24,8.2019 ல் குடந்தையில் பார்த்த கோவில்கள் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது. இன்று சக்கரபாணி கோவில். இந்த கோவில் காவிரிக் கரையின் தென் கரையில் அமைந்துள்ள கோவில். குடந்தை பெரியகடைத்தெருவின் வட கோடியில் அமைந்து இருக்கிறது.
இந்த வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா இருக்கிறார் ஸ்ரீ சுதர்ஸனவல்லி, ஸ்ரீ விஜயவல்லி தாயாருடன் இருக்கிறார்
நாங்கள் காலை சீக்கீரம் வந்தோம். கடைகள் திறந்து விட்டால் காரை நிறுத்துவது கடினம் என்பதால் 7 மணிக்கே வந்து விட்டோம் கோவிலுக்கு.
இந்த நுழைவாயில் வழியாகக் கோவிலுக்குப் போனோம்.
உள்பக்கத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் - ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த கோலத்தில்