புதன், 31 அக்டோபர், 2018

இருள் விலக்கும் பண்டிகை

மகன் வீட்டு வாசலில்  ஆலோவீனுக்கு வைத்து இருந்தது. டிராகன் போல் பல், நாக்கை நீட்டிக் கொண்டும் இருக்கும் பொம்மை  மகனே செய்தது.டிராகன் வாயிலிருந்து புகை வருவது போல் செய்து இருந்தான்.

நாங்கள் ஆலோவீன் கொண்டாட்டத்தைப் போன  ஆண்டு மகனுடைய ஊரில்  கொண்டாடி மகிழ்ந்தோம். அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்தக் கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளைச் சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.
                                                                         -------------
மகன் ஊரில் கொண்டாடிய படங்கள்.

                                     
                                                       நாங்களும் வேடமிட்டோம். 
                                   

                                  

                                 

                                                


                                               

 

2013 ல்  ஆலோவின் கொண்டாட்டம்

2017ல் ஆலோவின் கொண்டாட்டம்
அப்பாவி athira
//வெளி நாடுகளில் இது தீபாவளிக் கொண்டாட்டம்போல இருக்கும்... தொடராக பார்ட்டிகளும் இருக்கும்.. இதற்காக தயாரிக்கும் கேக் சுவீட்ஸ் எல்லாம் ரத்தம் ஒழுகுவது போலவும் பூச்சி புளு ஊர்வதுபோலவும் செய்திருப்பார்கள்.

உங்கள் படங்கள் அழகு..இதனை ஹலோவின் எனத்தான் சொல்வோம்.. ஏன் அங்கு ஆலோவின் என்கிறார்களோ? தலைப்புப் பார்த்து எதுவும் புரியாமல் உள்ளே வந்தேன்


Trick and treat எனச்சொல்லிக்கொண்டே பிள்ளைகள் வீடுகளுக்குப் போவினம்.. ஏதும் trick செய்து காட்டோணும்... இ தில் ஜோக் பாட்டு ஸ்டோரி விடுகதைகள் எதுவாயினும் இப்படி செய்ததும் treat ஆக சுவீட்ஸ் பாக் கொடுப்பது வழக்கம்.//

அதிராவின் பின்னூட்டம்.  அதனால் கீழே வரும் படங்களில் ஹலோவின் என்று வருகிறது.

Angelin
//இன்னிக்கு இங்கே ஈவ்னிங் நிறைய பேய்க்குட்டிகள் :) உலா வரும் நானா இப்போவே கடைக்கு போய் ஸ்வீட்ஸ் வாங்கி வைக்கணும் :) அவங்களுக்கு கொடுக்க ..கடைகள் எல்லாம் இந்த பொம்மைகள்தான் ..எல்லா வீடுகளிலும் ஹெட்ஜ் வேலி எல்லாம் சிலந்தி வலை செட்டப் செஞ்சிருக்காங்க .பிள்ளைங்களுக்கு சந்தோஷம் ..இந்த ஆல் சோல்ஸ் தினம் அன்று கீழ்பாக செமிட்ரி பக்கம் பஸ்ஸில் போகும்போது பார்ப்பேன் எல்லா கல்லறைமேலும் விளக்கு இருக்கும் அன்று இரவு மட்டும் ஜெகஜோதியா எரியும் அந்த இடமே ஒளிமயமா ..

படங்கள் எல்லாமே அழகு அக்கா .உங்க வீட்டு குட்டிப்பிள்ளைங்களும் போறாங்களா :)//

ஏஞ்சலின் சொன்னது போல் நண்பர்கள் அக்கம் பக்கத்து குழந்தைகள் வேடமிட்டு வந்தார்கள் வீட்டுக்கு. அனைவருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாங்களும் அக்கம் பக்கம் போய் அவர்கள் வீடுகளில் வாசலில் வைத்து இருக்கும் காட்சிகளைப் பார்த்து வந்தோம். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
நாம் வேறு எங்காவது போனால் வீட்டு வாசலில் மிட்டாயை வைத்து விட்டு போனால் வருபவர்கள் நம் வீட்டு அலங்காரத்தைப் பார்த்து விட்டு மிட்டாயை எடுத்து செல்வார்கள். சிறு குழந்தைகளுக்கு பென்சில், .விளையாட்டுப் பொருட்களும் வாங்கி வைப்பார்கள்.

போன முறை மகனின் வீட்டில் நண்பர்கள் கூடிக் கொண்டாடினார்கள். இந்த முறை மகனின் நண்பர் வீட்டில் விழா நடக்கப் போகிறது. 

போன ஆண்டு மகன் வீட்டுக்குப் பக்கத்தில்  வீட்டு வாசலில்   ஹலோவின் காட்சிஅமைப்புகள். போன வருடம் போடாத படங்கள் இதில் இடம் பெற்று இருக்கிறது.


கடைகளில் உள்ள ஹலோவின் விற்பனைகள்

                                       

முன்னோர்களை  வணங்கும் நாளாகவும் இருக்கிறது.
நம் நாட்டில் நடக்கும்  கல்லறைத் திருவிழா போல்.
முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளும் செய்து வைத்து வணங்குகிறார்கள்.

மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் (பேய்) இருள் விலக்கும் பண்டிகை.
தீயவை அழிந்து எங்கும் நல்லது நடக்கட்டும்.
இருள் விலகி ஓளி பரவட்டும்.

                                                      வாழ்க வளமுடன்.


49 கருத்துகள்:

 1. போட்டோக்கள் அருமை , ஹாலோவீன் இப்பொழுது எல்லா நாடுகளிலும் பிரபலம் அடைந்து வருகிறது . நீங்களும் கொண்டாடியதில் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அபயாஅருணா, வாழ்க வளமுடன்.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. படங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன... அனைவரும் நலமாகட்டும். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. டிகில் ஊட்டும் உடைகள் அணிவது பேய்க்கதைகளைஅசைபோடுவதுபோன்றவை இப்போது எல்லா ஊர்களிலும் இருக்கிறது வெவ்வேறுபெயர்களில்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  நம் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா, அழகர் திருவிழா , ஐயப்பன் மலைக்கு போகும் போது எல்லாம் இப்படி வேடமிட்டு செல்வார்கள். வேண்டிக் கொண்டு வேடமிட்டு செல்வார்கள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   திகில் ஏற்படுத்தும் விளையாட்டுதான் .

   உங்கள் கருத்துக்கு நன்றி.
   பயமுறுத்தி விளையாடி பயத்தைப் போக்குவதுதான் இந்த நாளின் சிறப்பு.

   நீக்கு
 6. ரசிக்க வைத்த படங்கள். ஸார் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். இந்த பயமுறுத்தல்கள் பற்றி படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   மகன், மருமகள், பேரன் இந்த வேடம் போடவைத்தார்கள், அவர்கள் மகிழ்ச்சிக்காக நாங்கள் போட்டுக் கொண்டோம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. படங்களும் பகிர்வும் அருமை. இன்று எங்கள் குடியிருப்பிலும் குழந்தைகள் மாறுவேடமணிந்து கொண்டாடினார்கள்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  ஓ! உங்கள் குடியிருப்பிலும் குழந்தைகள் மாறுவேடமணிந்தார்களா மிக சந்தோஷம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஹா ஹா ஹா இம்முறை தலைப்பு மாறி விட்டது:)... போனதடவையும் நீங்க இதுபற்றிப் பேசினீங்களே என நினைச்சேன்ன்.. என் கொமெண்ட்ஸ் போட்டு, ஆதாரத்தோடு நிரூபிச்சிட்டீங்க ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   அதிராவிடம் ஆதாரத்தோடு இருக்க வேண்டும் அப்போது அப்பாவி, இப்போது ஞானி அல்லவா?

   நீக்கு
 10. ஆவ்வ்வ்வ் கோமதி அக்காவும் ட்றெஸ் அப் பண்ணியிருக்கிறா:)) நான்ன்ன்ன் பயந்துட்டேஎன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:).

  நீங்கள் கட்டியிருப்பது ஜோஜ்ஜட் சாறிதானே.. எனக்கும் இப்படி சோர்வான மட்டீரியல்ஸ்தான் பிடிக்கும்.. பொம்மிக்கொண்டு நின்றால் எரிச்சலாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, என்னைப்பார்த்து பயந்து விட்டீர்களா?

   //நீங்கள் கட்டியிருப்பது ஜோஜ்ஜட் சாறிதானே..//
   ஆமாம் .

   நீக்கு
 11. படங்கள் அழகு. சிறியவர்கள் வீடுகளுக்குப் போய் சுவீட் வாங்குவார்கள். இங்கு முக்கியமாக இந்த நேரம் மஞ்சள் பெரிய பெரிய பூஸணிக்காய்களும், பச்சைக் கச்சானும் கோதுடன் குமித்து குமித்து விற்பார்கள் சூப்பர் மார்கட்டுகளில்.. பச்சைக் கச்சானும் சுவீட் பாக்கில் போட்டுக் கொடுப்பார்கள்.

  பெரியவர்கள் ஆனதும், சுவீட் வாங்கப் போவதில்ல்லை.. ஒரு 10-12 வயதோடு அது நின்றுவிடும், பின்னர் வீடுகளில் சேர்ந்திருந்து கேக் வெட்டி, மூவி பார்த்துக் கொண்டாடுவார்கள்.

  இதில ஒரு புதினம் என்னவெனில். , இதுக்கு இங்கு லீவு கிடையாது, அதனால வேலை நாட்கள் எனில் கஸ்டம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, போன முறை எங்குப் பார்த்தாலும்
   சோளகொல்லை பொம்மைகள் பூசணிக்காய் வைத்து இருப்பதை படம் போட்டாச்சு.
   அதனால் போடத படங்கள்.
   விடுமுறை இல்லை அதனால் கொண்டாட்டத்தை மாலை ஆரம்பித்து இரவு 9 மணிக்குள் முடிக்க ஏற்பாடு மகன் நண்பர் வீட்டில். வேலை நாட்களில் கஷ்டம் தான்.

   நீக்கு
  2. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 12. தாத்தா பாட்டி பேரன் எல்லாம் அட்டகாசமா இருக்காங்க ..உங்க பேரன் முகத்தில் எவ்ளோ சந்தோசம் தாத்தா பாட்டியையும் ஹாலோவீன் காஸ்ட்யூம் போட வைத்தத்தில் சின்ன குழந்தைக்கு தான் ரொம்ப ஆனந்தம் ..மகனே செய்த ஹாலோவீன்ன் டெக்கரேஷன் அழகு .வெளிநாடுகளில் க்ரியேட்டிவிட்டியை மக்கள் அதிகம் விரும்புவர் ..எங்க பக்கத்து வீட்டு மாடியில் இருந்து ரெண்டு எலும்பு கூடுகள் ஒளிரும் சிவப்பு கண்களோடு தொங்கிட்டிருக்குங்க :)
  இங்கே இப்போ தான் அரை ஆழாக்கு சைஸில் டிராகுலா வாம்பயர் எல்லாம் வந்து போனாங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   பேரனுக்கு மிகுந்த சந்தோஷம் கெட்டசக்தியிடமிருந்து பாட்டியை காப்பற்றுவது அதைவிட சந்தோஷம்.
   போன முறை பக்கத்து வீட்டு பயங்கரமான காட்சிகளை பதிவு செய்தேன்.
   கை குழந்தைக்கு கூட அலங்காரம் செய்து பெற்றோர்கள் வீடு வீடாய் மலர்ந்த முகத்துடன் அழைத்து வருவது பார்க்கவே மகிழ்ச்சி தரும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 13. கூடிய விரைவில் நம் மக்களிடமும் நடைமுறைப்படுத்துவார்கள்...

  இதனால் தூசும் மாசும் ஏற்பட்டால் கவலை கொள்ள மாட்டார்கள்...

  அடுத்து
  கார்த்திகை நாளில் அண்ணாமலை தீபம் சொக்கப் பனை இவற்றால் காற்று மாசடைவதாக ஒரு கூட்டம் கிளம்பும்...

  மஞ்சள் பூசணியில் பேய் போல முகம் துளைத்து விளக்கு ஏற்றினால் நம்பிக்கை..

  வெண்பூசணியில் அதே போல விகார முகம் வரைந்து வீட்டின் முன் கட்டினால்
  மூட நம்பிக்கை...

  வெளிநாட்டுக்குச் செல்லும் நம்மவர்கள் அங்குள்ள கலாசாரத்துக்கு மதிப்பு கொடுக்கின்றனர்...

  இங்குள்ள மற்றவர்களுக்கு நமது பாரம்பரியத்துக்கு வேட்டு வைப்பதே குறி.

  பட்டுக்கோட்டை, பேராவூரணி, ராமநாதபுரம் பகுதியில் எல்லாம் கிறித்தவ பொங்கல் உண்டு...

  பொங்கல் பானையில் சிலுவைக் குறி இருக்கும்..

  அதையே நம்மவர்கள் செய்தால் மூட நம்பிக்கை...

  தெய்வத்திற்கோ பேய்களுக்கோ அல்லது ஆவிகளுக்கோ எதற்காயினும் விழா என்று நடத்தும்போது மனிதரிடம் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி...

  அந்த மகிழ்ச்சி விலை கொடுத்து வாங்குதற்கு இயலாதது...

  அது நம்முள் விளையக்கூடியது...

  அதைத்தான் இந்துக்களாகிய நாம் ஊருக்கும் உலகுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்...

  எப்படியோ
  இருள் விலகி ஒளி பரவட்டும்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   ராமலக்ஷ்மி போட்டு இருக்கிறார்கள் பாருங்கள் அவர்கள் குடியிருப்பில் குழந்தைகள் வேடமிட்டார்கள் என்று.மகிழ்ச்சியாக மக்கள் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

   தீபம் ஏற்றுவதை தூசு ஏற்படுத்துவதாய் சொல்வார்களா? குப்பைகள் எரிப்பதை சொன்னால் சரி.
   சில நம்பிக்கைகளை கடைபிடிப்பவர்களை மற்றவர்கள் விமர்சிப்பது எப்போதும் உண்டுதானே!

   வேளங்கண்ணி மாதா கோவிலில் பொங்கல் விழாவை பார்த்து இருக்கிறேன்.
   மாயவரத்தில் சந்தனகூடு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன்.

   //தெய்வத்திற்கோ பேய்களுக்கோ அல்லது ஆவிகளுக்கோ எதற்காயினும் விழா என்று நடத்தும்போது மனிதரிடம் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி...//

   விழாக்கள் மனது மகிழ்ச்சியை தருகிறது. இந்த விழா, மன உறுதி, மனவலிமை, முன்னோர்களை வணங்க ஒரு நல்ல நாள்.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
  2. துரை சொல்வதை ஆமோதிக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பாரம்பரியத்தை இழந்து கொண்டு வருகிறோம். :(

   நீக்கு
  3. புதுமையை ஏறூக் கொண்டு பழமையை மறுக்கும் காலம்.
   அதை தான் சகோ துரை சொல்கிறார்கள்.

   நீக்கு
 14. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. கவின்குட்டிக்கு எத்தனை சந்தோஷம். தாத்தா,பாட்டியையும் தன்னுடன் சேர்த்தது. இங்கும் பக்கத்து வீடுகளில் முன்பு சின்னவர்கள் இல்லை. இப்போ இருக்கிறார்கள்.அதனால் களைகட்டியிருக்கு இம்முறை. மகனின் கைவண்ணம் அழகா இருக்கு.இங்கு இம்முறை ட் ரம்ப், kim ஆகியோரின் முகமூடிகள் வந்திருக்கு. இங்கு இன்று விடுமுறை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
   உங்கள் ஊரில் விடுமுறை இருக்கா? அப்போது ஏல்லோரும் நன்றாக கொண்டாடி இருபார்கள். குழந்தைகள் உடைகள் தான் கண்ணையும், கருத்தையும் கவருது.முகமூடிகள் ரம்ப், kim மூகமூடி இந்த வருட புதுவரவா?
   கவின் குட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சி அவன் சொல்லியபடி நாம் நடித்ததில்.
   உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

   நீக்கு
 16. பேரனின் சந்தோஷமும், அவன் சந்தோஷத்துக்காக நீங்கள் வேடமிட்டதும் மகிழ்ச்சி தருகிறது. எங்கே பார்த்தாலும் பறங்கிக்காயாகக்காட்சி தரும் ஒரு நாள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   ஆமாம், வீடு, கடை எல்லாம் பறங்கிக்காய் தான் .
   பேரனின் சந்தோஷம் எங்கள் சந்தோஷமாய் கழிந்த நாட்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. எல்லா படமும் சூப்பர் மா..

  இப்போ இங்கயும் பெரிய appartments ல கொண்டாடுறாங்க..  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனு, வாழ்க வளமுடன்.
   ராமலக்ஷ்மி சொல்லி இருந்தார்கள் அவர்கள் குடியிருப்பிலும் நடை பெற்றது என்று.
   நீங்களும் பெங்களூர் தானே அனு?
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. ஆமாம் கோமதிக்கா அனுவும் பங்களூர் தான் அவர் இருப்பது பங்களூரின் தென் பகுதியில். நான், பானுக்கா, ஜி எம் பி சார் எல்லாம் இருப்பது வடக்குப் பகுதியில். நான் இருக்கும் பகுதியிலிருந்து ஜி எம்பி சார் வீட்டிற்கு தூரம் 17-18 கி மீ பேருந்தில் என்றால் முக்கால் மணி நேரம் அல்லதுஒரு மணி நேரம்...பானுக்கா பகுதி 16 கி மீ பேருந்தில். சிட்டி அதாவது பேருந்து நிலையம் ரயில் நிலையமும் 1 மணி நேரம் ஆகும்..18 கி மீ

   எங்கள் பகுதியிலிருந்து தென் கிழக்காக பானுக்கா....கொஞ்சம் தெற்கில் மேற்குப் பகுதியில் ஜி எம் பி சார்...எல்லோருமெ ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கிறார்கள் பேருந்தில் பயணித்தால்...அனு மற்றும் கமலா அக்கா இன்னும் சற்று தூரம்...கிட்டத்தட்ட 2 மணி நேரம்...

   கீதா

   நீக்கு
  3. ஓ ! எல்லோரும் ஒரே ஊர் தான் இல்லையா?
   கமலா ஹரிஹரன் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியுமா?
   வெகு நாட்களாய் வலை பக்கம் காணவில்லையே!

   உங்கள் கருத்துகளூக்கு நன்றி கீதா.

   நீக்கு
  4. அக்கா... கமலா ஹரிஹரன் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம் பற்றி அவரின் சமையல் பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேனே, பிடிக்கவில்லையா?

   நீக்கு
  5. மன்னிக்கவும், படிக்கவில்லையா?

   (படிக்கவில்லையா என்று அடித்தால் பிடிக்கவில்லையா என்றே வருகிறது)

   நீக்கு
  6. படிக்கவில்லையே ஸ்ரீராம், இதோ இப்போது படிக்கிறேன்.
   எனக்கு ஒன்று தெரியவில்லையே!

