செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

நினைவில் நிறைந்தவர்கள்

இந்த பிப்ரவரி மாதம் மனவேதனை தரும் மாதமாக  ஆகி விட்டது.

போன பதிவில்  பின்னூட்டம் அளித்தவர்களுக்குப்  பதில் அளிக்க முடியாமல் திடீர்ப் பயணம் வந்து விட்டது, வந்து மறுமொழி தருகிறேன் பொறுத்தருள்க என்று கேட்டுக் கொண்டு இருந்தேன்.

அன்பர்கள் தினத்தில் 14 ம் தேதி. (14.02.2020) எங்கள் குடும்ப நண்பரின் இழப்பு நிகழ்ந்துவிட்டது.அவர் என் மாமியாரின் பக்கத்து வீடு.

எங்கள் குடும்ப நட்பில் இருந்த நல்ல மனிதரின் மறைவுக்குப் போய் இருந்தோம் கோவைக்கு.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

அன்பு செய்து வாழ்வோம்
வெள்ளைப்புறா   எங்கள் வீட்டுக்கு வந்தது


இந்த வெள்ளைப்புறாவைப் பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் என்று முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.
அன்பின் தூதுவர்கள்.

என் ஜன்னல் வழியே என்ற தலைப்பில்  பறவைகளை   படம் எடுத்துப் போட்டு வருவது உங்களுக்கு தெரியும். முகநூலில் போடுவதை என் சேமிப்பாய் வலைத்தளத்தில்  போடுவேன்.  

அதிரா இரண்டு நாள் முன் போட்ட பதிவில் ஒரு அழகான வெள்ளைப்புறாவைப் போட்டு இருந்தார். "நான் அடுத்த பதிவில் வெள்ளைப்புறாவைப்  போடலாம் என்று இருக்கிறேன் என்றேன் "அவர் காதலர் தினத்தில் போஸ்ட் செய்யுங்கள் அக்கா என்றார்கள். 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

முள்ளங்கித் துவையல்


இன்று காலை தோசைக்கு  முள்ளங்கித்   துவையல்  செய்தேன்.


உங்களுக்கு எல்லாம் இந்த துவையல்  தெரிந்து இருக்கலாம்.