மனிதர்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவது பிறந்த நட்சத்திரம் வைத்து. கடவுளர்களுக்குத் திதியை வைத்து. ஆவணி சதுர்த்தி -பிள்ளையார் பிறந்த நாள். இப்படி இன்று காலையில் தொலைக்காட்சியில் 'இன்று நாள் எப்படி' என்று சொல்பவர் சொன்னார். பிள்ளையார் பிறந்தநாள் மிகச் சிறப்பாய்க் கோலாகலமாய்க் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாதையோரம் இரட்டைப் பிள்ளையார்
திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் ஒரு கோவிலில் இருந்த பிள்ளையார்
‘பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்கடி கணபதி வர அருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை இறையே’
அமெரிக்காவில் (லாஸ் ஏஞ்சல்ஸ்) ஒரு வடநாட்டு உணவகத்தில்
தங்கை வீட்டு பிள்ளையார் கொலு. பத்து நாள் கொலுவீற்று இருப்பார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதம். நாங்கள் போன அன்று தேங்காய் பூரணம் வைத்த மோதகம், தேங்காய் வர மிளகாய் அரைத்துப் போட்டு தாளிதம் செய்த சின்ன காரக்கொழுக்கட்டை, வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் என்று பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து விட்டு எங்களுக்குத் தந்தாள். பிரசாதம் சுவையாக இருந்தது.
எங்கள் வீட்டு பிள்ளையார் -
எங்கள் வீட்டுப் பிள்ளையார்கள்
பிள்ளையார் சதுர்த்தி அன்று எத்தனை பிள்ளையார் பார்த்தோம் என்று முன்பு சிறு வயதில் கணக்குப் பார்ப்போம்.
பிள்ளையார் நேற்று வந்து கோவிலில் இறங்கி இருக்கிறார். பக்கத்தில் இருக்கும் இடங்களில் வைப்பார்கள். அதுவரை முகத்தை மூடி வைத்து இருக்கிறார்கள். இன்று போய் பார்க்க வேண்டும்.
திருச்செந்தூர் போனபோது - தூண்டு விநாயகர், மிகவும் பழமை வாய்ந்தவராம், பக்கத்தில் லிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிலை.
மாயவரத்தில் இருக்கும் போது மாயவரத்து நண்பர்கள் கொலுவிற்கு கொடுத்த பொம்மைகள் அவற்றைக் கொலுப் பெட்டியில் இடம் இல்லாத காரணத்தால் முன் வாசலில் அலங்காரமாய் வைத்து இருந்தேன். மாயவரத்திலிருந்து சாமான்களை ஏற்றியவர்கள் இந்த பொம்மைகளை சரியாகச் சுற்றி வைக்கவில்லை அதனால் இந்த பொம்மைகள் உடைந்து விட்டது , பிள்ளையார், யானைகள், குபேர பொம்மை உடைந்து விட்டது. அதைத் தந்தவர்களின் நட்பு முகம் நினைவில் பத்திரமாய் இருக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஜனவரி 1 ம் தேதி போவோம் ,மாயவரத்தில் இருக்கும் போது. அங்கு கடைத்தெருவில் பொம்மைகள் விற்பனை. பிள்ளையார் பொம்மைகள் இருப்பதைத் தேடிப் பாருங்களேன்.
இந்த சர்வசித்தி விநாயகர் கோவிலில் இரட்டைப் பிள்ளையார் இருக்கிறார்கள். பிள்ளையாருக்குப் பின் புறம் அரசமரத்தில் சுயம்புவாய் பிள்ளையார் உருவங்கள் கீழே-
அரசமரத்தை வெட்டாமல் அதைச் சுற்றி கோவில் கட்டி இருக்கிறார்கள். இரட்டைப் பிள்ளையாரின் பின்புறம் அரச மரத்தில் பிள்ளையார் முகம் தெரிகிறது.
பக்கவாட்டில் ஒரு கண் மட்டும் தெரிகிறது.
காலையில் விருந்தினர் வருகை. பிள்ளையார் சதுர்த்தி இந்த முறை இல்லை என்பதால் தங்கை பிரசாதங்கள் செய்து கொண்டு வந்தாள். நான் வீட்டில் காலை உணவாய்ப் பிடி கொழுக்கட்டை செய்து இருந்தேன். எப்போதும் போல் இறைவனுக்கு நிவேதனம் செய்து விட்டு காக்காவிற்குக் கொடுத்து விட்டேன்.
பழங்கள், அவல்,பொரி,கடலை , வெல்லம் அவருக்கு இந்த முறை.
எனக்குப் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும் கேட்டுப் பாருங்கள்.
விநாயகர் போற்றிகள்.
ஓம் அகரமென நிற்பாய் போற்றி !
ஓம் அருகு சூடிய அமலா போற்றி!
ஓம் ஆனைமுகத்தனே போற்றி!
ஓம் உண்மையருள் உள்ளொளியே போற்றி.
ஓம் ஐந்து கரத்தனே போற்றி!
ஓம் கற்பக விநாயகா போற்றி!
ஓம் நர்த்தன விநாயகா போற்றி!
ஓம் சங்கத் தமிழ் தருவாய் போற்றி!
ஓம் வைத்த மாநிதியே போற்றி போற்றி!
அனைவரும் விநாயகரைப் போற்றி அருள்பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------============================
படங்கள் ஸூப்பர் சகோ இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி.
அழகான படங்கள்.. ஆனை முகனின் இனிய தரிசனம்...
பதிலளிநீக்குநானும் இப்போது தான் ஸ்வாமி கும்பிட்டேன்...
பாகு கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, தேவ மனோகரம், அவல் பொரி சர்க்கரை , பால், பழங்கள், பழச்சாறு, மோர், இளநீர் - என வழிபாடு நடந்தது...
இந்த முறை செவ்வரளிப் பூக்களும் வில்வமும் கிடைத்தன...
இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்... பிரசாதங்களை உண்பதற்கு ஆளில்லை..
எல்லாம் அவன் செயல்... எந்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டதாக இருந்தது...
வாழ்க நலம்..
வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்கு//பாகு கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, தேவ மனோகரம், அவல் பொரி சர்க்கரை , பால், பழங்கள், பழச்சாறு, மோர், இளநீர் - என வழிபாடு நடந்தது...//
அருமையான பிரசாதங்கள். பிள்ளையார் விரும்பி சாப்பிட்டு இருப்பார்.
//எல்லாம் அவன் செயல்... எந்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டதாக இருந்தது...//
அன்புடன் நாம் எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்.
அங்கு வில்வம் கிடைத்தது மிக சிறப்பு.
எனக்கும் வில்வம் தம்பி வீட்டில் வைத்து இருக்கிறான் கொடுத்தான்.
பூக்கார அம்மா பலவித பூக்கள் கொடுத்தார்கள்.
இறைவன் அருளால் உங்களுக்கு பிரசாதங்கள் செய்ய நேரம் கிடைத்து இருக்கே !
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅழகான பிள்ளையார் படங்கள். இரட்டை பிள்ளையாரிலிருந்து துவங்கி, திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் இருக்கும் பிள்ளையார், அமெரிக்கா உணவகத்தில் ஜம்மென்று அமர்ந்திருக்கும் பிள்ளையார், உங்கள் தங்கை வீட்டு கொலு பிள்ளையார், உங்கள் வீட்டில் அழகாய் ஞானப்பழம் பெற்ற பிள்ளையார். உங்கள் வீட்டிலும் கொலுவாய் அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள், விற்பனைக்கு வைத்திருக்கும் பளிங்கு செட்டியார் பொம்மைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் பிள்ளையார்கள்,உத்திர காசியில் கோபுர வாசலில் இருக்கும் பிள்ளையார், சர்வ சித்தி விநாயகர் கோவிலில் இருக்கும் இரட்டை விநாயகர் அரச மரத்தில் இருக்கும் பிள்ளையார் என அனைவரையும் தரிசித்துக் கொண்டேன்.நன்றி.
அசர மரத்தில் அழகான பிள்ளையார் உருவம் தெரிகிறது. கூடவே அழகிய ஒரு கண்ணும், குவிந்த இதழ்களும் தெரிகிறது.
உங்களுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்தமானது. முழுவதும் கேட்டு ரசித்தேன். சீர்காழியின் கம்பீரமான குரலில் விநாயகர் பாடல்கள் கேட்க மனதிற்கு நன்றாக இருக்கும்.
விநாயக சதுர்த்தியன்று குறைந்தது எட்டு பிள்ளையார்களை தரிசிக்க வேண்டுமென்பார்கள். தங்களுடைய பதிவில் அதை நிறைவேற்றிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
அனைத்து பிள்ளையாரையும் தரிசனம் செய்தது அறிந்து மகிழ்ச்சி.
சீர்காழி அவர்களின் பாடலை கேட்டதற்கு நன்றி .
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அரசமர சுயம்பு பிள்ளையார் அற்புதம்.
பதிலளிநீக்குஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குகருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் ந்னறி.
படங்கள் அற்புதம்....
பதிலளிநீக்குஇனிய பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துகள் அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
சுயம்பு பிள்ளையாரைப் பார்த்ததும் ஆங்கிலத்தில்சொல்லப்படும் ஒரு வக்கு நினைவுக்கு வந்தது the clock clicketh as the fool thinketh
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குவானத்தில் மேக கூட்டங்களில் அவர் அவர் நினைப்புக்கு ஏற்றார் போல் உருவம் தெரியும் அதை பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி உனக்கு தெரிகிறதா அது
போல் என்று கேட்பது போல்தான் இந்த மரத்திலும் ஒருவருக்கு தெரிந்து இருக்கு.
அவர் அதை சொல்லி இருக்கிறார்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஒ
குறிப்பிட்ட வாக்கு எந்த தவறான புரிதலையும் தரக் கூடாது என்று வேண்டுகிறேன்
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன சகோதரி. கலெக்ஷனும் அருமை. விநாயகரின் அருள் எல்லோருக்கும் கிட்டிட பிரார்த்தனைகள்
பதிலளிநீக்குகீதா: துளசியின் கருத்துடன்...கோமதிக்கா பிள்ளையார் ரொம்ப அழகா இருக்கார். உங்கள் தங்கை வீட்டு பிள்ளையார் கொலு ரொம்பவே அழகு. நானும் தேங்காய் வரமிளகாய் அரைத்து பூரணம் வைத்துச் செய்வதுண்டு உப்புக் கொழுக்கட்டை/மோதகம்....
