ஞாயிறு, 31 ஜனவரி, 2021
உல்லாசப்பயணம் - பகுதி 9
வெள்ளி, 29 ஜனவரி, 2021
உல்லாசப்பயணம் - பகுதி 8
வியாழன், 28 ஜனவரி, 2021
உல்லாசப்பயணம் - பகுதி 7
கங்கை நதிக்கு ஆரத்தி
புதன், 27 ஜனவரி, 2021
செவ்வாய், 26 ஜனவரி, 2021
உல்லாசப்பயணம் - 4
திங்கள், 25 ஜனவரி, 2021
உல்லாசப்பயணம் - பகுதி 3
சனி, 23 ஜனவரி, 2021
உல்லாசப்பயணம் - பகுதி 2
உல்லாசப்பயணம் என் கணவரின் கல்லூரிச்சுற்றுலா தொடர் பதிவு முந்தின பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.
சாஞ்சியில் அமைந்துள்ள ஸ்தூபிகள் ,புத்தவிகாரம் பற்றிய வரலாறு இந்த பதிவில் இடம்பெறுகிறது.
படங்கள் இணைக்க முடியவில்லை. பயணக்கட்டுரை எழுதவேண்டும் என்று படங்களை சேமித்து எடுத்து வந்த மகனின் மடி கணினி பழுது ஆகி விட்டதால் படங்களை இணைக்கமுடியவில்லை. ஒரு சில படங்கள் மட்டும் அலைபேசியில் இருக்கிறது. அந்த இடங்கள் வரும் போது போடுகிறேன்.
நிறைய படங்கள் ஊரில் ஆல்பத்தில் இருக்கிறது. பிறகு இணைக்க வேண்டும்.
வெள்ளி, 22 ஜனவரி, 2021
உல்லாச பயணம்
செவ்வாய், 19 ஜனவரி, 2021
ஞாயிறு, 17 ஜனவரி, 2021
அன்பு உறவுகளுக்கு நன்றி
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு . என் துயரமான நாட்களில் உற்ற துணையாக உடன் இருந்து உதவிய இரு பக்க சொந்தங்களுக்கும் நன்றி. உறவுகள் வருமுன்னே அக்கம் பக்கம் நட்புகள் உடனே வந்து உதவியதை காலம் முழுவதும் மறக்க முடியாது அவர்களுக்கும் நன்றி.
மற்றும் வலைத்தள நட்புகள் அனைவருக்கும் நன்றி. "அக்கா", "தங்கச்சி" சகோதரி என்று வாய் நிறைய அழைத்துஉடன்பிறவா சகோதர சகோதரிகளாக ஆறுதல் மொழிகள் சொல்லி அழைத்த அனைத்துஅன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.
"அம்மா" என்று அழைத்து வலைத்தளத்திற்கு வாருங்கள்" என்றும் , மனகவலைகளை மாற்றும் மருந்து இது இணையத்திற்கு வருக" என்றும் அழைத்து கொண்டே இருக்கும் அனைத்து நட்புகளுக்கும் நன்றி.
தங்கள் வலைத்தளங்களில் இரங்கல் பதிவு போட்டு ஆறுதல் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி.
திருமணம்ஆகி வாழ்க்கை துணைவருடன் வசித்த ஊர்கள் மூன்று,அங்கு அன்பாய் பழகிய நட்புகள் ஆறுதலாக அன்பாய் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி .
மகன் ஊருக்கு வந்து இருக்கிறேன் இப்போது. இங்கு வரும் வரை எங்களுக்கு (என் மகனுக்கும் எனக்கும்) எத்தனை எத்தனை அனுபவங்கள் நாளும் ! உறவுகளும், நட்புகளும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். அவர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நல்லவிதமாக அனைத்தையும் நடத்தி கொடுத்த என் இதய தெய்வத்திற்கும், இறைவனுக்கும் நன்றி.
என் கணவர் இளங்கலை முதலாண்டு படிக்கும் போது வடஇந்தியப் பயணம் சென்றார்கள் . அவர்கள் கைப்பட எழுதிவைத்து இருந்த பயணக்கட்டுரையை தொடரவிரும்புகிறேன். இறையருள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
வருகிறேன் விரைவில்.
வாழ்க வளமுடன்.