வியாழன், 31 அக்டோபர், 2019

கந்தனுக்கு அரோகரா!கந்த சஷ்டி விழாவில்  முன்பு விரதம் இருந்து கந்தபுராணம் படிப்பேன் ஆறு நாளில்   நாகர்கோயில் கிருஷ்ணன் அவர்கள்  எழுதிய  ஸ்ரீ கந்தபுராணம் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். (நர்மதா பதிப்பகம் வெளியீடு.)
கந்தன் பெருமையும், கந்த புராண மகிமையும் , புராணம் தோன்றிய வரலாறும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் கொஞ்சம்,  மற்றும் சில படங்களும் இங்கு பகிர்வாய்.

சனி, 26 அக்டோபர், 2019

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

தீபாவளி உல்லாசம் பொங்கும் இன்பத்  தீபாவளி  சிலருக்கு. சிலருக்கு உறவுகளுடன் கொண்டாட முடியாமல் விடுமுறை கிடைக்காமல் இருக்கும்.   முன்பு ஊரில் கொண்டாடிய நினைவுகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளும் தீபாவளியாக இருக்கிறது.

சுகமான நினைவுகளை மனச்சுமையோடு  போனிலும், நேரடியாக வீடியோ காட்சியாகவும் பரிமாறிக் கொள்ளும் தீபாவளி சிலருக்கு.

பெற்றோர்  அக்கா,அண்ணன், தம்பி, தங்கைகள் இவர்களுடன் கொண்டாடிய தீபாவளி ஒரு தனி  இன்பம்.  அடுத்துக் கணவர் வீட்டாருடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி.  அடுத்துக் குழந்தைகள் வீடுகளில்.
இப்போது நாங்கள் மட்டும், உறவினர்கள் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார்கள்.  பண்டிகை உற்சாகம் குறைந்து தான் காணப்படுகிறது. அதைப் போக்க 'தீபாவளி அன்றும் இன்றும்'  என்று கொஞ்சம் கதம்பப் பதிவு. 

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

இருகூர் மாசாணி அம்மன் கோவில்

13.10 .2019 அன்று   இருகூர் மாசாணி அம்மன் கோவில் போனோம் .அன்று பெளர்ணமி .

கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தோலைவில் இருக்கிறது. இங்கு இருகூர் ரயில் சந்திப்பு இருக்கிறது.

புதன், 16 அக்டோபர், 2019

பழமுதிர்சோலை

இன்று 16/10/19  கிருத்திகைக்குக்  காலை  பழமுதிர்சோலை போய் இருந்தோம்.   கூட்டமே இல்லை .அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகிக் கொண்டு இருந்தது .
திரை விலகியதும் தங்கக்கவசத்தில் முகத்தில் விபூதி அலங்காரத்தில் நம்மைப் பார்த்துச் சிரித்த முகத்தோடு காட்சி தந்து பரவசம் அளித்தார். பூஜை முடியும் வரை கண்குளிரப் பார்த்து மகிழ்ந்தோம்.

திங்கள், 14 அக்டோபர், 2019

பயணத்தில் கண்ட காட்சிகள்

பயணத்தில் கண்ட காட்சிகளைக் காரின் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு அலைபேசியில் எடுத்த  படங்கள். காரின் மூடிய ஜன்னல் வழியாக எடுத்த படங்கள்.

கோவைக்கு 12/10/19 அன்று குடும்ப விழாவிற்குப் போய் இருந்தோம். விழா முடிந்து 13ம் தேதி திரும்பி வரும் போது சில கோவில்களுக்கும் போனோம்.

கோவிலாகக் காட்டிக் கொண்டு இருந்தால் சிலருக்கு அலுப்பாக இருக்கும் என்பதால் பயணத்தில் எடுத்த எனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளின் பகிர்வு. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

பயணத்தில்  மதிய உணவுக்காகப்  போன ஓட்டலில் பார்த்த சில காட்சிகள் இங்கே.

பசுமை போர்த்திக் கொண்ட மலையும்  பஞ்சுப் பொதிகளாக வெண்மேகங்களும் நீலவானமும்