சனி, 31 டிசம்பர், 2022

அருள்மிகு பூதநாயகி அம்மன் திருக்கோயில்


பூதநாயகி அம்மன் விமானம்


மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் உள்ள  பூதநாயகி அம்மன் கோயில்

வெள்ளி, 30 டிசம்பர், 2022

விராலிமலை சண்முகநாதர்




டிசம்பர் 12ம் தேதி வங்கி வேலையாக மாயவரம் போக வேண்டிய வேலை அப்படி போகும் போது மகன் கூகுள் மூலம்  தேர்வு செய்த  சில கோவில்கள் சென்றோம். முதலில்  துவரங்குறிச்சியில் இருந்த  ஸ்ரீ வெள்ளை விநாயகரை தரிசனம் செய்தோம்.

திங்கள், 26 டிசம்பர், 2022

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்



  

பெரிய கிறிஸ்துமஸ் மரம் இரவு ஒளி விளக்கில் மின்னும்


தாத்தா தங்கி இருக்கும் வீடு வருட வருடம் மக்கள் அவருடன் படம் எடுத்துக் கொள்ள பணம் கட்டி முன்பதிவு செய்து கொள்வார்கள். மகனும் முன்பதிவு செய்து இருந்தார். நாங்கள் மூன்றாவது குடும்பம் மதியம் 12 மணிக்கு போய் இருந்தோம்.
இந்த வருடம்  பேரன்கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் எடுத்துக் கொண்ட படம் நாங்களும் எடுத்துக் கொண்டோம்.
முன்பு போட்ட பதிவு (2018 ல் கிறிஸ்துமஸ் விழா பற்றி விரிவாக)
சிறியவர் , பெரியவர் அமர்ந்து வலம் வர குட்டி ரயில் . எல்லோரையும் மகிழ்விக்கும் ரயில் பயணம். ரயில் ஓட்டியவர் மிக உற்சாகமாய் கிறிஸ்மஸ் பாடல்களை போட்டு ரயில் ஓட்டுவதில் வட்டங்கள் எல்லாம் போட்டு மிக அருமையாக ஓட்டினார்.






கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வந்து இருக்கும் குழந்தைகள்.  ஒரு குழந்தை குழந்தை பொம்மையை தூக்கி கொண்டு வந்தாள்.

ஒரு அம்மா தன் குழந்தையை தூக்கி காட்டி படம் எடுக்க அனுமதி கொடுத்தார்கள். அழகு குழந்தைகள் புல்வெளியில் விளையாடியது  பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

கிறிஸ்துமஸ் என்றதும் குழந்தைகள் விரும்புவது சாண்டாகிளாஸ் வருகை, அவர் தரும் பரிசு. அவர் என்ன பரிசு வேண்டும் என்று குறித்து கொள்வார். அதை மருமகள் வாங்கி வைத்து காலை இன்ப அதிர்ச்சி தருவார் பேரனுக்கு. இந்த முறை எங்களுக்கும் தாத்தா நிறைய பரிசுகள் கொடுத்ததாக கொடுத்தார்.

மகன் வீட்டு அலங்காரம். முன் வாசலில்

கிறிஸ்துமஸ் தாத்தா  எல்லோருக்கும் பரிசு கொடுத்து மகிழ்வாக்கினார் ஏசு பிறந்த தினத்தில். கொடுப்பது யார் என்று தெரியாமல் ஏழை எளியவர் , வயது முதிர்ந்தோர்ம் முடியாதவர்கள் என்று அனைவர்  வீட்டு வாசலில், சிம்னி வழியே பரிசுகளை போட்டு செல்வார்.  

மாலையில் வீட்டில்  கிறிஸ்துமஸ் விருந்து.  கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து கடிதம் வருவது போல பேரன் செய்து வைத்து இருந்த  கடிதங்களை குழந்தைகளுக்கு கொடுத்தான் பேரன்.

கிறிஸ்துமஸ் மரத்திற்கு கீழ் குழந்தைகளின் பெயர் எழுதி பரிசு பொருட்கள் வைத்து இருந்தார் மருமகள்.

விடுமுறை நாளில் சந்தித்து மகிழ ஒரு நாள். இந்தியாவிலிருந்து வந்த பெற்றோர்களுடன்  நண்பர்கள் வந்தார்கள். சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை மிகவும் மகிழ்வாக போனது நாள். பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த சந்திப்பு.

மருமகள் விளையாட்டு போட்டிகள் வைத்து இருந்தார். குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல் போட்டியில் அவர்களுக்கு கொடுக்க பட்ட சீட்டில் அவர்கள் வரைய வேண்டியது இருக்கும். அவர்கள் வரைய ஆரம்பிக்கும் போதே நாம் என்ன வரைகிறார்கள் என்று கண்டுபிடித்து சொல்லி விட்டால் மகிழ்ச்சி ஆரவாரம். வரைந்த குழந்தைகளுக்கு சிறு பரிசுகள் உண்டு.

அடுத்து பெரியவர்களுக்கு  கொடுக்கபட்ட  சீட்டில்  உள்ள பாட்டுக்கு மெளனமாய் உடல் மொழியால்  அவர்கள் உணர்த்த அந்த பாடலை நாம் கண்டு பிடிக்க வேண்டும். இரண்டு குழுவாக பிரிந்து (ஆண், பெண்) ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

பழைய, புது பாடல்கள் இடம்பெற்றன.எல்லோரும் சிறப்பாக செய்தார்கள். "தை பிறந்தால் வழி பிறக்கும்" பாட்டுக்கு மருமகளின் தோழி நன்றாக நடித்து காட்டினார், மருமகளும் அந்த பாடலுக்கு நன்றாக நடித்து காட்டினார்.

"நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்" என்ற பாடலுக்கு மகனின் நண்பர் நன்றாக நடித்து காட்டினார்.

புது பாடலுக்கும் நன்றாக நடித்தார்கள்.

எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கிய  புகழ்பெற்றவர்களை கண்டு பிடித்தல் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மருமகள். அன்னை தெரசா அவர்களை கண்டு கொள்ள அவர்(பெறுவதை, கொடுப்பதை) மற்றவர்களிடம் பெற்று கொடுப்பதை அழகாய் நடித்து காட்டினார்கள். அப்துல்கலாம் அவர்களை மிக எளிதாய் கண்டு கொள்ளும் படி நடித்தார் ஒரு நண்பர்.

பேரன் நேரம் , மற்றும் மதிப்பெண் கொடுப்பதை பார்த்து கொண்டான்.

அதன் பின் உணவு. நட்புகள் ஒவ்வொருவரும் சில அயிட்டங்கள் செய்து கொண்டு வந்தார்கள். மருமகளின் அம்மா மல்லிகைப்பூ இட்லி , தேங்காய் சட்னி, மருமகள் இட்லி சாம்பார். மகன் மற்றும் சப்பாத்தி செய்யும் மெஷினில் சப்பாத்தி செய்தார். அதற்கு பனீர் குருமா மருமகளின் தோழி கொண்டு வந்தார். முதலில் ஆரம்பிக்க  வேர்க்கடலை  சாட் மசாலா. கொய்யா ஜூஸ்  , சிப்ஸ் ஏற்பாடு செய்து இருந்தார்.

நான் கூடமாட ஒத்தாசை செய்தேன்."ஜெட்லாக்" என்று என்னை ஓய்வு எடுக்க சொன்னார்கள்.


நண்பர்கள் வீடுகளிலிருந்து  மேக் அன் சீஸ் ,  சாபுதானா கிச்சடி, வெஜ்பிரியாணி, தயிர்வெங்காயம், சம்பா அரிசி புட்டு,  குலோப்சாமூன் என கொண்டு வந்தார்கள். அனைவரும் உரையாடி உண்டு மகிழ்ந்தனர். படத்தில் என்ன கொஞ்சமாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள், உங்களுக்கு அனைத்தையும் காட்ட கொஞ்சமாக வைத்து காட்டி இருக்கிறேன்.


அதன் பின் மகன் வாங்கிய  பெரிய சாக்லேட் பாரை வெட்டுதல். மருமகளின் தோழி செய்து கொண்டு வந்த  கேக் வெட்டுதல்  நிகழச்சி.

