வெள்ளி, 12 அக்டோபர், 2018

கொலு பார்க்க வாருங்கள் -1

Image may contain: one or more people
நவராத்திரி  கொலு  என்றால் கோவில்களில். வீடுகளில் பார்ப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். பெரியவர் முதல் சிறியவர் வரை  கொலு பார்ப்பதில் ஆவலாக இருப்பார்கள்.

ஒவ்வொரு படியிலும் கொலுபொம்மைகளை  அமைக்கவேண்டிய விதி முறைகளை  எல்லோரும் சொல்லிக் கொண்டு இருந்தாலும்  அவரவர்களுக்கு மனதில் தோன்றிய மாதிரி அடுக்கி அழகு பார்ப்பதும் உண்டுதானே!

எங்கள் வீட்டில் இந்த வருடம் கொலு இல்லை. அடுத்தவருடம் பொளச்சிக் கிடந்தா இறைவன் அருளால் கொலு வைப்போம்.

பொளச்சிக் கிடந்தா வரேன் தாயி ! என்ற பதிவில் எங்கள் வீட்டுக் கொலுவைப் பார்க்கலாம்.

கோவில்களில், வீடுகளில் வைத்த கொலுவைப் பார்த்து மகிழ்ந்து எடுத்து வந்த படங்களை வரும் நாட்களில் பார்க்கலாம். என்னுடன் கொலு பார்க்க வருவீர்கள் தானே!


ஜெயநகர் பிள்ளையார் கோவில் கொலு  படங்கள் கீழே: -

Image may contain: 1 person

No automatic alt text available.
பழனி மலைக் காட்சி.

பழனிமலை முருகா பழம் நீ திருக்குமரா 
பழம் ஒன்று எந்தனுக்கு தா- ஞான 
பழம் ஒன்று எந்தனுக்கு தா - முருகா
- பழனிமலை 

இளமை நில்லாது யாக்கை நிலையாது 
வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது 
நிலமை இதுவாக தலமைப் பொருளாக 
நிம்மதியை எந்தனுக்குத்தா முருகா 
நிம்மதியை எந்தனுக்குத்தா 
- பழனிமலை 
Image may contain: plant, flower and outdoor
கண்ணன் உரலில் கட்டப்படும் முன்.

உரலுடனே தாமோதரனாய் மருத
மரங்கள் இரண்டிடையில் தவழ்ந்தனையே
வேரற்று வீழ்ந்தன இருமரங்களுமே
பெருஞ்சாபம் நீங்கினர் நளகூபுராதியரே//

அந்தக் கதையில் வரும் காட்சி அமைப்புக்கு ஏற்ற இரண்டு மரங்கள் கண்ணன், உரல், யசோதா எல்லாம் இடம் பெறுகிறது.
No automatic alt text available.
திருவண்ணாமலைக் காட்சி.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே

Image may contain: plant
யமுனை ஆற்றங்கரையில் படகில் கண்ணன் குழல் ஊதி செல்கிறான்.
ஆடு, நரி , கோபியர் எல்லாம்  இருக்கிறார்கள்.

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

-
Image may contain: 1 person, indoor
சிம்மரூபனி

சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மா
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே
அங்கயற்கண்ணியும் அவளே

No automatic alt text available.
அம்மன் முன் கோலம் போட்டு இருக்கிறார்கள்.

ஜெயநகர் பிள்ளையார் கோவில் எங்கள் வீட்டிலிருந்து  சிறிது தூரத்தில் இருக்கிறது. தினம் லலிதா சகஸ்ரநாமம் படிக்கப் படுகிறது. அப்பகுதி பெண்கள் எல்லோரும் சேர்ந்து எல்லா விழாக்களையும் சிறப்பாகச் செய்கிறார்கள். அவர்களே சேர்ந்து கோவிலில் பிரசாதங்கள் செய்கிறார்கள்
உற்சாகமாய்.  தினம் வர அழைப்பு விடுத்தார்கள்.  சரஸ்வதி பூஜை அன்று நடனக்கச்சேரி பஜனை எல்லாம் உண்டு வாருங்கள் என்றார்கள்.

அடுத்த பதிவில் அய்யனார் கோவில் கொலு

                                                                 வாழ்க வளமுடன்



30 கருத்துகள்:

  1. கொலு பார்க்க வந்த எனக்கு தாம்பூலம் எங்கேம்மா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
      எங்கள் வீட்டு கொலு பார்க்க சொல்லி சுட்டி கொடுத்தேனே பார்க்கவில்லையா? அங்கு தாம்பூலம் கூடை கிடைக்கும்.
      அங்கு வாங்க.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. கொலு படங்கள் சின்ன வயதில் செட்டிய வீடுகளில் போய் பார்த்து மகிழ்ந்த நினைவுகளை மீட்டியது.

    அய்யனார் கொலுவும் வரட்டும் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      சின்ன வயது நினைவுகள் நவராத்திரி காலத்தில்கண்டிப்பாய் வரும்.
      தெரிந்தவர், தெரியாதவர் வீடுகளுக்கு குழந்தைகள் கொலு பார்க்க போவார்கள்.
      அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. கொலு படங்கள் மிக அழகு! ' பழனி மலை முருகா' பாடல் எப்போதோ கேட்டது. இளம் வயது நினைவுகள் மீள் பக்கங்களாக நினைவில் எழுந்தன! இது யார் பாடிய பாடல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
      பழனிமலை முருகா பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாட்டு.
      எழுதியது யார் என்று தெரியவில்லை.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. ஆவ்வ்வ் கோமதி அக்கா.. எவ்ளோ கொலு... எத்தனை வருடமாகச் சேர்த்தீங்க... 6 தட்டாக வச்சிருக்கிறீங்க.. இதில் ஒற்றை விழ வைக்கோணும் என ஏதும் விதி முறை இல்லையோ? ஏனெனில் கடவுளுக்குப் படைக்கும்போது ரெட்டை எண்ணில் படைக்கக்கூடாது எனச் சொல்லுவினமெல்லோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      இந்த பதிவு கோவில் கொலு.
      ஐந்துபடியில் பொம்மைகள் வைத்து கொலுப்படியும், ஆறுவது படி இல்லை சும்மா செட்டியாரை வைத்து கடை வைத்து இருக்கிறார்கள் அதிரா.
      9,7, 5 என்று ஒற்றைபடையில்தான் கொலு வைப்பார்கள்.
      எங்கள் வீட்டு கொலுவுக்கு சுட்டி கொடுத்து இருக்கிறேன் அதில் வைத்த கொலு பொம்மைகள் எவ்வளவு வருட சேமிப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
  5. //எங்கள் வீட்டில் இந்த வருடம் கொலு இல்லை. அடுத்தவருடம் பொளச்சிக் கிடந்தா இறைவன் அருளால் கொலு வைப்போம்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ மேல் படம் உங்கட வீட்டுக் கொலு இல்லையோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா , இது கோவில் கொலு .
      என் மாமியார் அவர்கள் இறந்து விட்டதால் இந்த வருடம் கிடையாது.
      பொளச்சிகிடந்தா வரேன் தாயி பதிவை படித்து பாருங்கள்.

      நீக்கு
  6. பழனிமலைக் கொலு அழகு. கொலு எனச் சொலும்போது என்ன வேணுமெண்டாலும் வைக்கலாமோ? சாமிச்சிலைகள்தான் எனும் கட்டாயம் இல்லையோ?

    திருவண்ணாமலைக் கொலு வித்தியாசமாக இருக்கே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, படியில் கொலு வைத்து பொம்மைகள் வைத்தாலும், பார்க், மலை, அருவி, அவர் அவர்களுக்கு மனதில் தோன்றிய மாதிரி வைக்க தடை எதும் இல்லை.
      கிரிகட், காலபந்தாட்டம், கபடி, போன்ற விளையாட்டு பொம்மைகள் வந்து விட்டது அது போல் பொம்மைகள் வைத்து மகிழ்கிறார்கள்.
      சிலர் அவர்கள் கைவண்ணத்தில் உருவான காட்சி அமைப்புகள் கொண்ட ஒரு கதை சித்திரம் வைக்கிறார்கள்.
      நவராத்திரி கொலு என்பது பொம்மைகள் மட்டும் வைப்பது இல்லை, அவர் அவர் திறமையை காட்டும் களமாக அமைந்து இருக்கிறது.
      எங்கள் வீட்டு கொலுவில் மலை அமைத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாமியை வைத்து வேறு வேறு மலைக் கோவிலாக அமைப்போம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

      நீக்கு
    2. ஓ அப்போ எனக்கு இந்த கொலு விளையாட்டு ரொம்பப் பிடிக்கும், ஆனா நாங்கள் வைக்கும் பழக்கமில்லை....

