அருள்மிகு கூடல் நகர் திருக்கோயில்
நாங்கள் உள்ளே போகும்போது பந்தல் போட ஆரம்பித்தார்கள்.
வெளியே வரும் போது மேலே ஏறி விட்டது பந்தல் அடுத்து அலங்காரப் பந்தல் அமைப்பார்கள்.
கோவிலில் அருமையாக மூலவரைத் தரிசனம் செய்தோம். கூட்டமோ நகருங்கள் போங்கள் என்ற எந்த விரட்டலுமோ இல்லாமல் திவ்ய தரிசனம் ஆச்சு. கம்பீரமான தோற்றத்தில் வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டு நிதானமாய் நம்மைப் பார்த்து என்ன வேண்டும் குழந்தாய் ? நான் இருக்கிறேன் என்று அபய ஹஸ்தம் காட்டிக் கேட்பது போன்ற தோற்றம்.
தாயார்களும் அது போல் தான் கேட்பதை எல்லாம் தருவது போன்ற கருணைப் பார்வை. ஒரு தாயார் வலது கால் மடித்து இடது கால் தொங்கவிட்டு, இன்னொரு தாயார் இடது கால் மடித்து வலது கால் தொங்க விட்ட தோற்றம் -பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு அலங்காரம்.
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினும் ஆயினசெய்யும்
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னூம் நாமம்.
அழகர் சன்னதியில் சுவரில் எழுதி இருந்த திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை படித்து வணங்கினோம். கதைகளை எல்லாம் படம் வரைந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் ஆகிக் கொண்டு இருந்தது அபிஷேகத்தையும் சிறிது நேரம் பார்த்து விட்டு மேல் தளத்தில் உள்ள சூரியநாராயணரைத் தரிசனம் செய்யப் போனோம்.
வெயிலில் கால்கள் சுடாமல் இருக்கத் தரையில் வெள்ளை பெயிண்ட்
தங்கக் கலச தரிசனம்
மேல்தளத்திலிருந்து எடுத்த படம்
ஆண்டாள் சன்னதி
அம்மன் சன்னதி
சூரிய நாராயணர் தேவிகளுடன் கம்பித் தடுப்புக்குள் வண்ணமயமாய்
அதற்கு மேல் தளத்தில் கிடந்த கோலத்தில் அழகர்
திருவனந்தபுரத்தில் மூன்று வழியாக பார்ப்பது போல் தாமரைக் கண்களால் திரு நோக்கு
பாத தரிசனம்.
அன்னையர் பாதம் அருகில்
சக்கரத்தாழ்வார் நெல்லிக்காய் மாலை அணிந்து மிக அழகாய்க் காட்சி அளித்தார். அங்கும் மஞ்சள் பிரசாதம் பெற்று, பின்புறம் யோக நரசிம்மரைத் தரிசனம் செய்து, பின் தாயாரைச் சேவித்தோம் கண்குளிர . குங்குமம் பெற்று அதன் பின் ஆண்டாள் தரிசனம், நவக்கிரக வழிபாடு முடித்து பிரசாதக் கடையில் புளியோதரை, அடை தோசை, அப்பம் இவற்றை மதியம் உணவுக்கு என்று வாங்கிக் கொண்டோம். தயிர் சாதமும் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். காலையே போய் விட்டோம் கோவிலுக்கு. ஞாயிறு காலை விரதத்தை இன்று பெருமாள் பிரசாதத்துடன் மதியம் நிறைவு செய்தோம். புளியோதரை, அப்பம் நன்றாக இருந்தது. அடை தோசை சாப்பிடப் பற்கள் வேண்டும் கனமாய், மொறு மொறு என்று கடினமாய் இருந்தது. ஒரு அடையில் எங்களால் கால்வாசிதான் சாப்பிட முடிந்தது.
மீதி படங்கள் அடுத்த பதிவில். இன்று எனக்குப் பிறந்த நாள் என்பதால் பெருமாளைத் தரிசனம் செய்து வரப் போனோம் முன்பே கூடல் அழகரைப் பற்றி கூடல் அழகர் கோவில் என்று பதிவு போட்டு இருக்கிறேன். காமிராவில் எடுத்த படங்கள்.
இன்று அலைபேசியில் எடுத்தேன். இப்போது மேலும் சில படங்கள் எடுத்தேன். கோபுரத்தைச் சுற்றிப் பெருமாளின் பல்வேறு தோற்றங்கள் ஓவியமாய் இருப்பதையும். அழகான சாளரங்கள் அமைந்திருப்பதையும் காட்டும் படங்கள் இருக்கிறது.
இவை அடுத்த பதிவில். நாளை புரட்டாசி மாதம் அல்லவா? பெருமாள் படங்கள் அடுத்த ஒரு பதிவில் போடலாம் என்று நினைக்கிறேன்.
வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் வாழ்த்துகள் முதலில்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன்
நீக்குநன்றி வாழ்த்துக்களுக்கு.
என்னாது கோமதி அக்காவுக்குப் பிறந்தநாளோ?.. மெனி மோ ஹப்பி ரிட்டேன்ஸ் ஒஃப் தெ டே கோமதி அக்கா...
நீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குபிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி.
கூடலழகர் கோவில் - நான் இன்னும் தரிசனம் செய்யவில்லை. அவன் அருள் இருந்து விரைவில் தரிசனம் செய்யணும்.
பதிலளிநீக்குஅருமையா எல்லாவற்றையும் படம் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். அருமையான தரிசனம். மிக்க நன்றி.
சூரிய ரத சிற்பமும் நன்றாக இருக்கு.
கூடலழகர் மிக அருமையான பெருமாள் கோவில் ஒரு நாள் முழுவதும் இருந்துதான் கண்டு களிக்கனும். சார் வெயிலில் அழைத்து செல்வதே பெரிய விஷயம். ஓலோ ஆட்டோதான் இருந்தாலும் வெயில் கடுமை. 12 மணிக்குள் வீட்டுக்கு வந்து விட்டோம்.
நீக்குசுவர் ஓவியங்கள் மிக அழகாய் இருக்கும்.
ஆண்டாள் சன்னதியில் திருப்பாவை 30 பாடல்களும், படங்களும் மிக அருமையாக இருக்கும். விமானத்தின் மேல் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள சிலைகள், சூரியநாரயாணர் இருக்கும் மேல் தள சிற்பங்கள் எல்லாம் நின்று நிதானமாய் பார்க்க வேண்டும்.
வரும் போது நேரத்தை அப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.
சூரிய ரத சிற்பம் இந்த தடவை தான் படம் எடுக்க முடிந்தது.
பழைய பதிவை படித்தீர்களா? படித்துப் பாருங்கள்.
சூரிய ரதம் படம் கண்ணாடி தடுப்புகுள் இருக்கிறது இரவு தெரிய உள்ளே குழல் விளக்கு இருக்கிறது. தடுப்பு போடவில்லை என்றால்
நீக்குநம் மக்கள் அதன் மீது எண்ணெய் தேய்த்து விடுவார்கள்.
பெருமாள் ஞாபகத்தில் பிரசாதக் கடையைப் படமெடுக்க மறந்துட்டீங்களா? இங்கு தோசை மிகவும் ப்ரசித்தமோ?
பதிலளிநீக்குபெருமாள் ஞாபகம் இருந்தது பெருமாள் கோயில் புளியம்சாதம் மிக ருசியாக இருக்கும் என்று. ஆனால் படம் எடுக்க வேண்டாம் என்று என் கணவரின் கட்டளை. எல்லா இடங்களிலும் தடுத்துக் கொண்டே தான் இருந்தார்கள். எங்கும் படம் எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, மீனாட்சி கோவில் மாதிரி காமிரா, மற்றும் செல்போனுக்கு தடை இல்லை. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தவர்கள் செல்லில் படம் எடுத்துக் கொண்டே இருந்தார்கள். கவனமாய் எடுத்தால் மூலவரே கிடைப்பார்.உற்சவருக்கு பின் புறத்தில் தான் மூலவர் சன்னதி.
நீக்குஅழகர் கோவிலில் தோசை கொஞ்சம் மெதுவாய் இருக்கும்.
திருஇந்தளூரில் பரிமளரங்கநாதர் கோயில் தோசை கருப்பு உளுந்து போட்டு தோசை மெத்து மெத்து என்று சாப்பிட எளிதாக இருக்கும். நம் ஊர் கல் தோசை போல.
இன்னொரு முறை போனால் பிராசதக் கடையை படம் எடுக்கிறேன். பலவித இனிப்பு இருக்கு. ரவா லாடு, திருப்பதி லட்டு போல், வீடுகளில் செய்யும் லட்டு போல் என்று பலவிதமாய் இருக்கிறது.தேங்குழல், கை முறுக்கு இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் அருமை
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
வண்க்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமுதலில் தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் வரும் எல்லா வருடங்களிலும் மகிழ்வாக பிறந்த நாட்கள் காண மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அழகான கூடலழகர் கோவில் படங்கள். கோபுர தரிசனம் கண்டேன். கோடி பாபங் கள் விலகியது. பெருமாளின் தரிசனமும் தாயார்கள் தரிசனமும் செய்து கொண்டேன்.
கிடந்த கோலத்தில் அழகர் மிகவும் அழகு. சூரிய ரதம், பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் புராணம் ஆகியவற்றை படித்தேன். இந்த கோவிலில் சுவர் சித்திரங்கள் மிகவும் அழகாயிருக்கும். நீங்கள் சொல்வது போல் ஒரு தடவை பார்த்தால் போதாது. ஒரு நாளும் போறாது. திருமங்கலத்தில் நாங்கள் இருந்த போது ஒரு தடவை இந்த கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் நிறைய வருடங்கள் ஆகி விட்டன. ஆததால் நிறைய காட்சிகள் மறந்து விட்டன. தங்கள் பதிவிலும் நிறைய படங்கள் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.
எத்தனை முறை பார்த்தாலும் புதுமையாக தோன்றுவது இந்த கோவிலின் சிறப்பு.
கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்.
கோடி பாபங்கள் விலகுமா ? நல்லது. விலகட்டும் பாபங்கள்.
கோஷ்டத்தில் இருக்கும் ஓவியங்களை அடுத்த தடவை போடுகிறேன்.
சித்திரங்கள் எல்லாம் அந்த காலத்து வண்ணங்கள் இன்னும் மாறாமல் இருப்பது ஆச்சரியம்.
உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.
கூடல் அழகர் மிக அழகான கோயில்.. சுற்றுப்புறமும் அழகு... கோபுரம் பெரிதாக உயரம் இல்லைப்போல தெரிகிறதே. படிகளில் ஏறி எங்கு போவார்கள்? மேல் மாடி இருக்கோ?..
பதிலளிநீக்குவணக்கம் டாக்டர் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குநம் தேவதை உங்களுக்கு இப்படி டாகடர் பட்டம் கொடுத்து இருக்கிறார் பூசணி இலையில் சுண்டல் செய்தற்கு.
கோவில் பெரிய கோவில்தான். மேல் தளத்தில் படி ஏறி போகும் இடத்தில் தான் கம்பி தடுப்புக்குள் வண்ணத்தில் இருக்கும் பெருமாள்கள் இருக்கிறார்கள்.
கீழ் தளத்தில் உள்ள மூலவர் அழகரை படம் எடுக்க கூடாது.
ஆண்டாள் சன்னிதியும் அழகு.. இப்போது மடம் போல ஆக்கியிருக்கிறார்களோ..
பதிலளிநீக்குஆண்டாள் சன்னதியும் அழகுதான். மடம் போல் தெரிகிறதா? மேல்தளத்திலிருந்து எடுத்த படம் . கோவில் பிரகாரம் திருமாளிகை சுற்று என்ற பெயர்.
நீக்கு//வெயிலில் கால்கள் சுடாமல் இருக்கத் தரையில் வெள்ளை பெயிண்ட்//
பதிலளிநீக்குஆஹா நல்ல யோசனை .அதுபோல் இந்த இரண்டுபக்கமும் படிகளில் மாடியேறி மேலே செல்வதை இப்போதான் முதல் முறை பார்க்கிறேன் .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமதி அக்கா .
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்குஇப்போது நிறைய கோவில்களில் இது போன்ற வெள்ளை பெயிண்ட் அடித்து விட்டார்கள் .முன்பு நடைபாதை முழுவதும் கம்பளம் விரித்து இருப்பார்கள், அது பழுது பட்டு காலில் மாட்டி தடுக்கி விழுவார்கள். இப்போது மிக வசதியாக இருக்கிறது. அதுவும் வயதானவர்களுக்கு மிகவும் நல்லது.
படி அமைப்பு மிகவும் அழகாய் இருக்கும்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஏஞ்சல்.
உங்க பிறந்தநாளை எனக்கு அறிவித்தவர் தெரிவித்தவர் பூசணி இலையில் பொரியல் செய்த டாக்டர் மியாவ் :)
பதிலளிநீக்குஆஹா! டாகடர் பட்டம் கிடைத்து விட்டதா? மகிழ்ச்சி. ஏகபட்ட பட்டங்கள் கிடைத்து விட்டது, டாக்டர் பட்டம் மட்டும் தான் எந்த் பல்கலை கழகமும் கொடுக்கவில்லை என்று நினைத்தேன். நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.தேவதை கொடுப்பது மிக விஷேசம்.
நீக்குஹையோ கோமதி அக்கா:).. நேக்கு டொக்டர் பட்டம் எப்பவோ கிடைச்சிட்டுது:).. ஆனாலும் பாருங்கோ எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது என்பதால வெறும் அதிராவா இருக்கிறேனாக்கும்:)) ஹா ஹா ஹா.
நீக்குஅதிரா, மன்னிக்கவும் நான் மறந்து விட்டதற்கு.
நீக்குடாக்டர் பட்டம் கிடைத்தும் தற்புகழ்ச்சி பிடிக்காமல் போட்டுக் கொள்ளவில்லையா?
என்னே ! அடக்கம் என்னே! அடக்கம்.
அத்தனை பட்டங்களையும் போட்டுக் கொண்டால் அது பெரிய ரயில் வண்டி அளவு நீண்டு போகும் அதனால் எல்லாவற்றையும் அடக்கிய ஞானி பட்டம் மிக சிறப்பு.
பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊 மா...படங்கள் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குபடங்களும் வர்ணிப்பும் அருமை.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ஆஹா.. நேற்று பிறந்த நாளா உங்களுக்கு?
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
பெரியார் பஸ்ஸ்டேண்டுக்கு அருகில் இருக்கும் கூடலழகர் பெருமாள் கோவில்தானே? சிலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் மேல் தளம் சென்று பார்த்ததில்லை. அடுத்தமுறை சென்று தரிசிக்கவேண்டும்.
பதிலளிநீக்குஸ்ரீராம் பழைய கூடலழகர் பதிவிலும் இப்படி சொல்லி இருக்கிறீர்கள்.
நீக்குபழைய சுட்டி கொடுத்து இருக்கிறேன் படித்துப் பாருங்கள்.
தரிசிக்க வாருங்கள்.
இன்னும் வந்து பார்க்கவில்லையா என்று கேட்கிறீர்களா? 2016 ஏப்ரலுக்கு அப்புறம் நான் மதுரைக்கே வரவில்லை அக்கா.
நீக்குமதுரை வர வாய்ப்பு இருக்கும் போது பார்க்க ஆசைப் பட்ட இடங்களைப்பார்க்க நேரம் ஒதுக்கி கொள்ளலாம். என்று சொன்னேன்.
நீக்குபடங்கள் சிறப்பாய் இருக்கின்றன. இவ்வளவு படங்கள் எடுக்க விட்டார்களா? யாரும் ஒன்றும் சொல்லவில்லையா?
பதிலளிநீக்குஇன்னும் இருக்கு அடுத்த பதிவில்.
நீக்குயாரும் ஒன்றும் சொல்லவில்லை.
இந்தக் கோவிலை ஒருமுறை ராமலக்ஷ்மி அருகில் தான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து அழகிய படம் எடுத்திருந்ததும் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஇதே மறுமொழி போன் பதிவிலும் இருக்கிறது ஸ்ரீராம்.
நீக்குநினைவாற்றல் நன்றாகவே இருக்கிறது உங்களுக்கு.
என் பழைய பதிவு நினைவுக்கு வரவில்லை ராமலக்ஷ்மியின் படம் நினைவிருக்கிறது என்றால் அது ராமலக்ஷ்மியின் படம் எடுக்கும் திறமை கண்ணைவிட்டு அகலாமல் இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஹா... ஹா... ஹா.. அவர்களின் புகைப்படம் எடுக்கும் திறமை மேலே உள்ள மரியாதை, பொறாமை, ரசிப்பு எல்லாம்தான் காரணம்! இதோ பழைய பதிவைப் போய்ப் பார்க்கிறேன் அக்கா!!!
நீக்குஸ்ரீராம், ராமலக்ஷ்மியின் திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
நீக்குபார்த்து விட்டு சொல்லுங்கள்.
முதலில் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பிடியுங்கள். பிறந்த நாளன்று அழகர் தரிசனமும் அருமை. உற்சவர் திருமஞ்சனத்தின் போது பின் புறம் வீற்றிருக்கும் மூலவரும் தெரிகிறார். இந்தக் கோயிலுக்கு ஒரு காலத்தில் தினமும் செல்வோம். விமான தரிசனம் பார்க்கையிலேயே வெயில் சூடு வந்துடும். இப்போப் பெயின்ட் அடித்திருப்பது நன்றாகவே இருக்கிறது. இங்கே ஸ்ரீரங்கத்திலும், சிதம்பரத்திலும் அதே போல் அடிச்சால் நல்லா இருக்கும். :) கூடலழகர் கோயிலுக்குக் கடைசியாப் போனது எப்போனு நினைவில் இல்லை. மதுரைக்குப் பலமுறைகள் போனாலும் மீனாக்ஷியை மட்டும் பார்த்துட்டுத் திரும்பறோம். ஒரு முறை இங்கேயும் போகணும் என்னும் ஆசையை உங்கள் பதிவு தூண்டி விட்டது. முன்னர் பிரசாதங்கள் மடப்பள்ளியிலேயே வாங்கலாம். இப்போ ஸ்டால் போட்டுட்டாங்க போல! எல்லாக் கோயில்களையும் போல இங்கேயும் ப்ரசாத ஸ்டால்! :( ஆனால் நல்லவேளையாக இன்னமும் திருப்புல்லாணியில் மடப்பள்ளியிலேயே பிரசாதம் கொடுக்கிறாங்க. பணம் மட்டும் கவுன்டரில் கட்டி முன் பதிவு செய்துக்கணும். அங்கேயானும் மாறலையேனு நினைச்சு சந்தோஷப்பட்டுக்கணும். :)
பதிலளிநீக்குவணககம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
மூலவர் தெரிவது மகிழ்ச்சி.
நான் ஒரமாய் நின்று எடுத்தேன் மூலவர் இருக்கமாட்டார் என்று நினைத்தேன்.
நான் பலவருடங்களுக்கு முன் போன போதே அடித்து இருக்கிறார்கள் என் பழைய பதிவைப் பார்த்தால் தெரியும்.
ஸ்ரீரங்கம், சிதம்பரத்திலும் இந்த பெயிண்ட் அடித்தால் நல்லதுதான்.
நீங்கள் சொல்வது போல் மடபள்ளியில் தருவார்கள் காசு கொடுத்தால் நானும் சிதம்பரம் தாயார் சன்னதியில் மடபள்ளியில் கிடைக்கும் போகும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவோம்.
வாருங்கள் இன்னொரு முறை மதுரை தரிசனம் செய்யலாம்.
திருப்புல்லாணி போக வேண்டும்.
இம்மாதிரி இருவாயில்கள் வழிக் கருவறைக்கு ஏறிச் செல்லும் பெருமாள் கோயில்களைக் கும்பகோணத்திலும் பார்த்திருப்பீர்கள். இவற்றை உத்தராயன வாயில் , தக்ஷிணாயன வாயில் என்பார்கள். அந்த அந்தப் புண்ய காலத்துக்கு ஏற்ப வாயில்கள் திறக்கப்பட்டு அதன் வழியே தான் செல்லவேண்டும். காஞ்சிபுரத்திலும் அப்படித் தான் என நினைவு. சரியாய் நினைவில் இல்லை! :))))) இங்கே கூடலழகர் கோயிலில் மேலே மட்டும் அப்படிக் காணப்படும்.
பதிலளிநீக்குஆமாம் கீதா கருவறைக்கு ஏறிச் செல்லும் பெருமாள் கோயில் பார்த்து இருக்கிறேன்
நீக்குஇது மேல்தளத்தில் அமைந்து இருக்கிறது.நீங்கள் சொல்வது போல் உத்தாயன வாயில், தக்ஷிணாயன வாயில்கள்தான்.அது சூரியநாராயணர் கோயில் அல்லவா
கீழே சூரிய ரதம் பற்றி போட்டு இருக்கிறேன் அதில் அப்படித்தான் போட்டு இருக்கிறது.
மேலே இருக்கும் தெய்வங்களுக்கு பூஜை கிடையாது போலவே!
எப்போதும் அடைத்து கிடக்கிறது. வருஷத்தில் அந்த ஒருநாள் பூஜை உண்டா என்று பட்டரிடம் அடுத்தமுறை போனால் கேட்க வேண்டும்.
உத்தராயன, தஷிணாயன காலத்தை எடுத்துக்காட்ட மட்டும் இப்படி அமைத்து இருக்கிறார்கள் போலும்.
மார்கழி மாதங்களில் தினம் தினம் இந்தக் கோயிலுக்கு வருவோம். வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்புக்கும், கோஷ்டிகளில் பங்கேற்கவும் வருவோம். :) இந்தக் கோயிலும் வடக்குக் கிருஷ்ணன் கோயிலும் அடிக்கடி போன கோயில்கள். வடக்குக் கிருஷ்ணன் கோயிலிலும் சிற்ப வேலைப்பாடுகள் நன்றாக இருக்கும். அங்கே வைகுண்ட ஏகாதசி ராப்பத்து, பகல் பத்து உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டுக் கடைசி நாள் திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரம் அலங்காரம் பிரமாதமாக இருக்கும். தெரு கடைசியில் தான் வீடு என்பதால் ஓடி ஓடி வந்து பார்த்துக்கொண்டு அம்மாவுக்கு ரன்னிங் கமென்ட்ர்ய் கொடுத்ததெல்லாம் நினைவில் வருது. அங்கே கொடுக்கும் தைலச்சக்கை வாசனை இப்போவும் மூக்கில் வந்துட்டுப் போகுது. பழைய நினைவுகளைக் கிளறி விட்ட பதிவு!
பதிலளிநீக்குஇதே பின்னூட்டத்தை நீங்கள் என் பழைய கூடல் அழகர் பதிவில் போட்டு இருக்கிறீர்கள்.
நீக்குஉங்கள் மலரும் நினைவுகள் பகிர்வு அருமை.
உற்சவகாலத்தில் சார் வரமாட்டேன் என்கிறார்கள்.
நீங்கள் சொல்வதை படிக்கும் போது பார்க்க ஆவலாக இருக்கிறது.
இன்று முதல் உற்சவம் ஆரம்பிக்க போகிறது கூட்டம் நிறைய வந்து விடும்.
நல்லவேளை நாம் நேற்றே போய் விட்டோம் பெருமாளை தரிசிக்க என்கிறார்கள்.
//அங்கே கொடுக்கும் தைலச்சக்கை வாசனை இப்போவும் மூக்கில் வந்துட்டுப் போகுது. பழைய நினைவுகளைக் கிளறி விட்ட பதிவு!//
எனக்கும் அந்த தைலச்சக்கை வாசனையை முகர ஆசை.
பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி.
நிறைய விஷ்யங்கள் அறிந்து கொண்டேன் உங்கள் பின்னூட்டத்தால் அதற்கும் நன்றி.
இப்போ அது போல் தைலச் சக்கை கொடுக்கிறாங்களானு தெரியலை! அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா நான் சின்ன வயசில் சாப்பிட்டப்போப் பால் மணத்துடன் நெய் கசிய நன்றாக இருக்கும்! இப்போ அப்படி இல்லை என்பது வருத்தமாய் இருக்கு! :( தயிர்சாதம் வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் அவ்வளவு ருசியாக இருக்கும். அங்கே காலை ஏழரை எட்டுக்கே கோஷ்டி தொடங்குவார்கள். அந்தத் தயிர்சாதத்துக்காகவே நானும், தம்பியும் போவோம்!
நீக்குஉற்சவ காலங்களில் இப்போல்லாம் கோயில்களில் கூட்ட நெரிசல் தாங்க முடியலை கோமதி! நாங்க கடைசியா உற்சவ காலத்தில் கோயில் போனது எனில் 2009/10 ஆம் ஆண்டில் சிதம்பரம் திருவாதிரைத் திருவிழாவுக்கும், 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவும் தான்! தை மாதத்தில் ஶ்ரீரங்கத்தில் நடக்கும் தேரைப் பார்க்கச் சென்றிருக்கிறேன். அதுவே சித்திரைத் தேருக்குப் போக முடியாது! கூட்டம் தாங்காது! மாசி மாதமும் பூந்தேர்னு தேர்த்திருவிழா அரங்கனுக்கு உண்டு! கருட சேவை இங்கே பக்கத்தில் அம்மாமண்டபம் அருகே கருட மண்டபத்தில் நடக்கும். தெரு ஓரத்தில் நின்று பார்ப்பது தான்! உள்ளே நுழைய முடியாது! இப்போல்லாம் அந்த மாதிரிக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு வெளிவரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது! :(
நீக்குபழைய விஷயங்கள் இப்போது நடைபெறுகிறதா என்று பழைய ஆட்களை கேட்டால் தான் தெரியும்.
நீக்குநீங்கள் சொன்னது போல் பால்கோவா பழைய ருசி இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
தயிர்சாதம் கோயில்களில் நீங்கள் சொல்வது போல் ருசியாக இருக்கும்.
உங்கள் சின்னவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
உற்சவ காலங்களில் நீங்கள் சொன்னது போல் வர வர கூட்டம் அதிகமாய் இருக்கிறது.
நீக்குகூட்டம் இல்லாத நேரம் அமைதியாக தரிசனம் செய்யவே மனம் விரும்புகிறது.
சிறு வயதில் கூட்டம் பார்க்க ஆசை. விளையாட்டு சாமான்கள் வாங்க ஆசை.
இப்போது வேறு மன நிலை. நாங்கூரில் இரண்டு மூன்று தடவை கருடசேவை செய்து இருக்கிறேன்.
மதுரை மதனகோபாலசுவாமி கோயிலில் கருட சேவை பார்த்து இருக்கிறேன்.
தேர் திருவிழா எல்லாம் கூட்டம் இல்லாத இடத்திலிருந்து பார்ப்பேன். கூட்டம் எல்லாம் கலைந்த பின் தான் கிளம்பி வீட்டுக்கு வருவது.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
ஆனந்தம்.. பரமானந்தம்...
பதிலளிநீக்குபுரட்டாசியின் முதல் நாளில் அழகனின் திருக்கோல தரிசனம்..
மதுரைக்குப் பலதடவை சென்றிருந்தும் கூட
கூடலழகனைக் கண்டு தரிசனம் செய்ததில்லை...
அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை..
இருந்தாலும் மனம் உறுத்துகின்றது...
அழகனின் அருள் கூடிவரும்...
வாழ்க நலம்...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குநானும் புரட்டாசி முதல் நாளை நினைத்து தான் இந்த பதிவை போட்டேன்.நேற்று படிக்க முடியாதவர்களும் பெருமாளை இன்று தரிசிக்கலாம் என்று.
அடுத்த தடவை வாய்ப்பு கிடைக்கும் அழகர் அருள்புரிவார்.
கண்குளிர காணலாம். க்ண்டிப்பாய் அழகனின் அருள் கூடி வரும்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மா... படங்களும் விளக்கங்களும் சிறப்பு...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குபிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா...
பதிலளிநீக்குஒவ்வொரு படங்களும் அழகு...
வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
நீக்குபிறந்தநாள் வாழ்த்துக்கும், பதிவு பற்றிய கருத்துக்கும் நன்றி.
அடடே...
பதிலளிநீக்குபதிவுக்குப் பதில் சொல்லி விட்டு
தனியாக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றிருந்து
கடைசியில் மறந்து விட்டேன்...
அதற்காகத் தலையில் குட்டிக் கொண்டேன்...
தித்திக்கும் தேன்தமிழில்
பதிலளிநீக்குமுத்தழகாய் பூஞ்சரங்கள்..
முன்னின்று பேர்காட்டும்
என்றென்றும் சீர்கூட்டும்...
தவஅரசு மகிழ்மனதில்
தமிழ்த்தென்றல் தினம்வீச
சிவநேசப் பெருமனையில்
புகழ்சேர்க்கும் கலைச்செல்வி..
அன்னையவள் அபிராமி
அருகிருந்து காத்திடுவள்..
ஆயிரமாய் மங்கலங்கள்
அனுதினமும் சேர்த்திடுவள்...
சங்கரனின் மேனிதனில்
சார்ந்திருக்கும் கோமதியே
சங்கடங்கள் வாராமல்
சார்ந்தவர்க்கு நலங்காட்டு...
ஆண்டுகளும் பலநூறாய்
அரசுமகிழ் அருங்கலையாய்
அகமகிழ்ந்து வாழ்ந்திடுக
அங்கயற்கண் காத்திடுக!..
அன்பின் நல்வாழ்த்துகளுடன்,
துரை செல்வராஜூ.,
சகோ, உங்கள் கவிதையில் மனம் குளிர்ந்தேன்
நீக்குவிழியோரம் கண்ணீர் துளிர்த்தது.
அங்கயற்கண் காத்திடுவாள்
உங்கள் கவிதையை கேட்டு.
அன்பின் நல்வாழ்த்துகளுக்கு
பலம் அதிகம்.
நன்றி நன்றி வாழ்க வளமுடன்.
அங்கயற்கண்ணி காத்திடுவாள்
வணக்கம் சகோ ,
பதிலளிநீக்குநட்சத்திரம் இன்றும் இருந்தது.
வாழ்த்துக்கள் தனியாக பிறந்தநாள் குறிப்பிடவில்லை என்றாலும் எப்போது வாழ்க நலம் என்று தானே பின்னூட்டத்தில் சொல்வீர்கள்.
மறந்து விட்டதற்காக
அதற்காக தலையில் குட்டிக் கொள்ள வேண்டுமா?
எனக்கு ஒரே கன்ஃப்யூஷன் கூடல் நகரமென்றாலே மதுரைதானே இங்கு கூடல் அழகர் கோவில் போயிருக்கிறேனா பெயர் கன்ஃப்யூஷன்?
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குமதுரைக்கு 'நான்மாடக்கூடல்" என்ற பெயரும் உண்டு.
கடம்பவனம் என்றும் சொல்வார்கள்.
ஆலவாய் என்றும் சொல்வார்கள்.
மதுரை என்றும் பெயர் மதுரைக்கு இனிமை என்றும் பெயர் உண்டு.
//வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் //
என்ர பெயரும் உண்டு.
அந்த சிறப்பு வாய்ந்த மதுரையில் உள்ள பெருமாள் கூடல் அழகர்
கூடல் நகரென்றால் மதுரைதானெ இங்கு கூடல் அழகர் கோவில் என்னும்போதுஒரே கன்ஃப்யூஷன் போயிருக்கிறேனா கோவிலுக்குள் புகைப்படம் அனுமதியா பிறந்த நாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குபோய் இருப்பீர்கள் 108 வைணவ கோயில்களில் ஒன்று.
நீக்குமீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன், காமிரா தடை.
இங்கு எதுவும் போடவில்லை.
அபிஷேகம் செய்யும் இடத்தில் எல்லோரும் செல்போனில் படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள் அதனால் தைரியமாய் எடுத்தேன்.
உங்கள் கருத்துக்களுக்கும், பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் வாழ்த்து மகிழ வைத்து விட்டது.
அன்பு கோமதி எத்தனை அழகான கோவில்.
பதிலளிநீக்குநின்ற, கிடந்த ,அமர்ந்த கோலம் என்பார்கள். சூரிய பகவானே திரு நாராயணனின் ஒரு அம்சம் தானே.
படங்கள் அத்தனையும் நேரே போய்ப் பார்த்த பலனைக் கொடுக்கின்றன.
எனக்கும் கூட்டத்தில் இடிபடப் பிடிக்காது.
பழங்கானத்தத்திலிருந்து பாட்டி அழைத்துப் போகையில்
கூட்டம் இருந்தால் வரமாட்டேன் என்று சொல்லியே
போவேன். இது 60 வருடங்களுக்கு முன்னால்.
இப்பொழுது கேட்கவா வேண்டும்.
நான்மாடக் கூடலின் மீனாட்சி என்றும் அருள் புரிவாள்.
மனம் நிறைவாக இருக்கிறது.
இனிய நாள் அமைந்ததற்கு வாழ்த்துகள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா,தொண்டையில் சிக்குகிறது.
பழைய வாசம் மட்டும் நினைவில். ஆண்டாளின் ஸ்னானப் பவுடர் போல.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குமிக அழகான கோவில் தான்.
மூன்று நிலை பெருமாள்.
உடகார்ந்து இருக்கும் கோலம் விஸ்வகர்மாதேவசிற்பி சனத்குமாரர் வடித்த சிற்பம் அழகு.
கூட்டம் இருந்தால் கஷ்டம் அமைதி குலைந்து விடுகிறது.
நான்மாடக்கூடலை தங்கை ஆட்சி செய்கிறாள்
அண்ணனும் கவனித்து கொள்கிறார்.
பழைய வாசம் ஆண்டாள் ஸ்னான்ப் பவுடர் இன்றும் மீனாட்சி கோவில் கடையில் ஆண்டாள் குளியல் பொடி கிடைக்கும்.
பால்கோவா தொண்டையில் நிக்குதா? நினைவுகளில் இனிக்கும் தானெ!
உங்கள் அழகான கருத்துக்கு நன்றி அக்கா.
Belated birthday wishes. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியுடன் உங்கள் பிறந்த நாளை பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த கூடல் அழகர் கோவிலுக்குத்தான் எங்களை போகச் சொன்னீர்களோ? படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
நீக்குஎம். எஸ். சுப்புலக்ஷ்மி அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நேற்று அம்மாவுக்கு பிறந்த தேதி.
எனக்கு நட்சத்திரப்படி.
நான் சொன்னது திருமோகூர் கோவில். காளமேகபெருமாள் கோவில்.
இது நீங்கள் பார்த்தது இல்லையா? தெரிந்து இருந்தால் சொல்லி இருப்பேன்.
பேரூந்து நிலையம் அருகில்தான். கேட்டு இருக்கலாம் உங்களிடம்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நல்லதொருநாளில் கடவுளின் ஆசீர்வாதமும்,அருளும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
பதிலளிநீக்குதாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.
அழகான கோவில்,இடம். ஊரில் சுற்றிவர கோவிலுக்கு நடுவில் இருந்தோம். இங்கு தூரமா போகவேண்டியிருக்கு.
படங்கள் அழகாக இருக்கு.தகவல்களும் அருமை.
வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
நீக்குஅவரின் ஆசிகள் வேண்டிதான் போய் வந்தோம் அம்மு.
உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.
இலங்கையில் இயற்கையும் அழகாய் எங்கு பார்த்தாலும் கோவில்களும் அருமையாக இருக்குமே! நான் பார்த்து வியந்து இருக்கிறேன். மரத்தடியில் இங்கு பிள்ளையார் இருப்பது போல் அங்க்கு அரசமரத்தடி எல்லாம் புத்தரும் இருந்தார்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
மிக தாமதமான வருகை எனது..
பதிலளிநீக்குதாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்களும் மா..
மிக விருப்பமான திருக்கோவில் இங்கு மீண்டும் தரிசித்ததில் மிக மகிழ்ச்சி ...
வணக்கம் அனுராதா பிரேம்குமார் வாழ்க வளமுடன்.
நீக்குநீங்களும் இந்த கோயில் போய் வந்து பதிவு போட்டது நினைவு இருக்கிறது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள், கோமதிம்மா!
பதிலளிநீக்குஇந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். கோபுரம் வரை சென்று பார்க்க நேரமிருக்கவில்லை. மற்றொரு சமயம் கோவிலின் கோபுரத்தை ஹோட்டல் ஆர்த்தியின் முதல் தளத்திலிருந்து படமாக்கியிருக்கிறேன்.
