வெள்ளி, 17 ஜனவரி, 2020

உழவர் திருநாள்


பாடுபடும் உழவர்கள் 
  
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை" பாடல் நினைவுக்கு வருதா?
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருகூட்டி" பாடலும் நினைவுக்கு வருதா?

இன்றுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. உழவர் திருநாளை க்கொண்டாட நான் பயணத்தில் எடுத்த படங்களும் எங்கள் வீட்டு பொங்கல்  விழா படங்களும் இந்தப் பதிவில் .

திங்கள், 6 ஜனவரி, 2020

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசிக்குப் பெருமாள் தரிசனம்.


எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அய்யனார் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடந்தது.
முன் வாசலில் சங்கும் சக்கரமும் மலர்ந்து இருந்தது   போன பதிவில் போட்ட குழந்தைகள் கை வண்ணத்தில்
மேல் திண்ணையில் அழகிய தீபக் கோலம்

சனி, 4 ஜனவரி, 2020

அய்யன் கோவில் வாசலிலே!

அய்யன் கோவில் வாசலிலே தினமும் பெண் குழந்தைகள்  மார்கழி மாதத்தில்  கோலம் போடுகிறார்கள். கோலம் போட்டது மகிழ்ச்சியை அளித்தது.     தினம் 5 மணிக்கு வந்து கோலம் போடுகிறார்கள். பள்ளியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள்.

தங்கள் வீடுகளில் போடுவதுடன் கோவிலில் வந்து வேறு தினம் போடுகிறார்கள். கோவில் முழுவதும் ஒவ்வொரு சன்னதி முன்பும் போடுகிறார்கள். 
மார்கழியில் கோலமிட்டு சாணப்பிள்ளையாரில்  பூசணிப் பூ   
இன்று தான் கிடைத்தது பூசணிப் பூ அவர்களுக்கு