வியாழன், 30 மார்ச், 2023
செவ்வாய், 28 மார்ச், 2023
திருவள்ளுவர் நூலகம்
அரிசோனா தமிழ்ப் பள்ளியில் மார்ச் 4 ம் தேதி திருவள்ளுவர் நூலகம் திறந்தார்கள்.
வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகள் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வருவது, அங்கே அமர்ந்து படிப்பது எல்லாம் செய்து வருகிறார்கள் விடுமுறை நாளில் நூலகம் செல்லும் வழக்கம் வைத்து இருக்கிறார்கள். தமிழ் புத்தகம் படிக்க வைக்க தமிழ்பள்ளியில் நூலகம் திறந்து இருக்கிறார்கள்.
ஞாயிறு, 26 மார்ச், 2023
விரதங்களும் உடல் நலமும்
உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம். ரத்தஓட்டத்தையும்,ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான
சனி, 25 மார்ச், 2023
தோட்டத்திற்கு வந்த பறவைகள்
இன்று சிட்டுக்குருவி பற்றிய பதிவு வரும் என்று நினைத்திருந்தேன் அம்மா//
தோழி பகிர சொன்ன தாலாட்டு பாடல் மனதில் நிறைந்து இருந்த காரணத்தால் குருவியை மறந்து போனேன்.
அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன் என்றேன். அடுத்து
உலக தண்ணீர் தினம் போட்டு விட்டேன்.
இந்த பதிவில் மகன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த குருவிகள் மற்றும் வீட்டுக்கு பக்கத்தில் வந்த பறவைகள் இடம்பெறுகிறது.
புதன், 22 மார்ச், 2023
உலக தண்ணீர் தினம் (2023)
செவ்வாய், 21 மார்ச், 2023
நீலவானில் பறக்கும் பலூன்
ஞாயிறு, 19 மார்ச், 2023
தாலாட்டு பாடல்கள்
குழந்தைகளை தூங்க வைக்க பாடப்படும் பாட்டு தாலாட்டு . அதை கேட்டு குழந்தைகள் எல்லாம் நன்றாக தூங்கும்.
நகரத்தார் சமூகத்தில் தாலாட்டு பாடலை சிறு வயது முதலே பெண் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.
இந்த பதிவில் இந்த தாலாட்டு பாடல் பதிவு பிறந்த கதை வருகிறது படித்து பாருங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
என் சிறு வயதில் சிவகாசியில் இருந்தோம். அந்த ஊரில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த நகரத்தார் குடும்பம் இருந்தார்கள். அவர்கள் அப்பா, அம்மா இருந்தவரை குடும்ப நண்பர்களாக இருந்தார்கள்.
அவர்கள் பெரிய பெண் முத்துமாரி அக்கா தாலாட்டு பாடல்களை சிலேட்டில் எழுதி மனப்பாடம் செய்வார்கள். "எதற்கு மனப்பாடம் செய்கிறீர்கள் அக்கா ?" என்று கேட்டால் தனக்கு குழந்தை பிறந்தால் குழந்தையை தூங்க வைக்க என்பார்கள்.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ஒரு சமயம் அம்மன் போட்டு இருந்தது. அப்போது முத்துமாரி அக்கா தான் அவர்கள் அம்மா சமைத்து கொடுக்கும் உணவை கொண்டு வந்து தருவார்கள். அம்மன் போட்ட வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, கொடுப்பது, கொள்வது கூடாது என்பார்கள். ஆனால் முத்துமாரி அக்கா முத்துமாரி அம்மன் போல எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்தார்கள்.
அவர்கள் பாடிய பாட்டில் பட்டினத்தாரை அவர் தாய் தாலாட்டு பாடி தூங்க வைத்த பாடலும் அடக்கம். "சாயாவனம் பார்த்து முக்குளம் நீராடி உன்னை பெற்று எடுத்தேன்" என்ற வரி வரும். பட்டினத்தார் பிறந்த ஊர் திருவெண்காடு, திருவெண்காடர் என்ற பெயரும் பட்டினத்தாருக்கு உண்டு. திருவெண்காடு கோவில் முக்குளத்தில் நீராடி விரதம் இருந்து பெற்றாராம் அவர் அம்மா. பட்டினத்தாருக்கு கல்யாணம் பேசி முடிக்கும் விழா திருவெண்காடு கோவிலில் தான் நடக்கும்.
பட்டினத்தார் குழந்தை இல்லாமல் திருவிடைமருதூர் இறைவனை வணங்கி விரதம் இருக்கிறார்.
திருவிடைமருதூரில் வசிக்கும் சிவசர்மா தன் வறுமையை போக்க இறைவனை மனம் உருகி வேண்டுகிறார்.
திருவிடைமருதூர் இறைவன் குழந்தை "மருதவாணராக" ஏழை அந்தணர் சிவசர்மாவின் முன் தோன்றுகிறார். வறுமையை போக்க தன்னை பட்டினத்தாரிடம் கொடு , அவர் பொருள் கொடுப்பார் என்று சொல்லி மறைகிறார்.
ஒரே சமயத்தில் இருவரின் குறையை போக்குகிறார். அந்தணர் வறுமையை போக்கி, பட்டினத்தாருக்கு பிள்ளையை கொடுக்கிறார் இறைவன்.
பூம்புகார் அருகில் உள்ள பல்லவனீச்சுரத்தில் பட்டினத்தார் திருவிழா நடக்கும் ஆடி மாதம்.
பட்டினத்தார் குழந்தையின் எடைக்கு எடை தங்கம் கொடுத்து சிவசர்மாவிடம் வாங்கிய கதை பல்லவனீச்சுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் சாயாவன கோவிலில் "பிள்ளை இடுக்கி திருவிழா" என நடக்கும்.
நான் திருமணம் முடிந்து திருவெண்காடு வருவேன் என்றோ , கோவிலுக்கு அருகில் மடவிளாகத்தில் வீடு இருக்கும் என்றோ சாயாவனம் பார்ப்பேன் என்றோ, முக்குளம் நீராடி குழந்தைகளை பெற்றுக் கொள்வேன் என்றோ அன்று தெரியாது எனக்கு.
திருவெண்காட்டில் நகரத்தார் வீட்டில் குடி இருந்தேன், அவர்கள் வீட்டு மூத்தபெண் உமையாள் எனக்கு தோழி ஆனார். அவர் அப்பா, அம்மா எனக்கு அம்மா, அப்பாவாக இருந்தார்கள், அவர் தம்பி, தங்கைகள் எனக்கு உடன்பிறப்பு ஆனார்கள். என் குடும்பம் பெரிய குடும்பம் அனைவரையும் விட்டு திருவெண்காடு வந்த போது பிரிவு துயர் தெரியாமல் அரவணைத்த குடும்ப உறவு.
அம்மா எனக்கு செட்டி நாட்டு சமையல் முறை, மற்றும் சிக்கனம் , குழந்தை வளர்ப்பு முறை எல்லாம் சொல்லி தந்தார்கள்.
இன்றும் இறைவன் அருளால் அவர்கள் தொடர்பு இருக்கிறது. உமையாள் அப்பா, என் கணவருக்கு பழனி கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியர், கணவர் வேலை பார்த்த பூம்புகார் கல்லூரியில் பிரின்ஸ்பால்.
என் குழந்தைகளுக்கு பிரின்ஸ்பால் தாத்தா.
இப்போது கோவையில் இருக்கும் உமையாள் மற்றும் அவரின் தோழிகள் 6 பேருடன் வாட்ஸ் அப்குழுவில் மாலை 5 முதல் 6 வரை கூட்டு வழிபாடு செய்து வருகிறோம். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடுவோம்.
முன் கதை சொல்லி விட்டேன், இப்போது கதைக்கு வருவோம்.
மூன்றாவது தலைமுறை பாடல் வேலைக்கு போகும் தாய்மார்கள் கஷ்டத்தை சொல்லும்.
தாலாட்டு பாடல்கள் பிடித்து இருக்கும், உங்களுக்கு நினைவு வந்த தாலாட்டு பாடல்களை , நீங்கள் பாடிய தாலாட்டு பாடல்களை பகிரலாம்.
பழைய சினிமா பாடல்களில் வரும் தாலாட்டு பாடல்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும் ஆனால் சோகமாக இருக்கும். "நீலவண்ண கண்ணா வாடா" நன்றாக இருக்கும்.
இப்போது தாலாட்டு பாடல்கள் இந்த வலைத்தளத்தில் நிறைய இருக்கிறது, குழந்தைக்கு பாட. கேட்டு பாருங்கள்.
இந்த பதிவை எழுத வைத்த என் தோழி உமையாளுக்கு நன்றி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வெள்ளி, 17 மார்ச், 2023
பார்லெட் ஏரி அரிசோனா ,(Bartlett Lake, Arizona ) பகுதி - 2
வியாழன், 16 மார்ச், 2023
பார்லெட் ஏரி அரிசோனா ,(Bartlett Lake, Arizona )
செவ்வாய், 14 மார்ச், 2023
வசந்த கால பூக்கள்(Golden Poppies)
ஞாயிறு, 12 மார்ச், 2023
புன்னைநல்லூர் மாரியம்மன்
வியாழன், 9 மார்ச், 2023
ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் ஆலயம்
புனுகீஸ்வரர் கோவில்
செவ்வாய், 7 மார்ச், 2023
அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் பகுதி - 4
ஓரு கொம்பு மட்டும் தெரியும் நந்தி வித்தியாசமாக இருக்கிறார். இன்னொரு கொம்பு அந்த பக்கம் இருக்கிறது.
சனி, 4 மார்ச், 2023
அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் பகுதி - 3
வெள்ளி, 3 மார்ச், 2023
அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் பகுதி - 2
புதன், 1 மார்ச், 2023
அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில்