சனி, 1 செப்டம்பர், 2018

கிரிதர கோபாலா!


நடுவில் இருக்கும் மீரா என் மகன் வாங்கித் தந்தான் கொலுவுக்கு பல வருடங்களுக்கு முன். 
கண்ணன் ராதை, கண்ணன் இரண்டும் மாயவரம் நட்புகள் வாங்கித் தந்தது கொலுவுக்கு.
                                  
கல்கியில் வந்த ரா. கணபதி அவர்கள் எழுதிய  'காற்றினிலே வரும்  கீதம்'   கதைத் தொகுப்பில் கிடைத்த செய்தி. (மீரா-படக்கதைச் சுருக்கம்.)
என் அம்மாவின் தொகுப்பு.

கண்ணன் ராதை
பெங்களூரிலிருந்து மாயவரம் நண்பர் வாங்கித் தந்தது கொலுவுக்கு. இன்னும் நிறைய கண்ணன் இருக்கிறார்கள் வீட்டில். அவை கொலுப் பெட்டிக்குள். இவர்கள் எல்லாம் ஷோகேஸ்க்குள் இருக்கிறார்கள்.
போன வருடம் போடாத படங்கள் இவை. 

வினு அவர்களின் ஓவியம் கதை முழுவதும் மிக அருமையாக இருக்கிறது. இன்னொரு பதிவில் அவர் படங்கள் மட்டும் போடலாம்.

மீரா என்றால்  நினைவுக்கு வருபவர் எம்.எஸ் .சுப்புலெட்சுமி அவர்கள் . அவர்களின்  'காற்றினிலே வரும் கீதம்' பாட்டு அடிக்கடி கேட்டு இருப்போம்.


எனது உள்ளமே -பாடல்   
இந்தப் பாடல் அவர் தம்புரா மீட்டிப் பாடுவது 


கிரிதர கோபாலா -பாடல்

//அதர மதனில் குழல்
அதனுள் அமுதச் சுழல்
நானிலம் செழிக்கத் தேனிசை ஊதி
மகிழ்வித்து கொள்வான் தன்னை
மகிழ்வாள் நப்பின்னை.// 


//கோலாகலத்தின் அதிசுகந்தமான காற்றிலே குழலிசை வந்தது. அதில் மாதவன் மகிழ்ந்தான். நப்பின்னைப் பிராட்டியாகிய ராதாதேவியும் மகிழ்ந்தாள். அடியார் திருக்கூட்டமும் மகிழ்ந்தது.

அண்டபகிரண்டம் யாவும் மகிழ்ந்தன. அது அன்று கோலோகத்துக் காற்றில் வந்த கீதம் மட்டுமல்ல. அகச் செவி திறந்தவர்களுக்கு இன்றும் மூச்சுக் காற்றினிலே இழைந்து வரும் கீதம் அது.//

காற்றினிலே வரும் கீதம்  கதையின் நிறைவுப் பகுதி.



இந்தப் பாடலும் அந்தக் கதைத் தொகுப்பில் கிடைத்தது தான். இந்த பாடலும்  எம்.எஸ் அம்மா அருமையாக இனிமையாகப் பாடி இருப்பார்கள்.
                       
அனைவர் மனதிலும் இப்படி சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் கண்ணன் கழலிணை பணிவோம்.
அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்!
கண்ணன்  மலரடி போற்றி!

43 கருத்துகள்:

  1. எனது கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களும் மா...!

    கண்ணன் திருவடிகளே சரணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான படங்கள் பாட்டுகள். நிறைவான கண்ணன் பிறந்த நாள். நல் வாழ்த்துகள் கோமதி.

      நீக்கு
    2. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      பாட்டுக்கள் உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியும்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    3. நேற்று வாழ்த்து மட்டும் கூறி சென்றுவிட்டேன் அவசரத்தில்...


      படங்களும் செய்திகளும் அருமை மா

      சிம்மாசனத்தில் கண்ணன் எழில் படம் கண்ணில் நிற்கிறது அருமை மா..

      நீக்கு
    4. சிம்மாசனத்தில் கண்ணன் படம் டெல்லியில் வாங்கினோம்.
      ஒவ்வொன்றும் ஒரு கதை இருக்கிறது.மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு. இப்போத் தான் கடுகு சாரோட பதிவிலே தற்செயலாக நடக்கு விஷயங்கள் பற்றிப் படிச்சுக் கருத்துச் சொல்லிட்டு இங்கே வந்தால் இங்கேயும் ஒரு தற்செயல்! நேற்று ரா.கணபதி அவர்களின் பிறந்தநாள். அதுவும் தற்செயலாக நீங்க அவர் எழுதியதை அவர் பிறந்த நாளன்றே பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அருமை. இந்தப் புத்தகம் பைன்டிங்கில் நானும் படிச்சிருக்கேன். மீராவின் கோயிலுக்கும் போயிருக்கோம். அங்கே இன்னமும் மீராவின் குரல் கேட்பது போலத் தான் எனக்கும் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் , வாழ்க வளமுடன்.
      தற்செயல் விஷ்யங்கள் என்று நீங்கள் சொன்ன விஷயங்கள் என்னையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. அவன் நினைத்தான் ரா. கணபதி அவர்கள் பதிவு வந்து விட்டது.
      ரா. கண்பதி அவர்களுக்கு வணக்கங்க்கள். அவரின் கதை பகிர்வை
      பிற்ந்தநாள் அன்றே போட்டு இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
      நாங்களும் போய் இருக்கோம். ஆமாம் மீராவின் குரலாக நமக்கு பரிச்சயமானது எம்.எஸ் அவர்கள் குரல்தான். மீரா என்றால் காற்றினில் குரல் வருகிறது.
      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. மீரா பொம்மையும், ராதாகிருஷ்ணன் பொம்மையும் அழகு. இன்றைய பதிவில் அவர்களை கொலுவேற்றியிருப்பதும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      நீங்கள் போனமுறை போட்ட பதிவுக்கு கவிதை எழுதினீர்கள். (உறி படத்திற்கு)
      இந்த வீடு வந்த பின் சில பொம்மைகளை ஷோகேஸில் வைத்தேன் அதனால் பகிர முடிந்தது.

      நீக்கு
  4. 1945 கல்கி குறிப்பு பொக்கிஷம். மீரா பொம்மைக்குக் கீழே அது வருவது போல அமைத்திருக்கலாமே அக்கா... இன்னும் சில பொக்கிஷங்களை இடம்பெற்றிருக்கின்றனவே... அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்து விட்டேன்.மீரா பொம்மைக்கு கீழே வருவது போல் அமைத்து விட்டேன். பொக்கிஷபகிர்வுகள் நிறைய இருக்கிறது அந்த தொகுப்பில்.

      நீக்கு
  5. குறையொன்றுமில்லை அப்போதுதான் முதலில் அச்சில் வந்ததா? அடடே... சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறையொன்றுமில்லை பாடல் அதில் இருந்தது.அப்போதுதான் அச்சில் வந்தது போலும்.
      கல்கியின் பொன்விழா வெளியிட்ட கேசட்டில் எம்.எஸ்.அம்மா பாடியது இருக்கும்.
      அது என்னிடம் இருக்கிறது.

      உங்கள் உற்சாக கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. தொகுப்பு அருமை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வள்முடன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  8. தெரியாத கதை.. மீரா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர கதை தெரியாது. சுவாரசியமாக இருக்கும் போலிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
      நலமா சார்?

      கதை மிக நன்றாக இருக்கும். கண்ணன் மேல் சிறு வயது முதல் பக்தி கொண்ட பக்தை. கணபதி எழுதியகதை நன்றாக இருக்கிறது. படித்து பாருங்கள்.

      நீக்கு
  9. கிரிதர கோபாலா க்ளிக் செஞ்சா எதோ பாக்யராஜ் படம் வருதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே நான் க்ளிக் செய்த போது மீராபட பாடல்தானே வருகிறது.

      வேறு யாரும் அப்படி சொல்லவில்லையே!
      உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.
      உங்கள் தொடர்கதை எப்போது தொடங்கும்?

      நீக்கு
  10. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளம்மா

    பதிலளிநீக்கு
  11. இனிய பதிவு...

    மீராவின் பக்தியில் உருகாதார் யார்!..

    ஓவியர் வினு அவர்களின் படங்கள் அற்புதமானவை...
    தனியாகப் பதிவில் வரும் நாளை எதிர்பார்க்கின்றேன்...

    அன்பின் கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
      மீராபஜன் , மீராவின் பக்திக்கு உருகாதார் இருக்கமாட்டார்கள்.
      ஓவியர் வினு அவர்களின் ஓவியம் பகிர வேண்டும். இந்த கதையில் அருமையாக வரைந்து இருக்கிறார் கலர் கிடையாது கருப்பு வெள்ளைதான்.

      உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அருமையான தொகுப்புகளை தொகுத்து தந்துள்ளீர்கள். நன்றி.

    மீரா பொம்மையும், ராதா கிருஷ்ணன் பொம்மைகள் மிக அழகாக உள்ளது.
    பழைய கால எழுத்துக்களில் கல்கியில் மீரா கதை சுருக்கத்தை கண்டது மகிழ்வாக உள்ளது. தங்கள் அம்மா சேர்த்து வைத்ததை பத்திரமாக பாதுகாக்கும் தங்களை பாராட்டியே ஆக வேண்டும். என் அம்மாவும் இந்த மாதிரி புத்தகங்களை பத்திரமாக காத்து வந்தார்கள். அவர்களுக்குப்பின் புத்தகங்கள் சிதிலமடைந்து விட்டன.

    எம் எஸ் அவர்களின் இரு பாட்டுக்களும் அருமை. "குறையொன்றும் இல்லை" எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அருமையான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். இறைவனருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹகரன், வாழ்க வளமுடன்.
      அம்மா மிக அழகாய் பத்திரமாய் பாதுகாப்பார்கள்.
      கிழிந்து போனால் அவர்களே பெரிய ஊசி வைத்து தைத்து அட்டை போட்டு பாதுகாப்பார்கள். அவர்களின் பக்தி பாடல்கள் புத்தகம் எல்லாம் என்னிடம் இருக்கிறது.
      எம். எஸ் அவர்களின் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் மிகவும் நன்றி கமலா.

      நீக்கு
  13. அருமை...

    சிறப்பான பாடல்கள்...

    கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  14. நல்லதொரு தொகுப்பு.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி.

    தங்கள் பதிவுக்கு நான் ஒரு கருத்துரை பதிந்திருந்தேன். தற்சமயம் அது தங்களுக்கு வந்து சேரவில்லையோ என எனக்கு ஐயம் எழுந்து விட்டது.அதில் என்ன கருத்துரை எழுதியிருந்தேன் என்பது கூட நினைவில்லை. படங்கள், பாடல்கள், பழைய குறிப்புகள் என தொகுப்பு அனைத்தும் அருமையாயிருந்தது. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா, உங்கள் கருத்து வந்து அதற்கு பதிலும் போட்டு விட்டேன்.
      அருமையான கருத்தும் வாழ்த்துக்களும்.
      இந்த வருடம் பண்டிகை கிடையாது என்றாலும் பாலும், தயிரும் அவலும், வெண்ணெய் வைத்து வழிபட்டு விட்டேன்.
      நான் ஒரு விழாவிற்கு (உறவினர்) போய் விட்டு மாலை நாலு மணிக்குதான் வந்தேன்.
      வந்து உங்களுக்கு கருத்தை படித்து மறுமொழி கொடுத்து விட்டுதான் இறைவனை வணங்க்கினேன்.

      மீண்டும் வந்து கருத்து சொல்லி வாழ்த்தியதற்கு நன்றி.

      நீக்கு
  16. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். தலைநகர் தில்லியில் நாளைக்கு தான்!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    ஆமாம், நாளை மிக கோலாகலமாய் இருக்கும்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. கண்ணன் படங்களும் காற்றினிலே வரும் கீதமும் அழகு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. வணக்கம் kuthoosi, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. கோமதிக்கா கண்ணன் நாளில் அருமையான ப்திவு போட்டிருக்கீங்க. மீரா பொம்மை அழகோ அழகு. ஆமாம் எம் எஸ் அவர்களின் பாடல்கள் எலாம் மிக மிக இனிமை. காற்றினில் வரும் கீதம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எம் எஸ் அவர்களின் குரல் செமையா இருக்கும்.

    காற்றினில் வரும் கீதமாய் கிரிதர கோபாலனின் குழலிசை உங்கள் வீட்டிலும் ஒலித்திருக்குக்ம். நல்ல தொகுப்பு அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      எம்.எஸ் அவர்கள் பாடல் பிடிக்காதவர்கள் இருப்பார்களா? அதுவும் நீங்கள் இசைபிரியர்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      உங்கள் வேலைகள் முடிந்து விட்டதா? வலை உலகத்திற்கு நீங்கள் மறுபடியும் வந்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  21. உங்கள் அம்மா நல்ல பொக்கிஷங்களைச் சேமித்திருக்கிறார் இல்லையா?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா நிறைய பொக்கிஷங்களை சேர்த்து வைத்து இருப்பது உண்மை.
      நன்றி கீதா.

      நீக்கு