திங்கள், 15 அக்டோபர், 2018

கொலுப் பார்க்க வாங்க -- 4


இன்று  மதுரை சோமசுந்தரம் காலனி  கற்பக விநாயகர் கோவில் கொலு 
இக்கோயில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கிறது. எல்லா விழாக்களும் சிறப்பாய் நடைபெறும். பிள்ளையார், சாய்பாபா, துர்க்கை, அனுமன், பெருமாள், மீனாட்சி, சொக்கநாதர், நவக்கிரங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன், பைரவர், ஐயப்பன்  சண்டிகேஸ்வரர்  என்று எல்லோரும் அருள் பாலிக்கும் கோயில்  .


கோல மாவில் அழகிய புடவை  செய்து இருக்கிறார்கள் . புடவை அட்டைப்பெட்டியில் மண் போட்டு அதன் மேல் கலர்ப் பொடியைத் தூவி புடவை டிசைன்  செய்து இருக்கிறார்கள். நான் எங்கள் வீட்டில் சரஸ்வதி பூஜை அன்று இப்படி பித்தளைத் தட்டில் தாமரைக் கோலம் போடுவேன்.
கீழே குபேரனுக்கு உள்ள தங்க குடங்கள்   செட்டியார் வசம் வந்து இருக்கு. ( இடம் மாற்றி வைத்து விட்டார்கள்)  கண்ணனின் கோபியர் கண்ணனை விட்டுத் தனியாக ஆடுகிறார்கள்.
குபேரர் முன்  அடுப்பில்  புட்டு வேகிறது. அது கீழ் படத்தில் வந்தியின் முன் வரவேண்டும்.  வந்தி தெரியும் இல்லையா? இவருக்காக சிவன் மண் சுமந்தார் கூலிக்கு புட்டு வாங்கி பிரம்படி பட்டார் மன்னரிடம். 
அடியார் வழி பாடு
மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் 
 அழகர் தங்கக் குதிரையில் ,கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்., இந்த கோவில் கும்பாபிஷேக படமும் (மேல் தட்டு பக்கம் சுவரில் உள்ள படம்..)

கல்யாண செட் நாதஸ்வரம் வாசிப்போர் எத்தனை பேர் இருக்கிறார்கள் சொல்லுங்களேன். மேல் படத்தைவிட கீழ் படத்தில் நாதஸ்வரம் வாசிப்போர் தெளிவாகத் தெரிவார்கள். 

வந்தி பாட்டி வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு கீழே  அமர்ந்து இருக்கிறார். இலையில் உதிர்ந்த புட்டு இருக்கிறது. சிவனிடம் உதிர்ந்த புட்டைக் கூலியாகத் தருவேன் என்று பேசி இருப்பார் மண் சுமக்க.
                                                     மீனாட்சி, சொக்கநாதர்.
கொலு அலங்காரம் -மாரியம்மனாக மீனாட்சி காட்சி தருகிறாள்.
அனைவர் வாழ்விலும் எல்லா நலங்களும்  அம்மன் அருளால் கிடைக்கவேண்டுகிறேன். எல்லோருக்கும்  நவராத்திரி வாழ்த்துக்கள்.
                                                          வாழ்க வளமுடன்.

25 கருத்துகள்:

 1. மூன்று பேர்கள் நாதஸ்வரம் வாசிக்கிறார்களோ... படங்கள் தெளிவாக இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் , மூன்று பேர் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். அவர்கள் அனைந்து அனைந்து வரும் விளக்குகள் போட்டு இருந்தார்கள் படம் எடுக்க அது சிரமமாய் இருந்தது.

   நீக்கு
 2. கோவிலிலேயே பொம்மைகளை இடம் மாற்றி வைத்துள்ளார்களா! இடஒதுக்கீடு சரியில்லை என்று சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவிலில் இப்போது வேலைகள் அதிகம் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொண்டு செய்வார்கள். எடுத்து வைத்தவர்கள் அவசரத்தில் அப்படி எடுத்து வைத்து இருக்கலாம். இது குத்தம் சொல்வதற்காக சொல்லவில்லை, ஒரு ஜாலிக்காக.
   கோயில் போனால் இப்படித்தான் பார்ப்போம்.

   திருவெண்காடு கோவிலில் கொலு பொம்மைகள் தினம் வேறு வேறு அலங்காரத்தில் அன்றைய கதைக்கு ஏற்றார் போல் இடம் மாறும். நேற்று இங்கிருந்த பொம்மை அங்கு இருக்கு. என்று பேசிக் கொள்வோம்.

   பொம்மைகளுக்கு இடஒதுக்கீடு பிரச்சனை வராது. சில வீடுகளில் கொலுவில் வைத்த பொம்மைகளை இடம் மாற்றவோ தொடவோ அனுமதி அளிப்பது இல்லை. முதல் நாள் வைச்சது வைச்சதுதான். ஏதாவது சொன்னால் அடுத்த முறை சரியாக வைத்துக் கொள்ளலாம் என்பார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. பொதுவாக நிறைய அழைப்புகள் காரணமாக இல்லங்களில் வைக்கும் கொலுக்களுக்கே முழுமையாக செல்ல நேரம் வாய்ப்பதில்லை எங்களுக்கு. நீங்கள் கோவில் கொலுக்களுக்கும் சென்று படமெடுத்திருக்கிறீர்கள். சிறப்பு.

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீராம் , சென்னையில் கொலு அழைப்பு வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு ஊர் போகும் தூரம் இருக்கும் போக வர சிரமம் இருக்கும்.
  இங்கு தங்கை வீடு கொலு அழைப்பு மட்டும் தான் போய் வந்து விட்டேன்.
  வந்து இருக்கும் குடியிருப்புவாசிகள் இன்னும் பழகவில்லை. யாரும் அழைக்கவில்லை.
  நான் போய் வரும் கோவில்கள் என் வீட்டைச் சுற்றி கொஞ்ச தூரத்தில் இருப்பதால் போய் வருகிறேன். தூரத்தில் இருக்கும் மீனாட்சி கோவில் போகவில்லை. (அலைபேசி அனுமதி இல்லை,) போனாலும் படம் எடுக்க முடியாது.
  மழை வேறு திடீர் என்று பெய்து விட்டது. பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவில் கூட போக முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 5. மூன்று நாதஸ்வரம் வாசிக்கின்றனர்.
  ஆனால் ஸ்ரீராம்ஜி சொல்லி விட்டார் என்பதை பிறகே கவனித்தேன்.

  அழகிய காட்சிகளை விருந்தாக்கியமைக்கு நன்றி சகோ வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   அதனால் என்ன? கவினித்து பார்த்தமைக்கு நன்றி.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. காலையில் அழகிய தரிசனம்..

  நலமே வாழ்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. தாமரைச் சின்னம் பொறித்த 20 பைசா நாணயங்களில் 108 எடுத்து நவராத்திரி நாட்களில் லலிதா சஹஸ்ரநாம த்துடன் பூசை செய்வாள் என் மனைவி அந்தநாணயங்களுக்கு தங்க முலாம்பூசி இப்போது அவை ஜொலிக்கின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   நான் ஒரு ரூபாய் நாணயம் 108 வைத்து பூஜை செய்வேன்., சில நேரம் மலர்கள் வைத்தும் பூஜை செய்வேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி

   நீக்கு

 8. >>> சில வீடுகளில் கொலுவில் வைத்த பொம்மைகளை இடம் மாற்றவோ தொடவோ அனுமதி அளிப்பது இல்லை. முதல் நாள் வைச்சது வைச்சதுதான்...<<<

  நானும் இப்படித்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்...

  ஆனாலும்
  இந்தக் காலத்தில் இத்தனை தூரம் ஆர்வமுடன் செய்வதே சிறப்பு...

  புராணக் கதைகளின் தொகுப்பாக (தனித்தனியாக) கொலு பொம்மைகள் அமையும்போது அவற்றைக் காட்சிப்படுத்துவதிலும் அது தொடர்பான விஷய ஞானம் வேண்டும்...

  இளையோர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லி கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும்...

  இதுபற்றி விரிவாக ஒரு பதிவே செய்யலாம்...

  வாழ்க கலையும் கலாச்சாரமும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான். இந்தக் காலத்தில் இத்தனை ஆர்வத்துடன் செய்வதற்கே பாராட்ட வேண்டும். மகன் நண்பர் வீட்டில் கண்ணன் பிறப்பு முதல் அவர் கதையை காட்சி படுத்தி இருக்கிறார்கள்.
   புராணக்கதை இப்போது தொலைக்காட்சி மூலம் தெரிகிறது குழந்தைகளுக்கு.

   நீங்கள் அழகாய் புராணக்கதைகளை பதிவு செய்யலாம்.
   இந்த பண்டிகையின் நோக்கம்,10 நாளும் வேலை வேலை என்று இருப்போருக்கு ஒரு குடும்பம், உறவு, நட்புகளுடன் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. ஜாதி, மதம் பார்க்காமல் அனைவரும் விஜயதசமியை சந்தோஷமாய் கொண்டாடுகிறார்கள்.
   அது போதும்.
   கலையும், கலாச்சாரமும் வளர்கிறது. என் மகனுக்கு அவர் நண்பர் அழகிய சரஸ்வதியை களிமண்ணில் செய்து கொடுத்து இருக்கிறார். நான் இன்னொரு பதிவில் போடுகிறேன் அந்த படத்தை.
   உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. >>> புராணக்கதை இப்போது தொலைக்காட்சி மூலம் தெரிகிறது குழந்தைகளுக்கு..<<<

   தங்களன்பினுக்கு நன்றி..

   இருப்பினும்,

   இன்றைய தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளால் காட்டப்படும் புராணக் கதைகள் நிறைய சந்தர்ப்பத்தில் மாற்றப்பட்டதாகவே இருக்கின்றன....

   பராசக்திக்குப் பிள்ளை பிறக்காது என்று ரதிதேவி சாபம் கொடுப்பது போலவும்
   பராசக்தி கலங்கி கண்ணீர் வடிப்பது போலவும் காட்சிகள் -காளி என்றொரு நிகழ்ச்சியில்..

   இதை ஏற்றுக் கொள்ள முடியுமா?...

   அடாத்தைச் செய்த மன்மதன் சாம்பலாய்ப் போனதும்
   பார்வதி திருக்கல்யாணம் நிகழ்கின்றது..

   அவ்வேளையில் ரதிதேவி தான் கலங்குகின்றாள்.. அது கண்ட பார்வதி அல்லவோ ஈசனிடம் கூறி ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருள்கின்றாள்...

   அதன்படி அங்கனாக இருந்தவன் அநங்கனாக - ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவான் - மன்மதன்..

   அகத்தியர் திரைப்படத்தை உருவாக்கியபோது திரைக்கதை ஆலோசனையை
   வாரியார் ஸ்வாமிகளிடம் பெற்றதாக டைட்டிலில் காட்டுவார்கள்...

   அப்படியிருந்தும் - புராணத்திலிருந்து ஒரு சம்பவத்தை இவர்கள் விருப்பத்துக்கு மாற்றியிருப்பார்கள்..

   அது என்ன காட்சி என்று உங்களால் யூகிக்க முடிகின்றதா!...

   அவ்வளவு ஏன்!..
   ராஜராஜ சோழன் திரைப்படத்தில் சரித்திரத்தையே மாற்றிக் காட்டியவர்களாயிற்றே நம்மவர்கள்!...

   அருளாளர்களுடன் நாம் இருந்த அந்தக் காலத்திலேயே அப்படி என்றால்
   இன்றைக்கு கேட்கவே வேண்டாம்!..

   இதைப் பற்றி நிறையவே பேசலாம்.. காலம் கனியட்டும்!..

   வாழ்க நலம்!...

   நீக்கு
 9. நான் சொல்வது குழந்தைகளுக்கு கார்டூன் காட்சிகள் மூலம் தெரிகிறது, கண்ணன், அனுமன் கதைகளைப் பற்றி.

  பெரிய பிரமாண்ட காட்சிகளுடன் வரும் புராணதொடர்களை பார்ப்பது இல்லை.
  சரித்திரகதை, புராணகதைகள் எல்லாம் எல்லோரும் அவர் அவர் இஷ்டம் போல் மாற்றி எழுதி கொள்கிறார்கள்.
  ரதிமன்மதசம்பவம் நிகழ காரணம் சூரபன்மனின் கொடுமையை தடுக்க சூரனை சமாரம் செய்ய அருட்செல்வனை அவதரிக்க செய்கிறேன் என்று ஈசன் சொன்னதால் ஏற்பட்டது.
  பிரம்மதேவர், திருமால், அஷ்டதிக்கு பாலகர்கள் தேவர்கள் எல்லோர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து செல்கிறார் சிவனின் தவத்தை கலைக்க மன்மதன். காரணம் காரியத்திற்காக.
  சிவன் ததியிடம் வாக்கு தருகிறாருன் பதியை பார்வதி பரிணயத்தின் போது உயிர்பித்து தருவோம் என்று.எல்லாம் ஈசன் திருவிளையாடல்.

  நிறைய பேசுங்கள் தகுந்த காலத்தை இறைவன் தருவார்.

  பதிலளிநீக்கு
 10. சிவன் ரதியிடம் வாக்கு தருகிறார்

  பதிலளிநீக்கு
 11. கோவில் கொலுக் காட்சிகள் அருமை. சில பொம்மைகளை கதைக் கருவுக்கு ஏற்ப மாற்றி வைக்கலாம். சிலவற்றை சரியாக அந்தக் கதைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அவசரத்தில் யோசிக்காமல் வைப்பார்களாய் இருக்கும். நாதஸ்வரம் வாசிப்பவர்கள் இருவரே எனக்குக் கண்டுபிடிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   கோவில் கொலு காட்சிகள் கதை கருவுக்கு ஏற்ற மாதிரி தெரிந்தவர்மட்டுமே வைக்க முடியும் . நீங்கள் சொல்வது போல் அவசரத்தில் முன்னே பின்னே மாற்றி அமைத்து இருக்கலாம்.

   இடது பக்கம் இரண்டு நாதஸ்வரம் வாசிப்பவர் வலது பக்கம் ஒருவர் இருக்கிறார். ராமலக்ஷ்மி. இடது பக்கம் படிகட்டின் விளிம்பில் பெரிய நாதஸ்வரம் வாசிப்பவர் , கீழே தவில் வாசிப்பவர் பக்கம் ஒருவர் வாசிக்கிறார். வலது பக்கம் சுருதிபெட்டி வாசிக்கும் பையனின் பின் புறம் வாசிக்கிறார்.
   உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 12. கொலுக்கு வந்தாச்சு, ஜாக்கெட் பிட்டோட் தாம்பூலம் கொடுக்கனும். கொடுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
   நீங்கள் கோவில் கொலு பார்க்க வந்து விட்டு ஜாக்கெட் பிட்டோட தாம்பூலம் கேட்டால் எப்படி.? கோவிலில் சுண்டல், பொங்கல், புளியோதரைதான் கிடைக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. அருமை அருமை. என்ன சொல்வது.. அத்தனையும் அருமை.. அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   ஆஹா! அதிராவா இப்படி பின்னூட்டம் இடுவது!
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு