செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

குழந்தைகளின் கைகளில் பிள்ளையார்




 மகன் செய்த செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம்

செல்ஃபி காலமாக இருப்பதால் காலத்துக்கு  ஏற்றார்போல செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம்  செய்து இருக்கிறான் மகன் . அந்த யோசனையை பிள்ளையார் கொடுத்து இருக்கிறார் இந்த ஆண்டு. தன்னை செய்து மகிழும் குழந்தைகளுடன் செல்ஃபி   எடுத்து கொள்கிறார்  மகிழ்வாய்.

பேரன் கவின் அவன் செய்த களிமண் பிள்ளையாருடன்  எடுத்து கொண்ட படத்தை அனுப்பி  பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து சொல்கிறான்  அனைவருக்கும்.

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

புதிர் வழி (Garden Maze)

புதிர் தோட்டத்தில்


லூரே கேவர்னஸ் பகுதி - 2 முன்பு போட்ட பதிவுகள்.


புதிரை போடுவதும்  அதற்கு விடை சொல்வதும் மகிழ்ச்சியான  பொழுது போக்கு  .  நாளிதழில் வரும் புதிர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை நிறைய பேர் விரும்புவார்கள்.

என் கணவர்  ஆங்கில நாளிதழில் செய்திகளை படித்தவுடன் கடைசி பக்கத்தில் வரும் சுடோகு  விளையாடுவார்கள்.  சுடோகு எண் புதிர் விடுவிக்கும் விளையாட்டு விளையாடுவார்கள். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.


வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

லூரே கேவர்னஸ் பகுதி - 2



லுர்சி குகைகள் அல்லது லூரே கேவர்ன்ஸ் , லூரே குகை என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு மகன் அழைத்து போனான்.

இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் சேமிப்பாக  என் தளத்தில் இருக்கும்.

இதற்கு முன்பு போட்ட லூரே குகையின் தொடர்ச்சி இந்த பதிவு

 நிறைய சின்ன சின்ன குகைகள் இருக்கிறது

                                               
நீரில் பிரிதிபலிப்பு   (ஏ.பி .நாகராஜன் படத்தில் வரும் கைலாய காட்சி போல இருக்கிறது ,

பனி உருகி அப்படியே தொங்கி கொண்டு இருக்குமே படத்தில்)

மனிதனின் முகம் போல் இருக்கு இல்லையா?


திரைச் சிலைகள் போல இருக்கிறது

                         பல் இல்லா சிங்கம் போல இருக்கிறது


இந்த குகையை முழுதாக பார்க்க ஆசை பட்டால் இந்த காணொளியில் பார்க்கலாம்.

அங்கேயே  "கார் அருங்காட்சியகம்" இருந்தது இதற்கும் சேர்த்து நம்மிடம் முன்பே டிக்கட் வாங்கி விடுகிறார்கள்.


அந்தக் கால கோச் வண்டி 

கோச் வண்டி  மாடலில் கார்

முன்பு சென்னைக்கு வரும் போது மறைமலர் நகரில் ஃபோர்ட் கார் கம்பெனியை பார்த்து கொண்டே போவோம்.





அந்தக்கால ஃ போர்ட் கார்கள்





காரின் எஞ்சின்
பயணத்திற்கு கொண்டு போகும்  பெட்டி வைக்கும் இடம்  பக்கவாட்டில் உள்ளது



அடுத்து  அங்கு வேறு என்ன பார்த்தோம் என்பது அடுத்த பதிவில்.
பழைய நினைவுகளின் பகிர்வு தொடரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
__________________________________________________________________

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

லூரே கேவர்னஸ்





லுர்சி குகைகள் அல்லது லூரே கேவர்ன்ஸ் , லூரே குகை என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு மகன் அழைத்து போனான்.
அமெரிக்காவில் வர்ஜீனியாவில் உள்ள லூரேக்கு மேற்கே அமைந்து உள்ள  இயற்கையாக அமைந்த குகை. 1878 ஆம் ஆண்டில்   பூமிக்கு அடியில் அமைந்து இருக்கும் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது.

1893 ல், பால்டிமோர் ஜே. கெம்ப் பார்ட்லெட்டிற்குச் சொந்தமான இடம் லூரே கேவர்ன்ஸ் நிறுவனத்தால்  வாங்கப்பட்டது.
500 வருடங்களுக்கு முற்பட்டது என்று நம்பபடும் குகை.

மகன் நியூஜெர்சியில் இருந்த போது பார்த்த இடம். முதன் முதலில் பேரனை பார்க்க போன போது   சில இடங்கள் போனோம்.   8 மாத  குழந்தையை தூக்கி கொண்டு எங்களுடன் மருமகளும் வந்து  எல்லா இடங்களையும் சுற்றி காட்டினாள். போகும் இடங்களில் தங்கும் ஓட்டலில் அறைகளை முன் பதிவு செய்வது  என்று அனைத்தையும் உற்சாகமாக செய்தாள்.

பழைய நினைவுகளை மீட்ட  படங்களை பார்த்து கொண்டு இருந்தேன்.  இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் சேமிப்பாக  என் தளத்தில் இருக்கும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

கூடு கட்ட இடம் தேடும் குருவிகள்


புள்ளிச்சில்லை குருவி எங்கள் குடியிருப்புக்கு ஆகஸ்ட் 15ம் தேதி கூடு கட்ட இடம் தேடிய போது எடுத்த படங்கள்,  மற்றும் திணைக்குருவிகள் (19ம் தேதி ) கூடு கட்ட இடம் தேடிய காட்சிகளும்  இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா !




பேரனுக்கு சிறு வயது முதல்  கிருஷ்ணா பொம்மை கதை பிடிக்கும், இப்போதும் பார்க்கிறான்.

நான் அங்கு இருந்த போதும் இந்த கதையை காட்டி மகிழ்ந்தான்.  இப்போதும் எனக்கு காட்டி   மகிழ்கிறான். தினம் ஒரு  கதை காட்டி கதை சொல்வான்.  எத்தனை  முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல பார்த்து மகிழ்வான். நானும் புதிதாக கேட்பது போல  அடுத்து என்ன என்று ஆவலுடன் கேட்பேன்,கதை சொல்வதில் அவனுக்கு மகிழ்ச்சி.
கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி.



கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த கதை.

இந்த மலைதான் நமக்கு எல்லா வளங்களும்  தருகிறது. மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு உதவுகிறது. மலையில் உள்ள அருவி நம் தாகத்தை தீர்க்கிறது. கனிகளை, காய்களை தருகிறது, மழை மேகங்களை தடுத்து மழையை தருகிறது. அதனால் இந்த மலையை வணங்குங்கள் . 

//குன்று குடையா எடுத்தாய் கழல் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில்  வேல்போற்றி.//



இந்த நாடகத்தில் பகைவர்களுக்கு போர் வீரர் போல காட்சி அளிப்பார். அதை பேரன் "அவர்கள் கண்ணுக்கு மட்டும் தான் அப்படி தெரியும் ஆச்சி என்று சொல்வான்"


2020ல் போட்ட பதிவிலும் கிருஷ்ணஜெயந்தி  கதைகேட்க அழைப்பதை போட்டு இருக்கிறேன். படித்து பாருங்கள்.   நேரம் இருந்தால் பாருங்கள் பழைய பதிவை.


 கிருஷ்ணா காளிங்கனை அடக்கிய கதையை சொல்கிறான் அவன் விளையாடும் பொருட்களை வைத்து சிறு வயதில்.
அவன் கதை சொல்வதை காணொளி எடுத்தேன். தேடினேன் கிடைக்கவில்லை., கிடைத்தால் போடுகிறேன்.

இந்த காளிங்க நர்த்தனம் பிடிக்கும் அவனுக்கு.


கதை ஆரம்பிக்கும் போது மயக்கும் புல்லாங்குழல் ஓசை வரும் அப்புறம் கண்ணன் திரும்பி பார்க்கும் காட்சி அருமையாக இருக்கும். "திரும்ப போகிறார் பாருங்க பாருங்க" என்பான்.


ஹே! மாதவா  பாடல். எனக்கு பிடித்த பாடல் எப்போதும் கேட்பேன். மாதவா பாடல் பாடு என்றால் பாடுவான்.
நண்பர் வீட்டு கொலுவுக்கு பாடுகிறான்.

"சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா "பாடல் பாடுவான்.

பேரன் சின்ன வயதில்  போட்ட கிருஷ்ணர் வேஷம் 

சின்ன சின்ன பதம் வைத்து இப்போது பாடிய பாடலை சேர்த்து கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துகள் மகன் அனுப்பினான். குழந்தை கண்ணன் விளையாடும் விளையாட்டு இருக்கிறது பாருங்கள். அவன் பாடும் பாடலை கேட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 


மாயவரத்தில் இருக்கும் போது பேரன் கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணர் வேடமிட்டு இருந்தான்.


மாயவரத்தில் பேரன் வந்து இருந்த போது எடுத்த  கிருஷ்ண ஜெயந்தி படம்
 நடுவில் இருக்கும் கண்ணன் மருமகள் வரைந்த படம்


நாளை கிருஷ்ண ஜெயந்திக்கு மருமகள் செய்த சீடை, முறுக்கு


மகன் செய்த பூஜை பலகையில் கிருஷ்ணர்  

மகன் செய்த பூஜை பலகையில் மருமகள் வரைந்த  வண்ணக்கோலங்களுக்கு நடுவே கிருஷ்ணர்

தம்பி பேத்தி

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் "ஆனந்தா பல்பொருள் அங்காடியில்"  கிருஷ்ண ஜெயந்தி  வாழ்த்து அலங்காரம்.
பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் வைத்து இருக்கிறார்கள்.

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !
 வாழ்க  வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தேடியுனைச் சரணடைந்தோம் அம்மா




அம்மன்களுக்கு  மஞ்சள் காப்பு

மூன்றாவது வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவிலில் இருக்கும்  அம்மன்களுக்கு நடந்த அபிஷேக அலங்கார காட்சிகள் எல்லோரும் சேர்ந்து செய்த கூட்டு வழிப்பாடு.

ஆடி மாதம் அம்மன் வழிபாடு சிறப்பு என்பதால் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு மட்டும் போய் வந்தேன்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்



2016  ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  23 ம் தேதி இராமலிங்க சுவாமிகள் திருக்கோயிலுக்கு போய் இருந்தோம். நானும், என் கணவரும்.
குரு தலமான ஆலங்குடியிலிருந்து  3.கி.மீ தூரத்தில்    உள்ளது பாடகச்சேரி