திங்கள், 18 அக்டோபர், 2021

அன்றும் , இன்றும்

  வரலாற்று சிறப்பு மிக்க வீடு

பழமையும் , புதுமையும்

நகர் வலம்

அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற  ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அந்த ஊரில் தங்கி பார்த்தவை தொடர் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது.  அங்கு  ஊரைச்சுற்றிப்பார்க்க , பயணம் செய்ய அந்தக்கால  வண்டிகள், மற்றும் இந்தக்கால வாகனங்கள் உள்ளன.  அவற்றின் படங்கள் இந்த பதிவில்  இடம் பெறுகிறது.

இந்த வண்டிகளில் பயணம் செய்து  ஊரின் அழகை பார்க்கலாம்.   வண்டிக்கு அருகில் துப்பாக்கி சண்டை நாடகம் பார்க்க அழைப்பவர் நிற்கிறார்.

நிறைய வித விதமான குதிரை வண்டிகள் இருக்கிறது

இந்த வண்டியில் மேலே   பெட்டி வைத்துக் கொண்டு பயணம் செய்வது போன்ற தோற்றம் கொடுக்க மேலே பழைய காலத்து பெட்டி வைத்து இருக்கிறார்கள் .

வண்டி ஓட்டுபவர் அந்தக்கால கவ்பாய் ஆடை அணிந்து இருக்கிறார். வண்டியும் பழமையாக இருக்கிறது .
நாங்கள் பயணம் செய்த வாகனத்திற்கு  பயணச்சீட்டு வாங்கும் இடம்
ஹலோவின் சிறப்பு நாடகம்

 நாம் பயணம் செய்யும் நேரத்தைப் பொருத்து நாம் பார்க்கும் 
 நாடகங்கள் மாறும். இரவு பயணம் செய்தால் இரவு காட்சியாக மேலே  பலகையில் சொல்லி இருக்கும் ஆவிகள் நாடகம் பார்க்கலாம். அது பயணகட்டணத்தில் சேர்ந்து இருக்கிறது. நாங்கள் காலை பயணம் செய்தோம் , "துப்பாக்கி சண்டை" பார்த்தோம்.

நாங்கள் பயணம் செய்த  வாகனம்

பின்னால் பயணக் கட்டணம் உள்ளது

இவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டே ஊரைப்பற்றி சொல்லி வந்தார். நாங்கள் தங்கிய வீட்டையும் காட்டி இது மிகவும்  பழைய  காலத்து வீடு என்று சொன்னார்.  இவரும் பழைய காலத்து உடை அணிந்து இருந்தார், தொப்பியை எடுத்து  பக்கத்தில் வைத்து விட்டார்.


தொடர்ந்து இது போன்ற வாகனங்கள் போய் கொண்டு இருந்ததால் எங்கள் வாகனத்தில் 7 பேர்கள் தான் பயணித்தோம். 


ஊரின் காட்சிகளை  போன பதிவில் பகிர்ந்து விட்டேன்.

இன்னொரு வாகனமும் ஊரைச்சுற்றி காட்டுகிறது.

நாங்கள்  பயணம் செய்தபோது அழகான ஒரே நிற கார்கள் கண்ணில் பட்டது . 

பழைய சரக்கு ரயில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.


அடுத்த பதிவில்  துப்பாக்கி சண்டை  நாடக காட்சிகள் பார்க்கலாம்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

----------------------------------------------------------------------------------------------------

வியாழன், 14 அக்டோபர், 2021

நவராத்திரி வாழ்த்துக்கள் !

நடுவில்  அம்பிகேஸ்வர்  மாகதேவ், பார்வதி இருக்கிறார்கள்.

அட்லாண்டாவில் "அம்பாஜி யுஎஸ்ஏ" என்ற இந்து மத அமைப்பினரால் கட்டப்பட்ட  சக்தி  கோயில். (வடநாட்டு மக்கள் கட்டிய கோயில்.) மத சடங்குகள் செய்வதற்கும் ஆண்டு முழுவதும்  பண்டிகைகள்   கொண்டாடவும்  இந்த கோயிலை கட்டி இருக்கிறார்கள்.

நன்றி- கூகுள்
இரவு   நேரம் போனதால்  கோயில்  பெயர் பலகையை எடுக்கவில்லை. கூகிள் உதவியில் இணைத்துள்ளேன்

நவராத்திரி கொலு பார்க்க வாங்க என்ற இதற்கு முந்திய   பதிவில்  அடுத்து "சக்தி மந்திர் " என்ற கோயில் போனோம், அது அடுத்த பதிவில் என்றேன். அந்த கோயில் படங்கள் இந்த பதிவில்.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

நவராத்திரி கொலு பார்க்க வாங்க


ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயில்  நவராத்திரி கொலு

அட்லாண்டா இந்து கோயில் என்று இதற்கு முன்பு போட்ட பதிவு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா அருகில் உள்ள "ரிவர்டேல்" எனும் நகரத்தில் உள்ளது இந்த  கோயில்.
இந்த இடத்தில்  ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயிலும், அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது.

நாங்கள் போன ஞாயிறு போய்  இருந்த போது நவராத்திரி கொலுவிற்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள் என்றேன்.

இந்த ஞாயிறு  நவராத்திரி கொலுவைப்  பார்க்க அழைத்து போனாள் மகள். பெருமாள்கோயில், சிவன் கோயில் இரண்டிலும் மிக அழகாய் கொலு வைத்து இருந்தார்கள்.
அங்கு பார்த்த கொலு படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

சனி, 9 அக்டோபர், 2021

ஓம் நமசிவாய ! ஓம் நமோ நாராயணா!அட்லாண்டாவில்  உள்ள "இந்து கோயில்"என்று அழைக்கப்படும் கோயில்.
முகப்பு வாயில், படிகளில் ஏறி போனால் முதலில் பெருமாள் கோயில் வரும்.


ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா அருகில் உள்ள "ரிவர்டேல்" எனும் நகரத்தில் உள்ளது இந்த  கோயில்.
இந்த இடத்தில்  ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயிலும், அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது.

ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயிலும், அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலும்


இந்த கோயிலுக்கு போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அழைத்து போனாள் மகள். புரட்டாசி மாதம் சனிக்கிழமை கூட்டம் இருக்கும் என்பதால் ஞாயிறு காலை போனோம். மகள் இருக்கும் இடத்திலிருந்து 50 நிமிட பயணம் செய்து போனால் இந்த ஆலயத்தை தரிசிக்கலாம்.

வியாழன், 7 அக்டோபர், 2021

நகர் வலம்


அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட்  மாதம்  வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு  போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி  அந்த ஊரில் உள்ள பல முக்கியமான இடங்களை சுற்றிப் பார்த்தோம்.

இந்த வீட்டின் சாவி  இந்த பெட்டியில் இருந்தது.
பழமையான வீட்டுக்கு புது மாடல் பூட்டு.

வீட்டு உரிமையாளர் போனில் சொன்ன  நம்பரை அடித்தபின் சாவியை வைத்து திறந்தால் திறந்து கொண்டது கதவு. ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொண்டு போனோம். இரண்டு பதிவுகளில் இந்த படமும் செய்தியும் விட்டுப் போய் விட்டது.


 

பிறகு ஊரைச்சுற்றிப்பார்த்தோம். கடந்த இரண்டு பகுதிகளில் வீட்டின் படங்களை பகிர்ந்து இருந்தேன்.அடுத்த பகுதி  ஊரைப் பார்ப்போம் என்றேன் போன பதிவில்.


 இந்த பதிவில் ஊரின் படங்களை பகிர்ந்து இருக்கிறேன்.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

பழமையும், புதுமையும்


அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட்  மாதம்  வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு  போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி இருந்தோம்.இந்த பதிவு  வரலாற்று சிறப்பு மிக்க வீடு
 என்ற போன பதிவின் தொடர்ச்சி.


சமையல் அறையில் இப்படி எழுதி வைத்து இருந்தார்கள்.

அந்தக் காலத்து எண்ணெய் பீப்பாய் வடிவில்  அலங்காரமாக வைத்து இருந்தார்கள்.

பழைய கால பீங்கான் பாத்திரங்கள் நல்ல கனமாக இருக்கிறது. 

கைபிடி வைத்த செம்பு பாத்திரங்கள்.

இந்த பாத்திரத்தில் துளைகள் இருக்கிறது.  மாவை ஊற்றி ஆவியில் வேக வைப்பார்கள் போலும் நம்  இட்லி போல.

இந்த அலமாரி புதுமையும் பழமையும் இணைந்து இருக்கிறது

காப்பி மேக்கர், சீனி, காப்பித்தூள்

பழைய காலத்து அலமாரி, அழகு சாதன   பெட்டிகள் மேலே இருக்கிறது.

மேஜைக்கு கீழே மைக்ரோ ஓவன் மற்றும்  சின்ன குளிர்சாதனபெட்டி உள்ளது.

