செளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில் ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள் கோவில்
நான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள். தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால் இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும் கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.
மிகவும் அழகிய கோவில். இரண்டு பக்கமும் குடியிருப்புகள், நெருக்கடியான இடம் ஆனால் கோவில் உள்ளே நல்ல விஸ்தாரமாய் நிறைய மூர்த்திகளை கொண்டு இருக்கிறது.
‘உள்ளே போனவுடன் பிள்ளையார் வெள்ளிக்கவசம் சார்த்தி அழகாய் இருந்தார். பெரிய அனுமன் முத்தங்கி சார்த்தி வெகு அழகாய்க் காட்சி தந்தார்.
கடந்து உள்ளே போனால் பன்னிரு ஆழ்வார்கள் வெள்ளிக் கவசத்தில் அழகாய், அதற்கு அடுத்து செளராஷ்டிர மக்கள் குருவாய் ஏற்றுக் கொண்டுள்ள நடனகோபால சுவாமிகள். அவருக்கும் வெள்ளி கவசம்.
நடுவில் மூலவர் ஸ்ரீ பிரசன்ன வெங்டேசபெருமாள், முத்தங்கியால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாய் காட்சி தந்தார். ஆரத்தி, தீர்த்தம், சடாரி, துளசி பிரசாதம் பெற்றுக் கொண்டு கண்குளிர , மனம் குளிர பார்த்துக் கொண்டோம், நகரு, வாங்க வாங்க என்ற ஓலி இல்லாமல் பெருமாளை நின்று நிதானமாய் வணங்க முடிந்தது தான் ஆச்சரியம்.
அலமேலு தாயாரும் முத்தங்கி அணிந்து, தாமரை மலர் சூடி அழகாய் காட்சி தந்தார். ஆரத்தியும், குங்கும பிரசாதமும் கிடைத்தது.
அடுத்து ஹயக்கிரீவர், பூவராகப்பெருமாள், யோகநரசிம்ம பெருமாள், ராமர். பள்ளி கொண்ட பெருமாள் (சிறிய மூர்த்தியாக) அனைவரும் வெள்ளி , தங்கம் ஆகிய கவசங்கள் சார்த்தப்பட்டு அழகாய் இருந்தார்கள்.
தனிச் தன்னதியில் ஆண்டாள் முத்தங்கி சார்த்தி, மூலவரும் உற்சவரும் ஒரே சன்னதியில் வெகு அழகாய் இருந்தனர்.
சிலபடிகள் கீழே இறங்கி வந்தால் பசுமாடுகள், அகத்திகீரை விற்கிறார்கள் பசு மாட்டுக்குக் கொடுக்க.
வெளியே போகும் வாசல் பக்கம் பளிங்கு ராதா கிருஷ்ணர் அழகாய்.
அழகிய கோவில் தள்ளு, முள்ளு இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் செய்தது இதுவே முதல் முறை.
கருடசேவையும் கிடைத்தது. கோவிந்தன் அருள்தான்.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்கி விட்டுப் பக்கத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவில் போய் வணங்கி விட்டு வெளியே வந்தோம்.அப்போது வீதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உலா வந்து கொண்டு இருந்தார். முரசு முன்னே சென்று விட்டது. சிறுவர்கள் கோவிந்தன் புகழ் பாடிக் கொண்டு போனார்கள்.
கோபுரவாசலில் ஒருபுறம் சக்கரத்தாழ்வார் மறுபுறம் கருப்பண்ணசாமி
உள்ளே போனவுடன் கருடன்மேல் பெருமாள் காட்சி தந்தார்
வாசலில் பெருமாள் வீதிவலம் வருவதை முரசு அறைந்து சொல்லிப்போக தயாராக இருக்கும் முரசு
இதோ கிளம்பிவிட்டார் !
துளசி பிரசாதம் தர, குட்டிக் கண்ணன்
தருகிறார் துளசி, சின்னக் கண்ணன்
பத்து மணிக்கே வெயில் கொளுத்துகிறது
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் கெருட சேவை நடக்கும் என்றார்கள். இந்த முறை ஐந்து சனிக்கிழமை வருகிறது. கோவிலின் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கும.
இந்த பதிவு 2016 ல் எழுதியது. இந்த வருடம் நான்கு புரட்டாசி சனிக்கிழமை வருகிறது.
இது ஒரு மீள் பதிவு.
இன்று சனிப் பிரதோஷம் நான் போகும் கோயிலில் கோவிந்தனும் , கண்ணனும் இருக்கிறார்கள் அப்படியே புரட்டாசி பெருமாள் தரிசனம் செய்து வருவோம்.
வாழ்க வளமுடன்.
------------------------------------------------------------------------------------------------------------------------
அழகிய படங்களும் விளக்கங்களும் அருமை சகோ.
பதிலளிநீக்குதரிசித்தேன்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
தரிசனம் செய்தமைக்கு மகிழ்ச்சி.
நல்ல பெருமாள் தரிசனத்துக்கு நன்றி. இந்தக்கோயிலில் தான் முன்னால் எல்லாம் ஹரிதாஸ் பஜனை, சந்தானகோபாலாசாரியாரின் கதாகாலட்சேபம் என்று கேட்டிருக்கோம். அடித்துப் பிடித்துக் கொண்டு முதல் இடம் பிடிக்க வேண்டிஓடுவோம். இப்போல்லாம் காலட்சேபம் கேட்பதே எப்போவானும் தொலைக்காட்சிகளில் சிந்துஜாவோ விசாகா ஹரியோ சொன்னால் தான். அதுவும் அபூர்வமாக!
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குகதாகாலட்சேபம் ஹறிதாஸ் பஜனை எல்லாம் இந்த கோயிலில் நடைபெறுமா ?
உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
தொலைக்காட்சியில் எப்போதாவது தான் கேட்க முடிகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மீள் பதிவா? இந்தக் கோவில் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். கிருஷ்ணன் கோவில் தெரு என்பது எங்கிருக்கிறது என்று புரியவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வள்மௌடன்.
நீக்குமீள் பதிவு ஆனால் நீங்கள் படிக்க வில்லை போலும் உங்கள் பின்னூட்டம் இல்லை.
கிருஷ்ணன் கோவில் தெரு கூடல்ழகர் கோவில் பக்கம் , இந்த கோவில் பக்கம் வீரராகவ பெருமாள் கோவிலும் இருக்கிறது. அவ்வளவுதான் எனக்கும் தெரியும்.
கீதாவிற்கு தெரியும் போய் இருப்பதாய் போட்டு இருக்கிறார்கள்.
ஆண்டாள் பற்றிய தகவல் வரும் வரி இரண்டுமுறை வந்திருக்கிறது. படங்கள் அழகாய் இருக்கின்றன.
பதிலளிநீக்குஸ்ரீராம், அந்த வரியை எடுத்து விட்டேன்.
நீக்குஇரண்டு தடவை பார்க்காமல் ஒட்டி இருக்கிறேன்.
தகவலுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பு கோமதி மதுரைப் பெருமாள்களை இத்தனை அழகாகப் பார்ப்பது இதுவே முதல் தடவை. கருடாழ்வார் தான் என்ன அழகு. அந்தக் குட்டிக் கண்ணனும் தான். சென்னையில் தள்ளு முள்ளு இல்லாமல் எந்தக் கோவிலுக்கும் இன்று போய்விட முடியாது.
பதிலளிநீக்குஇறைவன் அருள் என்றும் நீடிக்க வேண்டுகிறேன். ஒஹோ இன்று பிரதோஷமா.
எங்கள் கோவிலுக்குப் போய் வருவோம்.
இங்கேயும் அமைதியோடு பகவானைத் தரிசிக்கலாம்.
அற்புதமான பதிவு. நன்றி மா.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குஇந்த கோவில் மிக அழகாய் இருந்தது அக்கா. கருடாழ்வார் மிக அழகு. ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் நடைபெறுமாம். நம் வீட்டிலிருந்து தூரம். வெயில் கடுமை சார் பார்த்து விட்டோமே முன்பே என்பார்கள் , அதனால் பழைய பதிவில் கருடசேவைப் பார்த்தேன். அப்படியே அதை மீள் பதிவாய் போட்டு விட்டேன்.
இன்று சனி பிரதோஷம் பக்கத்தில் உள்ள கோயிலில் பார்த்து விட்டு வந்தோம்.
அங்கேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் அலங்காரமாய் காட்சி அளித்தார்.
