செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பாரதியார் கவிதைகள்.

பாரதியின் நினைவு நாள். இன்று.
அவரை நினைவு கூர்வோம்.                 காலைப் பொழுது (மாயவரம் மொட்டை மாடியில் எடுத்த படம்.)

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், 
புன்மை யிருட்கணம் போயின யாவும், 
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, 
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன் 
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம 
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே 
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! 

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் லட்சுமி பவன் ஓட்டல் வாசலில் போனவருடம் வைத்த பிள்ளையார் சதுர்த்தியின் போது எடுத்த படம்கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரணமுகத்தான் அருட்பதம் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!

முருகன் பாட்டு- மயில் மீது வரச் சொல்கிறார், கீழே மயில் இருக்கிறது அதனால் இந்தப் படம். (கழுகுமலையில் எடுத்த படம்)

வருவாய் மயில்மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
மாயவரம்  சாந்தநாயகி அன்னை துர்க்கையாகக் காட்சி கொடுத்தது -ஆடி வெள்ளியில்

ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்!
ஜய ஜய மாதா! ஜய ஜய துர்க்கா!
வந்தே மாதரம், வந்தே மாதரம் !

யாதுமாகி  நின்றாய் - காளி எங்கும் நீநிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம் - காளி தெய்வலீலை யன்றோ;
 அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும் ,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

மாயவரம் புனுகீஸ்வரர் கோவில் நவராத்திரி விழாவில் கஜலட்சுமி

ஸ்ரீதேவி துதி

பொன்னரசி நாரணனார் தேவி , புகழரசி
மின்னு நவரத்தினம் போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.


மாயவரம் புனுகீஸ்வரர் கோவில் நவராத்திரி விழாவில் எடுத்த சரஸ்வதி அம்மன்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.     


காக்கை ,குருவி எங்கள் ஜாதி -நீள்
கடலும், மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும்திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க  நோக்கக்களியாட்டம் .
மதுரையில் எங்கள் குடியிருப்பில் எடுத்த படம்மதுரையில் எங்கள் குடியிருப்பில் எடுத்த படம்கடல் ( தரங்கம்பாடி கடல்)
மலை ( 'ஜொம் சம்' என்ற ஊரில் எடுத்த அன்னபூரணா சிகரம்)

 சூரிய ஓளியில் தங்கமாய்  மின்னும் அன்னபூரணா சிகரம்.
(பொகாராவில் ஹோட்டல் காந்திபூரில் தங்கினோம் அங்கு   மொட்டைமாடியிலிருந்து எடுத்தபடம்.) 

மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம், காடு மலை அருவி, ஆறு கடல் நிலம், நீர் காற்று தீ, வான், ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் எல்லாம் தெய்வங்கள்.

கீழே வருவது மேலே உள்ள கவிதைக்கு ஏற்ற படங்கள்.வான் இனிமையுடைத்து ( அமெரிக்கா)வானமெங்கும் பரிதியின் ஜோதி;  பயணத்தில் கண்ட காட்சி

திங்கள்  (அமெரிக்காவில் எடுத்த படம்)


             அருவி                  (குற்றாலம்)                                  மழை (மாயவரத்தில் மொட்டைமாடியிலிருந்து எடுத்தபடம்)

பாரதி, பராசக்தியின் செயல் தான்  கருணை  மழை   என்கிறார்.

//மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்
வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெலாம் இடையின்றிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
“மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்!” என்று பாடும்மென் வாணியே.//


கிளி விடு தூது பாடலுக்கு ஆண்டாள் கோவில் கிளி  நான் எடுத்த படம் இல்லை
என் சேகரிப்பிலிருந்து எடுத்த  படம்.

சொல்லவல்லாயோ கிளியே!சொல்ல நீ வல்லாயோ!
குழந்தை இன்பம் என்கிறார் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலுக்கும் வைத்துக் கொள்ளலாம்.


காலைப் பொழுது

காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே!

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னிற்றே.


தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலையிட்டு சென்றதுவே.
  
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்

-பாரதி பாப்பாவிற்குப் பாடியது ,

பள்ளி வாசலில் தெருவில் இருந்த நாய் குட்டிகளை  பள்ளி சிறுவர்கள்
 கையில் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதைப் படம் எடுத்தேன்.
  

"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் 
தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் 
வயிரமுடைய நெஞ்சு வேண்டும்- இது 
வாழும் முறைமையடி பாப்பா" 


பாரதியின் கவிதைகள் சோர்வு நீக்கும், புத்துணர்ச்சி பெறலாம்.
நான் எடுத்த சில படங்களும் அதற்கு ஏற்ற பாரதியின் கவிதைகளும் இணைத்து இருக்கிறேன். உங்களுக்குப் பிடித்து இருக்கா என்று கருத்தில் சொல்லுங்கள்.

                                                             வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------


46 கருத்துகள்:

 1. படங்களையும் பாடல்களையும் மிகவும் ரசித்தேன்.

  நீங்கள் போட்டுள்ளது அன்னபூர்னா சிகரம் இல்லையே. அது மீனின் வால் போன்று மேற்பகுதி இருக்குமே. வேறு கோணத்தில் எடுத்திருக்கீங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
   படங்களையும் பாடலையும் ரசித்தமைக்கு நன்றி.
   மீண்டும் அன்னபூர்ணா சிகரத்தை பார்த்து விட்டு உங்களுக்கு கருத்து தருகிறேன்.
   காத்து இருங்கள் தயவு செய்து.

   நீக்கு
  2. ஓஓஓஓஓஓஓஓஒ நோஓஓஓஓஓஒ மீதான் 1ஸ்ட்டூ என அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தேன்ன்.. ஏன் நெல்லைத்தமிழன் இன்னும் நித்திரைக்குப் போகாமல் இருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  3. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   உறங்கும் வேளை வரவில்லை இன்னும் என்று நினைக்கிறேன் நெல்லைக்கு, மணி 9 ஆகிறது.
   எனக்கு இன்னும் அரைமணி நேரத்தில் வந்துவிடும் நித்திரை.

   நீக்கு
  4. பொகாரா என்ற அழகான ஊரில் ’ஹோட்டல் காந்திபூர்" என்ற தங்கும் விடுதியில் தங்கினோம்.

   மறுநாள் 16.09.11 அன்று அதிகாலை 5.30 மணியளவில்
   விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்று அன்னபூர்ணா
   மலைத்தொடரின் அழகைக் காலை நேரச் சூரிய ஒளியில்
   பார்த்தோம்.
   இந்த பதிவில் அப்போது எடுத்த இன்னொரு படம் போட்டு இருக்கிறேன்.படத்தில் நீங்கள் சொன்ன கோணம் தெரிகிறதா என்று பாருங்கள் ஏழு வருடங்கள் ஆனதால் எனக்கு மறந்து போய் விட்டது.   நீக்கு
  5. இரண்டு படங்கள் என் முக்திநாத் யாத்திரை பதிவிலிருந்து எடுத்து போட்டு இருக்கிறேன் பாருங்கள் நெல்லை.

   மீனின் வால் போன்று மேற்பகுதி இருப்பது தெரிகிறதா என்று.

   நீக்கு
  6. ஆம். கடைசிப் படத்தில் (மீன் வால் என்று படத்தில் போட்டிருக்கிறதே) உள்ளது அன்னபூர்ணா சிகரம். நான் பொகாராவில் தங்கியிருந்தபோது பல கோணங்களில் படம் எடுத்தேன். ரொம்ப அருமையா வந்திருந்தது.

   அங்க இருந்தபோது, கால நிலையினாலும் அரசியல் நிகழ்வுகளினாலும் இரண்டு நாட்கள் பொகாராவில் காத்திருந்தோம் ஹெலிகாப்டரில் நேராக முக்திநாத் கோவிலுக்கு (200 மீட்டர்) செல்ல. அப்போது ஒருவர், அந்த மலையின் அருகாமை வரை டாக்சியில் கூட்டிச் செல்கிறேன் என்றார். நான் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன். முக்திநாத்தில் கோவிலுக்கு அருகில் பெரிய பனிக்கட்டியைப் பார்த்தேன். நான் சென்றது 2008ல்.

   நீக்கு
  7. http://mathysblog.blogspot.com/2012/01/blog-post_18.html
   என்னுடைய முக்திநாத் யாத்திரை பற்றிய பதிவு படித்து பாருங்கள்.
   நாங்கள் போன போது மழை பெய்து கொண்டு இருந்தது பொகாராவில்.
   எங்களுக்கு முன்பு போக பதிவு செய்தவர்கள் போக முடியவில்லை. காலமாற்றத்தால்.அவர்கள் வேறு இடம் புக் செய்து இருந்ததால் முக்திநாத் பார்க்காமல் போய் விட்டார்கள்.
   மழை மேகமாய் இருந்ததால் அன்னபூர்ணா சிகரம் தெளிவாக தெரியவில்லை. கொஞ்ச்ம் வெளிவந்த சூரியஓளியில் பொன்வண்ணமாய் காட்சி அளித்தது.
   முக்திநாத் தரிசனம் நங்கு செய்தீர்களா? பனிக்கட்டிகளை நாங்கள் பத்ரிநாத் , கேதார்நாத்தில் பார்த்தோம்.
   மீண்டும் வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 2. பாரதி தினம் போற்றுவோம்.
  படங்களும் விளக்கமும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. படங்களுடன் அதற்குப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கும் பாரதி வரிகள் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   படங்களையும், பாரதி வரிகளையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. பாரதி பாடல்களை முன்பு அடிக்கடி பதிவுகளில் பதிவேன்.
   இப்போது கொஞ்ச நாட்களாக போடவே இல்லை.
   இன்று பாரதி நினைவு நாளில் அவர் பாடலை பகிர்ந்து மனநிறைவு அடைந்தேன்.

