செவ்வாய், 18 டிசம்பர், 2018

கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்

Image may contain: one or more people, people standing and outdoor

தம்பி மகள் வளைகாப்பு விழாவிற்கு தென்காசி போனோம் 12ம் தேதி.  அப்போது போகும் வழியில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் உள்ள அனுமன் கோவில் போனோம்.

கடையநல்லூர்  தாலுகாவில் இருக்கிறது. தென்காசியிலிருந்தும் சங்கரன் கோவிலிலிருந்தும் போகலாம்.

எந்தக் கோவில் போவதாய் இருந்தாலும் அதைப்பற்றி தெரிந்து கொண்டு போவோம். இந்தக் கோவில் போகும்போது அண்ணி  சொன்னார்கள் அனுமன் கோவில் இருக்கிறது பார்க்கலாமா என்று கேட்டார்கள் அதனால் விவரம் ஒன்று தெரியாமல் பார்த்த கோவில்.

பட்டரிடம் கேட்கலாம் என்றால் அவர் அபிஷேகம் முடித்து திரை போட்டு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். திரை விலக்கியவுடன்  அர்ச்சனை இருக்கா என்று கேட்டு எல்லோரிடமும் அர்ச்சனை சாமான்கள், வெற்றிலை மாலை எல்லாம் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

9.30க்கு   விழா ஆரம்பித்துவிடும்எங்களுக்கும்   அதற்குள்  தென்காசி போக வேண்டும்.
காரில் இறங்கியவுடன்  -  ஏரி போல குளம்  இருந்தது.
குளத்தின் ஓரத்தில்  பூத்த மலர்

நாங்கள் வந்த கார் மேலே இருக்கிறது பாருங்கள், கீழே   சாய்வாக தளத்தில் நடந்து வந்தால் பின் சிலபடிகள் உடைந்து காணப்படும் அதில் இறங்கினால் இப்படி  சிமெண்ட் பாதை இருக்கிறது. எல்லாப் பக்கமும் பச்சைப்பசேல் என்று வயல் இருக்கிறது . ஒரு பக்கம் மட்டும் வேலி இருக்கிறது, அந்த வேலியில் கொடி படர்ந்து இருந்தது  அதில் பூத்த மலர்.

Image may contain: grass, sky, outdoor and nature
தைமாதம் அறுவடை இருக்கும் போல! திருப்பாவையில்  இன்றைய பாடலின் "ஓங்கு பெருஞ்செந்நெல்"  என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது இல்லையா?
Image may contain: plant, nature and outdoor
காலை நேரம் பனித்துளியோடு கதிர்கள் பள பள என்று  மின்னியது.
Image may contain: plant, grass, nature and outdoor

Image may contain: plant, nature and outdoor
நெற்கதிர்கள்

Image may contain: sky, grass, outdoor and nature
கோவிலைச் சுற்றி கண்ணுக்கு  எட்டிய தூரம் வரை வயல்கள்தான்.
Image may contain: sky, tree and outdoor
அனுமன் விமானம்
அனுமனுக்கு நேரே குளம் இருக்கிறது. அதன் கரையில் நவீன முறையில் சமையல் கூடம் இருக்கிறது. தினம் அன்னதானம் நடக்கிறது.  100 பேர் சாப்பிட சமைக்கிறார்கள். அவர்கள் நிறைய செய்யவேண்டும் என்றால் மட்டும் நவீனமாக சமைப்பதில் சமைப்பார்கள் போலும் . கொஞ்ச பேருக்கு என்றால் பெரிய அலுமினியப் பாத்திரத்தில் சமைத்துக் கொண்டு இருந்தார்கள்.  புடலங்காய் கூட்டுக்கு  நறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.

ரயிலைவிட்டு இறங்கினால் 2 கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது இந்த அனுமன் கோவில்  வரும் பக்தர்கள், குளிக்க  குளியல் அறை, கழிவறை எல்லாம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. சாவி  ஆபிஸ் அறையில் இருக்கிறது.

ஜி.கே .கெளசிக் என்பவர் இந்தக் கோவிலைப்பற்றி விரிவாக எழுதி இருக்கிறார், படித்துப் பார்த்துச் செல்ல விருப்பப்பட்டவர்கள் செல்லலாம்.

