புதன், 27 செப்டம்பர், 2023

ஊட்டிக்கு ஒரு சமயச் சுற்றுலா





இன்று உலக சுற்றுலா தினமாம், காலண்டரில் போட்டு இருந்தார்கள். முன்பு சுற்றுலா பற்றி எழுதி இருந்த பதிவு மீள் பதிவாக இங்கு இடம் பெறுகிறது. 2011 ல் போட்ட பதிவு.

கோடை விடுமுறைக்காலம் இது. விடுமுறையில் 
வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டில்
கட்டி மேய்க்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கும் நேரம் .

விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு போகலாமா? அல்லது உறவினர்களைஅழைத்துக் கொண்டு எங்காவது மகிழ்ச்சியாய் சென்று வரலாமா?- என்று வீட்டில் எல்லோரும் கலந்து ஆலோசிக்கும் நேரம்.அவரவர் பட்ஜெட்டுக்க ஏற்றமாதிரி விடுமுறையை 
கழிக்க எங்கு போகலாம் என்று முடிவுசெய்துகொண்டு 
இருக்கும் காலம் இது. வெயிலுக்கு இதமாய் , கண்ணுக்கு 
குளிர்ச்சியாய் ,கருத்துக்கு மகிழ்ச்சியாய் செல்ல ஒரு இடம் மலைகளின ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி . மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெறும். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.

சனி, 23 செப்டம்பர், 2023

பேரன் செய்த லெகோ பிள்ளையார்



லெகோ விளையாட்டுப்பொருட்களை கொண்டு பேரன் செய்த பிள்ளையார்.

சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள்.


அருள் புரிவாய் ஆனைமுகா!  போன பதிவில் பேரன் செய்த களிமண் பிள்ளையார் இடம்பெற்றார்.

பேரனிடம் நிறைய லெகோ விளையாட்டுப் பொருட்கள் இருக்கிறது, அதை வைத்து பிள்ளையார் செய்து இருக்கிறான்.

இந்த பதிவில் மகன் வீட்டு பிள்ளையார்கள், தங்கை வீட்டு பிள்ளையார் கொலு, மற்றும் எங்கள் வீட்டுப்பிள்ளையார், எங்கள் குடியிருப்பு வளாகப்பிள்ளையார்  படங்கள் இடம்பெறுகிறது. 

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

அருள் புரிவாய் ஆனைமுகா!





மகன் செய்த பதாகை


ஸ்ரீ மகா கணபதி ஆலயம்  அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவில் பதிவு போட்டது நினைவு இருக்கும் உங்களுக்கு என்று நினைக்கிறேன்.

   அந்த ஆலயத்தின் சார்பாக பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு  போன வருட  பிள்ளையார் சதுர்த்திக்கு  மகன்  செல்ஃபி பிள்ளையார்  போட்டோ பிரேம் செய்து இருந்தான்.   அதை பதிவு செய்தேன், அந்த  பதிவு  குழந்தைகளின் கைகளில் பிள்ளையார்  .

வியாழன், 7 செப்டம்பர், 2023

கோகுல கிருஷ்ணா வா வா!



எங்கள் வீட்டு கண்ணன்

 நேற்று கிருஷ்ண ஜெயந்திக்கு எடுத்த படங்களும் , பாடல்களும் இடம்பெறுகிறது இந்த பதிவில்.

ஸ்ரீ பத்துமலை சுப்பிரமணியர் கோவில் பதிவு -5  தொடர் பதிவின் நிறைவு பகுதி படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 5

பத்துமலை மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடு கோவில்.

ஜூன் 7ம் தேதி மகன் குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகனை தரிசனம் செய்து வந்தேன்.  அங்கு போய் வந்ததை தொடர் பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன்.

இந்த பதிவு நிறைவு பகுதி. இதில் அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில் இடம்பெறுகிறது.