அனுமன் வடைமாலையுடன் காட்சி அளித்தார். அவர்களியும் புரட்டாசி சனிக்கிழமைக்கு தரிசனம் செய்து வந்து விட்டோம். ( கூட்டம் தான் ஆனால் ஓரமாய் நின்று தரிசனம் செய்து வந்தோம்.)
கோயில் போய் வாருங்கள்.
உங்கள் ஆசிக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி அக்கா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅழகான படங்களுடன் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலைப்பற்றிய கருட சேவை பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த கோவிலெல்லாம் நான் பார்த்ததேயில்லை. மதுரையில் நிறைய பெருமாள் கோவில் இருக்கிறது என கேள்விப் பட்டுள்ளேன். இன்று பெருமாளின் தரிசனங்கள் மிகச் சிறப்பு. மீள் பதிவாக இருந்தாலும், இன்றைய நல்ல நாளில் இப்பதிவு பதிந்தமைக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்குமதுரையில் நிறைய பெருமாள்கள் இருக்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன் இந்த வாய்ப்பு கிடைத்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான படங்களும்
பதிலளிநீக்குஎண்ணங்களும்
வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.
நீக்குபடங்களையும், எண்ணங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கருடாழ்வாரும் பெருமாளும் என்றால் கொள்ளை அழகுதான்.. கம்பீரம் தான்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குகருடாழ்வாரும், பெருமாளும் கொள்ளை அழகுதான். கம்பீரம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அழகாகப் படங்கள் எடுத்திருக்கிறீங்க கோமதி அக்கா, அதற்கேற்ப அழகாக வர்ணிச்சு விட்டீங்க.. நேரில் போனதுபோல இருக்கு.
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குநேரில் போனது போல் இருக்கா மகிழ்ச்சி.
அது தான் வேண்டும் எனக்கு.
பெருமாள் முகம் மிகவும் அமைதியாக, பார்ப்போரைக் கவரும் விதமாக இருக்கு,.
பதிலளிநீக்கு
நீக்குபெருமாள் முகம் மிகவும் அமைதியாக, பார்ப்போரைக் கவரும் விதமாக இருக்கு,.//
பெருமாள் முகம் அமைதியாக கனிவாக அனைவருக்கும் வரம் அளிக்கும் வரத ராஜனாக விளங்க்குபவர் அல்லாவா? அதுதான் அந்த அமைதி.
கருப்பண்ணசாமியைக் கருங்கல்லால் கட்டியிருக்கிறார்களோ.. மரத்தடிப் பிள்ளையாரை நினைவு படுத்துகிறது.
பதிலளிநீக்குஅதிரா கருப்பண்னசாமி கருகல் சிலைதான் ஆனால் சிலைவடிவில் இருந்தார்.
நீக்குநான் காட்டி இருக்கும் படம் பெருமாள் கோயிலக்ளில் இருக்கும் சக்கரத்து ஆழ்வார்,
கோயிலின் வெளியில் கோயுர வாசலில் ஒரு புறம் சக்கரத்து ஆழ்வார், இன்னொரு பக்கம் கருப்பண்ணசாமி என்று சொல்லி இருக்கிறேன்.
ஓ ஒவ்வொரு சனிக்கிழமையும் ..புரட்டாசியில் இப்படி ஊர்வலம் வருவாரோ.. நன்றாக இருக்கும்.. நாங்களும் நேற்று காகத்துக்கு சோறு வைத்தோம்ம்.. ஆனா காக்கையாரை முந்தி சீகல் வந்து விட்டார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குஆமாம், அதிரா புரட்டாசி சனிக்கிழமிதோறும் கருடசேவை உண்டு .
நீக்கு//நாங்களும் நேற்று காகத்துக்கு சோறு வைத்தோம்ம்.. ஆனா காக்கையாரை முந்தி சீகல் வந்து விட்டார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா//
இந்த கருத்து ஸ்ரீராம் பதிவுக்கு எழத நினைத்த பதிலா?
இங்கு எங்க்கு காக்கையார் வந்தார்?
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.
இல்ல கோமதி அக்கா, சனிக்கிழமை எனச் சொன்னீங்க தானே.. ஒவ்வொரு புரட்டாசி சனியும் விரதமிருந்து காகத்துக்கு சோறு வைப்போம்.. எள்ளெண்ணெயும் எரிப்போம்.. அதைச் சொன்னேன்.
