குமரன் மலை
சில வருடங்களுக்கு முன் என் தங்கையின் மகள் இருக்கும் புதுக்கோட்டை ஊருக்குப் போய் இருந்தோம். அப்போது கார்த்திகை சோமவார நாள். என் தங்கை மகளிடம் " முருகன் கோவில் பக்கத்தில் இருக்கா" என்று கேட்டேன். அவள் இந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்றாள்.
அவள் சொன்னதால் இந்த அழகிய கோவிலையும், மிக அழகான பாலதண்டாயுத குமரனையும் தரிசனம் செய்யக் கிடைத்தது.
புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் குமரன் விலக்கு என்ற இடத்தில் இருக்கிறது இந்த குமரன் மலை. புதுக்கோட்டையிலிருந்து 12 மைல் தூரத்தில் இருக்கிறது.