செவ்வாய், 31 மே, 2022

திருபுவனம்


திருப்புவனம் கோபுரம்

வைத்தீஸ்வரன் கோயில் வணங்கி விட்டு அடுத்து நாங்கள் போன கோயில்  திருப்புவனம்.நாங்கள் ஏபரல் மாதம் 22ம் தேதி மாலை . 6.40க்கு  போனோம். இருட்ட ஆரம்பித்து விட்டது.
.

இறைவன் கம்பகரேஸ்வரர், கம்பகரேஸ்வரர் என்றால்   நடுக்கத்தை  போக்கியவர் என்று அர்த்தம். நடுக்கத்தை போக்கியவர்  என்பதால் "நடுக்கம் தவிர்த்த பெருமான்"  என்று அழைக்கப்படுகிறார்.

அம்மன் தர்மசம்வர்த்தினி. அறம்வளர்த்தநாயகி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

   சரபேஸ்வரர்  வழிபாடு இங்கு ஞாயிறு மிகவும் சிறப்பு. 

தீர்த்தம் சரப தீர்த்தம் உட்பட 9 தீர்த்தங்கள் இருக்கிறது.தல விருட்சம் வில்வமரம்.

ஞாயிறு, 29 மே, 2022

புள்ளிருக்கு வேளூர்


திருக்கடவூருக்கு பின் நாங்கள் போன கோவில் வைத்தீஸ்வரன் கோவில்.   திருக்கடவூரிலிருந்து  பக்கம், அரைமணி நேரத்தில் போய் விட்டோம்.

23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. தொலைக்காட்சியில்   பார்த்தேன் .  வைத்திய நாதன் அருளால் இத் தலத்தை பல வருடங்களுக்கு பின் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

வியாழன், 26 மே, 2022

அமிர்தகடேஸ்வரர் ஆலயம்



திருக்கடவூர் கோயில்  25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. 


அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில்  அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று. அபிராமி பட்டருக்காக அமாவாசையை  பவுர்ணமியாக்கிய  கோயில் எல்லோருக்கும் இந்த கதை தெரிந்து இருக்கும். அபிராமி பட்டர் "அபிராமி அந்தாதி" பாடிய தலம்.

வெள்ளி, 20 மே, 2022

முனீஸ்வரர் கோபுரமும் திருக்குளமும் (திருக்கடவூர்)

திருக்கடவூர்  அமிர்தகடேஸ்வரர்  கோயில் திருக்குளம்  இருக்கும் கீழ கோபுர வாசல்.

 ஜோதி தொலைக்காட்சியில் திருக்கடவூர் கும்பாபிஷேக காட்சிகளை நேரலையில் பார்த்தேன். அதில்  கோயிலை பறவை பார்வையாக மேலிருந்து காட்டிய போது திருக்குளத்தை காட்டினார்கள், அதில் படகு வேறு விட்டு இருந்தார்கள்

எத்தனையோ முறை திருக்கடவூர் போய் இருக்கிறேன், திருக்குளத்தை பார்த்தது  இல்லை.  திருக்கடவூர் போகும் வாய்ப்பு கிடைத்தால் குளத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். தங்கை கணவர் மணிவிழாவில் அந்த வாய்ப்பை  இறைவன் தந்தார். 48 நாள் மண்டல பூஜை சமயம் பார்த்து விட்டோம் .

புதன், 18 மே, 2022

மலர்குழல்மின்னம்மை




 

அம்மன்  சந்நதி  தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில்.  திருக்கடவூர் மயானம் முதல் பகுதி

படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

                                                  அம்மன் கோவில் 

                                          நடராஜர் சந்நதி.
                       கோவில் மணி இருக்கும் மண்டபம்
1928 ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது என்று கல்வெட்டு சொல்கிறது. கல்வெட்டில் அம்மனின் பெயர் "ஸ்ரீ வாடாமல்லிகை அம்பாள்" என்று போட்டு இருக்கிறது. மலர்குழல்மின்னம்மை என்று தல வரலாறு சொல்கிறது.

                                      தற்போதைய பெயர்.

இணையத்தில் அம்மனின் பெயர் நிமலகுசாம்பிகை என்று போட்டு இருக்கிறது.



பிராகாரத்தில் உள்ள  கிணறு இப்போது மோட்டார் போட்டு தண்ணீர் எல்லா சுவாமி சன்னதிகளிலும் கிடைக்கிறது. தண்ணீர் அபிஷேகத்திற்கு தூக்கி சுமக்க வேண்டாம்.
மாலை நேர சூரிய ஓளி  எதிர்பக்கம் என்பதால் படங்கள் கொஞ்சம் இருட்டு. பிள்ளையார்
                           அம்மன் கோவில் விமானம்

அம்மன் பிராகரத்திலிருந்து சுவாமி பிரம்மபுரீசுவரர் கோயில் கோபுரம் தெரிகிறது.
விநாயகர், சண்டிகேஸ்வரி சந்நதிகள் பிரகாரத்தில் இருக்கிறது.



//அடுத்து  அம்மன் சன்னதி போவோம். அதுவும் தனி கோயில் போல பெரிய சன்னதி .
அம்மன் கோயிலில் என்ன பார்த்தேன் என்பதையும்  சொல்கிறேன்.//

இதற்கு முந்திய பதிவில் இப்படி சொல்லி இருந்தேன் நினைவு இருக்கும் உங்களுக்கு. அங்கு பார்த்தது கீழே.



"இல்லம் தேடிக் கல்வி" என்ற தன்னார்வ தொண்டு  கொரோனா பெருந்தொற்று சமயம் நடைபெற்று வந்து இருக்கிறது. இப்போதும் மாலை அரசு  பள்ளி முடித்து வரும் குழந்தைகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்   மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி நடக்கிறதாம்.
                                  மதினியும், தங்கையும்

 நாங்கள் கோயிலுக்குள் போன போது குழந்தைகள் மட்டும் கோபுர வாசலில் தங்கள் புத்தகபைகளை வைத்து விட்டு உள்ளே வந்து அமர்ந்து இருந்தார்கள்.


அவர்களிடம் "என்ன கோயிலை பார்க்க அழைத்து வந்தார்களா? "என்று கேட்டேன். இல்லை நாங்கள் இந்த ஊர் பள்ளிகூடத்தில் படிப்பவர்கள் "வீடு தேடி கல்வி என்ற  திட்டத்தில் மாலை வகுப்பு" என்று சொன்னார்கள்.
தன்னார்வலர்கள் பதிவு செய்து கொண்டு கற்பித்து வருகிறார்களாம். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.


//தன்னார்வலர்கள்..

  1. வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
  2. கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
  3. தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
  4. யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
  5. குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்//
இணையத்தில் இல்லம் தேடி கல்வியை பற்றி அறிந்து கொள்ள படித்த போது தெரிந்து கொண்டது.


ஆசிரியர் சின்ன பெண்ணாக இருந்தார் அனைவருடனும் சிரித்து அன்பாக பேசி கொண்டு இருந்தார்.

உயரமான விதானம்.  ஜன்னல்கள் இருந்தன.

பக்கத்தில் இருபுறமும்  மண்டபம்  வெவ்வால் நந்தி மண்டபம் என்று சொல்வார்கள் அது போல இருந்தது. 
மாணவர்கள் அலங்காரம்.


கோவிலை வலம் வந்தவிட்டு திரும்பியபோது ஆசிரியர் வந்து விட்டார் . அவர்  குழந்தைகளுக்கு உடை அணிவித்து கொண்டு இருந்தார். ஆசிரியருக்கு வணக்கம் சொல்லி என்ன விழா என்று கேட்டபோது நாடகம் நடித்து காட்ட போகிறார்கள் என்றார்கள்.

என்ன கதை என்று கேட்டேன்?  "கண் தெரியாத ஒவியர்  ஓவிய போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக  படம் வரைவதும் அதற்கு  அரசர் வந்து பரிசு அளிப்பாதான கதை என்று  சொன்னார்." அரசர்தான் போட்டிக்கு அழைக்கிறார் போலும்.

நாடகம் பார்க்கலாம் என்றால் என் தங்கையின் 60 கல்யாண  முதல்  கால ஹோமம்  5.30க்கு ஆரம்பித்து விடும் என்பாதால் எல்லோரும் காரணத்தை சொல்லி, பிள்ளைகளை, ஆசிரியரை வாழ்த்தி விடைபெற்றோம். 

குழந்தைகளின் பெற்றோர்கள் நாடகத்தை பார்க்க வருவார்களா தெரியவில்லை. பார்வையாளர்கள் யாரும் இல்லை. ஆசிரியரும், குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள். நாடகம் தொடங்கும் போது வருவார்கள் என்று நினைக்கிறேன்.

//இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதம் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள்.//

பாடதிட்டத்தில் உள்ள பகுதி நாடகம். என்று தெரிந்து கொண்டேன்.



பிரம்மபுரீஸ்வரர், மலர்குழல்மின்னம்மை இந்த குழந்தைகளை நல்ல படியாக வைக்க வேண்டும் அவர்கள் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம்.

அடுத்து திருக்கடவூர் திருக்குளம், மார்க்கேண்டையர்  கோவில் பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

சனி, 14 மே, 2022

திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)




முந்திய பதிவு  திருக்கருகாவூர்  .  திருக்கருகாவூருக்கு  அடுத்து போன கோயில்  "திருக்கடவூர் மயானம்."

  மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களில் இத்தலம் 107 வது தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும்  தேவாரம்   பாடல்கள் பாடப் பெற்ற தலம்.
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் அருகே கிமீ தொலைவில் இருக்கிறது இத் தலம். இடது பக்கம் பெரிய நந்தவனம் இருக்கிறது.

இது அம்மன் சன்னதி இருக்கும் இடம்  கோபுர வாசலுடன் நல்ல பெரிதாக இருக்கிறது.

பிரம்மபுரீசுவரர்  இருக்கும் கோபுர வாசல்.

ஒவ்வொரு யுகத்திலும் சிவபெருமான் பெரும் பிரளயத்தை உண்டாக்கி உலகத்தை அழித்து விடுவாராம், அப்போது பிரம்மாவும் அழிந்து போவாராம். மீண்டும் புதுயுகம் துவங்கும் போது பிரம்மாவை  உண்டாக்கி ஜீவராசிகளை உண்டாக்க ஞான உபதேசம் செய்வாராம் சிவன்.   அதனால் சுவாமியின் பெயர் பிரம்மபுரிஸ்வரர்.

பிரம்மாவை அழித்ததால் கடவூர்மயானம் என்றும், அவரை உயிர்ப்பித்து ஞான உபதேசம் செய்தபடியால் திருமெய்ஞானம் என்ற பெயரும் உண்டு என்று தலவரலாறு கூறுகிறது.

கொடிமரம் இல்லை இந்த கோயிலில் , நந்தியும் பலிபீடமும் மட்டுமே உள்ளது. மாலை நாலுமணிக்கு போனோம். நடை திறந்து விளக்குகள் போட்டார் கோயில் மெய்காப்பாளர்




பிரம்ம தீர்த்தம், காசிதீர்த்தம் என்று அழைக்கப்படும் கிணறு உள்ள இடம்.    கிணறு இருக்கும்  இடத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வெயிலில் கால் சுடாமல் இருக்க வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

மார்க்கண்டேயர் தினம் சிவபூஜை செய்ய  காசியிலிருந்து  கங்கையை இத்தலத்தில் வரவழைத்துக் கொடுத்தாராம் சிவபெருமான். திருக்கடவூர்மாயன பிரம்மபுரீஸவரருக்கு இந்த நீராலால் அபிசேகம் கிடையாது திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கு மட்டுமே இந்த தீர்த்தம். 

இந்த கிணற்றில் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கை பெருகுவதாக ஐதிகம். அன்று மட்டும் பக்தர்கள்  நீராடலாம்.


அமிர்தகடேசுவரார் கோயிலுக்கு அபிசேக தீர்த்தம் இந்த கோயிலில் இருக்கும் கிணற்றிலிருந்து பெரிய குடத்தில்  மாட்டுவண்டியில்  எடுத்து செல்லப்படும்.  முன்பு போட்ட திருக்கடவூர்  பதிவில் அந்த படம்   போட்டு இருக்கிறேன்.






தங்கையும், நானும்
கோயிலின் உட்புறம்  உறவினர்கள் 
துவாரபாலகர்  கையில் அமர்ந்து இருக்கிறது கிளிகள் முகம் காட்ட வில்லை 


ஒலி பெருக்கி மேல் மறைந்து கொண்டது


கலசம் பக்கம் கிளியின் முகம் தெரியும்., மேலே கம்பியில் கருங்குருவி(இரட்டை வால் குருவி)

நால்வரும், சிவபெருமானும்
பெரிய பிரகாரம்
இங்கு உள்ள முருகன் கையில் வில்லோடு காட்சி தருவார்
சிங்காரவேலர் 
தேவார பதிகம்
பிரம்மபுரீஸ்வரர்


வில்வ மரம்
.
கோவில் பிரகாரம்
வாகனங்கள்
வாகனங்கள்  பழுது அடைந்து இருக்கிறது

ஒரு காலத்தில் திருவிழாக்களில் சுவாமியை சுமந்து சென்றவை
சுவாமி சன்னதி விமானம்
கல்வெட்டுக்கள்

பைரவர்
பெருமாள்
  

மலர்குழல் மின்னம்மை  , ஸ்ரீ ஆம்லகுஜநாயகி 

அடுத்து  அம்மன் சன்னதி போவோம். அதுவும் தனி கோயில் போல பெரிய சன்னதி .
அம்மன் கோயிலில் என்ன பார்த்தேன் என்பதையும்  சொல்கிறேன்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
_________________________________________________________________--