--------------------------------------------------------------------------------------------------

முன்பு பகிர்ந்த பதிவுகள்:-





மாலை நேரம், மழை மேகம் வந்து சிறு தூறல் போட ஆரம்பித்து விட்டது.

அழகிய வேலைப்பாடு , மேலே அலங்கார வளைவுக்குள் அழகிய பிள்ளையார்கள்  வடிவங்கள்.


முதலில் நடுநாயகமாக  பிள்ளையார் இருந்தார். அந்த  பிள்ளையார்  போன பதிவில் இடம்பெற்று விட்டார். அன்று சதுர்த்தி அவருக்கு அபிசேகம் செய்ய தயார் ஆகி கொண்டு இருந்தார்கள். ஹோமம் நடந்து கொண்டு இருந்தது.

பிள்ளையார் பக்கவாட்டில் ஆறுபடை முருகனுக்கும் சன்னதிகள் வரிசையாக இருந்தது. குருக்கள் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். 

  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர்
  • பழனி
  • சுவாமிமலை
  • திருத்தணி
  • பழமுதிர்சோலை

ஆறுபடை வீடுகள் முருகன்கள் சன்னதி வரிசையாக இருக்கிறது.

                                    திருப்பரங்குன்றம்

                                           திருச்செந்தூர்

                                                       பழனி

சுவாமி மலை முருகனும், பழனி மலை முருகனும் கொஞ்சம் ஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் குழப்பம். இருவர் கை  வேல் மட்டும் வித்தியாசமாக  இருக்கும். முருகனுக்கு பின்னால் சுவாமிமலை கோபுரம் தெரியும், பழனி முருகன் பின்னால் பழனி மலை தெரியும்.

சுவாமி மலை முருகனை கொஞ்சம் கிட்டத்தில் எடுத்த படம்


திருத்தணி

பழமுதிர்ச்சோலை

கோவில் பள பள என்று இருக்கிறது
கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது,   கல்யாணங்கள் நடக்கும் போலும்
மீனாட்சி சொக்கநாதர் திருமண கோலம்




அம்மன் சன்னதி என்று நினைக்கிறேன் மூடி இருந்தது
சுவரிலிருந்த ஓவியம்
தூண்கள், சிற்பங்கள் எல்லாம் அழகு


கஜபிஷ்டம் அமைப்பில் இருந்த பகுதியில்  சுற்றி  உற்சவர்களை வைத்து  இருந்தார்கள்.


நாங்கள் உள்ளே போன போது இப்படி மூடி இருந்தது  சிறிது நேரத்தில் திறந்து வைத்தார்கள்

சோமாஸ் கந்தர்

முருகன் வள்ளி தெய்வானை
மாரியம்மன்

உற்சவர் இருக்கும் எதிர் பக்கம் மேலே போக படிக்கட்டுக்கள் இருந்தன.



கல்யாண மண்டபத்திற்கு பக்கத்தில் படிக்கட்டுக்கள் இருந்தன ,   மேலே சிவனும் அம்மனும் இருக்கிறார்கள். எனக்கு படி இறங்கி வந்த களைப்பு , அதனால் சன்னதி    திறந்து இருந்தால் வருகிறேன் என்றேன், மகன் போய் பார்த்து விட்டு மூடி இருக்கிறது சுவாமியை,  பார்க்க முடியாது என்று எதிரில் இருக்கும் நந்தியை மட்டும் படம்  எடுத்து வந்தான்.




மலையிலிருந்து இறங்கும் போது  கீழே இருக்கும் கோவிலும் கோவிலின் மேல் பகுதியில்  நந்தியும் தெரிந்தது. அதனால் மகனை மேலே போய் பார்த்து வர சொன்னேன். 

ஆடி கிருத்திகை 9 ஆம் தேதி என்பதால் 7ம் தேதி ஆரம்பித்தேன் முதல் பதிவை, அடுத்த கிருத்திகையில்  நிறைவு செய்து இருக்கிறேன். இன்று கிருத்திகை.