10 நாட்கள் கொண்டாடுகிறார்களா அட! இப்போதுதான் கேள்விப்படுகிறேன் அக்கா...
வாழ்த்துகள். பிள்ளையார் எல்லோருக்கும் நல்லது அருள் புரியட்டும்.
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
அவள் மூன்று வருடமாய் வைத்துக் கொண்டு இருக்கிறாள்.
நீங்கள் எங்கள் பக்கத்துகாரர் தானே! சமையலும் அது போல செய்வதில் ஆச்சரியம் இல்லை .
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அன்பு கோமதி. அருமையான தரிசனம். சுயம்பு பிள்ளையார் மன்சுக்கு இதம். தங்கச்சி வீட்டு கொலு அழகு. எத்தனை அக்கறையாக பிரசாதம் செய்கிறார்கள். வாழ்க வளமுடன்.
நீக்குபிள்ளையார் உலகம் சுற்றியது ஒரு புறம். நீங்கள் அத்தனை பிள்ளையார்களையும் சுற்றிப் படம் எடுத்து எங்களுக்குக் காணக் கொடுத்தீர்கள்.
மிக மிக இதம்.அன்புத் தங்கைக்கு வாழ்த்துகள்.மா.கோமதி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
படங்கள் சேகரிப்பிலிருந்து போட வாய்ப்பு அதை பயன்படுத்திக் கொண்டேன்.
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வட ஆற்காடு மாவட்டத்தில் வரலக்ஷ்மி விரதத்தில் ஆரம்பித்துப் பிள்ளையார் சதுர்த்தி வரை கொண்டாடுவார்கள் அவர்களும் பிள்ளையார் கொலு வைப்பார்கள். பிள்ளையார் விஸர்ஜனத்துடன் சேர்த்து அம்மாவையும் கூடவே அனுப்பி வைப்பதாகச் சொல்லி அப்போத் தான் வரலக்ஷ்மி அம்மனையும் அனுப்பி வைப்பார்கள். மிக அருமையான கொலு. முகநூலிலும் பார்த்தேன். அரசமரத்து சுயம்பு விநாயகரும் நன்றாக இருக்கிறார். மாயவரத்தில் இருந்து திருக்கடையூர் போகும் வழியில் ஆறுபாதி (விளநகரில்) சாலையிலே உள்ள ஓர் மரத்தில் இப்படித் தான் ஸ்வாமி உருவம் ஒன்று தெரிந்ததைத் தனியாகக் காட்டி இருந்தார்கள். சில வருடங்கள் ஆகிவிட்டபடியால் எந்த ஸ்வாமி என நினைவில் இல்லை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குஎங்கள் பக்கத்து வீட்டில் ஆரிய வைசியர் குடும்பம் இருந்தார்கள். அவர்கள் கெளரி பண்டிகை என்று கொண்டாடுவார்கள் அம்மனை மஞ்சளில் செய்து வைப்பார்கள். நிறைய இனிப்புகள், நவதானிய சுண்டல் எல்லாம் செய்து எல்லார் வீடுகளுக்கும் கொடுப்பார். அடுத்து பிள்ளையார் வருவார் அவரையும் அம்மனையும் சேர்த்து வழி அனுப்புவார்கள்.
அவர்கள் இப்போது ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார்கள். வரசொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஸ்ரீரங்கம் வந்த புதிதில் வந்தேன் அவர்கள் வீட்டுக்கு. அப்போது நீங்கள் சென்னையில் இருந்தீர்கள்.
ஆறுபாதியிலா எனக்கு தெரியவில்லையே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அழகு.
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் - சற்றே தாமதமாக....
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் கோமதி அக்கா... அழகிய படங்கள்.. நான் தான் வரத் தாமதமாகிட்டுது.
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
என்னாது இரட்டைப் பிள்ளையாரோ? உமா ஆன்ரிக்கு டெலிவரி பார்த்த டொக்டர் சொல்லியிருப்பாரோ?:).. அப்போ அந்த இரட்டையில் மற்றவர் எங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ?:)..
பதிலளிநீக்குஎன்ன அதிரா இந்த குழப்பம். அதுதானே இது என்று சொல்ல வேண்டுமோ!
பதிலளிநீக்குஉமா ஆன்ரிக்கு டெலிவரி எல்லாம் கிடையாது தன் உடம்பில் உள்ள மஞ்சளை உருட்டி எடுத்து பிள்ளையார் செய்து விட்டார்.
முருகன் சிவனின் சக்தியாக அவரின் நெற்றி கண்ணிலிருந்து வந்த நெருப்பு பொறியில் தோன்றி விட்டார்.
உமா ஆன்ரி வளர்க்கவும் கஷ்டபடவில்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அனைத்து படங்களும் அழகு மா..
பதிலளிநீக்குவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.