   (https://www.youtube.com/watch?v=ISjor0G8gV8)

   நீக்கு
  4. தனபாலன் முருகன் உங்கள் மூலம் நிறைய எனக்கு உணர்த்துகிறார்.
   நீங்கள் கொடுத்த பாடலையும் இன்று பகிர்ந்து விட்டேன்.
   நீங்கள் சொல்வது போல் பல சிந்தனைகளை எழுத தூண்டும் பாடல்தான்.
   நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. வருவான் முருகன் தருவான் அருளை...ஆஹா..


  அருமையான பாடல்களுடன் இன்றைய கந்தன் தரிசனம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
   கந்தன் தரிசனத்தை தொடர்ந்து பார்த்து கருத்து சொல்வதற்கு நன்றி.

   நீக்கு
 7. >>> பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக.. <<<

  எனும் இந்தப் பாடல் சின்னப்பநாயக்கர் என்பவர் பழனி முருகனின் மீது பாடிய பிள்ளைத்தமிழ் பாடல் என்று விக்கி கூறுகின்றது...

  முழு நூல் எங்கிருக்கின்றதோ தெரியவில்லை...

  சீர்காழியார் பாடிய இசைத் தொகுப்பு ஒன்றில் இந்தப் பாடல் உள்ளது.. கேட்டிருக்கின்றேன்...

  அந்த தொகுப்பில் திருப்போரூர் பிள்ளைத் தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பாடல்களும்
  இடம் பெற்றிருக்கின்றன..

  அந்த கேசட்டை இப்போது கேட்க முடியாமல் இருக்கின்றது.. வீட்டிலுள்ள Two In One பழுதாகியுள்ளது.. அதைச் சீர் செய்வதற்கு யாருக்கும் தெரியவில்லை...

  2002 ல் வாங்கிய Panasonic அது... அதில் வானொலி மட்டும் கேட்கலாம்...

  பொன்னே வருக - பாடலை Youtube ல் யாரும் ஏற்றவில்லை..

  கேட்டால்
  மாசறு பொன்னே வருக.. பாடல் இருக்கின்றது. அதை வேண்டுமானால் கேள்!. - என்கிறது.

  நான் கேசட்டில் சேர்த்து வைத்திருக்கும் பல பாடல்கள் Youtube ல் கூட இல்லை...

  மற்றபடி பதிவும் பாடல்களும் பக்தி மயம்!...

  முருகனருள் முன்னின்று காக்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   முதல் பாடல் முருகன் வருகை பாடல் நான் தினம் பாடும் 'தமிழ் வழிபாட்டு திருமுறைத் திரட்டு' பாடல் தொகுப்பு புத்தகத்தில் இருக்கிறது. அதில் யார் பாடியது என்று விவரம் இல்லை. நீங்கள் கண்டு பிடித்து சொன்னதற்கு நன்றி.

   நாம் தேடும் சில பாடல்கள் வலையேற்றபடவில்லை. அப்படி ஏற்றி இருந்தாலும் காணொளி நன்றாக இல்லை அதில் வரும் படங்கள் படத்தின் மேல் வரும் சில எழுத்துக்கள் நன்றாக இல்லை.

   எங்கள் வீட்டில் கேசட்டில் சேர்த்து வைத்து இருக்கும் பாடல்கள் நிறைய இணையத்தில் இல்லை.
   பக்தி பாடல்கள் சேகரிப்பு நிறைய் இருக்கிறது.
   முதலில் கேஸட், அப்புறம் சிடி என்று.
   இப்போது ஏதோ ஓடுகிறது. இறைவன் அருளால் இந்தளவில் சிந்திக்க முடிகிறது அவருக்கு நன்றி.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


   நீக்கு
 8. தலைப்பும் பதிவும் அருமை கோமதிக்கா..

  இரு பாடல்களுமே நிறைய கேட்டதுண்டு. எங்கள் குழு பயணம் செய்யும் போது இந்தப் பாடல்களைத்தான் அதாவது டி எம் எஸ் பாடிய முருகன் பாடல்கள் அனைத்தும் கலெக்ஷனில் என் மைத்துனரிடம் இருக்கு. அதைப் போடுவார்...அப்படி நிறைய கேட்டுருக்கிறேன் அக்கா. அருமையான பாடல்கள்...

  முருகா சரணம்

  கீதா

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது சரிதான் முன்பு பயணத்தின் போது இந்த பாடல்களை கேட்டுக் கொண்டே போவோம்.

  இசைபுரியர்கள் எல்லோரும் கேட்டு மயங்கிய பாடல்கள். பாடிய இருவரின் பெயரை கால காலமாய் நிலைத்து இருக்க செய்கின்ற பாடல்கள்.
  அவர்கள் போன ஜென்மத்தில் இறைவனுக்கு தேனால் அபிஷேகம் செய்து இருப்பார்கள் என்று பேசிக் கொள்வோம்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் குளிருதடி கிளியே ஊனும் உருகுதடி என் தந்தை பாடும்பாடல் ஏனோ இப்போதுநினைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொன்ன பாட்டும் மிக அருமையாக இருக்கும்.
   தந்தையின் நினைவுடன் பாடலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு
 11. கண் மூடித் திறப்பதற்குள் 5 நாட்களாயிற்றுது... நாளை போர் போர் சூரன் போர்ர்ர்ர்..ஹா ஹா ஹா மிக அருமையான தகவல்கள் கோமதி அக்கா... கந்தன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   கண்மூடி திறப்பதற்குள் 5 நாட்கள் ஓடி விட்டது.
   இப்படியே காலமும் ஓடி விட்டால் நல்லது.தீயவர்களின் தீய குணத்தை அழித்து
   அவர்களை நல்வழி படுத்த இறைவன் நடத்தும் போர்.
   அனைவருக்கும் கந்தன் அருள் வேண்டும்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. சஷ்டிக்கான பதிவு! இரண்டு பாடல்களுமே மிக அருமையானவை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   இரண்டு பாடல்களும் உங்களுக்கும் பிடித்து இருக்கா?
   நன்றி.

   நீக்கு
  2. அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
   அங்கம் மணக்கவில்லையே.
   கந்தன் திரு நீறு அணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்.
   குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தில் ஆட்சி பெறும்

   சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா

   முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
   முற்றிய வினை தீருமே
   உடல் பற்றிய பிணி ஆறுமே.
   முருகா நீ வரவேண்டும். முருகா
   நான் நினைத்தபோது நீவரவேண்டும்.   அன்பு கோமதி என்னாளும் முருகன் துணை இருப்பான். நம்மைக் காப்பான்.
   இந்தப் பதிவு மனதை நெகிழ்த்தி உள்ளம் குளிர வைக்கிறது.

   மிக நன்றி மா.

   நீக்கு
  3. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   முருகன் நம்மைக் காப்பான் என்று நம்பி இருப்போம், நம் வாழ்வு முழுவதும் அவர் பாதங்களில் சரண் அடைவதுதான் நம் வேலை.
   உங்கள் கருத்து நெகிழ வைக்கிறது, பகிர்ந்த பாடலும் அருமை.

   நீக்கு
 13. இரண்டு பாடல்களும் சிறப்பானவை.... மீண்டும் கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
   நீங்கள் இரண்டு பாடலை ரசித்து கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு