கறுப்பு மைனா என்று அழைக்கப்படும் இந்த பறவை அட்லாண்டாவில் மகள் வீட்டுத்தோட்டத்திற்கு வந்தது. போன மாதம் மகள் வீட்டில் இருந்த போது எடுத்த இந்த பறவையின் படங்கள் , மற்றும் காணொளி இந்த பதிவில் இடம்பெறுகிறது.
ஞாயிறு, 28 மே, 2023
வெள்ளி, 26 மே, 2023
அரிசோனா காகம்(கிரேட்-டெயில் கிராக்கிள்)GREAT-TAILED GRACKLE
"பிளாக்பேர்ட்" என்றும், "காகம்" அல்லது "ஜாக்டா" என்று அழைக்கப்படும் பறவை அரிசோனாவில் மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்தது. அந்த பறவையின் படங்களும், காணொளியும் இந்த பதிவில் இடம் பெறுகிறது. வேறு இடங்களில் காகத்த படம் எடுத்தேன், அவைகளும் இடம்பெறுகிறது.
ஞாயிறு, 21 மே, 2023
சிவப்பு குருவி
சிவப்பு தலை ஆண் குருவி (பேரன் எடுத்த படம்)
ஹவுஸ் ஃபின்ச் ஸ்பாரோ முதலில் மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் பறவை. இப்போது மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வருகை .
நான் கேதார்நாத் கோவிலில் இந்த சிவப்பு குருவிகளை படம் எடுத்து இருக்கிறேன். கேதார்நாத் கோவில் பதிவில் போட்டு இருக்கிறேன்.
சிவப்பு குருவிக்கு தலை, மற்றும் மார்பு பகுதி மட்டும் சிவப்பாக இருக்கும். அந்த பறவைகளின் படங்கள், காணொளி இந்த பதிவில் இடம் பெறுகிறது.
வெள்ளி, 19 மே, 2023
ரோடு ரன்னர் பறவை (Roadrunner)
ரோட் ரன்னர் பறவை
ரோட் ரன்னர் பற்றி முன்பு பதிவு போட்டு இருந்தேன். அந்த பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம். ஓடுவதை பார்த்தால் காணொளி எடுத்து போடுங்கள் என்று கேட்டு இருந்தீர்கள். அதனால் இந்த பதிவு.
இன்று வீட்டுக்கு முன் புறம் நடந்து கொண்டு இருந்தது. அதை காணொளி எடுத்தேன், ஓட்டம் போன்ற வேக நடை நடக்கிறது.