குறிஞ்சி ஆண்டவர் கோவில்
கொடைக்கானலில் பூக்கும் அழகிய மலர்களால் ஆன அர்ச்சனைக்கூடைகள்
வெளிச்சுற்று கோபுர சுவர் அழகுபடுத்தப்படுகிறது
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள் பூக்கும், இந்த குறிஞ்சி ஆண்டவர் கோவில் கொண்டுள்ள பகுதியில். குறிஞ்சிப் பூ பூக்கும் சமயம் குறிஞ்சி ஆண்டவருக்கு சமர்ப்பிக்கப்படும்.
சிறு வயதில் பள்ளியிலிருந்து சுற்றுலா வந்தோம், குறிஞ்சி பூ பூக்கும் சமயம் .அந்தப் பூக்களைப் பத்திரமாய் அட்டையில் ஒட்டி அதன் மேல் கண்ணாடி கவர் ஒட்டி பள்ளியில் சுற்றுலா வராதவர்களுக்குக் காட்டி மகிழ்ந்தது நினைவுக்கு வந்தது.
குறிஞ்சிப் பூ- படம், (நன்றி - கூகுள் )
குறிஞ்சி முருகன் கோவிலை லீலாவதி என்பவர் கட்டி இருக்கிறார், இப்போது பழனி கோவிலின் உப கோவிலாக பராமரிக்கப்படுகிறது.
மிகவும் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் குருக்கள் , பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.
கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை , அதனால் கோவிலிருந்து தூரத்தில் தெரியும் பழனி மலையின் அழகிய காட்சி, கோவில் வாசலில் இருக்கும் கடைகள் , நம் ஊர் பக்கம் பார்க்க முடியாத சிட்டுக்குருவி, அங்கு மரத்தில் படர்ந்த கொடியில் வித்தியாசமான காய் இவற்றை இங்கு காட்சி ஆக்கி இருக்கிறேன்.
யானை யானை! அம்பாரி யானை!
வெட்டி வேர் யானை முகன்
மரத்தில் செய்த அழகிய கலைப் பொருட்கள்
பளிங்குச் சிலைகள்
வீட்டில் தொங்க விட சரவிளக்குகள், ஊதுபத்தி ஸ்டாண்டு, அழகிய வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள்.
சிரிக்கும் புத்தர்
வித்தியாசமான காய்
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவியின் மஞ்சள் மூக்கு தெரியுதா?
தூரத்தில் இருக்கும் இரண்டு மலைகள் - பழனி மலை, இடும்பன் மலை.பனி மூட்டத்தில் எடுத்தது.
வாழ்க வளமுடன்.
=================