ஞாயிறு, 31 டிசம்பர், 2023

மலர்கள் தரும் ஆனந்தம்

லில்லி மலர்கள்


மலர்கள் தரும் ஆனந்தம் சொல்லி முடியாது. மார்கழி மாதம் காலை வேலையில் இறைவழிபாடு, இளம் குளிரில்  மலர்களின் ஆனந்த காட்சி மனதுக்கும் உடலுக்கு புத்தண்ர்வு கொடுக்கும்.

காலை எங்கள் வளாகத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கி அப்படியே எங்கள் குடியிருப்பு மலர்களை பார்த்து கொண்டு (ஒரு வலம் வந்து) வீட்டுக்கு வந்து விடுவேன்.

மார்கழி மாதம் கோவில்களுக்கு போய் வருவேன் முன்பு. இப்போது வளாகத்தில் இருக்கும் பிள்ளையாரை மட்டும் வணங்கி வருகிறேன் மார்கழி ஆராதனையாக.

இந்த பதிவில் வளாகத்தில் கீழ் வீட்டில் இருப்பவர்கள்  வைத்து இருக்கும்  செடிகளில்   மலர்ந்து இருக்கும்  மலர்களின் படங்கள் இடம்பெறுகிறது.

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் புனிதர் வடிவம் பெறுகிறார்

ஏழைத் தொழுவில் வந்த இறைமகனே

       தாலேலோ!

- கண்ணதாசன்.


மார்கழி மாதம்   சிறப்பான மாதம். பக்தியுடன் இறைவனை மட்டுமே நினைந்து  போற்றி துதிக்கும் மாதம். 
இறைவனை பாமாலை, பூமாலையுடன் மாதம் முழுவதும் துதிக்கும் மாதம்.  இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் சிறப்பு. 


 பெத்லகேமில்   இயேசுவின் பிறப்பும் மார்கழி மாதம் தான். கிறித்துவ அன்பர்கள் டிசம்பர் 25ம் தேதி அன்று இயேசுவின் பிறப்பை மகிழ்வுடன் கொண்டாடும் மாதம்.

இந்த பதிவில் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துகளும் , அரிசோனாவில் மகன் வீட்டுக்கு வந்து இருந்த   கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள்" பாடிய அன்பர்கள் படங்களும் இடம்பெறுகிறது.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

கார்த்திகை தீபமும் சொக்கப்பனையும்
மார்கழி பிறக்க போகிறது அதனால் வலையேற்றி வைத்த கார்த்திகை தீபத்திருநாள்   படங்களை பதிவாக்கி விட்டேன். இந்த பதிவில் கார்த்திகை தீப திருநாள், எங்கள் வீட்டில் நடந்தது, மகன் வீட்டில் நடந்தது,  மற்றும் கோவிலில் நடந்த சொக்கப்பனை படங்கள்  இடம்பெறுகிறது.

திங்கள், 11 டிசம்பர், 2023

பறவைகளின் தேடல்


திணைக்குருவிகள் கூடு தேடி  வந்தன.  எங்கள் வீட்டுக் கொடி கம்பியில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தது. 10 நாள் முன் வீட்டுக்கு வந்தது.  இந்த பதிவில்  பறவைகளின் தேடல் இடம் பெறுகிறது. 

வெள்ளி, 8 டிசம்பர், 2023

புறாக்களின் தவிப்புபல நாட்கள் ஆகி விட்டன  பறவைகள்   பதிவு போட்டு.   ஜன்னல் வழியே, மற்றும் பால்கனி வழியே பறவைகளை பார்த்து பதிவு செய்வேன். நிறைய பறவைகளை படம் எடுத்தும் வைத்து இருக்கிறேன், அவைகளை போட வேண்டும்.   இந்த முறை  பறவைகளின் படங்கள் எல்லமே  ஒரு தேடலை சொல்கிறது.

கூட்டை தேடி, தனக்கு உணவு அளித்த தோட்டத்தை தேடி என்று.

 சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வீட்டில்  புறாக்கள் கூடு கட்ட முயற்சி செய்து வெற்றிகரமாக கட்டி விட்டது. அவர்கள் துணி எல்லாம் காய போட்டு இருக்கும் இடத்தில் இப்படி தைரியமாக கூடு கட்டுகிறதே! என்று  நினைத்து கொண்டு இருந்தேன்.

அந்த பறவைகளை படம் எடுத்து இருந்தேன்.  இந்த பதிவில் பறவைகளின் வீடு(கூடு என்னவாயிற்று என்று பாருங்கள்.)

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்

                       இம்மையிலும் நன்மை தருவார் கோயில் 

மதுரை நகரின் நடுப்பகுதியில் தெற்குமாசி வீதி- மேலமாசி சந்திப்பில் அமைந்துள்ள   கோயில். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கோயில். மதுரை மீனாட்சி கோயில், மற்றும் கூடலழகரை தரிசனம் செய்து விட்டு  அந்த கோயில்களுக்கு பக்கம் இருக்கும் இந்த பழமையான கோயிலுக்கும் மக்கள் வருவார்கள் அதிகமாக. பேரூந்து நிலையம் அருகில் இருக்கிறது.

சனி, 18 நவம்பர், 2023

கந்த வேள் முருகனுக்கு அரோகரா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !

முருகன் அருளால்  கந்தசஷ்டிக்கு ஆறு நாட்களும் பதிவு போட்டு விட்டேன். ஆறு நாட்களும் தொடர்ந்து வந்து படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவில் ஜோதி தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்த    திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மற்றும்  எஸ் . எஸ் காலனி பிள்ளையார்  கோவிலில் உள்ள முருகனை வணங்கி வந்த  படங்கள்  இடம்பெறுகிறது.

வெள்ளி, 17 நவம்பர், 2023

பழனி ஆண்டவரும் மகனின் வெகு நாள் ஆசையும்
என் கணவரின்  இஷ்ட தெய்வம் பழனி ஆண்டவர். 

ஓவியர் சில்பி அவர்கள் வரைந்த பழனி தண்டாயுதபாணி தெய்வ படம்.  தீபாவளி மலரில் வந்தபடத்தை அவர்கள் பழனி ஆண்டவர் கல்லூரியில் படிக்கும் போது தன் அறையில் வைத்து வணங்கியது.   எங்கள் பூஜை அறையில் நடுநாயகமாக இருப்பார்.

வியாழன், 16 நவம்பர், 2023

சுப்ரமணியம் சுப்ரமணியம் சண்முக நாதா சுப்பிரமணியம்


   பழமுதிர் சோலை  ஆறாவது படை வீடு. சுப்பிரமணிய சுவாமி

இன்று கந்த  சஷ்டி 4 ம் நாள்.கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு சக்தியை கொடுப்பவை முருகன் பாடல்களும் முருகன் தரிசனமும் தான். மனது உற்சாகமாக இருக்க  முருகன் பாடல்களை பாடியும் கேட்டும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!முதல் நாள்


ஆறுமுகனே வருவாய்!- மூன்றாம் நாள்

கந்தசஷ்டி சிறப்பு பதிவுகளில் முந்திய பதிவுகள் . படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அரிசோனா மாகாணத்தில் உள்ள மகாகணபதி  ஆலயம் பற்றி   பல பதிவுகள் போட்டு இருக்கிறேன். அந்த ஆலயத்தில் நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு முருகன் அருளால்  மகன் சூரன் செய்து கொடுத்து இருக்கிறான். அந்த படங்களும் முருகன் பாடல்களும்  இந்த பதிவில் இடம்பெறும். 

புதன், 15 நவம்பர், 2023

ஆறுமுகனே ! வருவாய்
முருகபெருமான் சூரனை  சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர்.  நிறைய தடவை போய் வந்த கோவில். திருநெல்வேலி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதல் முடி காணிக்கை திருச்செந்தூர் முருகனுக்கு தான் கொடுப்பார்கள். உறவினர்களின் குழந்தைகளுக்கு   மொட்டையடித்து காது குத்தும் விழாவுக்கு அடிக்கடி கலந்து கொள்ள திருசெந்தூர் போய் இருக்கிறோம். நிறைய பதிவுகள் திருச்செந்தூர் பதிவுகள் பதிவு செய்து இருக்கிறேன். அப்போது பகிர்ந்து கொள்ளாத படங்களை இந்த பதிவில்  பதிவு செய்து இருக்கிறேன்.


முந்திய பதிவுகள் .

செவ்வாய், 14 நவம்பர், 2023

முத்தான முத்துக்குமரா முருகையா வா ! வா!

விராலி மலை சண்முகநாதர் கோவில்


கந்தசஷ்டி விழாவில்  முருகனை சிந்திப்போம் என்று  முருகன் பாடல்கள்  பகிர்வை  முருகன் அருளால் பதிவு செய்கிறேன். இன்று இரண்டாம் நாள்.  நேற்று 

திங்கள், 13 நவம்பர், 2023

தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!

 

கழுகு மலை குமரன் 

இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம். பல வருடங்களுக்கு முன் ஆறு நாளும் "முருகனை சிந்திப்போம்" என்று பதிவு போட்டேன். கந்தசஷ்டி காலத்தில் விரதம் இருப்பதும்,  "கந்த புராணம்" படிப்பதும் என்று இருப்போம். என் கணவர் ஆறு நாளும் சஷ்டி கவசத்தை 36 முறை படிப்பார்கள். மாதம் இரண்டு முறைவரும் சஷ்டி விரதம்  அதில் ஒரு முறை விரதம் இருப்போம்.இப்போது விரதம் இருப்பது இல்லை. 

ஞாயிறு, 12 நவம்பர், 2023

இறைவனுக்கு நன்றி.

 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். நான் தீபாவளி வாழ்த்து சொல்ல தயார் செய்தபடம்.

 இறைவன் அருளால் இந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக வெடிகள் வெடித்து புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக எங்கள் வளாகத்தில் கொண்டாடி விட்டார்கள்.நானும்  என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டாடி விட்டேன்.

உறவுகள், வலை உலக நட்புகள்,   மற்றும், திருவெண்காடு , மாயவரம் நட்புகள் வாழ்த்து அனுப்பினார்கள்., பேசினார்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ஞாயிறு, 5 நவம்பர், 2023

நண்பர்கள் வீட்டு நவராத்திரி விழா


மகன் இருக்கும் அரிசொனாவில்  அவன் நண்பர்கள் இல்லங்களில் வைத்த நவராத்திரி கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

முந்தின பதிவு நவராத்திரி திருவிழா .
நவராத்திரி விழாவுக்கு வந்தவர்களை மறுநாளும் வர சொன்னேன்  அரிசோனா நண்பர்கள் வீட்டு  கொலு பார்க்க.


இவர்கள் வீட்டில் திருப்பதி கோவில் 

சனி, 4 நவம்பர், 2023

நவராத்திரி திருவிழா


அம்மன் சிவபூஜை செய்யும் காட்சி.

தீபாவளி வரப்போகிறது! இப்போது நவராத்திரி திருவிழா பதிவா? என்று நீங்கள் நினைப்பது  புரிகிறது.

 எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் நவராத்திரி கொலு படங்கள் மற்றும்  தெரிந்தவர்கள், உறவினர் கொலு படங்களை பதிவாக போட வலையேற்றி வைத்து இருந்தேன். அதனால்  இந்த பதிவு. வாங்க கொலு பார்க்கலாம்.

செவ்வாய், 31 அக்டோபர், 2023

ஹாலோவீன் கொண்டாட்டம்அக்டோபர் மாதம் கடைசி நாள் கொண்டாட படும் பண்டிகை  "ஹலோவீன்"  


இந்த வருடம் மகன் வீட்டு வாசலில் வைத்து இருக்கும்  பொம்மைகள் படம் பேரன் கவின் அனுப்பி இருந்தான். படங்களுக்கு கீழ் அழகான வாசகங்களும் அவனே எழுதி அனுப்பி இருந்தான்.  மற்றும் அவர்கள் நண்பர்களுடன் சில இடங்களுக்கு சென்று வந்த ஹாலோவின் கொண்டாட்ட படங்களும்  இந்த பதிவில் இடம் பெறுகிறது. 

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

எங்கள் வீட்டு கொலு பார்க்க வாங்க


நல்வரவு வாங்க வாங்க 

 இந்த பதிவில் அரிசோனாவில் இருக்கும் மகன் வீட்டு கொலு இடம் பெறுகிறது.மதுரை மீனாட்சி கோவில் பின்னனியில் கொலுப்படிகள்
மேல் படியில் உள்ள மீனாட்சி  இந்த ஆண்டு புது வரவு.

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

சிறுவர் பூங்காவும், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறும்


பேரன் ஜூன் மாதம் (25ம் தேதி) மதுரை  வந்து இருந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர் பூங்கா போய் இருந்தோம்.

அங்கு முதலில் பார்த்தது நம் முன்னாள் குடியரசு தலைவர்  பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின்  வாழ்கை வரலாற்றை படங்களுடன்  அழகாய் சொல்லும்     அரங்கம் இருந்தது.

இன்று அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் . அவருக்கு நம் வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்..

அவர் பிறந்த நாளில்  சிறுவர் பூங்காவில் எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்
இன்று அரிசோனாவில் மகன் வீட்டில் இருக்கும் போது எடுத்து வைத்து இருந்த சிவப்பு செம்பருத்தி பூக்கள் படம் இன்றைய பதிவில்   இடம் பெறுகிறது.  தினம் தினம் பூக்கும் பூக்களை படம் எடுத்து இருந்தேன்.

ஒன்று, இரண்டு , மூன்று , நான்கு, ஐந்து, ஆறு வரை பூத்து இருந்ததை படம் எடுத்து வைத்து இருந்தேன்.

புதன், 4 அக்டோபர், 2023

கருட சேவைஅரிசோனாவில் உள்ள மகாகணபதி ஆலயத்தில் ஜூன் மாதம் 10 ம் தேதி 2023 ம் தேதி       ஸ்ரீனிவாச  கல்யாணம் நடந்தது. 
திருமணம் முடிந்தவுடன் கருடவாகனத்தில்  எழுந்தருளினார்.
  
திருமணத்தில் கலந்து கொண்டோம். அப்போது எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. புரட்டாசி மாத சிறப்பு பதிவாக.

புதன், 27 செப்டம்பர், 2023

ஊட்டிக்கு ஒரு சமயச் சுற்றுலா

இன்று உலக சுற்றுலா தினமாம், காலண்டரில் போட்டு இருந்தார்கள். முன்பு சுற்றுலா பற்றி எழுதி இருந்த பதிவு மீள் பதிவாக இங்கு இடம் பெறுகிறது. 2011 ல் போட்ட பதிவு.

கோடை விடுமுறைக்காலம் இது. விடுமுறையில் 
வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டில்
கட்டி மேய்க்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கும் நேரம் .

விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு போகலாமா? அல்லது உறவினர்களைஅழைத்துக் கொண்டு எங்காவது மகிழ்ச்சியாய் சென்று வரலாமா?- என்று வீட்டில் எல்லோரும் கலந்து ஆலோசிக்கும் நேரம்.அவரவர் பட்ஜெட்டுக்க ஏற்றமாதிரி விடுமுறையை 
கழிக்க எங்கு போகலாம் என்று முடிவுசெய்துகொண்டு 
இருக்கும் காலம் இது. வெயிலுக்கு இதமாய் , கண்ணுக்கு 
குளிர்ச்சியாய் ,கருத்துக்கு மகிழ்ச்சியாய் செல்ல ஒரு இடம் மலைகளின ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி . மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெறும். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.

சனி, 23 செப்டம்பர், 2023

பேரன் செய்த லெகோ பிள்ளையார்லெகோ விளையாட்டுப்பொருட்களை கொண்டு பேரன் செய்த பிள்ளையார்.

சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள்.


அருள் புரிவாய் ஆனைமுகா!  போன பதிவில் பேரன் செய்த களிமண் பிள்ளையார் இடம்பெற்றார்.

பேரனிடம் நிறைய லெகோ விளையாட்டுப் பொருட்கள் இருக்கிறது, அதை வைத்து பிள்ளையார் செய்து இருக்கிறான்.

இந்த பதிவில் மகன் வீட்டு பிள்ளையார்கள், தங்கை வீட்டு பிள்ளையார் கொலு, மற்றும் எங்கள் வீட்டுப்பிள்ளையார், எங்கள் குடியிருப்பு வளாகப்பிள்ளையார்  படங்கள் இடம்பெறுகிறது. 

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

அருள் புரிவாய் ஆனைமுகா!

மகன் செய்த பதாகை


ஸ்ரீ மகா கணபதி ஆலயம்  அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவில் பதிவு போட்டது நினைவு இருக்கும் உங்களுக்கு என்று நினைக்கிறேன்.

   அந்த ஆலயத்தின் சார்பாக பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு  போன வருட  பிள்ளையார் சதுர்த்திக்கு  மகன்  செல்ஃபி பிள்ளையார்  போட்டோ பிரேம் செய்து இருந்தான்.   அதை பதிவு செய்தேன், அந்த  பதிவு  குழந்தைகளின் கைகளில் பிள்ளையார்  .

வியாழன், 7 செப்டம்பர், 2023

கோகுல கிருஷ்ணா வா வா!எங்கள் வீட்டு கண்ணன்

 நேற்று கிருஷ்ண ஜெயந்திக்கு எடுத்த படங்களும் , பாடல்களும் இடம்பெறுகிறது இந்த பதிவில்.

ஸ்ரீ பத்துமலை சுப்பிரமணியர் கோவில் பதிவு -5  தொடர் பதிவின் நிறைவு பகுதி படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 5

பத்துமலை மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடு கோவில்.

ஜூன் 7ம் தேதி மகன் குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகனை தரிசனம் செய்து வந்தேன்.  அங்கு போய் வந்ததை தொடர் பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன்.

இந்த பதிவு நிறைவு பகுதி. இதில் அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில் இடம்பெறுகிறது.

--------------------------------------------------------------------------------------------------

முன்பு பகிர்ந்த பதிவுகள்:-

மாலை நேரம், மழை மேகம் வந்து சிறு தூறல் போட ஆரம்பித்து விட்டது.

அழகிய வேலைப்பாடு , மேலே அலங்கார வளைவுக்குள் அழகிய பிள்ளையார்கள்  வடிவங்கள்.


முதலில் நடுநாயகமாக  பிள்ளையார் இருந்தார். அந்த  பிள்ளையார்  போன பதிவில் இடம்பெற்று விட்டார். அன்று சதுர்த்தி அவருக்கு அபிசேகம் செய்ய தயார் ஆகி கொண்டு இருந்தார்கள். ஹோமம் நடந்து கொண்டு இருந்தது.

பிள்ளையார் பக்கவாட்டில் ஆறுபடை முருகனுக்கும் சன்னதிகள் வரிசையாக இருந்தது. குருக்கள் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். 

  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர்
  • பழனி
  • சுவாமிமலை
  • திருத்தணி
  • பழமுதிர்சோலை

ஆறுபடை வீடுகள் முருகன்கள் சன்னதி வரிசையாக இருக்கிறது.

                                    திருப்பரங்குன்றம்

                                           திருச்செந்தூர்

                                                       பழனி

சுவாமி மலை முருகனும், பழனி மலை முருகனும் கொஞ்சம் ஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் குழப்பம். இருவர் கை  வேல் மட்டும் வித்தியாசமாக  இருக்கும். முருகனுக்கு பின்னால் சுவாமிமலை கோபுரம் தெரியும், பழனி முருகன் பின்னால் பழனி மலை தெரியும்.

சுவாமி மலை முருகனை கொஞ்சம் கிட்டத்தில் எடுத்த படம்


திருத்தணி

பழமுதிர்ச்சோலை

கோவில் பள பள என்று இருக்கிறது
கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது,   கல்யாணங்கள் நடக்கும் போலும்
மீனாட்சி சொக்கநாதர் திருமண கோலம்
அம்மன் சன்னதி என்று நினைக்கிறேன் மூடி இருந்தது
சுவரிலிருந்த ஓவியம்
தூண்கள், சிற்பங்கள் எல்லாம் அழகு


கஜபிஷ்டம் அமைப்பில் இருந்த பகுதியில்  சுற்றி  உற்சவர்களை வைத்து  இருந்தார்கள்.


நாங்கள் உள்ளே போன போது இப்படி மூடி இருந்தது  சிறிது நேரத்தில் திறந்து வைத்தார்கள்

சோமாஸ் கந்தர்

முருகன் வள்ளி தெய்வானை
மாரியம்மன்

உற்சவர் இருக்கும் எதிர் பக்கம் மேலே போக படிக்கட்டுக்கள் இருந்தன.கல்யாண மண்டபத்திற்கு பக்கத்தில் படிக்கட்டுக்கள் இருந்தன ,   மேலே சிவனும் அம்மனும் இருக்கிறார்கள். எனக்கு படி இறங்கி வந்த களைப்பு , அதனால் சன்னதி    திறந்து இருந்தால் வருகிறேன் என்றேன், மகன் போய் பார்த்து விட்டு மூடி இருக்கிறது சுவாமியை,  பார்க்க முடியாது என்று எதிரில் இருக்கும் நந்தியை மட்டும் படம்  எடுத்து வந்தான்.
மலையிலிருந்து இறங்கும் போது  கீழே இருக்கும் கோவிலும் கோவிலின் மேல் பகுதியில்  நந்தியும் தெரிந்தது. அதனால் மகனை மேலே போய் பார்த்து வர சொன்னேன். 

ஆடி கிருத்திகை 9 ஆம் தேதி என்பதால் 7ம் தேதி ஆரம்பித்தேன் முதல் பதிவை, அடுத்த கிருத்திகையில்  நிறைவு செய்து இருக்கிறேன். இன்று கிருத்திகை.

இத்துடன் பத்துமலை கோவில் நிறைவு அடைகிறது.
இன்று ஆசிரியர் தினம். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவும் இடம் பெறுகிறார்.

தந்தைதா யாவானும், சார் கதியிங் காவானும்
அந்தமிலா இன்பம் தமக் காவானும்- எந்த முயிர் 
தானாகு வானும் சரணாகு வானும்அருட்
கோனாகு வானும் குரு.
-
- குருவணக்கம்.

அருள் குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லை பிசைந்து தெய்வக்கனியாக மாற்றி அமைகக வல்லவன். என் உடல் , பொருள், ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகுக.
- தினசரி தியான புத்தக பகிர்வு.

என் கணவர், மாமனார் மற்றும்  அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வணக்கங்கள்.


எனக்கு குருவாக இருந்து சொல்லி தந்த   குடும்பம் , மற்றும் நட்புகளுக்கு , சொந்தங்களுக்கு நன்றி  நன்றி. 
வாழ்க்கையில் நாள் தோறும் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.
வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் அனைவரும்  குருவே.


அடுத்து வேறு பதிவில் சந்திப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------