வெகு நாடகள் கழித்து பிரதோஷ தினத்தன்று மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் போய் வழி பட்டேன். ஊரிலிருந்து வந்து இருந்தார்கள் கொழுந்தனரும் ஓர்படியும் (கோவையிலிருந்து வந்து இருந்தார்கள்.), அவர்களுடன் சென்று வழிபட்டு வந்தேன். அந்த கோயிலின் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. இன்று "சங்கடஹர சதுர்த்தி" அதனால் பதிவு ஆக்கி விட்டேன்.
புதன், 28 பிப்ரவரி, 2024
திங்கள், 26 பிப்ரவரி, 2024
வைக்கம் மகாதேவர் கோயில்
ஜூன் மாதம் மகன் குடும்பத்துடன் ஆலப்புழா படகு வீட்டில் பயணம் சென்றோம், அதன்பின் 18 தேதி வைக்கம் மகாதேவர் கோயில் போனோம். கோட்டயம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது கோயில். கோட்டயத்திலிருந்து 40 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
கோயில் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது.
சனி, 17 பிப்ரவரி, 2024
ஆலப்புழா படகு வீடு பயணம் - பகுதி 4 (நிறைவு பகுதி )
ஆலப்புழா படகு வீட்டில் மகன் குடும்பத்துடன் ஜூன் மாதம் பயணம் செய்தோம். அங்கு பார்த்த இடங்களும் , படகு பயணத்தில் பார்த்த காட்சிகளும் பதிவில் இடம்பெற்று வருகிறது. இந்த பதிவு நிறைவு பகுதி.
திங்கள், 5 பிப்ரவரி, 2024
ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே!
ஆலப்புழா தொடர் கட்டுரை அடுத்து வரும். பிப்ரவரி 7ம் தேதி திருமண நாள் எங்களுக்கு அதனால் கணவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
நல்ல வாழ்க்கை துணைவனாக
அன்பான மகனுக்கு அன்பு தந்தையாக
தன் தந்தையின் தோளின் மேல் ஏறி இந்த உலகத்தை பார்க்கும் மகன்.
அன்பான தந்தையாக , நண்பனாக இருந்தார்கள்
அன்பான மகளுக்கு அன்பு தந்தையாக
யானையாக, குதிரையாக மகளை தன் முதுகில் ஏற்றி மகிழ்ச்சியுடன் வலம் வரும் அப்பா.தன் தந்தையின் மேல் கம்பீரமாக ஏறி சவாரி செய்யும் மகள்
குடும்பத்து மேல் அன்பும், பாசமும் நிறைந்தவர்கள்.
நான் ஊரில் இல்லையென்றால் தன் குழந்தைகளுக்கு ருசியான உணவை சமைத்து தருவார்கள்.எனக்கு சமைத்து தந்தது இல்லை, எனக்கும் ஒரு நாள் சமைத்து தாருங்கள் என்றால் உனக்கு பிடிக்காது என் சமையல் என்று சிரித்து மழுப்பி விடுவார்கள்.
குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்தார்கள், எனக்கும் தான் . என்னையும் திருமணம் ஆனபின் படிக்க வைத்தார்கள். ( நான் சரியாக முடிக்கவில்லை )
நான் மொட்டை மாடியில் வாழைக்காய் அப்பளம் போட்டதை பார்த்து வரைந்த ஓவியம். அந்த அப்பளம் மிகவும் பிடிக்கும் மகனுக்கும் கணவருக்கும்.
ஆதி, வெங்கட் பெண் ரோஷ்ணி கணினியில் அமர்ந்து ஓவியம் வரைவதாக வரைந்து தந்த படம். நட்பை போற்றும் மனம். நான் வலைச்சர ஆசிரியராக இருந்த போது இளம் பதிவர் ரோஷணியை அறிமுகபடுத்தியதற்கு வரைந்து தந்த ஓவியம்.
நன்றாக விசிலில் பாடல்கள் பாடுவார்கள் கர்நாடக சங்கீதம், சினிமாபாடல்,பக்தி பாடல் எல்லாம் அதை பதிவு செய்யாமல் விட்டு விட்டு இப்போது வருந்துகிறேன்.
தியாகராஜ உற்சவத்தில் பேத்தி பாடியதை கேட்க போய் இருந்த போது எடுத்த படம்.
பேரன் அவன் மிருதங்க வாத்தியாரை பார்த்து பணிவுடன் நிற்கிறான். பேரனின் குருவை பார்த்து கீழே அமர்ந்து இருக்கிறார்களே என்று நினைக்காதீர்கள், அவர் தூரத்தில் வருகிறார் பக்கத்தில் வந்தவுடன் எழுந்து வணக்கம் சொன்னேன்.
தன் அத்தை வீட்டை மன கண்ணில் நினைத்து ஓவியம் தீட்டும் மருமகனாய்.
உறவுகளை நேசிக்கும் மனம் அதுவும் தென்காசி அத்தை மேல் மிகவும் பாசம். பள்ளி விடுமுறைவிட்டால் அத்தை வீட்டுக்கு பயணம் கிளம்பி விடுவார்களாம், விடுமுறைக்கு அங்கு சென்று வருவதை அத்தையுடன் குற்றாலம் , மற்றும் சினிமாக்கள், உறவினர் வீடுகளுக்கு போய் வந்ததை அலுக்காமல் சொல்லி சொல்லி மகிழும் உள்ளம்.
மகன் வீட்டில் இருந்த போது இந்த ஓவியத்தை வரைந்து அவனுக்கு கொடுத்தார்கள்.
திடியன் மலையை கஷ்டப்பட்டு ஏறிய போது இனி இப்படி கஷ்டமான பயணம் வேண்டாம் இருவருக்கு வயதாகி விட்டது என்றேனே!
அப்போது எல்லாம் அவர்களிடம் தான் காமிரா இருக்கும் போகும் இடமெல்லாம் படங்கள் எடுத்தார்கள என்னை. எந்த இடத்தில் எடுத்தது என்று எழுதி வைப்பார்கள்
நிறைய இடங்களுக்கு என்னை அழைத்து சென்று இருக்கிறார்கள் . கோவில்கள், மற்றும் சுற்றுலா தலங்களுக்கு.
வாழ்க்கை பயணத்தில் ஒன்றாக மகிழ்வாய் பயணம் செய்த என்னை விட்டு விட்டு வழியில் முன்னால் இறங்கி சென்று விட்டார்களே! "நீ பின்னால் வா என்று." நான் இறங்கும் வழி எப்போது வரும் என்று இறைவன் தான் அறிவான். அது வரை அவர்களின் நினைவுகள் வழிநடத்தும்.
மயிலாடுதுறையில் இருந்த போது மாதா மாதம் வெளிவரும் சிவச்சுடர் பத்திரிக்கைக்கு என் கணவர் எழுதி அனுப்புவார்கள் கட்டுரைகள். மதுரை வந்த பின்னும் கட்டுரைகள் அனுப்பி கொண்டு இருந்தர்கள் இறைவனடி செல்லும் வரை.
அந்த கட்டுரைகளை அவ்வப்போது பதிவாக என் தளத்தில் இடம்பெற செய்யலாம் என்று நினைத்து இருக்கிறேன் இறையருள் துணை நிற்க வேண்டும்.
படிக்க முடிகிறதா? இல்லையென்றால் டைப் செய்து அனுப்ப வேண்டும். நீங்கள் சொல்லுங்கள்.
நிறைய கற்றுக் கொண்டு இருக்கலாம் என் கணவரிடம். அவர்களின் சிந்தனைகளுக்கு எழுத்து பணிக்கும் தொந்திரவு தரக்கூடாது என்று இருந்தேன். அவர்கள் இருக்கும் போதே பகிர்ந்து இருந்தால் நீங்கள் ஏதாவது கேள்விகள் கேட்டால் பதில் சொல்லி இருப்பார்கள்.
எல்லாம் இறைவன் திருவுள்ளம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024
படகு வீடு பயணம் ஆலப்புழா பகுதி - 3
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் மகன் குடும்பத்துடன் இரண்டு நாள் படகு வீட்டில் சவாரி செய்தேன். போன பதிவில் படகு வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவில்களை பார்த்து வந்தோம் என்று பதிவு .
இந்த பதிவில் தேவாலயம் இடம்பெறுகிறது. கிறித்துவ அன்பர்கள் ஞாயிறு தேவாலயம் போவதை கடமையாக கொண்டு இருப்பார்கள். அது போல நாங்கள் ஞாயிறு தேவாலயம் போய் பார்த்து வந்ததை இந்த பதிவில் பார்க்கலாம்.
பழைய பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.