நீக்குஅதிரா, புரட்டாசி சனிக்கிழமை மட்டும் தான் (விரதம் இருக்கும் போது மட்டும் தான் வைப்பீர்களா?) வைப்பீர்களா அதை சொன்னீர்களா? ஸ்ரீராம் காகத்திற்கு அப்பளம் வைப்பதை சொன்னார் இல்லையா அதற்கு பதில் என்று நினைத்துக் கொண்டேன்.
நீக்குமீண்டும் வந்து சந்தேகத்தை தீர்த்து வைத்தற்கு நன்றி.
சனிக்கிழமை எனில் அது புரட்டாதிச் சனியில் மட்டும்தான் காகப்பிள்ளைக்கு ஃபூட்:)) ஹா ஹா ஹா.. மற்றும் படி விரத நாட்களின் முடிவில்.. ஏதும் விசேச தினத்தில் இப்படி வைப்போம் அது கட்டாயம் சனிக்கிழமை என வராதெல்லோ.. சும்மா வெள்ளி செவ்வாய் விரத நாட்களில் நாம் வைப்பதில்லை, ஆனா ஊரில் சைவமாக இருப்போர் தினமும் வைப்பதும் உண்டு..
நீக்குஎங்கள் குடும்பத்தில் தினம் காகத்திற்கு சாதம் வைப்போம்.
நீக்குஅம்மா காகத்திற்கு சாதம் வைக்காமல் சாப்பிடமாட்டார்கள்.
நீங்கள் சொல்வது போல் நாங்கள் சைவம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஏன் அதிரா மத்த நாளில் காகத்துக்குப் பசிக்காதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....பாவம் காகம். ஹா ஹா ஹா ஹா மத்த நாளில் வேற வீட்டுக்குப் போயிடுமோ?
நீக்குகீதா
உங்கள் வரிகளில் கோவிலுக்குள் சென்று வர முடிந்தது. படங்கள் அனைத்தும் அருமை. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அழகிய படங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் மூலம் எங்களுக்கும் பெருமாள் தரிசனம். நன்றிம்மா...
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
துளசி: இக்கோயில் பற்றி எனக்கும் தெரியவில்லை. நான் அங்கிருந்தவரை பார்த்ததில்லை.
பதிலளிநீக்குகீதா: எனக்கும் புதிதுதான் அக்கா. படங்கள் எல்லாம் செம அழகு...கோயில் பற்றிய விளக்கமும் அறின்டு கொண்டோம்...
நன்றி அக்கா
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
நீக்குஎனக்கும் 2016ல் தான் தெரியும். பழமையான கோவில் தான்.
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பழைய பதிவுகளை இருவரும் படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவருக்கும் நன்றி.
அழகான கோவில் படங்கள் அழகா எடுத்திருக்கிறீங்க அக்கா. உள்ளுக்குள் எடுக்க அனுமதியில்லைதானே. மீள் பதிவாயினும் படிக்க சுவார்ஸ்யம்.
பதிலளிநீக்குஎங்க வீட்டிலும் எல்லா நாளும் காகத்துக்கு வைப்பார்கள். அப்போ காகத்தோடு நிறைய நபர்களும் வந்து சாப்பிட்டுபோவார்கள்.(அணில்,புளுனி,குருவி, கோழி இவர்கலை சொன்னேன்) மகிழ்ச்சியா இருக்கு அதை பார்க்க.
இங்கு நாங்க பழைய வீட்டில் இருந்தபோது சனிகிழமை காகத்துக்கு வைப்பேன். வருவார்கள் பயத்துடன். இந்த வீட்டில் சிட்டுகள் வருவினம்.
வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
நீக்குகோவிலுக்கு உள் மூலவரை எடுக்க அனுமதி கிடையாது.
காக்காவிற்கு வைத்தாலும் எல்லா பறவைகளும், அணில், எறும்பு என்று அனைத்து உயிர்களும் சாப்பிடும். அதனால் நமக்கு மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், உங்கள் மலரும் நினைவு பகிர்வுக்கும் நன்றி.
அழகிய படங்கள். ..
பதிலளிநீக்குகருட சேவையும் தங்கள் மூலம் கிடைத்தது,...
வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.