பரிசாக கிடைத்த கால்மிதி முன் பக்கம் புள்ளிக் கோலம்
பின் பக்கம் பூக் கோலம்.
சங்கிலி தையல் மூலம் பூக்கோலம், புள்ளிக்கோலம் போடபட்டு இடுக்கிறது கம்பிளி நூலால் , பார்டரில் குரோசோ பின்னல் பொருட்களை சுற்றி வரும் சாக்குத் துணியை வீண் செய்யாமல் அதை இப்படி கைவேலைப்பாடு செய்து கால்மிதி செய்து இருக்கிறார்கள். எனக்கு அதை கால் மிதியாக போட்டு வீணாக்க விரும்பாமல் பத்திரமாய் அவர்கள் நினைவாய் வைத்து இருக்கிறேன். சிவகாசியிலிருந்து வந்து இருக்கு இந்த கால்மிதி.
எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து குழந்தைகள் விளையாடுவதை எடுத்த படம். நான் சொல்லும் விளையாட்டுக்கு யாரெல்லாம் வருகிறீர்கள்? கைதூக்குங்கள் என்று கேட்கும் பையனுக்கு எல்லோரும் நாங்கள் வருகிறோம் என்று கை தூக்குகிறார்கள்.
பள்ளி விடுமுறை முழுவதும் காலை முதல் இரவு வரை மகிழ்ச்சியாக விளையாடினார்கள். அவர்களின் உற்சாக கூக்குரல் மனதுக்கு உற்சாகத்தை அளித்தது.
மருத்துவ குணம் தெரிந்த வண்ணத்துப் பூச்சி. ஓமவல்லி (கற்பூரவல்லி) இலை சாப்பிட்டால் சளிதொல்லை இருக்காது என்பாதால் இலையை சாப்பிடுகிறதோ!! (எங்கள் குடியிருப்பு வளாகத்தில் எடுத்த படம்)
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவில் செல்லும் வழியில் பார்த்த காட்சி. (செல்லில் எடுத்த படங்கள்)
மாடக்குளம் சோனையார் கோவிலுக்கு திரு ஆபரணப்பெட்டி எடுத்துச் செல்லும் பக்தர் கூட்டம்.
அய்யனார் கோவில் பக்கத்தில் நின்று ஆடியவர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்தார்கள். அனைவருக்கும் விபூதி வழங்கினார்கள்.
ஆடி வந்ததைப் பின்புறம் இருந்து எடுத்தேன்.
கீழே வரும் படங்கள் அய்யனார் கோவில் வாசல் உள் எல்லாம் எடுத்தது. முன்பு கிராமக் கோவில் பதிவில் அய்யனார் கோவில் போட்டு இருக்கிறேன்.
கோடைக்கு ஏற்ற நுங்கு குளிர்ச்சியாக இருக்கும் ஏற்கனவே ! இன்னும் குளுமைதர ஆலமரம், வேப்பமரம், புளியமரம் சூழ்ந்து பனைமரத்திற்கு நிழல் தருது
காய்த்துக் குலுங்கும் பனைமரம்.
வில்வ மரத்தில் வில்வக் காய்கள்
வில்வமரத்தில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் ஒன்று அமர்ந்து இருக்கிறது பார்த்துச் சொல்லுங்கள் அதன் பெயரை (வில்வ இலை, காய் எல்லாம் மருத்துவ குணம் நிறைந்தது)
ஆலமரத்தில் ஆலம்பழம் நிறைய காய்த்து பறவைகளுக்கு விருந்து அளிக்கிறது
அழகான ஆலம்பழம்
பறவைகளுக்கு உணவு கிடைக்கிறது ஆலமரத்தில், இந்த சிறுமிக்கு ஆனந்த ஊஞ்சல் கிடைக்குது.
புளியங்காய்
புளியம்பூ
தன் குஞ்சுகளுடன் விரையும் கோழி
குப்பையைக் கிளரும் சேவல், கோழிகள்
வேப்பங்காய்- இது பழுத்தால் கிளி கூட்டம் வரும்
வேப்பமர நிழலில் குதிரை மீது அய்யனார்.
முகநூலில் இந்தப் படத்தைப் போட்ட போது பழைய பதிவர் நானானி
ஐயனாரு நெறஞ்ச வாழ்வைக் கொடுக்கணும் என்று பின்னூட்டம் கொடுத்து இருந்தார்கள். அவர்கள் சொன்னது போல் அனைவருக்கும் அய்யனார் நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கட்டும்.
'ஐயனாரு நெறஞ்ச வாழ்வைக் கொடுக்கணும்' என்ற திரை இசைப் பாடல் நினைவுக்கு வருமே சிலருக்கு !
வாழ்க வளமுடன்.