பெரிய யானை ஒன்று உண்டே. அடுத்த பதிவில் வருமா?
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குபிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஸ்ரீராம் பின்னூட்டம், என் மறுமொழி எல்லாம் படித்தீர்களா?
நாங்கள் உங்களை நினைத்துக் கொண்டேதான் இருந்தோம்.
பழைய பதிவில் நீங்களும் குறிப்பிட்டு இருந்தீர்கள், ஸ்ரீராமும் அதை குறிப்பிட்டு இருந்தார்.
யானையை பார்க்கவில்லை. அடுத்த பதிவு போட்டு விட்டேன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி
நீங்கள் சொன்ன பிறகே ஸ்ரீராம் பின்னூட்டம் மற்றும் உங்களது மறுமொழியைப் பார்க்கிறேன்:). ஆம், ஸ்ரீராமுக்கு நல்ல நினைவாற்றல். தங்கள் மறுமொழிக்கும் நன்றி. அந்தப் படம் இந்தப் பதிவில் உள்ளது: http://tamilamudam.blogspot.com/2010/07/pit.html. பாயிண்ட் அன்ட் ஷூட் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்த காலம். அந்தக் கோவிலில் படமெடுக்க அனுமதி என அறியும் போது மீண்டும் செல்லும் ஆவல் எழுகிறது.
நீக்குஇங்கே பின்னூட்டம் இட்ட சில நிமிடங்களில் அடுத்த பதிவு வெளியாகி விட்டதைக் கவனித்தேன். பாம்புக்குக் கூட பயப்பட மாட்டேன் (உங்களுக்குதான் தெரியுமே.). ஆனால் யானை என்றால் பயம் உண்டு. பலமுறை கோவில் யானைகளைப் படமாக்கியிருக்கிறேன் என்றாலும் எல்லாம் ஒரு பாதுகாப்பான தொலைவில் இருந்துதான். நெல்லையப்பர் கோவிலில் கால்கள் கட்டப்பட்ட காந்திமதி யானையைக் கடக்கும் போது ஒவ்வொரு முறையும் வலப்பக்க நடைபாதையில் ஏறிதான் கடப்பேன். உடன் வருபவர்கள் சிரிப்பார்கள். சென்ற முறை கூடலழகர் கோவில் சென்றிருந்த போது பிரகாரத்தின் முனையில் சங்கலிகள் இல்லாமல் வெளியில் செல்லத் தயாராகி, கோவிலின் பிரமாண்டமான யானை நின்றிருந்தது. உள்ளூர் மக்கள் சாதாரணமாகக் கடந்து சென்று கொண்டிருக்க நான் கிலியோடு வேகவேகமாகக் கடந்ததை மறக்க முடியாது:).
உங்களின் அந்த யானை பயம் புன்னகைக்க வைக்கிறது ராமலக்ஷ்மி.
நீக்குநாலைந்து மாதங்கள் முன்பு எங்கள் திருமணம் நடந்த ஒப்பிலியப்பன் கோவில் சென்றிருந்தோம்.
என் மகன் அவன் டி எஸ் எல் ஆர் கேமிராவில் (உங்களுக்குத் தெரியும்) கோவில் யானை பூமாவை விழுந்து விழுந்து படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
எதிரில் நின்று நெருங்கியும் தூரமாக நின்றும்... அவன் கோணம் பார்க்க / படம் எடுக்க நிறைய நேரம் எடுப்பான். யானை இவனைப் பார்த்து கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் ஆனதுபோல எனக்குத் தோன்றியது.
மகனிடம் சொன்னேன். அவனும் அப்படி நினைத்திருந்திருப்பான் போல... எடுத்தவரை போதும் என்று வேகமாக வந்து விட்டான்!!!
வனக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குஸ்ரீராம், மற்றும் என் மறுமொழியை படித்து கருத்து சொல்ல வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுரை வாருங்கள் அழகாய் அழகனை படம் எடுங்கள்.
நம் ஊர் பக்கம் பாம்பு, தேள் கண்டால் சங்க்ரன் கோவில் கோமதி அம்மனை வேண்டிக் கொள்வார்கள். பயம் இருக்காது அதுதான் உங்களுக்கு பாம்பை கண்டு பயமில்லை போலும்.
யானை எங்கோ போய் விட்டது போலும் கோவிலில் பார்க்கவில்லை.
அடுத்த தடவை போனால் பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.பதிவை பார்க்கிறேன்.
ஸ்ரீராம் , இளகன்று பயமறியாது என்பார்கள்.மகன் பயமில்லாமல் போட்டோ எடுத்தவரை பயமுறுத்தி போதும் என்று வரவைத்துவிட்டீர்கள்.
நீக்குபக்கத்தில் பாகன் இருந்தார் தானே!
@நன்றி கோமதிம்மா. ஆம், முன்னர் சென்ற கோவில்களுக்கு மீண்டும் சென்று DSLR_ல் எடுக்கும் ஆசை உள்ளது.
பதிலளிநீக்கு@ஸ்ரீராம், யானையைப் பார்த்தால் எந்தப் புகைப்படக் கலைஞருக்கும் வளைத்து வளைத்து எடுக்கவே தோன்றும்:). பாதுகாப்பான தொலைவிலிருந்து.. என நான் நினைத்துக் கொண்டாலும் சென்ற முறை திருச்செந்தூர் கோவிலுக்கு வெளியே கூட்டத்தினரை ஆசிர்வதிப்பதில் மும்முரமாய் இருந்த யானையை தள்ளி நின்று நான் மும்முரமாய் படமாக்கினேன். ஆனால் யானையோ என் கேமராவையே உற்றுப் பார்த்திருந்தது பிறகுதான் புரிந்தது: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/22799386167/, https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/20477380516/. கூடுதல் கவனம் தேவை எனப் புரிந்தது.
உங்கள் மகன் எடுத்து வரும் படங்களை ஏதேனும் தனித் தளத்தில் சேமிக்கிறாரா? எங்கே பார்க்கக் கிடைக்கும்?
இல்லை பொது இடத்தில் எங்கும் பகிரவில்லை. கணினியிலேயே வைத்திருக்கிறான்.
நீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குமீண்டும் DSLR_ல் எடுங்கள் நாங்களும் ரசிப்போம்.
யானையை படம் எடுக்கும் போது கவனம் தேவைதான்.
அவன் இப்போது எதிலும் போடுவது இல்லை. நேரம் இல்லை என்கிறான்.
அவனிடம் கேட்டு சொல்கிறேன்.நீங்கள் கொடுத்த சுட்டிகளை பார்க்கிறேன்.
நன்றி மீள் வருகைக்கு.
ராமலக்ஷ்மி, நீங்கள் ஸ்ரீராம் மகனை கேட்டதை இப்போது தான் பார்த்தேன், (ஸ்ரீராம் பதில் அளித்தபின் தான் )
நீக்குசரியாக பார்க்காமல் கேள்விக்கு நான் பதில் அளித்து இருக்கிறேன்.
கேமிரா வாங்குவதற்கு முன் ஸ்பெஷலிஸ்ட் ராமலக்ஷ்மியிடம் என்ன கேமிரா வாங்கலாம் என்று யோசனை கேட்டிருந்தேன். வாங்கிய பின்னும் அவர் என் மகனுக்கு சிலபல டிப்ஸ்கள் வழங்கினார். அதுதான் அந்தக் கேள்வி கோமதி அக்கா. பரவாயில்லை. ஒரு கேள்விக்கு இரண்டு பேர் பதிலளிக்கலாமே!
நீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குவிவரம் அறிந்து கொண்டேன்.
மீண்டும் வந்து பதில் சொன்னதற்கு நன்றி.
(தேதிப்படி) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கோமதி அக்கா.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி.
பரவாயில்லை கோமதிம்மா. ஸ்ரீராம் சொன்னது போல நீங்களும் பதில் தரலாமே. உங்கள் பகிர்விலும் சில தகவல்கள்:).
பதிலளிநீக்குஓ என் பதிலும் தகவல் இருக்கே!
நீக்குஉங்களை படம் எடுத்து தர சொல்லி இருக்கிறேன்.
@ஸ்ரீராம்,
பதிலளிநீக்குFlickr, Instragram அல்லது Facebook_ல் தனிப்பக்கம் உருவாக்கி தேர்ந்தெடுத்த படங்களை
அவ்வப்போது நேரம் கிடைக்கையில் பகிர்ந்து வரலாமே. அப்படி செய்வாரானால் அப்போது லிங்க் கொடுங்கள்.
ராமலக்ஷ்மியின் யோசனை நன்றாக இருக்கிறது.
நீக்குமகனை ஊக்கப்படுத்துங்கள் ஸ்ரீராம்.
ஸாரி சகோதரி/கோமதிக்கா
பதிலளிநீக்குதாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.படங்கள் எல்லாம் அழகு!
துளசிதரன், கீதா
கீதா: படங்களில் அந்த சயனப் பெருமாள் ரொம்ப அழகு..
கூடலழகர் கோயில் போயிருக்கிறேன் பல வருடங்களுக்கு முன். நூபுரகங்கை எல்லாம் அதுவும் கொஞ்சம் மலைப்பாதையில் நடந்து...நேச்சுரலாக ஒரு மரத்தின் வேரிலிருந்து வரும் இடம் வரை சென்று...
படங்கள் எல்லாம் வெகு அழகு. அழகர் தோசை கிடைக்கலையா இல்லை அதைத்தான் அடை தோசைனு சொல்லிருக்கீங்களாக்கா..நாங்களும் சாப்பிட்டிருக்கோம் அக்கா செமையா இருக்கும்...
இதோ அடுத்த பதிவுக்கு....
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்.
நீக்குவாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன் .
மருத்துவ மூலிகைகளால் ஆனவர் சயனபெருமாள் காலம் கடந்தும் வண்ணம் மாறாமல் இருப்பது சிறப்பு.
நீங்கள் சொல்வது அழகர் கோவில்.
இது கூடல் அழகர் கோவில்.
தோசையை எண்ணெயில் போட்டு எடுப்பதால், அதில் சேர்த்துள்ள சில பொருடகளாலும் அடை தோசை எங்கிறார்கள்.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.
நீங்க சொல்வது அழகர்கோயில் கீதா. அங்கே தான் நூபுரகங்கை. மலைக்கோயில். சுந்தரராஜப் பெருமாள். கள்ளழகர். இது நகருக்குள் இருக்கும் கோயில். கூடல் நகருக்குள் இருப்பதால் கூடல் அழகர் கோயில், பெரியாழ்வார் பல்லாண்டு பாடியது இவருக்குத் தான்! தீர்த்தம் க்ருதமால் நதி! இப்போது ஓர் குட்டையாகக் காட்சி
நீக்குஅளிப்பதாகச் சொன்னார்கள். இந்தப் பெருமாள் கோயில் தெப்பக்குளம் டவுன் ஹால் ரோடில் இருந்தது. மேற்கு கோபுரத்தில் இருந்து டவுன் ஹால் ரோடில் நேரே போனால் இடப்பக்கம் தெப்பக்குளம். அப்போவே பலத்த ஆக்கிரமிப்பு. சுற்றிலும் கடைகள், சென்னை மயிலைத் தெப்பக்குளத்தைச் சுற்றி இருப்பது போல். ஒரு பக்கம் ஆர்.சி. ரோசலின் சர்ச் அதைச் சார்ந்த பள்ளி! தெப்பக்குளத்தில் பெருமாள் உலா வந்து நான் பார்த்ததே இல்லை! :(
கீதா ரெங்கன் அடுத்த பதிவு கூடலழகரை படித்து விட்டு இரண்டையும் குழப்பிக் கொண்டேன் சொல்லி விட்டார்கள்.
நீக்குஅடுத்த பதிவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் எல்லாம் விவரமாய் எழுதி விட்டேன் அதை படித்தவுடன் நினைவு வந்து சொல்லி விட்டார்கள்.
நானும் தெப்பக்குளம் பார்த்தது இல்லை, ஒரு நாள் போய் பார்க்க வேண்டும்.
இப்பவும் கோவிலை சுற்றி நெருக்கடித்தான்.
மீண்டும் வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.