புதன், 22 ஆகஸ்ட், 2018

மாடக்குளம் கண்மாய்

மாடக்குளக் கண்மாய்  இருபக்கமும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

ஆடிப்பெருக்கும் கோவில் விழாக்களும் பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம். 

 மாடக்குளக் கண்மாயைப் பார்த்துவிட்டு வரலாம் என்று  அப்படியே  போனபோது  கண்மாயின் நிலை,  வழியில் கண்ட விழாக்  கோலாகலம் , கபாலீஸ்வரி கோவில், மலையடிவாரத்தில் உள்ள கோயில் ஆகியவை அடுத்த பதிவில்  என்று  தொடரும் போட்டேன்.


--------------------------------------------------------------------------------------------------------------------------
மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று மாடக்குளம் கண்மாய். மாடக்குளம் எனும் சிற்றூரை ஒட்டி  இருப்பதால் இந்தப் பேர். மாடக்குள க்கண்மாயும், திருப்பரங்குன்றத் தென்கால் கண்மாயும் இரட்டைச் சகோதரிகளாய்க் காட்சி அளித்ததாம். கடல் போல் காட்சி அளித்த மாடக்குளம் இன்று வறண்டு கிடக்கிறது.

வைகையில் வெள்ளம் வரும் காலங்களில் கொடிமங்கலத்தில் உள்ளவரத்துக்  கால்வாய் மூலம்   வெள்ள நீரை  மாடக்குள கண்மாய்க்கு க்கொண்டு வருவார்களாம். ஓராண்டில் ஒன்பது மாதம் நீர் குறையாமல் கண்மாயில் நீர் இருக்குமாம்.

மாடக்குளத்தைச் சார்ந்த விவசாயிகள் வீட்டுக்கு ஒருவர் இக்கால்வாய் தூய்மைப்பணியை மேற் கொள்வார்களாம். முழுமையாகக் கண்மாய்க்கு நீர் வந்தவுடன் கருப்புச் சிறகிகள், கூழைக்கடா, உள்ளான்கள், கொக்குகள் என்று பறவைகள்  வருமாம். கண்மாயில் குதிரைக்கூளம், பச்சைப்பாசி, போன்ற உரச்செடிகளும் நெல்விளைந்தநிலங்களும் , கடம்பமரங்களும் மாடக்குளக் கண்மாயின் அடையாளங்களாக  இருந்தன என்று இங்கு உள்ள மக்கள் சொன்னதைச் சொல்கிறது தினமலர் பத்திரிக்கைச் செய்தி.

விளைநிலங்கள் வீட்டுமனைகளானதாலும், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள்  வந்ததாலும் வைகை ஆற்றில் மணல் அள்ளியதாலும்  மாடக்குளத்துக்கு வரும் நீர் வரத்து குறைந்து விட்டது.

இது புதிய செய்தி:-
/மதுரை மேற்கு பகுதி நிலத்தடி நீர் மட்டத்தை காக்க மாடக்குளம் கண்மாய்க்கு வைகை தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளித்த பிறகு விவசாயிகள் கூறியதாவது: வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய் மூலம் மாடக்குளம், தென்பரங்குன்றம், நிலையூர் கண்மாய்களுக்கு வரும். மாடக்குளம் கண்மாய் மதுரை மேற்கு பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. பல ஆண்டுகளாக இக்கண்மாயில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. வீடுகளிலுள்ள போர்வெல்களிலும் தண்ணீர் இல்லை. இந்தாண்டு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நிலையூர் கால்வாய் வழியாக மூன்று கண்மாய்களுக்கும் விட வேண்டும், என்றனர்.//

நன்றி தினமலர்.

ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன
மலை மேல் இருக்கும் கபாலீஸ்வரி அம்மனைத் தரிசனம் செய்து வரும் பெண்கள்.
போகும் பாதையில் கருப்பசாமி கோவில்.
"கோவில் மணி ஓசை தன்னை"  பாட்டு நினைவுக்கு வருதா?
கபாலீஸ்வரி கோவில்  போகும் பாதை

அழகான படிகள்
எத்தனை படிகள் என்று தெரியவில்லை  நாங்கள் போகவில்லை அடுத்தவருடம் தான் மலைக்கோவில் போகலாம் நாங்கள் . அங்கு இருந்த அம்மா சொன்னார்கள்  காலை ஏழு மணிக்கு மலை ஏறினால் வெயில் இருக்காது. நிறைய படி இருக்கிறது. 9மணிக்கு அபிஷேகம் ஆரம்பித்து பூஜை 12 மணிக்குள் முடிந்து விடும். வெயிலில் இறங்க வேண்டாம் என்றால் அம்மனைப் பார்த்தவுடன் இறங்கி விடலாம் என்றார்கள்.
மலையடிவாரத்தில்  இப்படி அழகாய்க் கோலங்கள் போட்டு இருந்தார்கள்.
வேங்கை மரமாய்  நின்ற முருகனோ 
மலை மேல் உள்ள கபாலீஸ்வரி கோயில்
மலையடிவாரத்தில் உள்ள சாஸ்தா  பூரணகலை, புஷ்கலையுடன்
பெரிய முத்தையா, சின்னமுத்தையா சன்னிதி
கருப்பசாமி  ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்து இருக்கும் கோலம்
கருப்பசாமி
நாகப்புற்று 
கொலுவில் வைக்கும் பிள்ளையார்  போல் இருக்கிறார்
அங்கு இயற்கையின் அற்புதம் - பனைமரத்தோடு இணைந்து வளர்ந்த ஆலமரம் இருந்தது. 



மலையடிவாரத்தில் உள்ள கோவில் அருகில் உள்ள எருக்கம் பூவில் தேனி

                   
முள் மரம் கூடாரம் - அதற்குள் 'புல் புல்' பறவை கூடு கட்டி இருக்கிறது.
                             
கண்மாயில் தண்ணீர் இல்லை என்ற குறையைப் போக்கக் கொஞ்சம் தண்ணீர்.

கண்மாயில் இருந்து தண்ணீர் செல்லும் வழி

அங்கு தூரத்தில் தெரிந்த அழகிய மலை

இப்படி கண்மாயில் தண்ணீர் இல்லாமல் இருந்தாலும் இயற்கை எழில் ஆட்சி செய்து கொண்டு இருந்தது. தண்ணீர் இருந்தால்  மேலும் அழகாய் இருக்கும் இந்த இடம். வைகை அணையிலிருந்து  திறந்துவிடப்பட்டு மதுரைக்கு நீர்வந்து கொண்டு இருக்கிறது.  இந்த மாடக்குள கண்மாய்க்கும் வரும். பறவைகள்  எல்லாம் வரும். வயல்களுக்கு தண்ணீர் கிடைக்கும். விவசாயிகள் மகிழ்வார்கள்.

'சாமி பெட்டி' வருவதைப் பார்க்க அமர்ந்து இருக்கும்  ஒரு குடும்பம்.

கண்மாயிலிருந்து திரும்பி வரும் வழியில் கண்ட விழாப் படங்கள் அடுத்த பதிவில்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------

39 கருத்துகள்:

  1. "சாமி பெட்டி"???? ஏதேனும் படிக்காமல் விட்டிருக்கேன் போல. படங்களும் செய்திகளும் அருமை. ஒரு காலத்தில் விவசாயத்தில் சிறந்து விளங்கிய மாடக்குளம்! :( இதுவா முன்னேற்றம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

      //"சாமி பெட்டி"????//

      ஐயப்பனுக்கு ஆபரணபெட்டி எடுத்து செல்வது போல் எடுத்து செல்கிறார்கள், சாமி பெட்டி வருது, சாமிபெட்டி வருது என்று ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் கூறி கொண்டு இருந்தான்.

      //:( இதுவா முன்னேற்றம்?//

      விவசாயம் பின்னுக்கு போவதுதான் முன்னேற்றம் போலும் கீதா.

      நீக்கு
    2. ஊருக்கு போகும் அவசரத்திலும் என் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
    3. ஊருக்கெல்லாம் போகலை. எதிர்பாரா விருந்து. 2 நாள் இருப்பாங்க! இப்போ வெளியே போயிருக்காங்க!

      நீக்கு
    4. ஒ! சரி சரி.
      விருந்தினர் வருகையா?
      கோவில்கள் பார்க்க வந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  2. கோவில் படம் அழகு. குலதெய்வம் கோவில் மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
      நிறைய மக்களுக்கு அந்த பக்கம் குலதெய்வம் இருக்கிறது ராஜி.
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. மாடக்குளம் என்பது எங்கே இருக்கிறது? நான் வண்டியூர் தெப்பக்குளத்துடன் குழப்பிக் கொண்டேன் முதலில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      மதுரைக்கு மேற்கே இருக்கிறது ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் தமிழ் நாட்டிலதான் இருக்கிறாரோ?:)) ஹா ஹா ஹா ச்சும்மா கேட்டேன் டென்ஷனாகிடப்போறாரே:))

      நீக்கு
  5. படங்கள் அழகு.

    ஏரிகளுக்கும், குளங்களுக்கும் செல்லும் கால்வாய்களை தூர் வாராமல் வைத்து விடுகிறார்கள். மராமத்துப் பணியிலிருக்கும் காசையும் கொள்ளை அடித்து விடுகிறார்கள்.

    அது மட்டுமல்லாமல் கண்மாய்க்கு ஊருக்குள்ளிருந்து நீர் வரும் வழிகளையும் மூடி கட்டிடங்கள் கட்டி, மண்போட்டு மூடி விடுகிறார்கள்.

    அந்தக் காலத்தில் முன்யோசனையுடன் செய்த நல்ல காரியங்களை விஞ்ஞானம் வளர்ந்ததாய்ச் சொல்லும் இந்தக் காலத்தில் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறோமே தவிர உருப்படியாய் ஒன்றும் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏரிகளுக்கும், குளங்களுக்கும் செல்லும் கால்வாய்களை தூர் வாராமல் வைத்து விடுகிறார்கள். மராமத்துப் பணியிலிருக்கும் காசையும் கொள்ளை அடித்து விடுகிறார்கள். //

      உண்மைதான். கால்வாய் தூர்வாரி இருந்தால் விவசாயிகள் மகிழ்ந்து இருப்பார்களே!

      அது மட்டுமல்லாமல் கண்மாய்க்கு ஊருக்குள்ளிருந்து //நீர் வரும் வழிகளையும் மூடி கட்டிடங்கள் கட்டி, மண்போட்டு மூடி விடுகிறார்கள். //

      இங்கும் அதுதான் நடந்து இருக்கு.

      புதிதாக வந்த கட்டிடங்கள் நீர்வரும் வழிகளை மூடி விட்டது. இருக்கும் 20 கண்மாயை காப்பாற்ற வேண்டும்.
      பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தூர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

      //அந்தக் காலத்தில் முன்யோசனையுடன் செய்த நல்ல காரியங்களை விஞ்ஞானம் வளர்ந்ததாய்ச் சொல்லும் இந்தக் காலத்தில் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறோமே தவிர உருப்படியாய் ஒன்றும் செய்வதில்லை.//

      முன்யோசனையுடன் அந்த காலத்தில் செய்ததது போல் இப்போதும் யோசனை சொல்ல ஆள் இருக்கிறது, செயல்பட விடுவது இல்லை, செயல்படுவதும் இல்லை.




      நீக்கு
  6. முட்புதருக்குள் பறவைக்கூடு என் கண்ணுக்குத் தெரியவில்லை! ஆலபனைமரம் (ஆலாபனைமரம்!!) ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முட்புதருக்குள் இருக்கிறது பறவைக்கூடு , படத்தை பெரிது செய்துப் பார்த்தால் கொஞ்சம் ஓரத்தில் ஒரு கூடு இருப்பது போல் தெரியும். புல் புல் பறவைகள் உள்ளே போவதைப் பார்த்தேன் , பறவை குஞ்சுகளின் சத்தம் கேட்டது.
      ஆலாபனைமரம் என்னது?
      ஆலபனைமரத்தை ரசித்தமைக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. முதலில் கண்மாய் என்பது என்ன கோமதி அக்கா? இடத்தின் பெயரா இல்ல அந்த கால்வாயின் பெயரா?. புதுசா நடுவிலே ரோட்டுப் போட்டிருக்கிறார்கள்போல இருக்கே.. மிக அழகான பாதையாக இருக்கு, ஆனா வாகனம் போக முடியுமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      கண்மாய் என்பது ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை சொல்வார்கள். கிராம மக்களுக்கு விவசாயத்திற்கு பயன்படுவது, பறவைகளுக்கு ஏற்ற இடம்.

      நீக்கு
    2. ரோடு முன்பே இருக்கிறது. சாமி போவதால் சுத்தம் செய்து இருக்கிறார்கள். ஏரிக்கரையோரம் சில இடங்களில் அகலமாய் இருக்கும் சில ஒற்றையடிபாதை போல் இருக்கும் . கார் போகிறது, நாங்கள் இருசக்கர வாகனத்தில் போனோம்.

      நீக்கு
  8. ஆட்டு மந்தை அழகு, இங்கும் இப்படித்தான் செம்மறிகள் மேயும்.

    மாமா மணி அடிக்கிறாரோ? இல்ல போஸ் குடுக்கிறாரோ? கருப்பசாமி கோயிலும் புதுசுபோல இருக்கே.. கிராமத்தில் எதுவும் அழகுதான்.

    படிக்கட்டுக்கள் கோலங்கள் அனைத்தும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பசாமி கோயில் பழசுதான்.
      ஆடிப்பெருக்கு சமயம் மக்கள் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள். அதனால் அவர்கள் சாமி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து வெள்ளை அடித்து பழுது பார்த்து நன்றாக வைத்துக் கொள்கிறார்கள்.
      முந்தைய பதிவை நீங்கள் படிக்கவில்லை இல்லையா?
      இது ஆடிப்பெருக்கு அன்று போன பதிவு.
      மாமா மணி அடித்தார்கள், அப்புறம் எனக்கு போஸ் கொடுத்தார்கள்.
      கிராமத்தில் எல்லாம் அழகுதான் அதிரா. கோலங்கள் திருவிழா என்றால் பெரிது பெரிதாக போடுவார்கள்.

      நீக்கு
  9. மரத்தடியில் பொதுவா பிள்ளையார் அல்லது வைரவர்தானே இருப்பினம்.. இதென்ன இது வேலில்லாமல் முருகன் நிற்கிறார்?:).. வள்ளிக்காக வெயிட் பண்றாரோ? ஹா ஹா ஹா.

    கோயில் அழகு, குட்டிப் பிள்ளையார்.. நாகப்பாம்புப் புற்று, பால்சட்டி அனைத்தும் அழகு.. இப்பவும் பாம்பு இருக்குதாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் வள்ளிக்காக வந்த கதையை விளக்கதான் இந்த சிலை.
      இப்படி புற்று இருக்கும் இடத்தில் மக்களின் நம்பிக்கை பாம்பு இருக்கும் என்று. பால், முட்டை வைத்து இருக்கிறார்கள். கிராம கோயில்களில் மரத்தைச்சுற்றி இருக்கும் நாகசிலைகளுக்கும் பால், முட்டை வைக்கிறார்கள்.

      நீக்கு
  10. படம் பார்க்க, பனைக்குள் பாம்பு நுழைவதைப்போல இருக்கு. ஒருவேளை அந்த புத்தில் இருக்கும் பாம்பார் அங்குதான் தங்கியிருக்கிறாரோ.. அதன் அடையாளமாய்த்தான் அப்படி வளருதோ என நினைக்க வருதே..

    ஆனா ஆல மரத்தின் வளர்ச்சி குறைந்திருக்கு.

    எருக்கலை உட்பட அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனைக்குள் பாம்பு நுழைவது போல்தான் இருக்கிறது , இப்போதுதானே வளர்ந்து கொண்டு இருக்கிறது ஆல். இலைகல் எல்லாம் சின்னதாக இருக்கிறது. யாரும் அதை அப்புறபடுத்தாமல் இருந்தால் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் படம் எடுக்கிறேன்.
      (பெரிதாக வளர்ந்தபின்.)
      எருக்கம் செடியை சுற்றி வண்டுகள் மொய்த்துக் கொண்டு இருந்தது, நான் படம்பிடிக்கும் போது ஒரு தேனி மட்டும் சிக்கியது. வண்டுகள் பறந்து விட்டது.

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா. முந்திய பதிவை படிக்க நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
    2. //பனைக்குள் பாம்பு நுழைவதைப்போல இருக்கு. ஒருவேளை அந்த புத்தில் இருக்கும் பாம்பார் அங்குதான் தங்கியிருக்கிறாரோ//

      அதிராவின் நினைப்பு போல் அங்குள்ள மக்களுக்கு நினைப்பு வந்து விட்டால் அதையும் வணங்குவார்கள். அந்த மரம் தப்பிக்கும்.

      இந்த மரம் பாதையை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கிறது. நான் ஏதாவது பறவை கிடைக்குமா படம் எடுக்க என்று தேடியதால் கிடைத்த காட்சி.

      நீக்கு
    3. முந்தைய பதிவல்ல கோமதி அக்கா, 3 பதிவுகளுக்கு முந்திய பதிவுக்குத்தான் வரவில்லை நான்.. இப்போ கண்டு பிடிச்சிட்டேன்:))

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அருமை...

    தண்ணீர் இல்லாதது வேதனை...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் தான் ஏரியைப்பார்த்துவிட்டு வருத்தப்பட்டேன்.

    இப்போது தண்ணீர் வரப் போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது தண்ணீர் வரப் போகிறது//இந்த வரிகள் மிகவும் பிடித்தவை.
      கண்மாய் நினைவில் இருக்கிறது இது திருப்பரங்குன்றம் கண்மாயா இல்லை வேறா.

      திருமங்கலம் போகும் சாலையில் உயர்ந்து நிற்கும் மரங்களும், கண்மாய்க் கரையும் மனதில் வந்து போகின்றன. மக்கள் நிலத்தையும் நீரையும் அழித்தால்
      மழை பெய்தும் பயன் என்ன.
      மிக அழகான படங்கள். மதுரையுடன் உங்கள் வழியாகத் தொடர்பு இருப்பது மிக மகிழ்ச்சி

      நீக்கு
    2. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      மதுரைக்கு மேற்கே உள்ள கண்மாய் இது.
      ஆனால் இது திருப்பரங்குன்றம் வரை போகுமாம், அந்த கண்மாயும் இதுவும் இரட்டை சகோதரிகள் என்று அழைக்கபடுகிறது.
      தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வசதிகள் செய்யவேண்டும்.
      இறைவன் கொடுக்கிறார், அதை தக்கவைத்துக் கொள்ள அறியவில்லை என்றால் என்ன செய்வது?
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    நல்ல அறியாத செய்திகளாக தந்துள்ளீர்கள்.
    இந்த இடமெல்லாம் அறிந்ததே இல்லை. ஆனால் இயற்கை வளங்கள் செறிந்த இடமாக உள்ளது. மலைகளின் படம் மிகவும் அழகாக உள்ளது. இயற்கை இருக்குமிடந்தானே விலங்குகள் பறவைகள் என வந்து அவைகளும் ரசித்து நம் ரசனைக்கும் இடந்தரும்.

    ஆடுகள் மேய்வது நன்றாக உள்ளது.
    பனையுடன் ஒருசேர வளரும் ஆலமரமும். பறவை கூடு கட்டும் இடமும் சூப்பராக இருக்கு. எல்லா படங்களையும், மிகத் தெளிவாக எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தாக படைத்துள்ளீர்கள்.கடவுள்களின் படங்களும் மிக அம்சமாக இருக்கின்றது.

    வைகையில் தண்ணீர் நிரம்பி இருப்பதாக கேள்விபட்டேனே . இனி இந்த கண்மாயில் தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளதல்லவா..
    பொதுவாக நீர் நிலைகள் நிரம்பியிருந்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும். இயற்கையன்னைதான் அனைவரையும் வளமாக வைத்திருக்க வேண்டும். பிரார்த்திக்கிறேன். அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      முன்பு இன்னும் இயற்கை எழிலாக பறவைகள் எல்லாம் மகிழ்ந்து தங்கும் இடமாய் இருந்து இருக்கிறது.


      படங்க்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.
      இயற்க்கையன்னை அனைவரையும் வளமாக வைக்க வேண்டும். பிரார்த்தனைக்கு நன்றி.
      அருமையான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  14. படங்கள் அழகு...
    ஆனாலும், நீரில்லாத கண்மாய் வேதனை.

    வைகையில் தற்போது நீர் வரத்து அதிகம் என்பதால் கண்மாய் நிறையக் கூடும்..

    மக்களின் அலட்சியம்.. அறியாமை..
    ஆட்சியாளர்களின் பாராமுகம்...

    எங்கும் இதுதான் .. நிதர்சனம்...

    குடி மராமத்து எனும் ஊர்ப் பராமரிப்பைக் கூட மக்கள் செய்வதில்லை எனில்

    என்னதான் முடிவு?...

    பதிவினில் விழிப்புணர்வுக்கான விஷயங்கள் ஏராளம்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

      நீரில்லாத கண்மாய் வேதனைதான்.
      //வைகையில் தற்போது நீர் வரத்து அதிகம் என்பதால் கண்மாய் நிறையக் கூடும்.//
      அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

      //மக்களின் அலட்சியம்.. அறியாமை..
      ஆட்சியாளர்களின் பாராமுகம்...

      எங்கும் இதுதான் .. நிதர்சனம்...//

      நீங்கள் சொல்வதும் சரிதான்.

      //குடி மராமத்து எனும் ஊர்ப் பராமரிப்பைக் கூட மக்கள் செய்வதில்லை எனில்

      என்னதான் முடிவு?...//

      வீட்டுக்கு ஒருவர் போய் ஏரியை சுத்தம் செய்தனர் நீர்வரத்து சமயம் என்று கேள்வி படுகிறோம், நேற்று நடந்த ஆவணி மூல திருவிழாவும் அதை சொல்கிறது.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.









      நீக்கு
  15. ஆடுகள் மேயும் அளவுக்கு நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கண்மாயின் நிலை வருத்தம் அளிக்கிறது. அனைத்துப் படங்களும் அருமை. ஆலும் பனையும் அழகு. புல்புல் கூடு படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. நேரில் பார்த்ததில்லை. எருக்கம் பூவில் தேனி.. இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    புல் புல் பறவை கூடு ஒரத்தில் தெரிவதுதான் பறவை முள் கூடாரம் வழியாக பறந்து போனது. நான் பெரிது செய்து கூட்டை எடுக்கவில்லை அதை எடுக்க வேண்டும் என்றால் மலைக்கு போகும் படிகட்டில் ஏற வேண்டும். அத்தை இறந்து ஒரு வருடம் ஆகவில்லை என்பதால் நான் மலைக் கோவில் போக கூடாது அதனால் தூரத்தில் இருந்து எடுத்த படம்.
    படங்களையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அழகு.

    தண்ணீரற்ற கண்மாய் - வரண்டு போன கண்மாய் பார்க்கும்போதே மனதில் சோகம். இன்னும் சில வருடங்களில் இதிலும் வீடுகள் கட்டி விடலாம்....

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

    தண்ணீரற்ற கண்மாய் முன்பு எப்படி கடல் போல் இருந்தது என்று புதிதாக போட்டு இருக்கும் பதிவில் போட்டு இருக்கிறேன் பாருங்கள்.
    மக்களின் ஆக்கிர்மிப்பு குணத்தால் எல்லாம் பாழாகிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு