ஆண்டாளின் வரலாறு சொல்லும் படம். (பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
திருவாடிப்பூரத்தில் பூமி தேவியின் அவதாரமாகக் கோதை அவதரித்தாள்.
அன்னவயல்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல்பதியம் இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச்சொல்லு.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்லபல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற்குஎன்னைவிதியென்ற இம்மாற்றம்
நாம்கடவாவண்ணமேநல்கு.
- உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை
விகடனில் என் சேகரிப்பு.
துளசிவனம்
ஆண்டாள் அவதரித்த துளசி வனம்
ஸ்ரீ வில்லிபுத்தூர்க் கோவில் என்ற என் பழைய பதிவில் விரிவாக எழுதி இருக்கிறேன் படங்களும் நிறைய இருக்கிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.