'
கருப்பசாமி கோவில் அருகில் இருந்த சிறுவன்," சாமி பெட்டி தெரியுது ! சாமி பெட்டி வருது! " என்றான்.
முந்திய பதிவுகள் படிக்கலாம்.
சாமி வரும் முன்னர் அலங்காரக் குடைகள் வந்தன
ஏரிக்கரை மேல் குழந்தைகள், பெரியவர்கள் என்று குதூகலமாய்
'சாமி பெட்டி' வந்து விட்டது. கபாலீஸ்வரி கோவிலையும் தாண்டி ஒரு கோயில் இருக்கிறதாம் அதற்குப் போகிறது சாமி பெட்டி.
விரதம் இருந்து வருகிறார்கள். எல்லோர் கையிலும் காப்பு கட்டி இருக்கிறார்கள்.
தொடர்ந்து வரும் பெண்கள் தலையில், பானை, பனைஓலைக் கூடைகள் என்று சாமிக்கு ஏதோ எடுத்துச்செல்கிறார்கள்.
தலையில் மதுரை மல்லிகை, கனகாம்பரம் சூடி இருப்பது அழகுதான்.
கரை மேல் ஒரு கூட்டம், ஏரிக்குள் ஒரு கூட்டம் எதைப்பார்ப்பது என்ற தவிப்பு எனக்கு. வாத்தியங்கள் முழங்க அவர்கள் வேக வேகமாய்ப் போகிறார்கள்.
ஏரியில் ஒரு பெண் நல்ல அலங்காரமாய் ஓடி வருகிறார்
உச்சி வெயிலில் அவர் பின் ஓடும் மக்கள் கூட்டம்
காலில் தண்டை, கொலுசு எல்லாம் அணிந்து இருக்கிறார். தலையில் அழகான பூ அலங்காரம், நிறைய மாலை மரியாதை செய்து இருக்கிறார்கள். நான் கரைமேல் இருந்து படம் எடுத்தேன். அவர்கள் ஏதோ தூக்கி வீசிக் கொண்டு சென்றார்கள் . ஒரு அம்மாவிடம் அவர்கள் என்ன தூக்கி எறிகிறார்கள் என்று கேட்டேன், கத்தி என்றார்கள். எதற்கு என்பதற்குள் போய் விட்டார்கள் . அவர்கள் வீசி ஏறிவதை ஓடிப் போய் எடுத்து அவர்களிடம் கொடுக்கிறார்கள் , மீண்டும் அவர்கள் வீசுகிறார்கள் இப்படி போய்க் கொண்டு இருந்தார்கள்.
இன்னொரு அம்மாவிடம் அதைபற்றி விசாரித்தால் அவர்கள் என்னை கோவிலுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு விரைந்து விட்டாட்கள்.
விழாக்கள் எல்லாம் ஏதாவது காரணகாரியங்களுடன் தான் நடத்துவார்கள்.
காரணம் எதுவாக இருந்தாலும் பக்தியுடன் செய்யும் அந்த மக்கள் குடும்பத்தை, ஊரை நன்றாக வைக்கவேண்டும் இறைவன்.
முதுமையிலும் சுமை தூக்கும் மூதாட்டி
சாமி பெட்டிக்கும் , அந்த அம்மன் அலங்காரம் செய்த பென்ணுக்கும் ஒவ்வொரு வீட்டு முன்பும் மாலை மரியாதை செய்து இருப்பார்கள் போலும்
சாமி பெட்டி வரும் வழி எல்லாம் அழகிய பந்தல் அமைத்து வாழைமரம் கட்டி இருந்தார்கள்.

ஆலவாயின் எழில் கபாலி மலைபிலிருந்து என்ற பதிவை சித்திரவீதிக்காரன் என்பவர் எழுதி இருக்கிறார் அந்த பதிவில் மாடக்குளகண்மாயில் எவ்வளவு நீர் நிரம்பி இருக்கிறது என்று பாருங்கள்.
கபாலி மலையிலிருந்து இந்த ஏரியைப்பார்க்க அழகாய் இருக்குமாம்.
ஏரியில் நீர் வந்தவுடன் கபாலி மலை மீது இருந்து பார்க்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.
------------------------------------------------------------------------------------------------
இதேமாதிரியான ஒரு திருவிழாவை கமுதிக்கு பக்கமிருக்கும் நீராவின்ற ஊரில் பார்த்திருக்கேன்
பதிலளிநீக்குவணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் இது மாதிரி திருவிழா பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
கருத்துக்கு நன்றி.
ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் வர்ணனைகளும் அவற்றுக்கான படங்களும்!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆகா...
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் திருவிழாக்களைக் காண்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
மண் வாசனை வீசும் படங்கள்...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.
கிராமதிருவிழாக்கள் நன்றாக இருக்கிறது.
/// அந்த அம்மாவிடம் விசாரித்தால் கோயிலுக்கு வாங்க..ந்னு சொல்லிட்டாங்க..///
பதிலளிநீக்குஆவலுடன் காத்திருக்கிறேன்....
தெய்வங்களும் தேவ கணங்களும்
மக்களுக்கு நல்லருள் புரியவேண்டும்..
அந்த அம்மாவின் அழைப்பை ஏற்று போய் இருந்தால் இன்னும் ஒரு திருவிழா பார்த்து இருக்கலாம், உச்சி வெயில் காலை விரதம் வேறு வீட்டை விட்டு கிளம்பி பல மணி நேரம் ஆகி விட்டது. அவர்கள் போகும் தூரம் வேறு எங்களுக்கு மலைப்பை தந்தது. அதனால் அடுத்த வருடம் பார்த்து கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம்.
நீக்கு//தெய்வங்களும் தேவ கணங்களும்
மக்களுக்கு நல்லருள் புரியவேண்டும்..//
நீங்கள் சொல்வது போல் அருள்புரியட்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மிக அருமையாக கலர்ஃபுல்லாக இருக்கிறது படங்கள். சாமிப்பெட்ட்டியும் அதனைச் சுமப்போரின் டெக்கரேஷனும் மிக அழகு. அருமையான காட்சி.
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குவண்ணமயமான விழாதான்.
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால்தான் இந்த பகிர்வு.
கடசிப்படம் ஏரிபோலத் தெரியவில்லையே.. கடல்போல இருக்கு.
பதிலளிநீக்குஆமாம் அதிரா, சரியாக சொன்னீர்கள். கடல் போல்தான் காட்சி அளித்ததாம் இந்த ஏரி.
நீக்குஅப்படி இருந்த ஏரியில் இப்போது ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் எவ்வளவு வருத்தமான விஷயம்.
மீண்டும் இந்த ஏரி நிறைய நீர் வர வேண்டும் என்பதுதான் அனைவரின் பிரார்த்தனைகள்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
கடல் போல் காட்சி அளித்த ஏரி இப்போது இப்படி! சாமி பெட்டி பற்றிய தகவலும் அலங்காரங்கள் செய்து கொண்டு ஓடும் பெண்ணைக் குறித்தும் தகவல் தெரிந்து கொள்ள ஆசை தான். ஆனால் நீங்க இந்த வருஷம் மலைக்குப் போக முடியாது. பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்குப் பார்த்துக்கலாம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇந்த விழா மலைமேல் இருக்கும் கபாலீஸ்வரி கோவிலில் இல்லை அதையும் தாண்டி செல்கிறார்கள் அங்கும், நாச்சியார், சின்ன முத்தைய்யா, பெரிய முத்தையா கருப்பசாமி போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள் என்றார்கள்.
அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்பது இறைவன் அருள் இருந்தால் பார்க்க வேண்டும்.
கொலுவுக்கு பொம்மை கொண்டு வரும் முதியவர் பிழைத்துக் கிடந்தால் வருகிறேன் அடுத்த வருடம் என்பார்.
பிழைத்து கிடந்தால் அடுத்த வருடம் பார்க்க வேண்டும்.
பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்கு பார்த்துக்கலாம் என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்கு பார்த்துக்கலாம்// சின்ன வயசில் இருந்தே எங்க வீடுகளில் இப்படிச் சொல்வார்கள். ஒவ்வொரு நாளும் ஆண்டவன் கொடுத்த பிச்சை. ஆகவே நாளைக்குப் பார்த்துக்கலாம் என்றே சொல்ல மாட்டார்கள். பிச்சைக்காரனுக்கு என்றே சொல்வார்கள். எதிர்காலம் இருக்கிறது. நமக்கும் இருக்கிறது என்பது ஆண்டவன் அருளால் தானே! அது தான் அவன் கொடுத்த கொடுக்கும் கொடுக்கப் போகிற பிச்சை!
நீக்குநான் நினைத்தேன் அப்படித்தான் இருக்கும் என்று.
நீக்குஎதற்கு உங்களிடம் கேட்டு விட்டால் தெரியாதவர்களுக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு என்று தான் கேட்டேன்.
ஒவ்வொரு நாளும் அவர் கொடுத்த பிச்சைதான் .
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
படங்கள் அழகா இருக்கும்மா.... அதுவும் சாமி பெட்டி எடுத்து வரும் படங்கள்.
பதிலளிநீக்குநீர் நிறைந்து இருக்கும் கண்மாய் - இப்படி இருந்த இடம் இப்போது இருப்பதை நினைத்தால் வருத்தம் மட்டுமே மிச்சம்.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீக்குபெட்டி சந்தனம் தெளித்து மணிகள் தொங்கவிடபட்டு மிக அழகாய் இருக்கிறது. காட்டு வழியில் போகும் போது அப்போது பாதுகாப்பாய் கோல்(கம்பு) கத்தி எல்லாம் எடுத்து போவார்கள் போலும் அது இன்றும் தொடர்கிறது.
கடல் போன்ற ஏரியைப் பார்த்தால் வேதனைதான் மிச்சம் நீங்கள் சொல்வது போல்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அருமை...
பதிலளிநீக்கு'கத்தி' வீசுவது... வித்தியாசமாக இருக்கிறது...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான் கத்தி வீசுவது வித்தியாசமாய் இருந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅழகான படங்கள். சபரிமலை ஐய்யப்பன் கோவில் திருவாபரண பெட்டி பூஜை மாதிரி இந்தக் கோவிலிலும், பூஜைகள் நடத்தி கொண்டாடுகிறார்கள் போலும்.
திருவிழாக்கள் என்றாலே சுவாரஸ்யமானதுதான். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணங்கள், கதைகள் இல்லையா? அந்தந்த ஊர்களில், இடத்தில், மக்கள் வழிவழியாக நடத்திக் கொண்டுதான் வருகிறார்கள். பாரம்பரியங்களை விடாது செயல்படுத்தும் அவர்களை வாழ்த்துவோம்.
தலை நிறைய பூக்கள் வைத்துக்கொண்டு விழாக்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அவர்களைக் கண்டால் மனதுக்கு சந்தோஸமாக உள்ளது.
தாங்கள் சொன்ன பதிவுக்கும் சென்று விபரங்கள் அறிந்து கொண்டேன். மலைகளின் அழகும், இயற்கையின் எழிலும் மனதை கவர்ந்தது.
அன்று மாடக்குளம் கண்மாய் எவ்வளவு தண்ணீருடன் அழகாக கடல் மாதிரி காட்சி தருகிறது. இப்போது இப்படி வற்றிப் போய் கிடக்கிறது. இன்றும் மக்கள் தங்கள் பாரம்பரியங்களை விடாமல் செய்யும் பூஜைகள் இயற்கையை மனம் குளிர்வித்து செழிப்பாக வைத்திருக்க, இயற்கையன்னையை மனம் நிறைய பிராத்திக்கிறேன்.
நீர்நிலைகள் நிறைந்திருந்தால் மக்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருக்கும். தங்களின் பதிவின் மூலம் பல இடங்கள், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தங்களின் பதிவுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சபரிமலை ஐய்யப்பன் கோவில் திருவாபரண பெட்டி பூஜை மாதிரி இந்தக் கோவிலிலும், பூஜைகள் நடத்தி கொண்டாடுகிறார்கள் போலும்.//
நீங்கள் சொல்வது போல்தான் என்று நினைக்கிறேன்.
வருடம் ஒருமுறை பூஜை செய்வார்கள் போலும்.
நான் மாயவரத்தில் இருந்த போது சாலியசெட்டியார்கள் என்ற வகுப்பை சேர்ந்தவர்கள் வருடம் ஒரு முறை வீட்டு சாமி கும்பிடுவது என்று கும்பிடுவார்கள். அதில் வெளி ஆட்களை அழைக்க மாட்டார்கள் அவர்கள் குடும்பத்தினர்கள் மட்டுமே செய்யும் விழா. பானை, பெட்டி இதில் அந்த சாமிகள் இருக்கும் .
//பாரம்பரியங்களை விடாது செயல்படுத்தும் அவர்களை வாழ்த்துவோம். //
கண்டிப்பாய் வாழ்த்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் இவர்களை வணங்க வேண்டும்.
//இன்றும் மக்கள் தங்கள் பாரம்பரியங்களை விடாமல் செய்யும் பூஜைகள் இயற்கையை மனம் குளிர்வித்து செழிப்பாக வைத்திருக்க, இயற்கையன்னையை மனம் நிறைய பிராத்திக்கிறேன்//
எல்லோரும் பிராத்திக்கும் போது இயற்கை அன்னை மனம் மகிழ்வாள், கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் உண்டு.
நான் கொடுத்த சுட்டியைப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
அனுபவிப்பதை படங்கள் மூலம்பகிர்வதுநேர்த்தி
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அருமை
பதிலளிநீக்குஇதுபோன்ற விழாக்கள் மக்களிடம் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும்
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அரிய காட்சிகள். அழகான தொகுப்பு.
பதிலளிநீக்குஅரிய காட்சிகள். அழகான தொகுப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.