எல்லோரும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை நினைவில் வைத்துக் கொள்ள படம் எடுத்துக் கொண்டோம்.  இந்த முறை நாலு குடும்பம் தான். மற்றவர்கள் இந்தியா சென்று இருக்கிறார்கள் விடுமுறைக்கு.

 நேரம் போனதே தெரியாமல்  உரையாடி, விளையாடி மகிழ்ந்த குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

--------------------------------------------------------------------------------------------------------

சனி, 24 டிசம்பர், 2022

மலர் கோலங்கள்

மலர் கோலங்கள். 2021 ம் வருடம்  மே மாதம் மகன்  வீட்டு  தோட்டத்தில் அரளி செடிகளில்    அரளி பூக்கள் கொஞ்சம் பூத்து இருந்தன . இருக்கும் மலர்களை  வைத்து  மலர் கோலம் போட்டேன், கிண்ணத்தில் மலர் அலங்காரம் செய்தேன். அவைகளின்  தொகுப்பு இங்கே.

திங்கள், 21 நவம்பர், 2022

கருங்குருவிகள் கச்சேரி


இரண்டு நாள் முன்பு எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு கருங்குருவிகள் வந்தன.  (எட்டு பறவைகள் வந்தன, நாலு ஜோடிகள்.)

இரண்டு இரண்டாய் நின்று கொண்டு கத்தி கொண்டு இருந்தன. என்ன பேசி இருக்குமோ! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

பாட்டுக்கு பாட்டு  எதிர் பாட்டு  பாடின. அந்த காணொளிகளும் படங்களும் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

திங்கள், 14 நவம்பர், 2022

அரிசோனா தமிழ்ச் சங்க ஆண்டு விழா !



 


30 ஆண்டுகளாக அரிசோனா தமிழ்ச் சங்கம் சிறப்பாக  நடந்து வருகிறது. நவம்பர் மாதம் 13 ம் தேதி  30 வது ஆண்டு விழா    ஞாயிறு அன்று  சிறப்பாக  நடைபெற்று இருக்கிறது.


இன்று குழந்தைகள் தினத்தில் பேரன் மற்றும் பல குழந்தைகள் பங்கு பெற்ற பாரத விலாஸ் என்ற சிறப்பு  நிகழச்சி படங்களை மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
குழந்தைகளை வாழ்த்துங்கள்.

வெள்ளி, 4 நவம்பர், 2022

இயற்கை செழித்தால் உயிர்கள் செழிக்கும்



மழை பெய்து மரங்களும், செடி, கொடிகளும் செழிப்பாக வளர்ந்தவுடன் பறவைகள்   நிறைய வருகிறது.
பறவைகளுக்கு பிடித்த சூழல் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பதிவில் குருவிகள் மற்றும்  புல் புல் பறவைகள், ஆண் குயில்   இடம்பெற்று இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------





இரண்டு வித குருவிகள் இருக்கிறது

நிறைய கூட்டமாய் மரக்கிளை முழுவதும் அமர்ந்து இருந்தது, நான் படம் எடுக்கும் போது கொஞ்ச குருவிகள்தான் இருந்தது.

என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது இந்த மரம். பறவைகளை ஓரளவு ஜூம் செய்து எடுத்து இருக்கிறேன்.




புல் புல் பறவைகள்



புல் புல், குருவிகள், கருங்குயில் (ஆண் குயில்)
ஆண்குயில்
இயற்கை செழித்தால் உயிர்கள் செழிக்கும்  .

எங்கள் குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் காலி மனையில்  முன்பு இருந்த மரங்களை , செடி, கொடிகளை அழித்த போது பறவைகள் வரத்து குறைந்து விட்டது. மரங்களை அழிப்பதை படம் எடுத்து முன்பு பதிவு  போட்டது நினைவு இருக்கும்.

 இப்போது மழை பெய்து காலி மனையில் மீண்டும் செடி, கொடிகள் துளிர்க்க ஆரம்பித்தவுடன் பறவைகள் வரத்து அதிகமாகி விட்டது.
 
//இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் //

"கவலை இல்லா மனிதன்"  படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலில் சந்திரபாபு இப்படி  பாடி இருப்பார்.

மழை பெய்து துளிர்த்து இருக்கும் புற்கள்.

புற்களை படம் எடுக்கும் போது இரட்டை வால் குருவி(கரிச்சான்) வந்து அமர்ந்தது சரியாக விழவில்லை படத்தில்

புள்ளிச் சில்லை பறவைக்கும், திணைக்குருவிக்கும் கூடு கட்ட பசும்தளைகள் கிடைக்கிறது, அதற்கு உணவு கிடைக்கிறது, அதனால் கூட்டம் கூட்டமாய் வருகிறது. இந்த புற்களைதான் எடுத்து வரும் கூடு கட்ட. கதிர் போன்றவைகளை கொத்தி தின்னும்.

இந்த மரம் எங்கள் குடியிருப்பை கட்டி கொடுத்தவர் வீட்டு தோட்டத்தில் இருக்கும் மரம். பறவைகளுக்கு பிடித்த மரம்.

முன்பு கோயில்களில், மசூதிகளில் கொண்டு போய் தானியங்களை கொடுத்து வருவார்கள் பறவைகளுக்கு உணவாக.

தினதந்தியில் படித்த செய்தி. (பழைய செய்தி 7 வருடங்களுக்கு முன்பு எடுத்து வைத்து இருந்தேன்) மாநகராட்சி பூங்காவில் பறவைகளுக்கு உணவாக  உலர் தானியங்கள் வைக்க இடம் ஒதுக்கி இருப்பது பற்றி படித்தது.



//உலர் தானியங்கள்’

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மூதாதையர்கள், இறந்தவர்கள் நினைவாக திதி கொடுப்பவர்கள் மொட்டை மாடி, சாலையோரம் உள்பட பல்வேறு இடங்களில் வைத்து பறவைகளுக்கு உணவு அளித்து வருகிறார்கள். பறவைகளுக்கு உணவளிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பூங்காக்களில் ‘உலர் தானியங்கள்’ போடுவதற்காக தனியாக இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் பறவைகள் விரும்பி சாப்பிடும் கம்பு, தினை, சாமை, அரிசி, நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், நவ பருப்பு வகைகள் பொதுமக்கள் போடலாம். சாதம் உள்ளிட்ட சமைத்த உணவு பொருட்கள் வைக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.//

இப்படி செய்வது நல்லதுதான்.

கோவையில் இருக்கும் தோழி நேற்று பேசி கொண்டு இருந்தார், அவர் சென்னைக்கு மகன் வீட்டுக்கு தீபாவளிக்கு போய் விட்டு திரும்பிய போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சொன்னார்.

அவர் இருக்கும் குடியிருப்பில் அதை பராமரிப்பவர் (புதிதாக வந்து இருப்பவர்)  குடியிருப்பில் வசிப்பவர்கள் வைத்து இருக்கும்  வாழை மரம், துளசி, ஓமவல்லி எனறு அனைத்தையும் அழித்து விட்டு ஒன்று போல குரோட்டன்ஸ் தொட்டிகளை வைத்து விட்டாராம்.  அப்போதுதான் குடியிருப்பு பார்க்க அழகாய் இருக்கும் என்று.

தோழி ஒரே புலம்பல் வாழைமரம் புலம்புவது போல எழுதி அனுப்பினார் எனக்கு.  குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வளவு பயனாக இருந்தேன் என்று புலம்பியது வாழை.

 வெட்டபடும் மரங்களும் செடிகளும் இப்படித்தான் அவர் சொல்வது போல புலம்பும் என்று நினைத்து கொண்டேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

வெற்றி வேல்! வீர வேல்!

 

கந்தவேள் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

முருகனை சிந்திப்போம்-  பகுதி 6


ஆறுபடை வீடுகள் 

கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று
 6 வது நாள் .
பழனி ஆண்டவர்

காலம் காலமாய் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து
 கொண்டு தான் இருக்கிறது. முடிவில் நல்லது வெற்றிபெறும். தீயவை 
அழியும் என்பது நீதி.  அதுதான் கந்த சஷ்டி விழா நமக்கு உணர்த்தும் பாடம்.
சிவபக்தனாக இருந்தாலும் ஆணவத்தால் பாலகன் என்று ஏளனம்
 புரிந்து அவரை எதிர்த்து யுத்தம் புரிந்து, உடல் பிளவுபட்டு ஒரு பாதி
 சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறினாலும் முருகனை
 எதிர்த்து போர் புரிந்தான், அவைகள் மீது திருநோக்கம் (அருள் பார்வை)
செய்து சாந்தப்படுத்தித் தஞ்சம் அடைய வைத்துச் சினம் கொண்ட 
சேவலையும்,செருக்குற்ற மயிலையும் தன்னிடம் பற்றுக் கொண்ட
 ஞானியாக மாற்றினார் முருகன்.

பகைவனுக்கும் அருளிய கருணை வள்ளல். சேவலைத் தேரில் 
கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.


வெற்றி வேல் வீரவேல் 

தாரகாசுரன்  (மாயை)

சிங்கமுகாசுரன்  (கன்மம்)
சூரபத்மன் (ஆணவம்)

சுற்றி நிற்காதே பகையே துள்ளி வந்த வேல்  சூரபதுமனை
 வீழ்த்திய காட்சி



சூரபதுமனின் உடல் சேவலும், மயிலுமாக ஆனது 
ஞானமே வடிவானது சேவல்., மயில்

கடல் அலை போல் பக்தர்கள்  தலைகள்.

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 


ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்

மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 


தெய்வம் உண்டு தெய்வம் உண்டு 
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு 
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு 
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு 
கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும் 
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்.
..


//அடியேன் நினைத்தது : ஒரு சினிமா பாடல்... ஜானகி அம்மாவின் 
உன்னத
 குரலில்.//  என்று சொல்லி இருந்தார்.




தனபாலன் சொன்ன பாடல் இதுதான் என்று நினைக்கிறேன் 
காலத்தை வென்ற பாடல்.  'கொஞ்சும் சலங்கை' படத்தில் 
நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்காகப் பாடிய 
இனிமையான பாடல். திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
 சொன்னதுபோல்  எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் தான்.

 நாதஸ்வர இசைச் சக்கரவர்த்தி, காருகுறிச்சி அருணாசலம் 
அவர்களுடன் ஜானகி அவர்களின் குரல் இழைந்து இணைந்து பாடுவது
 அற்புதம்.

                                                
என் தாய்மாமா அவர்கள் எழுதிய இந்த முருகன்  திருத்தல 
வரலாற்றில் நான் எழுதிய கதிர்காமம் பதிவும் இடம் பெற்று 
இருக்கிறது.  மாமா அவர்கள்  என்பதிவையும்  சேர்த்துக் கொண்டது 
அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது. இதுவும் முருகனின் அருள்தான்.
                                                
   
  அவர்கள் கையெழுத்துப் போட்டு அந்தப் புத்தகத்தைத் தந்தார்கள். அவர்கள் கையெழுத்து  அழகாய் இருக்கும். அவர்கள் கம்யூட்டர் கற்றுக்
 கொள்ள வில்லை கதை, கட்டுரைகளை  அவர்கள் இறக்கும் 
வரை (84) அவர்களே எழுதித்தான்  அச்சேற்றக் கொடுப்பார்கள்.
  முருகன் அவர்களின் இஷ்ட தெய்வம். இன்று அவர்களையும் 
 நினைத்து வணங்கிக் கொள்கிறேன்.

இந்த ஆறு நாட்களும் முருகன் அருளால் முருகனைச் சிந்தித்து 
இருந்தோம். இதில் என்னுடன் தினம் தொடர்ந்து வந்த அனைவருக்கும்
 நன்றி.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க சேவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.


வள்ளி கணவன் பெயரை தினம் சொல்லடா தம்பி
உன் வாழ்வு வளம் பெறவே! பாடல் அருமையாக இருக்கும் 

இந்த காணொளி அருமையாக இருக்கும், பாடல் கேட்டு இருப்பீர்கள்
மீண்டும் கேட்டுப் பாருங்கள்.

அருள் வடிவான  வள்ளி தேவசேனாபதியை  வணங்கி வாழ்வில்
 வளம் பெறுவோம்.

ஆறு நாளும் தொடர் பதிவில் முருகனை சிந்தித்தோம். 
தொடர்ந்து வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி நன்றி.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------