1.பழைய இரும்பு சாமான்கள் மேலே பலகையில் வைத்து இருக்கிறார்கள், காப்பிகொட்டை அரைக்கும் மெஷின் இருக்கிறது.   2. இடியாப்ப அச்சு போல் இருக்கிறது, கீழ் பகுதியில் அச்சு இருக்கிறது. 


.3. பேரன் உட்கார்ந்து இருக்கும் ஷோபா பின் புறம் உள்ள மரச்சுவற்றில் பழைய காலத்தில் பயன்படுத்திய  இரும்பு கருவிகள் இருக்கிறது.

  4. காய் நறுக்க பயன்படும் மர தட்டு, மற்றும் மரக்கரண்டிகள். 5. காரட் துருவும் கருவி இருக்கிறது. 
6.பொருட்களை அளந்து போட வில் தராசும் பாத்திரமும் இருக்கிறது. 
 7.குளியல் அறையில் அழகான சின்ன மர அலமாரி.
 8. அவர்கள் பயன்படுத்திய கோடாரிகள். 
9.சின்ன சின்னதாக நிறைய இரும்பு சமையல் பாத்திரங்கள்.


பழைய காலத்து  தொலைபேசி.
கம்பி இல்லா தந்தி கொடுக்கும் தகவல் சாதனம் போல் இருந்தது அலமாரி மேல் .பொருட்களை அப்படியே இருக்க வேண்டும் என்று சொன்னதால் அதை எடுத்துப்பார்க்கவில்லை. வீட்டின் உரிமையாளர் அருகில் இருந்து இருந்தால் கேட்டு இருக்கலாம். கூகுளில் பார்த்தேன் இது போல் தான் இருக்கிறது கம்பி இல்லா தந்தி கொடுக்கும் சாதனம்.

பின் வாசல் கதவு  புதுப்பிக்க பட்டது போல் இருக்கிறது.

வீட்டுக்கு பின்னால் சின்ன அழகான பால்கனி.    டீபாயில் கண்ணாடி கூண்டுக்குள் மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றி மாலை நேரம் அமர்ந்து பேசலாம்

நான்கு படி இறங்கி போனால் தோட்டம்.


பால்கனியிலிருந்து தோட்டத்தை எடுத்த படம். 

வீட்டின் பின் பகுதி, வேண்டாதவை போட்டு வைத்துக் கொள்ள ரேடிமேட் மர வீடு.   பழைய நாற்காலி, குளிர் காய கட்டைகள் போட்டு நெருப்பு மூட்ட  நடுவில்  நாலு கால்வைத்த  இரும்பில் செய்த பாத்திரம் .நெருப்பு பொறி பறக்காமல் இருக்க அதன் மேல் இரும்பு வலை மூடி.


அந்தக் காலத்தில் வழிப்பயணங்களில்  இப்படி பாத்திரங்களை தொங்க விட்டு நெருப்பு மூட்டி  சமைத்து சாப்பிடுவார்கள்.  பழைய காலத்து அரிக்கேன் விளக்குகள்.(லாந்தர் விளக்குகள்)


அழைப்பு மணியாக பயன் படுத்தியது. கொக்கி போன்ற கம்பியை  அந்த முக்கோண கம்பியில் அடித்தால் நல்ல ஒலி வருகிறது. வீட்டின் இலக்கம் 11.

ஒரு சின்ன அறையில் கிட்டார்  வைக்கும் பெட்டியும் , பழைய காலத்து வெந்நீர் தயார் செய்யும் ஹீட்டரும் இருந்ததது.

அடுத்த பகுதி  ஊரைப் பார்ப்போம். 


வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

---------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

வரலாற்று சிறப்பு மிக்க வீடுஅரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட்  மாதம்  வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு  போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி இருந்தோம்.

மகனுக்கு இது போன்ற இடங்களுக்கு போய் பார்ப்பது பிடிக்கும், முன்பு குடும்பத்துடன்  போய் இருக்கிறான், மறுமுறை எனக்கு காட்ட அழைத்து சென்றான். போனமுறை வந்து இருந்த போது எங்களை அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தான், அது முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு மட்டும் காட்டும்படி ஆகி விட்டது. என் கணவருக்கு இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்க்க பிடிக்கும்.

1880 ம் வருடம் இந்த வீடு கட்டபட்டதாம். பழைய பொருட்கள் அழகாய் காட்சிக்கு வைத்து இருந்தார்கள்.

சாப்பாட்டு மேஜையில் இந்த ஊரில் பார்க்க வேண்டிய இடங்கள் , போகும் வழி வரைபடம் வைத்து இருந்தார்கள்.