   நீக்கு
  7. இதோ கீதா அக்கா வே சொல்லிடாங்க ..நானும் பெங்களுரு தான் மா..இப்போ பண்டிகைக்கால வேலையால் தாமத பதில்.. கைபேசி வழி பதிலும் கொடுக்க முடிவதில்லை அதில் லாகின் பிரச்சனை வருது ..

   நீக்கு
  8. அதனால் பரவாயில்லை அனு.
   தீபாவளி வாழ்த்துக்கள் .

   நீக்கு
  9. ஸ்ரீராம், கைபேசி மூலம் பதில் அடித்தால் இப்படித்தான் அது முந்திரி கொட்டையாக வார்த்தைகளை அடித்து விடும்.
   கவனமாய் இருக்க வேண்டி இருக்கிறது.

   நீக்கு
 18. இவ்வாறான ஒரு கொண்டாட்டம் பற்றி இப்பொழுதுதான் அறிந்தேன். மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
   இப்போது இங்கும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 19. போன முறையும் நீங்கள் படங்கள் போட்டிருந்தீங்க இல்லையா கோமதிக்கா...நினைவு இருக்கு கதவுக்குப் பக்கத்தில் இருக்கும் அந்தப் படம்...

  முதலில் அது நீங்கள் உங்கள் கணவர்னு தெரியலை அப்புறம் புரிந்துவிட்டது...பேரனுக்காக வேஷம் இட்டது சூப்பரா இருக்கு..பேரனுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி!!

  இங்கும் கொண்டாடுகிறார்களாமே...நான் இருக்கும் பகுதி புறநகர் கிராமத்துப் பகுதி. ஆனால் நகரத்திற்குள் இருப்பவர்கள் சொன்னார்கள். பங்களூரில்..

  படங்கள் எல்லாமே ரொம்ப க்யூட் அழகு

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   பேரனுக்காக வேஷம் போட்டோம். இந்த வருடம் மருமகளின் அம்மா பேரனுக்காக வேஷம் போட்டு இருக்கிறார்கள்.

   நகரத்தில் கொண்டாடிய விவரம் அறிந்தோம்.

   நீக்கு
 20. கிட்டத்தட்ட நம்ம ஊர் கதைகள் போலத்தான் இல்லையா கோமதிக்கா..நம்மூரிலும் பேய்க்கதைகள் பிரபலமாச்சே...பேய்ப்படங்கள்..எல்லாம்..

  அங்கு நம்மவர்கள் ஏன் அவர்கள் கூட நடனம் எல்லாம் ஆடுகிறார்களே நம்மவர் கோயில் கட்டி வீதி உலா எல்லாம் செய்வது போல் இங்கும் இப்போது அவர்களது கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன..

  நம்மூரில் பேயோட்டல் எல்லாம் உண்டே அக்கா..கிராமங்களில்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலகாலமாய் இந்த விழாவை அவர்கள் கொண்டாடி வருகிறார்கள் கீதா.

   முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர்
   தீய ஆவிகள் அவர்களை பிடிக்காமல் இருப்பதற்கும் தான் இது போன்ற ஆடைகளை அணிகிறார்கள்.

   நீக்கு
 21. இந்தப் பதிவுக்கு நான் கருத்துச் சொல்லி இருக்கேனா? நினைவே இல்லை! :)))) சாதாரணமாக என்னைப் போன ஜன்மத்து நினைவுகள் எல்லாம் வைச்சிருக்கேனு கேலி செய்வாங்க! இப்போல்லாம் கொஞ்சம் மறதி! :)))))வயசெல்லாம் ஆகலை. குழந்தை தானே! :)))) அதான் மறக்கிறது!

  பதிலளிநீக்கு
 22. கீதா, குழந்தையாக இருந்தால் மிகவும் நல்லது.
  குழந்தைமனதோடு இருங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

  மறதி வரம், நல்ல விஷயங்களை மறக்காமல், மனதுக்கு வருத்தம் கொடுக்கும் விஷயங்கள் மறந்தால் நல்லது கீதா.
  மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு