திங்கள், 30 ஜூலை, 2018
வெள்ளி, 27 ஜூலை, 2018
சனி, 21 ஜூலை, 2018
தென்பரங்குன்றம் - பகுதி 2
அடுத்து நாங்கள் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன். போகும் வழியில் பூத்துக் குலுங்கும் மரங்கள், பூங்கா, மலை அழகு எல்லாம் பார்த்து விட்டு விழாவிற்குப் போவோம்.
தென்பரங்குன்றம் முந்திய பதிவு படிக்க.
திங்கள், 16 ஜூலை, 2018
திங்கள், 9 ஜூலை, 2018
சில நினைவுகள்.
Grand Canyon போகும் முன் Holbrook என்னும் இடத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினோம். கல்லாகிப் போன மரங்கள் உள்ள தேசிய பூங்கா இந்த ஊருக்குப் பக்கம் இருக்கிறது, அமெரிக்கப் பூர்வீகக் குடிமக்கள் இருந்த இடங்கள், அவர்கள் இருந்த வீட்டின் அமைப்பு, அவர்களுடைய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்கிப் போவார்கள். நாங்களும் இங்கு தங்கி, இந்த இடத்தை ரசித்துப் பார்த்துப் பின் தேசிய பூங்காவிற்குப் போனோம்.
வியாழன், 5 ஜூலை, 2018
ஜன்னல் வழியே
புள்ளிச்சில்லை குருவி.
எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு வந்த புதுவரவு.
ஏற்கனவே எங்கள் வளாகத்தில் இருக்கும் சிட்டுக் குருவி மிக வேகமாய் சத்தம் கொடுத்தது. என்ன என்று எட்டிப் பார்த்தால் புதுவகையான சிட்டுக்குருவிகள் எதிர்வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து இருந்தது, அழகாய் இருந்தது, அதைப்பார்த்து இந்த சிட்டுக்குருவி சத்தம் கொடுத்தது.
செவ்வாய், 3 ஜூலை, 2018
சொல்லுங்கள் பார்ப்போம்- பதிவு இரண்டு
நேற்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஒரு பதிவு போட்டுக் கேட்டு இருந்தேன் ஒரு கேள்வி . இன்று சொல்வதாய்ச் சொல்லி இருந்தேன். அதன் விடை - அஞ்சறைப் பெட்டி.
வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு என்றேன் ஏன் என்றால் இப்போது யாரும் இந்தப் பெட்டியில் வைத்துக் கொள்வது இல்லையே! அதுதான்.