//அனுபவம்
பயம் நீங்கி, தெளிந்த மனதுடன் சிந்தித்து செயல்பட இந்த க்ஷேத்திரத்தில் அருளும் ஶ்ரீஅபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்யுங்கள். கிட்டும் அவரது அருளை அள்ளிச் செல்லுங்கள் மனநிம்மதியுடன். //
இப்படி சொல்கிறார் கெளசிக்.

Image may contain: tree, sky, outdoor and nature
தண்ணீர் இல்லாத நேரம் குகை வாயில் போன்று இரண்டு வாயில்கள் காணப்படுகிறதாம் . தீர்த்தத்தின் பேர் 'அனுமன் தீர்த்தம்" என்றும் சொல்கிறார்கள். குளத்தின் படியில் "படிப் பாயசம்" சாப்பிட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்குமாம்.

தலவிருட்சம் நெல்லிமரம்   

Image may contain: indoor
அனுமன் முன் இருக்கும் வாசலில்  அலங்கார விளக்கு.


Image may contain: 1 person
மூலவர்  ஆறடி உயரத்தில் வலது கை அபய முத்திரை காட்டி இருக்கிறார், இடது கையை இடுப்பில்  வைத்து இருக்கிறார். ஒரு கால் நம்மை நோக்கி அடி எடுத்து வைப்பது போல் இருக்கிறது.    அவரின் வால் தலைக்கு மேலாக வந்து அதில் சிறிய மணி தொங்குகிறது.
Image may contain: indoor
மூர்த்திகள் சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது
Image may contain: outdoor
விளக்குப் போடுதல் பற்றிய விவரங்கள்.
Image may contain: Saminatha Bharathi, indoor
 எண்ணெய் சேகரிக்கும் இடம்
No automatic alt text available.
அனுமன் கவசம்
No automatic alt text available.
இந்தக் கோவிலின் பெருமை சொல்லுகிறது.
Image may contain: outdoor
இந்த மண்டபத்துக்குள் நாகர் இருக்கிறார், அவரைப் பற்றி செய்திகள் இல்லை.
Image may contain: outdoor
 ஞானானந்த சரஸ்வதி, வி. கோபாலய்யா , பிரமாதிவருஷம் புரட்டாதி 10 தேதி சுக்ல சதுர்த்தி 26. 09.1939 என்று போட்டு இருக்கிறது.
Image may contain: outdoor
 அவசரத்தில் எடுத்த படம் இவர்கள் பேர் எல்லாம் அந்த பக்கம் இருக்கிறது போலும் படங்களை வலைஏற்றியவுடன் தான் தெரிந்தது பேர்கள் இல்லை என்பது. இது போல் கோவிலைச்சுற்றி பத்துக்கு மேற்பட்ட ஜீவசமாதிகள் இருப்பதாய்  அர்ச்சனை சாமான்கள் விற்பவர் சொன்னார். கோவில் சிறப்புகளைச்  சொல்லும்  அறிவிப்புப் பலகையிலும்  இது இருக்கிறது வீட்டுக்கு வந்து தான் பார்த்தேன்.

 இராமாயணத்தில் இடம்பெற்ற புராண வரலாறு கொண்டது.  தினமலர் கோவில் பக்கத்திலும் இந்த அனுமன் கோவில்பற்றிய  தலவரலாறு  இருக்கிறது. பெரிய கதையாக இருக்கிறது .

இயற்கையை ரசிக்கவும்  இந்தக் கோவிலுக்குச் செல்லலாம்.  வயல்களுக்கு நடுவில் இருப்பது பார்க்கவே அழகு.மார்கழி மாதம் காலை நேரம் இன்னும் நன்றாக இருக்கும் தரிசனம் செய்ய.
                                                             வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

61 கருத்துகள்:

  1. அழகான இடத்தில் அமைந்திருக்கிறது கோவில். படங்களும் தகவல்களும் சிறப்பு. இதுவரை போனதில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போது சென்றிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      அழகான அமைதியான இடம். கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவளிக்கும் இடம் ராமலக்ஷ்மி வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. வைகுந்த ஏகாதசி அதுவுமாக ஆஞ்சநேய தரிசனம்...

    இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கண்ணுக்கு விருந்து...
    அந்தப் பக்கமெல்லாம் செல்வதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்குமோ!..

    நல்லோர் அனைவரையும் நாயகன் காக்கட்டும்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      எங்கும் வயல்கள் பச்சைபசேல் என்று இருப்பது கண்ணுக்கு விருந்துதான்.
      அந்தபக்கம் தானே உங்களுக்கும் குலதெய்வம் இருக்கிறார்கள் வாய்ப்பு கிடைக்கும்.
      எல்லோரையும் நாயகன் காக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. ஆஹா ...என்ன ஒரு அழகிய இடம் ...

    திருக்கோவிலும் ...நெற்கதிர் படங்களும் மிக சிறப்பு அம்மா...மிக அருமை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க்ம அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. போன முறை தீபாவளிக்கு ஊருக்கு சென்ற போது ..புதுக்கோட்டை சமணர் குகைகளுக்கு சென்றோம்...தங்கள் தளமே வழிகாட்டி ...மிக சிறப்பான இடம் அது மா..


    அண்ணாக்கள் குடும்பமும் எல்லாரும் சேர்ந்து அங்கு சென்றோம் .. ஒரு நாள் பொழுது மிக மகிழ்வுடன் சென்றது ,,,உங்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என முன்பே நினைத்து இப்பொழுது தான் கூற முடிந்தது ...

    விரைவில் அந்த இடங்கள் என் தளத்திலும் வரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு, இன்னும் இரண்டு சமணபள்ளி போனோம் அது இன்னும் பகிரவில்லை.
      நீங்கள் புதுக்கோட்டை சமணர் குகைகள் பார்த்து வந்தது மகிழ்ச்சி.
      உற்வுகளுடன் செல்வது மேலும் மகிழ்ச்சி.
      விரைவில் எதிர்ப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

      நீக்கு
  5. ஆஆஆ ஆஞ்சநேயர் மை ஆஞ்சனேயர்:)... வருகிறேன் கோமதி அக்கா மீண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      இதற்கு முந்திய பதிவில் உங்களைப்பற்றி சில விஷ்யங்கள் இருக்கே!
      வாங்க வாங்க மெதுவாய்.

      நீக்கு
    2. அதுக்கு கொப்பி பேஸ்ட் பண்ணிக் கொமெண்ட் போட்டேனே...

      நீக்கு
  6. அழகிய படங்களுடன் கோவிலைப் பற்றிய வரலாறு நன்று.

    பதிலளிநீக்கு
  7. விபரங்க‌ள் அனைத்தும் அருமை! புகைப்படங்களும் அழகு! நெற்கதிர்களைப்பார்த்ததும் சின்ன வயதில் பால் கதிர்களை பறித்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
      பால்கதிர்களை பார்க்க பிரியபடுவார்கள் என்று தான் எடுத்தேன்.
      பறித்து சாப்பிட்டது நினைவுக்கு வந்து விட்டதா?

      நீக்கு
  8. இன்று தான் தஞ்சை செல்கிறேன். அங்கு சென்றால் உங்கள் பதிவுப்பக்கத்தை எப்போது திறந்தாலும் பக்கம் ஆட ஆரம்பித்து விடும்! சென்ற முறை துபாய் கிளம்பி வ்ரும்போது புதியதாய் வைரஸ் சாஃப்ட்வேர் பதிவு செய்து வந்தேன். இனி சென்று தான் பார்க்க வேண்டும் உங்கள் பக்க‌த்தை திறக்க முடிகிறதா என்று!

    பதிலளிநீக்கு
  9. என்ன காரணம் என்று தெரியவில்லையே! திண்டுக்கல் தன்பாலன் அவர்களை கேட்க வேண்டும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நீங்க சொல்றது, சிற்பங்களுக்குப்பெயர்போன கிருஷ்ணாபுரமா? அங்க வெங்கடேசர் கோவிலுக்குத்தான் போயிருந்தோம் (சிற்பங்கள் அமைந்த). அங்க ஆஞ்சனேயர் கோவில் இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.

      சிற்பங்களுக்குப்பெயர்போன கிருஷ்ணாபுரம் இல்லை.
      அண்ணி கிருஷ்ணாபுரத்தில் அனுமன் கோவில் இருக்கிறது போவோம் என்ற போது நானும் உங்களைப் போல்தான் கேட்டேன் அண்ணியிடம் அவர்கள் இல்லை என்றார்கள்.
      நானும் நவதிருப்பதி போகும் வழியில் கிருஷ்ணாபுரம் என்று பார்த்தேன், போக வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை.

      நீக்கு
  11. ஸ்ரீவைகுண்டம் அருகில் இருக்கிறது அந்த கிருஷ்ணாபுரம். இது கடையநல்லூர் தாலுகா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ.... நீங்கள் அந்த கிருஷ்ணாபுரம் சென்று பார்க்க மறக்காதீர்கள். அது ஒரு தனி உணர்வு. நிச்சயம் சிற்பங்களைப் பற்றி அங்கு விவரம் கேட்டால் நன்றாகச் சொல்வார்கள் (இல்லைனா அழகை ரசிக்கமுடியாது) அங்குள்ள பெருமாளும் அழகு.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் , சிற்பங்களை முன்பு பத்திரிக்கைகளில், அப்புறம் இணையத்தில் எல்லாம் பார்த்து இருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். அழகான சிற்பங்கள். விவரங்கள் சொல்ல ஆட்கள் இருக்கும் போது மேலும் மகிழ்ச்சியாக ரசிக்கலாம் தான்.
      நேரம் வாய்க்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பார்ப்பேன்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. கோவில் அமைந்துள்ள இடம் மிக அழகாய் இருக்கிறது. பசுமையான இடம். கோவிலும் அழகாய் இருக்கிறது. நல்ல இடத்தில நல்ல தரிசனம் உங்களுக்கும், உங்களால் எங்களுக்கும் வாய்த்தது. நன்றி.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      பசுமை இயற்கை எழில் கொஞ்சும் இடம், நல்ல தரிசனம் ஆச்சு .
      அண்ணிக்குதான் நன்றி சொன்னேன் நான்.அவர்களால் தான் அங்கு போனோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. ஒஹோ. அதுதான் பார்த்தேன். அந்தக் கிருஷ்ணா புரம் இல்லையா இது. வேற மாதிரி இருக்கே ந்னு பார்த்தேன். கோமதி மிக அழகான இடம். எத்தனை பசுமை. நீர்வளம், நிலவளம் நிறைந்து தை மாத அறுவடைக்குக் காத்திருக்கும் கதிர்கள்.
    படங்கள் மிக அற்புதம். அனுமனை சங்கடம் தீர்க்க வேண்டிக்கொண்டேன்.

    நன்றி கோமதி மா. தங்கள் கால்வலி பரவாயில்லை என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.

      சிற்பங்கள் அழகாய் இருக்கும் கிருஷ்ணாபுரம் இல்லை. இந்த கோவிலுக்கு கிருஷ்ணாபுரம் என்று ஏன் பேர் வந்தது என்று நான் கொடுத்த சுட்டியை படித்தால் தெரியும் அக்கா. அதில் நிறைய படங்கள் கதைகள் இருக்கிறது நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.

      ராமர் அனுமனை இந்த இடத்திலேயே இருக்க சொல்கிறார் இலங்க்கையிலிருந்து திரும்பி வந்தவுடன். அடுத்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம் என்று சொல்கிறார் அப்போதும் நீ இருப்பாய் அதை நினைவு படுத்த இந்த இடத்திற்கு கிருஷ்ணாபுரம் என்று பேரும் கொடுக்கிறார்.

      என் காலவலி குறைந்து இருக்கிறது. மீண்டும் வரச்சொல்லி இருக்கிறார் மாத்திரைகள் முடிந்தவுடன் . போக வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  14. ஆஹா மை ஃபேவரிட் ஆஞ்சு!!!!! அப்புறம் முருகன்... இருக்கவே இருக்கிறார் நம் தோழர் பிள்ளையார்..

    ஆஞ்சு அழகா இருக்கார் அக்கா...அதுவும் பச்சை பசேல் வயல்களுக்கு நடுவில்...என்ன அழகு. இன்னும் தெங்காசி பக்கங்களில் வயல்கள் இருப்பது மனதிற்கு இதமாக இருக்கு.

    அந்தப் பூ என்ன அழகு...அதன் கலரை பாருங்கள் என்ன அழகு நிறம்!! இயற்கை இயற்கைதான்...அதை வெல்ல யாராலும் முடியாது!

    படங்கல் எல்லாமே அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      எனக்கும் அனுமன், பிள்ளையார், முருகன் பிடித்த தெய்வங்கள்.

      தாமிரபரணி ஆற்று பாசனம் இல்லையா! இன்னும் அந்த பக்கம் பசுமை நிறைந்து காணப்படுகிறது.
      அது என்ன பூ என்று தெரியவில்லை, சின்ன பூதான்! அதில் தான் எத்தனை டிசைன் !பார்த்தீர்களா கீதா? அதுதான் அதை போட்டோ எடுத்தேன். இயற்கையில் எல்லாம் அழகுதான். அழகு அழகு என்ற பாடல் நினைவுக்கு வருது.

      நீக்கு
  15. உங்களைக் காணலையே அண்ணன் மட்டும் தான் ஃபோட்டோவில் இருக்கிறார்.

    அந்தப் பாதை ரொம்ப அழகாக இருக்கிறது.

    குளத்தில் தண்ணீர் இல்லாதப்ப இரு குகை வாயில்கள் காணப்படுமா? அட! அதிசயமாக இருக்கே..ஏதும் சுரங்கப்பாதையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்தானே போட்டோ எடுத்தேன். என்னை எடுக்க சொல்ல நேரம் இல்லை.
      பெரும்பாலும் என்னை எடுக்க விருப்பபடவே மாட்டேன். யாராவது நீங்கள் நில்லுங்கள் நான் எடுக்கிறேன் என்றால் அவர்கள் விருப்பத்திற்கு சரி என்பேன்.

      நீங்களும் அந்த சுட்டியை படிக்கவில்லையா? நிறைய அதிசய கதைகள் நிறைந்த இடம்.
      இன்று ஒருவர் இந்த கோவிலைப் பற்றி எழுதியதை படித்தேன். நிறைய அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறார் இந்த அனுமன்.

      சீதையை தேடி போன வானரசேனைகளுக்கு தண்ணீர் தாகம் எடுத்த போது ஒரு குகை வழியே உடல் நனியந்த நிலையில் ஒரு பற்வை வந்ததாம் அதன் உடல் நனைந்து இருப்பதைப் பார்த்து இவர்களும் அந்த குகைக்குள் போனார்களாம் அங்கு பழமரங்கள், நீர்நிலைகள் தங்கஓடு வேய்ந்த வீடுகள் என்று அழகிய நகரம் இருந்ததாம்.
      அந்த குகை வாயில் தான். மேலும் கதை இருக்கு அதை அந்த சுட்டியில் போய் படித்துப்பாருங்கள்.

      நீக்கு
  16. அந்த அலங்கார விளக்கு மற்றும் எண்ணெய் சேகரிக்கும் அந்தக் கிண்ணம் போன்று ஒன்று கண்ணாடி டப்பாவில் இருக்கிறதே அது எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறது அக்கா..

    ஆஞ்சு கவசம் இதுதான் முதல் தடவை பார்க்கிறேன்....

    இடம் இயற்கையின் மடியில்! அழ்கு

    ஓங்கு பெரும்செந்நெல் // ஆமாம் அக்கா ....இப்படித்தான் இருந்திருக்கும் இல்லைஅய...ஆண்டாள் பாடிய சமயத்தில்...பொங்கலுக்கு புதுநெல்லு புது அரிசி வந்துரும் கரெக்டா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எண்ணெய் சேகரிக்கும் விளக்குகள் நிறைய கோவில்களில் வந்து விட்டது கீதா.
      எல்லோரும் இந்த விளக்கில் எண்ணெய் விட்டால் போதும் எல்லா இடங்களிலும் வைக்க வேண்டாம். இங்கு எண்ணெய் டப்பா வைத்து இருக்கிறார்கள், சில கோவில்களில் பித்தளை பாத்திரம் அடியில் வைத்து இருப்பார்கள் அது நிறைந்தவுடன் டின்களில் சேகரிப்பார்கள்.
      ஆனால் இத்தனை விளக்கு போட்டால் இந்த இந்த நன்மை பெறலாம் என்று எழுதி வைத்தபின் இந்த விளக்கில் யார் ஊற்றுவார்கள்.?

      ஆந்த அனுமன் கவசம் புதிதாக இருக்கிறது என்னிடம் உள்ள அனுமன் கவச பாடல் வேறு மாதிரி இருக்கும்.
      ஆமாம் ஆண்டாள் பாடிய போது எல்லாம் இப்படித்தான் வளமாக இருந்து இருக்கும். பொங்கலுக்கு புத்தரிசி வந்து விடும். வாசலில் நெற்கதிர் கட்டுவார்கள் பொங்கலுக்கு அதற்கும் கிடைத்துவிடும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
  17. அழகான கோவில். இயற்கை எழில் கொஞ்சம் இடமாகத் தெரிகிறது.

    கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

      புராணம் இன்னும் அழகாய் இருந்தாக சொல்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. ஆஹாதென்காசிக்குளம் பார்க்க கடல்போல பெரிதாக இருக்கே.. இப்போ அங்கு தண்ணிக்குப் பஞ்சமில்லைத்தானே.. குளத்தருகே பூத்திருக்கும் பூவும் அழகு..

    சூப்பர் பாதை, இருமருங்கும் நெல் வயல்.. நடுவே பாதை.. என்னா ஒரு அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      தென்காசிக்குளம் சூப்பராக சொன்னீர்கள் பெரிதாக விருந்து செல்கிறது ஆறு, அதுதான் அத்தனை செழுமை சுற்றிலும்.

      இந்த பாதையை ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிலுக்கு தானமாய் கொடுத்து இருக்கிறார். அவர் அன்னதான குழுவிலும் இருக்கிறார். இந்த கோவிலை பராமரிப்பதிலும் உதவுகிறார் என்று ஒரு பதிவில் படித்தேன்.

      நீக்கு
  19. உந்த அழகிய பூவைப்பார்க்க நாகலிங்கப் பூவின் சாயல் அடிக்கிறதே..

    ஆவ்வ்வ்வ் நெற்கதிர்கள் தெரியுதே... என்னா ஒரு அழகு.. நானும் சின்ன வயதில் நெல் வயல் அருகே பார்த்திருக்கிறேன்ன்.. படிப்படியான வளர்ச்சியை.. அப்போ சிம்பிளாக இருந்தது, இப்போ கிடைத்தற்கரிய ஒன்றாகத் தெரியுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலகிங்கப் பூ சாயல் ! நீங்கள் சொன்னதும் மீண்டும் பார்த்தேன் , கொஞ்சம் சாயல் இருக்கு.
      அப்போது எங்க்கும் வயல் இருக்கும், இப்போது எங்கும் வீடு. வயல்களை வீட்டு நிலமாக மாற்றி விட்டார்கள். பொன்விளையும் பூமி இப்போது பணம்விளையும் பூமியாக மாறி விட்டது அதிரா.

      அப்படி இருக்கும் போது இவர்கள் வயல்களை வைத்து இருப்பதற்கு இவர்களை வணங்க வேண்டும், பாராட்ட வேண்டும்.

      நீக்கு
  20. //அனுமனுக்கு நேரே குளம் இருக்கிறது. அதன் கரையில் நவீன முறையில் சமையல் கூடம் இருக்கிறது. தினம் அன்னதானம் நடக்கிறது. 100 பேர் சாப்பிட சமைக்கிறார்கள்.//

    நயினாதீவு நாகபூசணி அம்மனிலும் இப்படித்தான், டெய்லி அன்னதானம் நடக்கும், இப்போ ஒரு முறையை உருவாக்கியிருக்கிறார்கள்.. வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் பெயர் சொல்லிக் காசு அனுப்பி விட்டால், அங்கு நம் பெயரில் அன்னதானம் செய்வார்கள்.. இதனால இலங்கை போவோர் பணம் கட்டிப்போட்டு வருவார்கள்.. அதுவும் நல்ல முறையாகவே இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் பார்க்க ஆவல்.
      அன்னதானம் செய்வது நல்லதுதான்.
      நல்லமுறையில் கோவிலும் இருக்கும், அன்னதானமும் நடக்கும் பிறர் செய்யும் உதவியால் இல்லையா? நாகபூசணி அம்மா எல்லோரையும் நன்றாக் வைக்கட்டும்.

      நீக்கு
    2. எனக்கு தோடு குத்தியது அந்த அம்மனின் வாசலில்தான்...

      நீக்கு
    3. எல்லோரும் தப்பாய் சொல்கிறார்கள் காது குத்தியது என்று ! நான் சொகிறேன் அதிராதான் சரியாக சொல்கிறார் தோடு குத்தியது என்று.
      நாகபூசணி அம்மன் நன்றாக வைக்கட்டும் எல்லோரையும்.

      நீக்கு
  21. //ரயிலைவிட்டு இறங்கினால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அனுமன் கோவில் வரும் பக்தர்கள், குளிக்க குளியல் அறை, கழிவறை எல்லாம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. சாவி ஆபிஸ் அறையில் இருக்கிறது.//

    படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது, கோயிலுக்கென இப்படி வசதி இருந்தால்தானே கடவுளை நிம்மதியாகக் கும்பிட முடியும்.. நன்றாகவே பரிபாலனசபை கோயிலைப் பராமரிக்கிறார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியூர் பக்தர்கள் நிறைய பேர் வருவார்களாம். அதனால் வசதி செய்து கொடுத்து இருக்கிறார்கள் . அதனால் கோவிலின் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது.
      கோவிலை சுற்றி ஜீவசாமதிகள் இருப்பதால் மேலும் கவனமாய் இருக்கிறார்கள்.

      நீக்கு
  22. //தீர்த்தத்தின் பேர் 'அனுமன் தீர்த்தம்" என்றும் சொல்கிறார்கள். குளத்தின் படியில் "படிப் பாயசம்" சாப்பிட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்குமாம்.//

    நம்பிக்கைதானே எல்லாம்.. ஆனா உண்மையில் ஆஞ்சனேயரை மனதார வணங்கினால் நல்லதே நடக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, அவரை வேண்டிக் கொண்டு பலன் அடைந்தவர்களைப் பற்றயும், 1968ல் ஏற்பட்ட இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது இரண்டு ரயில்களும் கை கூப்பி கும்பிடுவது போல் இருந்ததாம், யாருக்கும் எதுவும் ஆகவில்லையாம். அனுமனின் அபயஹ்ஸ்தம் அருளால் என்கிறார்கள், அவருக்கு அனுதினமும் பூஜை செய்து வந்த குருக்கள் மனைவியின் நோயை குணபடுத்தியது இப்படி பல அற்புதங்களை படித்தேன்.

      அவருக்கு பிடித்தது, பாயசம், வடையாம்.
      நம் மனதில் ஒன்றை நினைத்து அது நிறைவேறி விட்டால் அனுமனுக்கு இந்த இரண்டும் செய்து படைப்பார்களாம்.

      பயத்தை போக்குவாராம்.
      உண்மையில் நீங்கள் சொல்வது போல் மனதார வணங்கினால் போதும்தான்.

      நீக்கு
    2. என்னாது பாயாசம் வடையோ? வைரவருக்குத்தான் எப்பவும் உழுந்துவடை சுட்டு மாலை போடுவோம்... ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை எனக் கேள்விப்பட்டேன் இனி வடை சுட்டு வைக்கிறேன்.

      நீக்கு
    3. வடைமாலை பிரியர் அனுமன். பாயசமும் உண்டு இந்த கோவிலில்.

      நீக்கு
  23. //தலவிருட்சம் நெல்லிமரம் //
    ஓ ஆஞ்சநேயருக்கு நெல்லிக்காய்தான் பிடிக்குமோ? காய்ச்சிருந்ததோ? ஏன் கோமதி அக்கா நெல்லி மரத்தை மட்டும் கிட்டப்போய் அழகாக எடுக்காமல் விட்டு விட்டீங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தம்பி வீட்டு விழாவுக்கு போகும் அவசரத்தில் இருந்தேன் , ஒரு விவரமும் தெரியாது கோவிலைப்பற்றி. படங்கள் எடுத்து வந்த பின் இணையத்தில் தேடி படித்து விவரங்கள் கொடுத்து இருக்கிறேன்.

      இறைவன் அருளால் நான் எடுத்த படங்கள் எல்லாம் முக்கியமான படமாகி விட்டது.(அனுமன் அருளால்)

      தலவிருடசம் நெல்லி மரம் என்றபின்தான் நான் எடுத்த படங்களில் நெல்லி மரம் இருக்கா என்று தேடி போட்டு இருக்கிறேன்.

      தங்கை பேரன் வேறு கொஞ்ச நேரம் தேடவைத்து விட்டான், வேறு வாசலில் போய்விட்டான், அவன் சத்தம் மட்டும் கேட்டு அவனை அழைத்து வந்தோம்.

      கோவில் தீர்த்த குளம் மேல் அதன் இலைகள் தொங்கும் படம் இருக்கு ஆனால் காய் இல்லை. இன்னும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் எடுக்கலாம் நெல்லி மரத்தை.

      நீக்கு
  24. அனுமார் கவசம் சொல்லிட்டேன்ன்.. அவர் வாயுவின் மகனோ?

    படங்கள் எல்லாம் கோயிலிலை முழுவதுமாய் மனக்கண்ணில் கொண்டு வந்திருக்கிறது...வாழ்க வளமோடு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமர் கவசம் சொன்னது மகிழ்ச்சி.
      தங்கை கவசத்தை எடுஅக்கா என்றாள் அவளுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      போன பதிவை படிக்கவில்லையா?
      அதில் அதிராவின் குழைசாதம் பேச்சு வந்து இருக்கே!

      வாழ்க வளமோடு என்று வாழ்த்தியது மகிழ்ச்சி அதிரா.

      நீக்கு
    2. ஓ மிஸ் பண்ணி விட்டேனோ.. படிக்கிறேன் இப்போ போய்.

      நீக்கு
  25. உடலில் தெம்பு இருக்கும் வரை முடிந்தவரை எல்லா இடங்களுக்கும் பயணிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்லும் கருத்தை நானும் வழி மொழிகிறேன் சார்.
      உடலில் தெம்பு இருக்கும் வரை பயணிப்போம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் பயணமும், அதை சார்ந்து சென்ற இடங்களும் பற்றிய செய்திகளை தெரிந்து கொண்டேன். இயற்கை வளம் மிகுந்த இடமாக இருக்கிறது. அத்தனைப் படங்களும், கோவிலைப்பற்றிய விபரமான பதிவும் பார்க்கப் படிக்க மிகவும் அழகாக அருமையாக இருக்கிறது. நானும் தற்சமயம் ஒவ்வொருவரின் பதிவுகளையும் படிக்க ஆரம்பித்துள்ளேன். தங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      நீங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      நீங்களும் எழுத ஆரம்பிந்து விடுங்கள். மனக்கவலைகளை எல்லாம் இறைவனிடம் விட்டுவிடுங்கள் .

      உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
  27. இயற்கை அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல... படங்கள் அனைத்தும் அருமை...

    முழுமையான தகவல்களுக்கு நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான் இயற்கை அழகை ரசித்து கொண்டே இருக்கலாம்.
      கண்ணுக்கு குளுமையாக பச்சை பசேல் வயலும் தென்பொதிகை சாரல் காற்றும் மிக அருமையாக் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  28. நானும் நெல்லைத் தமிழர் சொன்னாப்போல் அந்தக் கிருஷ்ணாபுரம் என்றே நினைத்தேன். கோயிலும் அதன் சுற்றுப்புறங்களும் பசுமையாக இருக்கின்றன. கதிர் பிடித்த பயிரையும் படம் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். வயல் சொந்தக்காரங்க ஒண்ணும் சொல்லலையா? இங்கே சில இடங்களில் படங்கள் எடுக்கச் சம்மதிப்பதில்லை. கோயிலின் தலபுராணமும் போய்ப் படிக்கிறேன். குளத்திற்குள் குகை என்பதும் ஆச்சரியமா இருக்கு. இப்படி எத்தனையோ அதிசயங்கள் வெளிவராமல் புதைந்து கிடக்கின்றன.

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.முந்தாநாள் கண் மருத்துவரிடம் போனது, நேற்றுக் கோயிலுக்குப் போனது என மும்முரமாக இருந்ததில் இணையத்தில் அமர முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      நீங்களும், நெல்லைத்தமிழரும் நினைத்தது போல்தான் நானும் நினைத்தேன். அப்புறம் என் கணவர் தான் சொன்னார்கள் இன்னொரு கிருஷ்ணாபுரம் இருக்கிறது என்று.
      வரப்பில் நடக்க கூடாது என்று கேள்வி பட்டு இருக்கிறேன் கதிரை படம் எடுக்க கூடாது என்று தெரியாது. யாரும் சொல்லவில்லை, தடுக்கவில்லை. வ்யல் சொந்தக்காரங்க எங்கு இருக்கிறார்களோ!

      நல்லபடியாக அறுவடை நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

      எதற்கு மன்னிப்பு எல்லாம், நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லலாம்.நாங்களும் போனமாதம் கண் மருத்துவரிடம் போய் வந்தோம்.
      தலபுரானங்க்கள் நிறைய இருக்கிறது. தினமலர் கோயில் பக்கத்திலும் நன்றாக இடுக்கிறது.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு