தம்பி மகள் (மறுவீட்டுக்கு 20. 2. 2019 )மாப்பிள்ளை வீட்டில் திருமண வரவேற்பு வைத்து இருந்தார்கள். மாப்பிள்ளையின் ஊரான இராசிபுரத்திற்குப் போய் இருந்தோம். மருமகளுக்கு அலங்காரம் செய்துகொண்டு இருந்தார்கள்.
உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கோவில்களைப் பற்றி விசாரித்தேன். வரவேற்பு ஆரம்பிக்கும் முன் வரும் வழியில் பார்த்த அனுமன் கோவில் போய் வருகிறோம் என்றோம், (வரவேற்பு நேரம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை- நாங்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக வைத்து இருந்தார்கள்.) அவர்கள் அந்தக் கோவில் சீக்கிரம் அடைத்து விடுவார்கள், அதனால் நித்தியசுமங்கலி மாரியம்மன் கோவில் போய் வாருங்கள் அருமையான கோவில் என்றார்கள். அப்படியே அங்காளபரமேஸ்வரி கோவிலும் போய் வாருங்கள் என்றார்கள், மாப்பிள்ளையின் அப்பா. எங்களை அழைத்துச் சென்று கோவில்களைக் காட்ட அவர் தம்பியை உடன் அனுப்பினார்கள்.
கிளம்பி விட்டோம் கோவிலுக்கு
நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில்