புதன், 27 ஜூலை, 2022

ஜன்னல் வழியே!



இந்த பறவையை நிறைய முறை "ஜன்னல்வழியே"
என்ற பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள்.  தனியாக நிறைய படம் போட்டு இருக்கிறேன். இந்த முறை ஜோடியாக வந்தது எங்கள் குடியிருப்புக்கு.

இந்த பறவையை முதலில் செண்பக பறவை என்றே பகிர்ந்து வந்தேன். மாயவரத்தில் பக்கத்து வீட்டு செண்பக மரத்தில் அடிக்கடி வந்து சத்தம் கொடுக்கும். இதன் சத்தம் வித்தியாசமாக இருக்கும்.

நம் ராமலக்ஷ்மி இந்த பறவையின் பெயர் வால் காக்கை என்றார்கள்.   (அவர்களும் அவர்கள் தோட்டத்திற்கு வந்த வால் காக்கை படம் பகிர்ந்து இருக்கிறார்கள் அவர்கள் தளத்தில்.) அதன் பின் அதனை பற்றி படித்தேன்.

"ஜன்னல் வழியே"  பறவைகள்படங்கள் போட்டு வெகு நாட்கள்  ஆகி விட்டது. அதுதான் இன்று பதிவு போட்டு விட்டேன்.

வெள்ளி, 22 ஜூலை, 2022

நண்பர்கள் தினம்

என் அம்மாவும் சந்தன அத்தையும்

இன்று நண்பர்கள் தினம். நட்பின் ஆழத்தில் ஒவ்வொருவரும் திளைத்து இருப்பார்கள். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

வியாழன், 21 ஜூலை, 2022

வண்டியூர் தெப்பக்குளமும் , வண்டியூர் மாரியம்மனும்


மாலை நேரம் வண்டியூர் தெப்பக்குளத்தின் காட்சி. மழை மேகம் சூழ்ந்து இருந்தது.


ஜூலை மாதம் 2 ம் தேதி வீட்டுக்கு வந்த உறவினர்களுடன் திருப்பரங்குன்றம் காலை போனோம். மாலை வண்டியூர்த் தெப்பக்குளம் ,வண்டியூர்  மாரியம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் போனோம்.

வியாழன், 14 ஜூலை, 2022

திருப்பரங்குன்றம்


திருப்பரங்குன்றத்திற்கு இந்த மாதம்  2ம் தேதி போய் இருந்தேன்  உறவினர்களுடன். 
கருவறையில் முருகபெருமான் குடும்பத்தினருடன் காட்சி  தருவார். தாய், தந்தை, அண்ணன், மாமா, மனைவி என்று குடும்பசகிதமாக இருப்பார். தந்தையை, மாமாவை  பார்க்க முடிவது இல்லை. பல வருடங்களுக்கு முன் பார்த்தோம் இப்போது சில வருடங்களாக பார்க்க முடிவதே இல்லை.


செய்தி தாளில் இனி அனைத்து பக்தர்களும்   சத்திய கிரிசுவரர் என்ற பரங்கிரிநாதேசுவரரையும், பவளக்கனிவாய் பெருமாளையும்  தரிசனம் செய்யலாம். என்று போட்டு இருந்ததை படித்தேன்.
(முன்பு 100 டிக்கெட் வாங்கினால் அனுமதி உண்டு. )

புதன், 6 ஜூலை, 2022

வில்லாயுதமுடைய அய்யனார் கோவில்

 

வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் இப்போது "முத்தையா சுவாமி கோயில் "என்றே அழைக்கப்படுகிறது.

அய்யனார்

மதுரை  கோச்சடையில் இந்த கோயில் இருக்கிறது.   மதுரை தேனி சாலையில் போய் வர வசதியாக   உள்ளது. மதுரை ரயில்நிலையத்திலிருந்தும் சிம்மக்கல் பேருந்து நிலையத்திலிருந்தும் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  

இந்த கோயிலுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி மகள் குடும்பத்தோடு சென்று வந்தோம். அய்யனார் கோயில் பார்க்க வேண்டும் என்று பேத்தி, பேரன் ஆசை பட்டதால் போய் வந்தோம்.