இத்துடன் பத்துமலை கோவில் நிறைவு அடைகிறது.
இன்று ஆசிரியர் தினம். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவும் இடம் பெறுகிறார்.

தந்தைதா யாவானும், சார் கதியிங் காவானும்
அந்தமிலா இன்பம் தமக் காவானும்- எந்த முயிர் 
தானாகு வானும் சரணாகு வானும்அருட்
கோனாகு வானும் குரு.
-
- குருவணக்கம்.

அருள் குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லை பிசைந்து தெய்வக்கனியாக மாற்றி அமைகக வல்லவன். என் உடல் , பொருள், ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகுக.
- தினசரி தியான புத்தக பகிர்வு.

என் கணவர், மாமனார் மற்றும்  அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வணக்கங்கள்.


எனக்கு குருவாக இருந்து சொல்லி தந்த   குடும்பம் , மற்றும் நட்புகளுக்கு , சொந்தங்களுக்கு நன்றி  நன்றி. 
வாழ்க்கையில் நாள் தோறும் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.
வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் அனைவரும்  குருவே.


அடுத்து வேறு பதிவில் சந்திப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

மனைவி நல வேட்பு





 
மயிலாடுதுறையில் இருக்கும் போது உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து   மனவளக்கலை பயின்றேன், ஆழியார் சென்று  ஆசிரியர் பயிற்சி கற்று மயிலாடுதுறை மன்றத்தில் பல வருடம்  பணி செய்தேன்.  முன்பு சொல்லி இருக்கிறேன்.

ஆகஸ்ட் 30ம் தேதி "மனைவி நல வேட்பு நாள்" என்று  கொண்டாடுவார்கள். மகரிஷியின்  மனைவி அன்னை லோகாம்பாள் பிறந்த தினத்தை "மனைவி வேட்பு நாளாக"  கொண்டாடுவோம்.  மாயவரத்தில் இருக்கும் போது எங்கள் மன்றத்தில் நடந்த விழாவில் நானும், என் கணவரும் கலந்து கொண்டோம். நேற்று மகனிடம் பேசி கொண்டு இருந்தேன், ஆழியாரில்  நடந்த விழாவை நேரலையில் பார்த்தேன் என்று.

மகன் முன்பு  மயிலாடுதுறையில்  "நீங்கள் கலந்து கொண்டதை கூகுள் போட்டோ  காட்டியது அம்மா" என்றான். அவனுக்கு நான் அனுப்பிய படங்களை சேமித்து வைத்து இருந்து இருக்கிறான். 

நான் உடனே அனுப்பி வைக்க சொன்னேன், அனுப்பி வைத்தான். அந்த படங்களும், ஆழியாரில் நடந்த விழா படங்களும் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

---------------------------------------------------------------------------------------------------


எத்தனையோ சிறப்பு தினங்கள் இருக்கிறது, மனைவியை  கொண்டாடும் தினம் ஏற்பட்ட காரணம் படித்துப்பாருங்கள் 
படிக்க முடிகிறதா? 

மயிலாடுதுறையில்  மன்றம்

 
கைகளை கோர்த்து கொண்டு  கண்களை நேருக்கு நேர் நீடித்த நிலைத்த பார்வையாக சிறிது நேரம் பார்க்க வேண்டும்.


 பிறகு ஒருவரை ஒருவர் 'வாழ்க வளமுடன்" என்று மூன்று முறை வாழ்த்த வேண்டும். அப்புறம்  மலரை  கணவர் கொடுப்பர் மனைவிக்கு, மனைவி கனியை கொடுப்பார் கணவனுக்கு.

அந்த நேரம் உறுதி மொழி எடுக்க சொல்வார்கள்.

மென்மையான இந்த மலர் போன்ற மனம் கொண்ட நீங்கள் மனைவியாக வந்தற்கு நான் பாக்கியம் செய்தவன் , உன்னை  என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன் என்பார் கணவர்.

மனைவி கனியை கணவருக்கு கொடுத்து இக்கனி போன்ற கனிவான மனம் படைத்த நீங்கள் எவ்வாறு கனியில் உள்ள வித்து முளைத்து மீண்டும் வளர்ந்து பூவாகி, காயாகி, கனியாவது போல் இக் குடும்பத்தில் என்னை ஏற்று மலரச்செய்து கனி  போன்ற சுவை நிறைந்த வாழ்க்கை அளிததற்கு  நன்றி கூறி இக கனியை அளிக்கிறேன். என்பார் மனைவி.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் குடும்ப உறுப்பினர் யாராக இருந்தாலும் தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்கிடையேயுள்ள உயிர்த்தொடர் மூலம்  அவ்வாழ்த்துப்பரவி குடும்பத்தில் அமைதி நிலவி மகிழ்வையும், நிறைவையும் கொடுக்கும் என்பார் மகரிஷி.


இருவரும் தங்களுக்கு  இறைவன் கொடுத்த துணை என்று ஒருவரை ஒருவர் மதித்து  வாழ்த்தி கொள்ளும் நாள்.

அதுவும் தன் வீட்டை துறந்து கணவன் வீட்டுக்கு வந்துதன் குடும்பம் இதுவென்று நினைத்து வாழும்  மனைவியை வாழ்த்தும் தினம்.

நம் நாட்டின் பண்பாட்டின்படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று கூறலாம்.திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே தன் வீட்டு  அன்பு உறவுகளை துறந்து வரக்கூடிய இயல்பு அவர்களுக்கு வந்து விடுகிறது. அப்படி  நம் அன்பை நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவும் அன்பும் கொடுக்க வேண்டியது  அவசியம், உண்மையை உணர்ந்து கொள்வது  பெண்மை, என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் கொடுக்ககூடிய மதிப்பை போல நம் வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அது கடமை.   
 என்று  சொல்லி அதற்கு ஒரு கவிதை சொல்லி இருக்கிறார்.



   
'பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப் '' என்ற மேலே     பகிர்ந்த  மகரிஷி கவிதையை கணவர்கள்  பாடி நிறைவு செய்வார்கள்.

அன்று ஒருநாள் கணவன்    கவி பாடி   வாழ்த்துவதை  பெற மனைவி   விரும்புவார்கள் தானே!.

பெண்ணின் பெருமையை சொல்லும் மகரிஷி கவிதை.


மயிலாடுதுறையில் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவில் கலந்து கொண்ட நினைவுகள் மிகவும் இனிமையானது,  ஒரு வருடம் கலந்து கொண்டதை  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

மலரை கணவரும், கனியை மனைவி வைத்து இருப்பதும் இந்த படத்தில் தெரியும்.
என் கையில் மலர் கொடுத்தார்கள்


இருவரும் அடுத்தவர் நாடித்துடிப்பை உணரும்படி கைகளை கோர்த்து கொள்ள வேண்டும். 

 பெண்ணின் பெருமையை பேசுகிறார் 



தன் பெற்றோர்களுக்கு கனிகளை எடுத்து கொடுத்து மகிழ்ந்த குழந்தைகள்


ஆசிரிய பெருமக்கள்

கீழே ஆழியாரில் நடந்த விழா படங்கள் காணொளி


ஆழியார் அறிவுத் திருக்கோவிலில்  நடந்த விழா 



நேரம் கிடைக்கும் போது விருப்பம் இருந்தால் இந்த காணொளியை கேட்டுப் பாருங்கள். நிறைய பேர் பேசினார்கள். திரு . இறையன்பு அவர்களின் பேச்சு நன்றாக இருக்கிறது கேட்டுப்பாருங்கள்.

குடும்பம் எப்படி ஏற்பட்டது, குடும்ப வகைகள் பற்றி எல்லாம் சொன்னார்.  1. இரத்தவழி குடும்பம், 2. குழுமன குடும்பம் 3. நிரந்தரம் மற்ற குடும்பம் 4. தந்தைவழி குடும்பம், 5.துணை குடும்பம்.   இப்போது உள்ளது துணை குடும்ப அமைப்பை சேர்ந்தது என்றார்.


திருவள்ளுவர் குடும்பம் பற்றி சொன்னதை மிக அழகாய் சொன்னார்.  "வாழ்க்கை துணை"  என்ற சொல்லை திருவள்ளுவர் குறிப்பிட்டதை     கணவன் பொறுப்பு, மனைவி பொறுப்பு  பற்றி சொன்ன  குறள்களை விளக்கமாக சொன்னார்.

குறுத்தொகை பாடலை பாடி அழகான விளக்கம் சொன்னார். குறுத்தொகை பாடலை 40 ஆண்டுகளுக்கு முன் 
கவிஞர் மீரா  மாற்றி பாடியதை சொன்னதை மிக அழகாய் சொன்னார் . கவிதையை கேட்டு பாருங்கள். தெரிந்து இருக்கும் உங்களுக்கு இருந்தாலும் கேட்கலாம்.

ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சமூகம் நன்றாக இருக்கும். .  கணவன், மனைவி ஒரே திசையில் பார்ப்பதுதான் புரிதல்,  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட அடையாளம்   புன்னகை புரிதல்தான் .

இப்போது உள்ள குடும்பத்தை பற்றி சொன்னார். முன்பு கூட்டுக் குடும்பம், அப்புறம் தனிக் குடும்பம்(தனி குடித்தனம்), இப்போது  கணவன் தனி, மனைவி தனி குடும்பம். 


அவர் சொன்னது இந்த விழாவில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். திருமணம் ஆகாதவர்களிடம் இதை கொண்டு செல்லுங்கள். இன்று பெரும்பாலும் கலந்து கொண்டவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்தவர்களாக இருக்கிறார்கள். 
வாழ்வை தொடங்குபவர்களிடம் இந்த  நல்லது சென்று சேர வேண்டும் என்றார்.

30 நாட்கள் மட்டும் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்து விட்டால் 30 வருடம் மகிழ்ச்சியாக கடந்து விட முடியும். 
புதிதாக வாழ்வை தொடங்குபவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்றார்.  சண்டையும் வேண்டும் அதை அப்புறம் போட்டு கொள்ளலாம் என்றார்.

இறையன்பு  அவர்கள் பேச்சை இளைய சமுதாயம் கேட்க வேண்டும். என்று விரும்புகிறேன்.

மிக அருமையாக பேசினார் முன்னாள் கலெக்டர்  திரு . ஸ்வரன்சிங் அவர்கள்.  வரதட்சிணை வாங்கவில்லை, அதனால் சண்டை இல்லை என்றார்.  35 வருடமாக சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதாகவும் சொன்னார். கிராமங்களை தத்து எடுத்து குடிபழக்கத்தை  ஒழித்து குடிக்கும் கணவர்களிடமிருந்து காப்பாற்ற வேன்டும் என்றும் குடிக்கும் பெண்களை பற்றியும் நகைச்சுவையாக சொன்னார்.



அங்கு நடந்த விழா படம்


ஆழியாரில் அறிவு திருக்கோவிலில் நடந்த  மனைவி நல வேட்பு விழா காணொளி  இறையன்பு அவர்கள் பேசிய போது எடுத்த படம். மயிலாடுதுறை அன்பர் அனுப்பி இருந்தார்.

நீ பாதி  நான் பாதி என்று  ஒரு பதிவு ஆகஸ்ட் 30 தேதி 2010 ல் எழுதி இருக்கிறேன்,  நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.


குடும்பத்திலிருந்து அமைதி  தொடங்கி சமுதாய விரிவாக அமைய வேண்டும்.  

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
_----------------------------------------------------------------------------------------