புதன், 26 ஜூலை, 2023

அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில்இன்று எங்கள் குடியிருப்பு வளாகத்தில் சின்னதாக    கட்டப்பட்ட அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவிலின்  மண்டலபூஜை  இனிதாக நிறைவு பெற்றது. விநாயகருக்கு செய்யப்பட்ட  சந்தனக்காப்பு அலங்கார படங்களும், 46 வது நாள் சிறப்பாக நடந்த அபிஷேக, அலங்கார பூஜை படங்களும்  இந்த பதிவில் இடம்பெறுகிறது.

புதன், 19 ஜூலை, 2023

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் - பகுதி -2

அனுமன் சன்னதி  நல்ல பெரிதாக இருக்கிறது.

மகன் குடும்பத்துடன் நான்  ஜூன் 5 ம் தேதி அரிசோனாவிலிருந்து சிங்கப்பூர்  வந்தேன்.  அங்கு உறவினர்களை, நண்பர்களை சந்தித்தோம். மற்றும்  சில இடங்களையும் சுற்றிப்பார்த்தோம். அங்கு பார்த்த கோவில்களை முதலில் பதிவு செய்து வருகிறேன். 

1. சிங்கப்பூரில் தரிசனம் செய்த கோவில்கள்  முதல் கோவில் ஸ்ரீ தண்டாயுத பாணி கோவில்

2. வீர மகாகாளியம்மன் கோவில்


3. ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள்  கோவில்

ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில்  படங்கள் அடுத்த பதிவிலும் தொடரும் என்று சொல்லி இருந்தேன்.  இந்தபதிவில் ஸ்ரீ ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் படங்கள் நிறைவு பெறுகிறது.

ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்


ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்


சிங்கப்பூர் போய் இருந்த போது தரிசனம் செய்த  கோவில்களை பகிர்ந்து வருகிறேன். போன பதிவில் வீரமாகாளியம்மன் கோவில்.
 இந்த பதிவில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் இடம்பெறுகிறது

செவ்வாய், 11 ஜூலை, 2023

வீரமாகாளியம்மன் (சிங்கப்பூர்)
ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலுக்கு பின் அடுத்து போன கோவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில். "லிட்டில் இந்தியா" என்று சொல்லும் இடத்தில் சிராங்கூன் சாலையில் அமைந்து இருக்கும் கோவில் மிக அழகான கோவில்.


சிங்கப்பூரில் தரிசனம் செய்த கோவில்கள்  என்று  இதற்கு முன் போட்ட   பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் படங்கள், செய்திகள் இந்த பதிவில்.

வியாழன், 6 ஜூலை, 2023

சிங்கப்பூரில் தரிசனம் செய்த கோவில்கள்மகன் குடும்பத்துடன் நான்  ஜூன் 5 ம் தேதி அரிசோனாவிலிருந்து சிங்கப்பூர்  வந்தேன்.  அங்கு உறவினர்களை, நண்பர்களை சந்தித்தோம். மற்றும்  சில இடங்களையும் சுற்றிப்பார்த்தோம்,  முதலில் ஸ்ரீ தண்டாயுதபாணி  கோவில் போனோம். சில தினங்களுக்கு முன் திருக்குட நன்னீராட்டு நடைப்பெற்று  கோவில் புது பொலிவுடன் இருந்தது. கோவில் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.