சனி, 13 அக்டோபர், 2018

கொலு பார்க்க வாருங்கள் -2
"கொலு பார்க்க  வாங்க" தொடர் பதிவில் இன்று இரண்டாவது நாள். நேற்று ஜெயநகர் பிள்ளையார் கோவில் இன்று "பொன்மேனி பொய்சொல்லா அய்யனார் கோவில்" கொலு  பாருங்கள்.

அனுமன் காவல் இருக்கிறார் கதையுடன். குழந்தைகள் கொலு பொம்மை பக்கம் போகாமல் இருக்க தடுப்புக் கம்பு வைத்து இருக்கிறார்கள்.

கல்யாணக்  காட்சி பொம்மை இல்லாத கொலு உண்டா?
ஓரே மேடையில் இரண்டு கல்யாணம்

சறுக்குமரம் இரண்டுபக்கமும் இருக்கிறது, இந்தப் பக்கம் ஒரு குழந்தை, அந்தப்பக்கம் ஒரு குழந்தை என விளையாடுகிறார்கள். பழைய காலத்து ஓட்டு வீடுகள் அழகு.


திருவள்ளுவர், விவேகானந்தர், இந்திராகாந்தி, ஒளவையார், புத்தர் ,காந்தி ஆகியோரின் சிலைகள்.

அரண்மனை தர்பார் காட்சி.கரகாட்டகாரர்- அவரைச் சுற்றி நடனமாதுகள்

மொட்டை அடித்த பெண் குழந்தைக்கு  தாய்மாமா மடியில் அமர்த்தி காதணிவிழா.  சீர்வரிசைகளும், உறவினர் கூட்டமும்.

எல்லாப் பொம்மைகளையும் பார்த்தீர்களா? ரசித்தீர்களா?  பெரிய கோவில்களில் உற்சவ அம்மனைத் தினம் ஒரு அலங்காரமாய்  செய்து வைப்பார்கள். இங்கு பேச்சி அம்மன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரன், அனுமன், அய்யனாருக்கு தினம்  சந்தனக் காப்பு வெள்ளி அங்கி அலங்காரம்.
சொற்பொழிவுகள் எல்லாம் உண்டு.


பேச்சி அம்மன்

நவராத்திரி வாழ்த்துக்கள்.  


 பதிவில் மயிலாடுதுறையில் உள்ள புனுகீஸ்வரர் கோயில் நவராத்திரி விழா  மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரங்கள் இந்த பதிவில். சகலகலாவல்லி மாலை பாடல் பகிர்வும்  இருக்கிறது.

அடுத்து என் தங்கை வீட்டுக் கொலுவும் அவள் வீட்டுக்கு அருகில் உள்ள அனுமன் கோவிலில் கொலுவும் பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்.

25 கருத்துகள்:

 1. காலை வணக்கம். கொலு படங்களை ரசித்தேன். கோவில் கொலு படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் சகோ
  அழகிய கொலு காட்சிகள் விபரங்களும் அருமை தொடர்ந்து வரட்டும் அடுத்தவைகளும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   தொடரை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 3. கொலு பார்த்தேன், அருமை. கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் கொலு வைத்திருந்த நாள்களை நினைவூட்டுகின்றன உங்கள் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
   இப்போது வைப்பது இல்லையா?
   முன்பு கொலு வைத்த நினைவுகள் ஒவ்வொரு நவராத்திரி தோறும் நினைவுக்கு வரும்.
   கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் கொலு நன்றாக இருக்கும் பார்த்து இருக்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. இந்த விழாக்கள் அவரவர் கைத்திறனைக் காட்டவுன் நட்பு வளர்க்கவும் உதவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது சரிதான் சார்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. அம்மாடி எவ்ளோ கொலுக்கள்.. கண்கொள்ளாக் காட்சி.. கலர்ஃபுல்லா இருக்கு.. மனதுக்கு மகிழ்ச்சிதரும் கொலுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம், அதிரா, வாழ்க வளமுடன்.
   மனதுக்கு மகிழ்ச்சி தரும் கொலுக்கள்தான்.
   அதன் வண்ணங்க்கள், அதன் அமைப்பு எல்லாம் மனதை மகிழ்விக்கும். கலைத்திறமையுடன் வடிவமைத்து இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.

   நீக்கு
 6. ஆனா இதில எனக்கொரு சந்தேகம் கோமதி அக்கா, கொலுக்களைக் கும்பிடுவார்களோ? ஏனெனில் சாமிக் கொலுக்களும் இருக்கு.. ஆனா மிருகங்கள் மனிதர்கள் அரசியல்வாதிகள் எனவும் இருக்கு, மரங்கள் குன்றுகள் எனவும் இருக்கு, அப்போ இவற்றை எப்படி வணங்குவது, அதே நேரம், சுவாமியையும் சேர்த்து வைத்துப்போட்டு வணங்காது விட்டால் அது சுவாமியை அவமதிப்பது போலவும் ஆகிடுமே... இப்படி பல கேள்விகள் எனக்குள் எழுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, சந்தேகம் வேண்டாம் அதிரா, கொலுக்களை கும்பிடுவார்கள்.
   அனைத்து உயிர்களிடத்தும் இறைவனை காண்பதுதான் இதன் விளக்கம்.
   சிவபுராணத்தில்
   //புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
   பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
   கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கனங்களாய்
   வலசுரராகி முனிவராய்த் தேவாரய்ச்
   செல்ல அ நின்றைத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
   மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்//
   என்கிறார்.

   புல்லில் தொடங்கி எல்லாபிறப்புமாக பிறந்து கடைசியில் மனித பிறப்பாய் பிறந்து இருக்கிறோம் அந்த பிறப்பில் இறைவனின் பாதங்களை மறக்காமல் இருக்க வேண்டும்.
   சாதாரண உயிரினங்கள், மனிதர்கள், சிறு தெய்வங்கள், முழுமுதற்கடவுள் என்று கொலுவில் அமைப்பது அப்படித்தான்.

   மனிதபிறவியின் நோக்கம் முழுமுதற்பொருளான இறைவனை அடைவதே அதன் விளக்கம்.


   அதனால் தான் புல்லில் ஆரம்பித்து அனைத்தையும் காட்சி படுத்துகிறோம்.
   மாயவரம் கோவிலில் தாமரை குளம் அமியத்து அதில் மீன்கள் போட்டு வைப்பார்கள்.

   நீக்கு
  2. ஓர் அறிவு உள்ளவை முதல் ஆறு அறிவு உள்ள மனிதர்கள் வரை வருவதில் மனிதர்களில் அரசியல்வாதியும் வருகிறார்.
   கீழ்நிலையில் புல், கடல் சங்கு, மிருகங்கள், எல்லாம் வைக்கிறோம். அப்புறம், சிறு குழந்தைகள் விளையாட்டு, அப்புறம் கல்யாணம் மகான், அப்புறம் முழுமுதற்கடவுள்.

   நீக்கு
 7. என்னிடம் குட்டிக் குட்டியாக பல நினைவுப்பொருட்கள் இருக்கு.. சுவாமி சிலைகளும் இருக்கு.. அவற்றை ஒன்று சேர்த்தால் குட்டிக் கொலுக் குடும்பம் உருவாகும்.. ஒரு நாளைக்கு அனைத்தையும் படமெடுக்கோணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, உங்கள் ஆசைப்படி ஒருநாள் அனைத்தையும் படம் எடுத்து போடுங்கள் பார்த்து ரசிக்கிறோம்.

   நவராத்திரியில் இப்படி போகும் இடங்களில் வாங்க்கி சேர்த்த கலைப்பொருட்கள், அவர்கள் கைதிறமையில் செய்த பொம்மைகள் என்று வைப்பார்கள்.
   என் தங்கை வீட்டு கொலுவில் என் அம்மாவின் கைத்திறமையில் உருவானவை நிறைய இருக்கும்.
   உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. அன்பு கோமதி, இனிய காலை வணக்கம்.
  அப்பாடி எவ்வளவு பொம்மைகள்.
  அதுவும் வித விதமாக. எப்படி எல்லாம் யோசித்து பொம்மை செய்திருக்கிறார்கள்.

  படங்களின் அடியே கொடுத்திருக்கும் விவரங்களும் அருமை.

  தங்கை வீட்டுக் கொலுவைப் பார்க்கும் ஆவலுடன் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் வல்லி அக்கா , வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்தால் இனிமையானது காலை பொழுது.
  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பேச்சி அம்மன் தரிசனம் கிடைத்தது. கல்யாணக் காட்சி, சறுக்கு மரக் காட்சி.. வீடுகள் அழகு.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  நீங்கள் இதையெல்லாம் ரசிப்பீர்கள் என்று தெரியும்.
  ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. பதிவு வெளியான நாளே வாசித்து விட்டேன்..

  பெரும்பாலும் வியாழன் வெள்ளி சனிக்கிழமைகளில் இணையத்திற்கு வேகம் இருக்காது...
  எனவே பதில் சொல்ல இயலவில்லை..

  நல்லதொரு கொலுவையும் பேச்சி அம்மனையும் தரிசனங்கண்டேன்..
  மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
  வாரக் கடைசியில் அவர் அவர் ஊர்களில் இருக்கும் தங்கள் குடும்பத்தினர்களுடன் உரையாடுவதால் இருக்குமோ!
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> வாரக் கடைசியில் அவர் அவர் ஊர்களில் இருக்கும் தங்கள் குடும்பத்தினர்களுடன் உரையாடுவதால் இருக்குமோ!.. <<<

   உண்மைதான்.. ஆனாலும்
   வெட்டிப் பேச்சும் தடாலடிச் சண்டைகளும் தான் அதிகம்..

   தடாலடிச் சண்டை - பெற்றவர்களுடன் மட்டுமே!...

   மனைவியுடன் என்றால் -
   அவள் பிளைட் ஏறி வந்து மண்டையைப் பிளந்து விட்டுப் போய் விடுவாள்...

   ஏனெனில் -
   இவனுடைய அக்கப்போர் அனைத்தும் அவளுக்குத் தெரியும்!...
   (எல்லாம் கூட்டாளிகளின் உபயம்!..)

   நலமே வாழ்க..

   நீக்கு
  2. //ஆனாலும்
   வெட்டிப் பேச்சும் தடாலடிச் சண்டைகளும் தான் அதிகம்..//

   அட கடவுளே!

   எல்லோருக்கும் அமைதியும், ஆனந்தமும், நிம்மதியும் கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
   நீக்கு