      நீக்கு
    3. கொலு வைக்க ஆசைபட்டால் வைக்கலாம்.
      நீங்கள் எல்லாம் வீட்டை அழகாய் அலங்கரித்து தானே எப்போதும் வைத்து இருப்பீர்கள்.

      நீக்கு
  7. பழனி மலை முருகா... கரகரப்ரியா என்று நினைக்கிறேன். கீதா ரெங்கனைக் காணோம்.. தைரியமாக ராகம் பெயர் அடித்துவிடலாம்! யார் கேட்கப்போகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      பழனிமலை முருகா பாடல் கரகரப்ரியா ராகம் தான், நீங்கள் சொன்னது சரிதான்.
      கீதாரெங்கனை எங்கே? ஊருக்கு போய் இருக்கிறார்களா?

      நீக்கு
  8. கிருஷ்ணன், முருகன் பழனி திருவண்ணாமலை யமுனா நதி என்று கொலுக்கள் சிறப்பு. அந்த பழைய பதிவும் பொய்ப்பது வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், பதிவில் எல்லா படத்தையும் பார்த்து கருத்து சொன்னதற்கும், பழைய பதிவை போய் படித்தும் வந்தற்கும் மிகவும் நன்றி.

      நீக்கு
  9. wநவ ராத்திரி கொலுஎன்றாலேயே பெண்குழந்தைகள் நினைவு வரு சுண்டல் கொடுக்கும் முன் சிறுமிகளைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள் முடலில்பிகுசெய்யும் குழந்தைகள் சில நேரங்களில்போது என்று சொன்னாலும் நிறுத்தாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் கொலுவிற்கு வரும் குழந்தைகளை பாடச் சொல்வோம், பெரியவர்களையும் தான். முதலில் பிகு செய்தாலும் நம் பாராட்டில் மகிழ்ந்து பாட ஆரம்பித்து விடுவார்கள் தொடர்ந்து.
      உங்கள் மலரும் நினைவுகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. பாதியில விட்டிட்டு ஓடிட்டேன்..

    சிம்மரூபினி ..சாந்த சொரூபியா காட்சி தாறா.

    //உற்சாகமாய். தினம் வர அழைப்பு விடுத்தார்கள். சரஸ்வதி பூஜை அன்று நடனக்கச்சேரி பஜனை எல்லாம் உண்டு வாருங்கள் என்றார்கள்.//

    நிட்சயம் போய்க் கலந்து கொள்ளுங்கோ கோமதி அக்கா, மனதுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். கோலமும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, நீங்கள் சொல்வது சரிதான் சிம்மரூபினி சிரித்த முகமாய் சாந்த சொரூபியா தான் இருக்கிறாள்.
      குருக்கள் மனைவி என் கணவரிடம் அம்மாவை அழைத்து வாருங்கள் அப்பா என்று சொல்லி இருக்கிறார். அதனால் கண்டிப்பாய் அழைத்து செல்வார்கள் என்று நினைக்கிறேன்.
      குழந்தைகள் நடனம் மனதுக்கு புத்துணர்ச்சி தரும் என்பது உண்மை.
      கோலத்தையும் ரசித்தமைக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  11. உங்கள் பதிவு வெளியானதும் படித்து விட்டு பதில் எழுதினேன்..

    இணையம் விடுபட்டுப் போனது...

    கொலு நமது பாரம்பர்யம்.. கலாசாரம்..

    கல்லாத மனிதரும் கண்டு உணர்ந்து கொள்ளத்தான் இப்படியான கொலு..

    குடும்பம் கோயிலாவது நிஜம்..

    புல்லுயிரில் இருந்து பூரணத்துவம்...
    அதுவே சனாதன தர்மம்...

    பதிவில் அழகான படங்களைக் கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க மங்கலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

      //புல்லுயிரில் இருந்து பூரணத்துவம்...
      அதுவே சனாதன தர்மம்...//

      உண்மை.

      உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. அருமையான பகிர்வு. படிக் கொலுவோடு பக்கத்தில் அமைக்கப்படும் காட்சியமைப்புகள் எப்போதுமே ரசனையானவை. எனக்குப் பிடித்தமானவை.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    கொலுவை விட பக்கத்தில் வைக்கும், பார்க், மலை , குளம், அருவி போனறவைதான் எல்லோர் மனதையும் கவரும். எங்கள் வீட்டுக்கு வரும் குழந்தைகள் அதை சுற்றித்தான் நிற்பார்கள்.

    உங்களுக்கும் அதுதான் பிடிக்கும் என்பது தெரியும் எனக்கு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு