அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். 10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள். அம்பாளடியாள் கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்து இருந்தார்கள்.
இப்போது என் பதில்களை படித்துப்பாருங்கள்.
1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
100 வது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென்றால் அந்த சமயத்தில் என் உடல் நலம், மனநலம், குடும்ப நலம் எல்லாம் நலமாக இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியாக 100 வது பிறந்த நாளை கொண்டாடுவேன்.
என் மாமனார் 105 வயதுவரை வாழ்ந்தார்கள் 100வது பிறந்த நாளை மிக மகிழ்ச்சியாக உற்றம், சுற்றத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
2.என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் ?
வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம், பிறரிடம் பேச, பழக. விழிப்புணர்வுடன் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்.
இந்தக் கால கட்டத்தில் இணைய பயன்பாடு, ஐபோன், ஸ்மார்ட் போன், கற்றுக் கொள்ள வேண்டியகாலமாய் உள்ளது. விஞ்ஞானம் வளர வளர அடுத்து அடுத்து நிறைய கற்றுக் கொள்ள தேவைகள் ஏற்படுகிறது.
இப்போது இணையத்தில், அலைபேசியில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது, வாட்ஸ் அப், பேஸ்டைம் என்று. பேச போட்டோ அனுப்ப கற்றுக் கொண்டேன் இப்போது. என் குழந்தைகள், பேரக்குழந்தைகள் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்- கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அவர்களிடம்.
3.கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது ,எதற்காக ?....
என் பேரன் போனவாரம் தன் வேடிக்கைப் பேச்சால் சிரிப்புமூட்டினான். அவன் நல்ல நடிகன் திறம்பட நடித்து நம்மை ஏமாற்றுவான் அப்போது சிரித்தேன். குழந்தைகளிடம் விளையாடும் போது நானும் குழந்தையாகி போவேன்.எல்லோரும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.
புத்தகம், படிப்பேன்,, டிரான்ஸ்சிஸ்டரில் பாடல்கள் கேட்பேன்.
அந்தநாளும் வந்ததே!என்று மின்வெட்டு சமயம் மின்வெட்டால் என்ன என்ன நன்மை என்று எழுதி இருக்கிறேன். பழையகாலம் போல் மொட்டைமாடியில் குடும்பத்தினருடன் வானத்து நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக உரையாடி(பழங்கதை பேசி)மகிழ்ச்சியாக இருப்பேன். தொலைக்காட்சி பெட்டி, கணிப்பொறி வந்தபின் நம் பொழுதுகள் அதில் போய்விட்டதே!
5.உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?....
இன்றுபோல் என்றும் வாழ்க! ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, மனம் ஒத்து வாழுங்கள் என்று சொல்வேன். இருபக்க குடும்ப உறவினர்களிடமும் அன்பாய் இருங்கள் என்று சொல்லி இருக்கிறேன் அது போல் என் குழந்தைகள் நடந்து வருகிறார்கள்.
6. உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?...
உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்ன என்று ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டும் முதலில். அவர்களின் பசிபிணியை போக்கி, கல்வி அறிவை மேம்படுத்தி, அவர்கள் மனம் நலம் காத்தால் உலகத்தில் பிரச்சனைகள் ஏற்படாது என்பது என் எண்ணம்.
7. உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?...
என் கணவரிடம்.(கணவரே பிரச்சனையாக இருந்தால் பிள்ளைகளிடம் ! )
8. உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார் அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?..
.
உண்மையான பதில் வேண்டும் என்றால் முதலில் மனம் வருந்துவேன் என்பது தான், பிறகு போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று நாம் அந்த தவறை செய்ய வில்லை- பின் ஏன் வருந்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ’இன்னல் புரிவோர், எதிரிகளாக இருப்பினும் அவர்களும் மனம் திருந்தி வாழ வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி இருப்பேன்.
9 .உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
பிறருக்கு துக்கம் என்றால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது நம் பண்புதானே!
அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்களை தைரிய படுத்துவேன். அவர்கள் எங்கும் போக வில்லை உங்களுடன் தான் இருக்கிறார்கள் கவலை படாதீர்கள் என்று. முன்பு நம் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் எண்ணெய் முந்தியா? திரி முந்தியா என்று யார் முந்தி செல்வார்கள் யார் பிந்தி செல்வார்கள் என்று தெரியாது. இறைவன் எப்போது நாம் இந்த உலகத்திற்கு வர வேண்டும், எப்போது அவனிடம் வரவேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து விடுகிறார். இருக்கும் வரை அவர் நினைவுகளுடன் வாழுங்கள் என்று ஆற்றுப்படுத்துவேன்.
10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..
தனியாக இருந்தால் பாடல் கேட்பது பிடிக்கும், அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும். தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள், கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.
அப்பா! எப்படியோ கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன்.
அம்பாளடியாள் அழைப்புக்கு நன்றி.
அம்பாளடியாள் அழைத்த போது நான் ஊரில் இல்லை நேற்றுத்தான் வந்தேன் ஊரிலிருந்து.
நிறைய பேர் எழுதி விட்டார்கள் . அதனால் எழுத விருப்பப்படுபவர்கள் எழுதலாம். திண்டுக்கல் தனபாலன், கீதமஞ்சரி, எழுதிய பதிவுகளைப் படித்தேன் அசத்தி இருக்கிறார்கள். சூரி சார் கேள்வி கேட்க , மீனாட்சி அக்கா பதில் அளிக்கும் காணொளி மிக அருமை.
வாழ்க வளமுடன்.

4.. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன ?....