வெள்ளி, 26 ஏப்ரல், 2024
நிலவும், மலர்களும்
வெள்ளி, 19 ஏப்ரல், 2024
பச்சை வண்ண தேன் சிட்டு
திங்கள், 15 ஏப்ரல், 2024
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !
இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துகள் அனைவருக்கும்..
புத்தாண்டு வாழ்த்துகள் ஏப்ரல் 11 ம் தேதி 2010 ல் பேரனை பார்க்க போன போது புத்தாண்டை மகன் வீட்டில் கொண்டாடி னேன். இந்த ஆண்டும் மகன் பேரன் மருமகளுடன் புத்தாண்டு மலர்ந்து உள்ளது.
இரு ஆச்சிகளும் ஊருக்கு வந்த போது பேரன் அன்புடன் தயார் செய்த வாழ்த்து அட்டையை அளித்து வரவேற்றான்.
மகன் செய்த புத்தாண்டு வாழ்த்து
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மருத்துவரிடம் போய் கொண்டு இருந்தேன், ஊருக்கு வரும் வரை. பல வலிகளுடன் பயணம் செய்து வந்தேன்.
இங்கு எல்லோருடனும் இருப்பதால் வலிகள்படி படியாக குறைந்து வருகிறது.
இந்த புத்தாண்டில் எல்லோரும் எல்லா வளத்தோடும் நலத்தோடும் இருக்க இறைவனை வேண்டிக் கொண்டேன்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்ற ராமகிருஷ்ணர் கருத்திலிருந்து-
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
எல்லோரும் நோய்களிலிருந்து விடுபடட்டும்
எது நன்மை என்பதை எல்லோரும் உணரட்டும்
யாரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கட்டும்.
மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------