செவ்வாய், 31 டிசம்பர், 2013
ஞாயிறு, 22 டிசம்பர், 2013
ஸ்ரீ சக்திபுரீஸ்வரர் கோவில்
சென்ற பதிவில் மணக்குடி ஆருத்ரா தரிசனம் பார்க்கப்போன போது அந்த கோவிலில் உள்ள நடராஜர், பக்கத்து ஊர் கருங்குயில்நாதன் பேட்டையில் உள்ள சக்திபுரீஸ்வரர் கோவிலில் பத்திரமாய் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு போய் வந்தோம் என்றும் ,அதை அடுத்த பதிவில் பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். இப்போது அக்கோயில் பற்றித் தெரிந்துகொள்வோம்.
இந்த கோவிலும் தருமபுரஆதீனத்தைச் சேர்ந்த கோவில்தான். மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் தான் இக்கோயிலையும் பார்த்துக் கொள்கிறார். வீடு பக்கத்தில் தான் இருக்கிறது. நாங்கள் போனபோது திறந்து காண்பித்து பூஜை செய்து பிரசாதங்கள் கொடுத்தார்.
சுவாமிக்கு முன்பு உள்ள நந்தியம்பெருமானை வணங்கி உள்ளே ஸ்வாமியை தரிசிக்கச் சென்றோம். சுவாமி சன்னதிக்கு உள்ளே பெரிய பிள்ளையார் இடதுபுறம் இருக்கிறது. வலது புறம் வள்ளி, தெய்வானையுடன் முருகன். கருவறையில் சுவாமி பெரிதாக அழகாய் இருந்தார் காலையில் திருப்பள்ளிஎழுச்சி பூஜைக்கு செய்த அலங்காரம் அழகாய் இருந்தது.
அடுத்து வெளிப்பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கு தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் அழகாய் எழுந்தருளி இருந்தார்கள்.வேறு சந்நிதிகள் இல்லை. மூன்று படிகள் ஏறிப்போய் தட்சிணாமூர்த்திக்கு பூஜை செய்ய வேண்டும். தூண்கள் அழகிய வேலைபாடுகொண்டு இருந்தது.
மற்ற ஸ்வாமிகள் இருந்த மண்டபங்கள் பழுது அடைந்து புல், பூண்டு மண்டி கிடந்தது. அப்புறம் ஸ்வாமி பின்புறம் மதிலில் லிங்கோத்பவர் இருந்தார் அழகாய்.
வெளிப்பிரகாரம் சுற்றி வரும் போது வன்னிமரம் அழகாய் இருந்தது தலவிருட்சமாய் இருக்கும் என நினைக்கிறேன்.
அம்மன் சன்னதி வெளி விமானம் மிகவும் மரம் வளர்ந்து மேலே உள்ள ஸ்வாமி சிலைகளை தள்ளப் பார்க்கிறது. உள்ளே அம்மன் மிக அழகான அலங்காரத்தில் இருந்தார்.குருக்கள் செய்திருந்த அலங்காரத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனந்தவல்லி அம்மனைப் பார்க்கும் போது ஆனந்தமாய் இருக்கிறது.
கோவிலின் சிறப்பு:- இந்திரஜித்துக்கு காட்சிக் கொடுத்த இடம். தக்கனின் யாகத்தில் பார்வதி அவமானப்பட, கோபம் கொண்ட சிவன் வீரபத்ரரை அனுப்ப, பயந்த இந்திரன் குயில் வடிவெடுத்து வழிபட்டது. கருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் பேட்டை என்று பெயர் காரணம் தாங்கி இருக்கிறது.
சுவாமி சந்நிதி விமானம்- மரம் வளர்ந்து இருக்கிறது
ஸ்வாமி சந்நிதி மதில்- இடியும் நிலையில்
சக்திபுரீஸ்வரரும், ஆனந்தவல்லியும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
----------------------------
நாளை முதல் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்க சீனா சார் அழைத்து இருக்கிறார். இங்கு என் வலைத்தளத்தில் வந்து படிப்பதுபோல் அங்கும் வந்து ஒருவாரம் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஆரம்பத்தில் நான் எழுதிய பதிவுகளை நாளை பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் வலைச்சரத்திற்கு, பார்ப்போம் நாளை!
வாழ்க வளமுடன்.
=====
வியாழன், 19 டிசம்பர், 2013
மணக்குடி ஆருத்ரா தரிசனம்
வெகு நாட்களாய் காணவில்லையே! என தேடினீர்களா?
போனிலும், மெயில் மூலமாகவும் போஸ்ட் போடவில்லையா? நலமா? என விசாரித்த அன்பு வலை உலக நட்புகளுக்கு நன்றி.
இந்த முறை ஊர்களில் நெட் இல்லாமல் இருந்து விட்டேன். இணைய பயன்பாடு இல்லாமல் பழைய காலம் போல் வானொலி கேட்டுக் கொண்டு, உறவுகளின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கு கொண்டு இருந்தேன்.
போஸ்ட் போட செய்திகள் நிறைய உள்ளன. ஒன்று ஒன்றாய் போட வேண்டும்.
நேற்று, கூட்டம் இல்லாத - ஆருத்ரா தரிசனம் சமயத்தில் மட்டுமே திறந்து இருக்கும்- ஒரு கோவிலுக்கு சென்று வந்தோம்.
மபிலாடுதுறையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணக்குடி என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தேரஸ்வரர் திருக்கோயிலுக்குப் போய் இருந்தோம்.
1941க்கு பிறகு இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகமே ஆகவில்லை போலும்!
கோவிலின் நிலையைப் பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.
கோவில் குளம் மிக அழகாய் அல்லி மலர்கள் மலர்ந்து காணப்பட்டது. அழகிய படித்துறை உள்ளது. கிராமமக்கள் குளத்தை சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள் அடைக்கப்படாமல் இருப்பதால் நிறைய தண்ணீர் இருக்கிறது குளத்தில்.
சக்திபுரீஸ்வரர் கோவிலைக் குருக்கள் திறந்து காண்பித்தார். அதுவும் மிகவும் பழுது அடைந்து இருந்தது. அதை அடுத்த முறை பகிர்கிறேன்
.
பின் மறுபடியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்தோம். தனியாக யாரும் இல்லாமல் சுவாமியும், அம்பாளும் இப்போது அங்கே எழுந்தருளி இருந்தார்கள். எங்களுக்கே எங்களுக்கு மட்டும் காட்சி கொடுத்த மாதிரி இருந்தார்கள். நன்கு தரிசனம் செய்து விட்டு வந்தோம்.
அழகான நடராஜர்! அம்பாள்! நடராஜரின் திருவடி அருகில் இருபுறமும் அழகான சிவகணங்கள் இருந்தார்கள். ஒருவர் பஞ்சமுகவாத்தியம் வாசித்தார். இன்னொருவர் தாளம் வைத்து இருந்தார். பூமாலைகள் முதலிய அலங்காரங்கள் எதுவும் இல்லாதிருந்ததால் இவ்வுருவங்களைப் பார்க்கமுடிந்தது.
ஸ்வாமி சுற்றி வருவதற்காக கோவிலைச் சுற்றிலும் சுத்தம் செய்து இருந்தார்கள். சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி தவிர மற்றவை கதவுகள் இல்லாமல் இருந்ததால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டு சுற்று மதில் சுவர்கள் உள்ள (உள்பிரகாரம்,வெளிப் பிரகாரம்) அழகிய கோவில், கவனிப்பு இல்லாமல் இருக்கிறது.
திருமடைப்பள்ளியின் இடிந்த தோற்றம்
உள்பிரகாரம், வெளிப் பிரகாரம் நடுவில் நடராஜர் சுற்றி வர சுத்தம் செய்து இருக்கிறார்கள்.
இரண்டு சுற்று மதிலில் ஒரு சுற்று மதில் உடைந்த கோலம்
நடராஜர் விமானம் கலசம் இழந்த நிலையில்
கோவிலில் உள்ள சிறப்பை மக்களுக்கு எடுத்துச் சொன்னால் கோவிலுக்குக் கூட்டம் வரும் ( இப்போது எல்லாம் எல்லாக் கோவில்களிலும் அதன் சிறப்பை விளம்பரம் செய்கிறார்கள்) இந்த தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலின் பெருமை என்னவென்றால் ,இது பார்வதியை மணக்க இறைவன் கயிலையிலிருந்து வந்து தங்கிய இடம். அதனால்தான் தான் மணக்குடி என்று இவ்வூருக்குப் பெயர் போலும்! கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வழிபட வேண்டிய இடம் என்று சொல்கிறார்கள் .
போனிலும், மெயில் மூலமாகவும் போஸ்ட் போடவில்லையா? நலமா? என விசாரித்த அன்பு வலை உலக நட்புகளுக்கு நன்றி.
இந்த முறை ஊர்களில் நெட் இல்லாமல் இருந்து விட்டேன். இணைய பயன்பாடு இல்லாமல் பழைய காலம் போல் வானொலி கேட்டுக் கொண்டு, உறவுகளின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கு கொண்டு இருந்தேன்.
போஸ்ட் போட செய்திகள் நிறைய உள்ளன. ஒன்று ஒன்றாய் போட வேண்டும்.
நேற்று, கூட்டம் இல்லாத - ஆருத்ரா தரிசனம் சமயத்தில் மட்டுமே திறந்து இருக்கும்- ஒரு கோவிலுக்கு சென்று வந்தோம்.
மபிலாடுதுறையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணக்குடி என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தேரஸ்வரர் திருக்கோயிலுக்குப் போய் இருந்தோம்.
திருக்கோயிலின் கிழக்குவாயில் |
கோவிலின் நிலையைப் பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.
கோவில் குளம் மிக அழகாய் அல்லி மலர்கள் மலர்ந்து காணப்பட்டது. அழகிய படித்துறை உள்ளது. கிராமமக்கள் குளத்தை சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள் அடைக்கப்படாமல் இருப்பதால் நிறைய தண்ணீர் இருக்கிறது குளத்தில்.
அழகிய படித்துறையுடன் கூடிய குளம் |
சக்திபுரீஸ்வரர் கோவிலைக் குருக்கள் திறந்து காண்பித்தார். அதுவும் மிகவும் பழுது அடைந்து இருந்தது. அதை அடுத்த முறை பகிர்கிறேன்
.
பின் மறுபடியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்தோம். தனியாக யாரும் இல்லாமல் சுவாமியும், அம்பாளும் இப்போது அங்கே எழுந்தருளி இருந்தார்கள். எங்களுக்கே எங்களுக்கு மட்டும் காட்சி கொடுத்த மாதிரி இருந்தார்கள். நன்கு தரிசனம் செய்து விட்டு வந்தோம்.
நடராசரும் சிவகாமியும் |
நடராசப்பெருமானின் திருவடிகளின் கீழே பஞ்சமுகவாத்தியம் வாசிக்கும் உருவம் |
பூதகணம் |
ஸ்வாமி சுற்றி வருவதற்காக கோவிலைச் சுற்றிலும் சுத்தம் செய்து இருந்தார்கள். சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி தவிர மற்றவை கதவுகள் இல்லாமல் இருந்ததால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டு சுற்று மதில் சுவர்கள் உள்ள (உள்பிரகாரம்,வெளிப் பிரகாரம்) அழகிய கோவில், கவனிப்பு இல்லாமல் இருக்கிறது.
திருமடைப்பள்ளியின் இடிந்த தோற்றம்
உள்பிரகாரம், வெளிப் பிரகாரம் நடுவில் நடராஜர் சுற்றி வர சுத்தம் செய்து இருக்கிறார்கள்.
இரண்டு சுற்று மதிலில் ஒரு சுற்று மதில் உடைந்த கோலம்
நடராஜர் விமானம் கலசம் இழந்த நிலையில்
அருள்மிகு செளந்திரநாயகி அம்பாள் சந்நிதி |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் சந்நிதி |
தேவார மூவர் |
மகாவிஷ்ணு, முருகன்,வள்ளி, தெய்வானை |
இலக்குமி |
தக்ஷ்ணாமூர்த்தி |
பைரவரும் சூரியனும |
பழங் கல்வெட்டு |
சண்டேசுவரர் |
புதிய கல்வெட்டு |
கோவிலில் இறைவனைத் தரிசனம் செய்து வீட்டுக்கு வந்த பின் அவருக்கு பிடித்த களி படைத்து களிப்பு அடைந்தேன்!
வாழக வளமுடன்
------------------