விஷ்ணுப்ரயாகை மின் உற்பத்தி நிலையம்
கொடுத்துவிட்டு
இத்திருத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவதரியாச்சிரமம் என்ற
திருத்தலமாகும் . பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப்
பாடியுள்ளார்கள்.
வண்டுதண்தே னுண்டுவாழும் வதரிநெடுமாலை
கண்டல்வேலி மங்கைவேந்தன் கலியன்ஒலிமாலை
கொண்டுதொண்டர் பாடியாடக் கூடிடில்நீள்விசும்பில்
அண்டமல்லால் மற்றவர்க்கோர் ஆட்சியறியோமே
என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
விஷ்ணுப்ரயாகை மின் உற்பத்தி நிலையம் |
கொடுத்துவிட்டு |
இத்திருத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவதரியாச்சிரமம் என்ற
திருத்தலமாகும் . பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப்
பாடியுள்ளார்கள்.
வண்டுதண்தே னுண்டுவாழும் வதரிநெடுமாலை
கண்டல்வேலி மங்கைவேந்தன் கலியன்ஒலிமாலை
கொண்டுதொண்டர் பாடியாடக் கூடிடில்நீள்விசும்பில்
அண்டமல்லால் மற்றவர்க்கோர் ஆட்சியறியோமே
என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
காணக்கிடைக்காத காட்சி. கண்ணுக்கு அரிய கோயில்கள். அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
நீக்குகண்ணுக்குக் குளுமையாகப் பனியால் மூடபட்டப் மலைச்சிகரங்கள்.
பனி உருகி ஓடி வரும் மலையிலிருந்து அவை எல்லாம் பார்க்க அழகு.
சாளக்கிரமத்தில் செய்த அமர்ந்த நிலையில் இருக்கும் பத்ரிநராயணர் எல்லாம் அழகு.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகிய படங்களும், புகைப்படத்தில் விளக்கிய வசனங்களும் புதுமையாக இருந்தது. தொடர்கிறேன்...
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குகோவில் வரலாறு புகைபடத்திற்கு கீழ் உள்ளது.
2012ல் போன பதிவு அப்போது போட்டது.
புரட்டாசி பதிவாய். வந்து இருக்கிறது.
தொடர் பதிவு இல்லை.
முன்பு சார் தம் யாத்திரை போன போது (கங்கோத்திரி, யமோனத்திரி, கேதார்நாத், பத்ரிநாத் ) எழுதிய தொடர் பதிவு. தொடரும் என்பதை எடுக்க மறந்து விட்டேன்.
பத்ரிநாத வரலாறு வேறு பதிவில் வருகிறது போலும் தேடி போட வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான பகிர்வு. சரஸ்வதி நதியைப் பார்க்க முடியாது போயிருக்கிறது. குறுகிய கால அவகாசத்தில் பயணங்களிலன் போது சில இடங்களை நாம் தவறவிட வேண்டியதாகிறது. தொடருங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குசரஸ்வதி நதியை பார்க்க முடியாது போய்விட்டது வருத்தமாய் இருந்தது.
சேர்ந்து மேலே நடக்க ஆரம்பித்தோம், சேர்ந்தே எங்கள் குழுவோடு இறங்க வேண்டும்.
அதனால் போக முடியவில்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மீள்பதிவை படங்கள் போல எடுத்துக் பதிந்திருக்கிறீர்களா? இடங்களும் படங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குஇந்த முறையிலேயேதான் முன்பும் பதிவு செய்து இருந்தேன்.
நிறைய பேர் அப்போது கலர் கலராக தளம் வைத்து இருப்பதைப் பார்த்து வந்த ஆசையில் செய்த முயற்சி. அப்புறம் விட்டு விட்டேன்.
பனி உருகி ஓடும் காணொளியும் போட்டு இருந்தேன்.
காப்பி, பேஸ்ட் செய்து தான் போட்டு இருக்கிறேன்.
காணொளியை மீண்டும் தேடிப் பார்த்து போட பொறுமை இல்லை
அதனால் விட்டுப் போய்விட்டது.
நீங்கள் இந்த பதிவை அப்போது படிக்கவில்லை ஸ்ரீராம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பத்ரிநாதர் கோயில்.. முழு வளாகத்தையுமே படம் எடுத்து வந்து போட்டிட்டீங்க கோமதி அக்கா.. மிக அழகு.
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குமுழு வளாகத்தையுமே எடுத்த படம் போட வேண்டும் என்றால் இரண்டு மூன்று பதிவு போட வேண்டும். கோவிலுக்குள் அனுமதி இல்லை, வெளியே எடுத்த படங்கள்தான் இவை.
எங்கோ மலைப்பகுதியில் இருக்கிறதோ? இது 2012 இல் எடுத்திருக்கிறீங்க.. இப்போ இன்னும் மாறி மெருகேறிய கோயிலாக இருக்கும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅதிரா இக் கோவில் உத்ரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து வெகு உயரத்தில் இருக்கிறது.
நீக்குகுளிர் பிரதேசம் என்பதால் பனி மூடி இருக்கும் பாதை என்பதால் ஆறு மாதம் திறந்து இருக்கும் ஆறுமாதம் மட்டுமே தரிசனம் கிடைக்கும். வைகாசி மாதம் முதல் கார்த்திகை வரை திறந்து இருக்கும். மார்கழி முதல் சித்திரை வரை நடை சாற்றப்பட்டு ஆறுமாதம் சாமியே ஜோசிமட் என்ற இடத்திற்கு வந்து விடுவார். நாங்கள் போய் இருந்த போதே பனி நிறைய இருந்தது. மலைகளில் பனி உருகி கீழே வருவது பார்க்க நன்றாக இருந்தது பாதைகளில் பனியை விலக்கி கொண்டே இருந்தார்கள்.
மலையையும் அடிவாரப் பாதையையும் பார்க்க நடுங்குதே:).. கண் தப்பினால் கரணம் என்பது போலாகிடுமே ஜாமீ..
பதிலளிநீக்குஅந்த அரசமரம் எவ்ளோ அழகாக வளர்க்கிறார்கள்.. அது இப்போ 6 வருடத்தில் நன்கு பெருத்திருக்க வாய்ப்பிருக்கு.
மலை மேல் போக நிறைய கொண்டை ஊசிகள் வளவுகள் உண்டு.
நீக்குபாதையில் மலைமேலிருந்து பனி உருகி ஓடி வந்து பாதையை உடைத்து இருக்கும் சில இடங்களில் அடிக்கடி பழுது பார்க்கும் வேலை நடக்கும் பாதையில் சில இடங்களில் மெதுவாக போக வேண்டும் .
அரசமரம் அழகாய் வளர்க்கிறார்கள் அந்த பக்கம் உள்ளவர்கள் அதை வெட்டவே பயப்படுவார்கள். வீட்டின் மேள் வந்து இருப்பதை அகற்ற ஆள் வரமாட்டார்கள். அதிகமாய் பணத்துக்கு ஆசை பட்டவர்கள் மட்டுமே வந்து வெட்டவருவார்கள் அதை வெட்டினால் பாவம் வந்து சேரும் என்று வெட்ட அஞ்சுவார்கள்.
இப்போது பெரிதாக வளர்ந்து இருக்கும்.
அலக்நந்தா.. சிங்களப்பேர் போல இருக்கே:)
பதிலளிநீக்குஅந்த சந்நிதியும் மின் விளக்கு அலங்காரமும் மிக அழகு.. இப்படி அலங்காரம் பார்க்க மனதுக்கு இனிமை.
பனிமலை அழகு..
குபேர பட்டிணம் இங்கே இருக்கிறது. அதற்கு அளகாபுரிபட்டிணம் என்ற பெயர்.
நீக்குகுபேரர் இங்கு நாராயணருக்கு மகாலெட்சுமியை மணக்க உதவி செய்த காரணத்தால் சன்னதியில் இருக்கிறார். அவர் ஊருக்கு அருகில் இந்த நதி ஓடுவதால் அலக் நந்தா என்று பெயர்.
இன்னும் சரியாக எடுக்கவில்லை மின் அலங்காரத்தை. நேரில் பார்க்க அவ்வளவு அழகு.
பனிமலை மிக அழகாய் இருந்தது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
மீண்டும் அங்கு போன நினைவு மனதில் வந்தது. உங்களுடன் உரையாடியதில்.
தாமதம்.. ஆனாலும்,
பதிலளிநீக்குதங்களால் பத்ரிநாத், இந்திர நீல பர்வதம் - புண்ணிய தரிசனம் கண்டேன்...
மிகவும் மகிழ்ச்சி..
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குதாமதம் எல்லாம் ஆகவில்ல.
வேலை பளுக்கு இடையே பதிவுகளைப் படித்து கருத்து சொல்வதற்கு நன்றி.
>>> அரசமரம் அழகாய் வளர்க்கிறார்கள் அந்த பக்கம் உள்ளவர்கள் அதை வெட்டவே பயப்படுவார்கள்.. <<<
பதிலளிநீக்குநம்ம ஊர் களிமண் கபாலங்களில் இச்செய்தி ஏறினால் மிகவும் நல்லது...
இங்கு உள்ளவர்களில் வயதானவர்கள் சொல்வார்கள் அரசமரத்தை வெட்டக்கூடாது என்று.
நீக்குசாலை விரிவாக்க திட்டத்தில் பாதையோரம் இருந்த பல அரசமரம், ஆலமரம் வெட்டப்பட்டது மிகவும் வருத்தமாய்தான் இருக்கிறது.
அருமை அம்மா...
பதிலளிநீக்குபதிவும் வித்தியாசமாய்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குமுன்பு செய்தது . எல்லோரும் கலரில் போடுவதை பார்த்து செய்தது.
அப்புறம் முயற்சிக்கவே இல்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பத்ரி பயணம் , நானே சென்றது போல உணர்கிறேன். மிக அழகு கோமதி. குளிர் நடுக்கி இருக்குமே. அழகான வண்ணத்தில் படங்களும் கருத்துகளும் புதிதாக
பதிலளிநீக்குஇருக்கிறது. பத்ரி நாராயணன் அனைவருக்கும் அருளட்டும்.
மிக மிக நன்றி கோமதி.
என் தங்கை இப்போது அங்கே போயிருக்கிறாள்.
நலமே சென்று வரவேண்டும்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல் குளிர் நடுக்கியது எங்களை.
பழைய பதிவுதான் அக்கா. அப்போது புதுமை செய்ய ஆசைப்பட்டு செய்த்து.
பத்ரி நாராயணனை புரட்டாசி சனிக்கிழமை தரிசிக்கலாம் என்று போட்டேன்.
உங்கள் தங்கை நலமாக தரிசனம் செய்து வருவார்கள் பத்ரி நாராயணன் அருளால்.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
படங்களும் தங்களின் விவரிப்பும்
பதிலளிநீக்குபயணம் போன அனுபவத்தைத்தருவதாய்,,,/
வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.