   நீக்கு
 5. எல்லா படங்களுமே அழகுக்கா .மொட்டை மாடியில் செந்நிற வெண்ணை பந்து :) பரிதி .பைரவருக்கு பிஸ்கட் தரும் பெரியவரும் அழகாய் கையில் எடுத்து உண்ணும் செல்லமும் தலையசைத்து நீர் பருகும் இளம் காகமும் கொள்ளை அழகு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
   ரசித்த ஒவ்வொரு படங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 6. படங்கள் அனைத்தும் அழகு! அவைகளுக்குப் பொருத்தமாய் பாரதியின் பாடல்களை இணைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிந்தான், வாழ்க வளமுடன்.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  அருமையான பாரதியின் பாடல்கள். அதற்கேற்றவாறு ஒவ்வொரு இடத்திலும் தாங்கள் எடுத்த அழகான புகைப்படங்கள். இவ்விரண்டையும் இணைத்து மகாகவி பாரதியை அவரின் நினைவு தினமான இன்றைய தினம் அனைவர் மனதிலும் அவரது நினைவுகளை ஆழமாக பதித்து விட்டீர்கள். பாராட்டுகளுடன் நன்றிகள்.. பதிவு மிகவும் அருமையாய் இருக்கிறது. ரசித்துப் படித்தேன். தங்களின் அழகான புகைப்படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
   உங்கள் அன்பான கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
   இப்படி ரசித்து படித்து கருத்து சொல்வது என்னை உற்சாகபடுத்துகிறது.

   நீக்கு
 8. //வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் லட்சுமி பவன் ஓட்டல் வாசலில் போனவருடம் வைத்த பிள்ளையார் சதுர்த்தியின் போது எடுத்த படம்//

  அப்போ இந்தப் பிள்ளையாரைக் கொண்டுபோய்க் கரைத்து விடுவார்களோ????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   கீழே ஒரு மண் பிள்ளையாரும் வைத்து இருக்கிறார்கள் அதை கரைத்து விட்டு இதை வைத்து இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.
   இந்த வருடம் வைப்பார்கள் அல்லவா அப்போது தெரிந்துவிடும்.

   நீக்கு
 9. //மாயவரம் மொட்டை மாடியில் எடுத்த படம்
  //

  பெயருக்கேற்ப.. சட்டியில் ஏதோ மாய வித்தை செய்கிறார் காக்கையார்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாயவர்ம் மொட்டைமாடி சட்டியில் உள்ள தண்ணீரில் ஏதாவது கொண்டு வந்து போட்டு கழுவி சாப்பிடும் காக்கையார்.

   நீக்கு
 10. அந்த அமெரிக்க வானம்போலதான் இங்கும் கோடையில் வானம் இருக்கும்.. நானும் சில படங்கள் எடுத்திருக்கிறேன்ன் எப்போ வெளிவருமோ அந்த வானத்து வைரவருக்கே வெளிச்சம்:)).

  மொட்டை மாடியில் எடுத்த நிலவை நம்பவே முடியவில்லை.. என்ன அழகா வந்திருக்கு.. என்னால இங்கு நிலவை எடுக்க முடியவில்லை.. அதன் வடிவம் ஒழுங்காக வருகுதில்லை:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, நானும் வானம் படம் நிறைய எடுத்து இருக்கிறேன். வானத்தில் மேகங்களில் தெரியும் காட்சிகளை காண பிடிக்கும்.
   நீலவானமும், வெண்மேகமும் எப்போதும் ரசிக்க வைக்கும்.

   மாயவர்ம் மொட்டை மாடியில் எடுத்தபடம் நிலவு இல்லை, மாலை நேரச் சூரியன்.
   அதிகாலை சூரியன், மாலைச்சூரியன் எல்லாம், நிலவு போல் நம்மை மயக்கும்.

   நீக்கு
 11. ஆவ்வ்வ்வ் குற்றாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதூஊஊஊ சூப்பர்ர்..

  அனைத்துப் பாரதியார் பாடல்களும்.. படங்களும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, குற்றாலம் அருவியில் இப்போது குளிக்கலாம் வாருங்கள் .
   அனைத்து படங்களையும், பாடல்களையும் ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி அதிரா.

   நீக்கு
 12. படங்கள் அழகா, பொருத்தமான பாரதி பாடல்கள் அழகானு தெரியலை. அப்படி ஒண்ணுக்கு ஒண்ணு பொருத்தமா அமைந்து போச்சு. எல்லாம் நன்றாக இருக்கின்றன. நாங்கள் பொகாரோவில் தங்கலை. ஆகையால் அன்னபூர்ணா சிகரங்களைப் படம் எடுக்கலை. கெலிகாப்டர் மூலம் பார்த்தோம். அருமையான காட்சி. காக்கை மண்சட்டியை உடைக்காமல் வைச்சிருக்கா? எங்க வீட்டில் உடைச்சுடுது! :) அதோடு அது சாப்பிடும் எலி போன்ற ஜந்துக்களை எல்லாம் கொண்டு வந்து போட்டுடுது! :) தினம் அதை எல்லாம் எடுத்துச் சுத்தம் செய்வது அவருக்கு ஒரு வேலை ஆகிப் போசு! :) இப்போ அவை தாம் குழந்தைங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   படங்களையும், பாடலையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   நெல்லை கேட்டதால் கூடுதலாக இரண்டு படங்கள் போட்டேன்.
   பொகாரோவிலிருந்து முக்திநாத்துக்கு குட்டி விமானத்தில் போகும் போதும் படம் எடுத்தேன் அது முக்திநாத் பதிவில் போட்டு இருக்கிறேன்.
   இரண்டு மண்சட்டி வைத்து இருந்தேன். இரண்டையும் உடைக்கவில்லை, நாங்கள் வரும் போது விட்டு வந்து விட்டோம். அந்த வீட்டுக்கு குடி வந்தவர்கள் அதிலேயே சாப்பாடு, தண்ணீர் வைப்பதாக சொன்னார்கள். (நாங்கள் பழைய நண்பர்களை பார்க்கா போகும் போது)
   கண்டதை கொண்டு போடும் காக்கை தினம் சுத்தம் செயவது கஷ்டம்தான். நீங்கள் சொல்வது உண்மை அவை நம் குழந்தைகள்தான். வெளியே எங்காவது போனால் அவைகளுக்கு உணவுக்கும், தண்னீருக்கும் தவிக்குமே என்று மனது தவித்து தான் போகிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. காலை வணக்கம்.படங்கள் அனைத்தும் அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஊசி, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. நன்னாளில் பொருத்தமான பதிவு. மாயவரத்தில் தொடங்கி பல இடங்களைச் சுற்றிவந்துவிட்டோம், இப்பதிவு மூலமாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
   பல இடங்களை சுற்றிப்பார்த்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.

   நீக்கு
 15. படங்கள் அத்தனையும் அழகு..

  மனங்கவரும் படங்களுடன்
  மாகவிக்கு அஞ்சலி...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   படங்களையும் பாடல்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி .வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 16. படங்களும் பாடல்களும் அருமை... இவ்வாறு சிந்திப்பதற்கே மிகவும் பொறுமை தேவை அம்மா... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது போல் பொறுமை தேவை பட்டது.
   படங்களை என் சேமிப்பில் தேட, அப்படியும் நான் விரும்பிய நாய்குட்டியுடன் இருக்கும் சிறுவனை தேட முடியாமல் பதிவை போட்டு விட்டேன்.

   உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 17. முன்பு போல் இப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்க முடிவதில்லை மீறிப்படிக்க முனைந்தால் ஓரிரு பக்கங்கள் படிப்பதற்குள் சோர்வாகி விடுகிறதுஅநேக நூல்கள் படிக்க முடியாமலேயே இருக்கிறது முன்பெல்லாம் பாரதியின் பாடல்களைஅடிக்கடி வாசிப்பதுண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   நானும் முன்பு நிறைய புத்தகங்கள் வாசிப்பேண் இப்போது குறைந்து விட்டது.
   பாரதி கவிதைகள் ப்திவுகளில் பகிர்வேன், அதுவும் குறைந்து விட்டது.
   அவர் நினைவு நாளில் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.இனி மீண்டும் தினம் கொஞ்சம் படிக்க நினைத்து இருக்கிறேன் பார்ப்போம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. அன்பு கோமதி, இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் .ஆனை முகத்தோன் அருள் செய்யட்டும்.
   நீங்களும் கீதாவும் பாரதியை மறப்பதில்லை. அழகான படங்கள் ,அதற்கேற்ற பாடல்கள். வாழ்க பாரதி நாமம் என்றும்.

   நீக்கு
  3. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்களுக்கு நன்றி.
   ஆனை முகத்தோன் அனைவருக்கும் அருள் செய்வார் உங்கள் வாக்குப்படி.
   உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.

   நீக்கு
 18. படங்களும் , பாடல் வரிகளும்....மிக மிக அருமை மா...

  தங்களுக்கு இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு