புதன், 31 அக்டோபர், 2018

இருள் விலக்கும் பண்டிகை

மகன் வீட்டு வாசலில்  ஆலோவீனுக்கு வைத்து இருந்தது. டிராகன் போல் பல், நாக்கை நீட்டிக் கொண்டும் இருக்கும் பொம்மை  மகனே செய்தது.டிராகன் வாயிலிருந்து புகை வருவது போல் செய்து இருந்தான்.

நாங்கள் ஆலோவீன் கொண்டாட்டத்தைப் போன  ஆண்டு மகனுடைய ஊரில்  கொண்டாடி மகிழ்ந்தோம். அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

திங்கள், 29 அக்டோபர், 2018

தோசை அம்மா தோசை !


குருணை தோசை , முழு உளுந்து தோசை என்பார்கள். முன்பு வீட்டில் நெல் அரைத்து அரிசி  எடுப்பார்கள், அப்போது அரிசியை   முழு அரிசி தனியாக, குருணை தனியாக எடுத்து வைத்து இருப்பார்கள், அதிலும் சிறு குருணை, தனியாக, பெரிய குருணை என்று எடுத்து வைத்து இருப்பார்கள். அதில் பச்சரிசிக் குருணை, புழுங்கல் அரிசிக் குருணை என்று தனித் தனியாக எடுத்து வைப்பார்கள். 

அந்த குருணைகளில் விதவிதமாய் உணவுகள் செய்வார்கள், காய்ச்சல் வந்தால் குருணைக் கஞ்சி செய்வார்கள், உப்புமா செய்வார்கள். குருணைத் தோசை செய்வார்கள். மீதி குருணைகள் பறவைகள், எறும்புகளுக்கு உணவாகும்.

 இப்போது நாம் குருணை, கல் நீக்கிய முனை உடையாத  முழு அரிசி வாங்கி கொண்டு இருக்கிறோம். அதனால் குருணைத் தோசை என்று சொல்லாமல் முழு உளுந்து  தோசை என்று சொல்கிறோம்.
வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஜன்னல் வழியே!எங்கள் வீட்டு  ஜன்னல் வழியே  பறவைகளைப் பார்த்து ரசிப்பதைப்    பகிர்ந்து வருகிறேன். இந்தப் பதிவில் குருவிகள். மீண்டும் குருவிகள் குஞ்சு பொரித்து இருக்கிறது. வீட்டைச் சுற்றி குருவிகள் சத்தம் கொடுத்துக் கொண்டு சுற்றித் திரிகிறது, உணவு எடுத்து குஞ்சுகளுக்கு கொடுக்க.

வியாழன், 25 அக்டோபர், 2018

அன்னாபிஷேகம்

Image may contain: people standing, plant, food and indoor
ஐப்பசி மாதத்தில்  பெளர்ணமியன்று சிவபெருமானுக்கு  அன்னாபிஷேகம் செய்வார்கள்.  இந்த அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டால்  உணவுப் பஞ்சம் ஏற்படாது என்றும் சொல்வார்கள். 

வெள்ளி, 19 அக்டோபர், 2018

கொலுப்பார்க்க வாருங்கள் -7

அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம்  கழுத்து நகை பட்டை(காசுமாலை)   கணவர் செய்தது.

கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா நிறைவு அடைவதால் சில நவராத்திரி நினைவுகள்.
ஒவ்வொரு வருடத்தில் என் கணவர்  சரஸ்வதி பூஜைக்கு அம்மன் செய்வார்கள்  அதில் சில   அம்மன்களைப் பார்க்கலாம்.  மஞ்சள் அரைத்து அம்மன்  முகம் செய்வது வழக்கம் எங்கள் குடும்பத்தில்.  அதை மாற்றி சந்தனத்தில் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்கள் என் கணவர்.  திருவெண்காடு, மாயவரத்தில் கண் கொசு நிறைய மழைக்காலத்தில் வரும் அது அம்மனை மிகவும் தொந்தரவு செய்தது அதனால் சந்தனத்தில் செய்தார்கள்.

புதன், 17 அக்டோபர், 2018

கொலுப் பார்க்க வாருங்கள் - 6
நவராத்திரிக்கு   கோவில்களில், வீடுகளில் உள்ள  கொலுவைத் தொடர் பதிவாக பதிவு செய்வதைப் பார்த்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தத் தொடரில் கடல் கடந்து வந்து இருக்கும் கொலு படங்கள்.

மகனின் நண்பர் வீட்டில் உள்ள கொலு படங்கள்.

போன வருடம் நாங்கள் நவராத்திரிக்கு மகன் ஊரில் இருந்தோம் அப்போது கொலுவிற்கு நிறைய நண்பர் வீடுகளுக்குப் போய் கொலு பார்த்து வந்ததைப் பதிவு செய்து இருந்தேன்.

போன வருடம் போக முடியாத நண்பர்கள் வீடுகளுக்கு  இப்போது போய் வந்து  நாங்கள் பார்க்க படங்கள் அனுப்பினான் மகன், அதை இங்கு நீங்கள் பார்க்க இங்கு பதிவாய்.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

கொலுப்பார்க்க வாங்க -5

நவராத்திரி பதிவாய் கோவில்கள், வீடுகளில் வைக்கும் கொலுவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 

இன்று  மதுரை சொக்கலிங்க நகர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் கொலு.
இந்த கோவிலில் சரஸ்வதிக்குத் தனி சன்னதி உள்ளது சிறப்பு.  மீனாட்சி சொக்கநாதர், சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி,  அனுமன்,  நவக்கிரகம் , தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சப்தமாதர்கள் 
மற்றும் ஐயப்பன் தனிச் சன்னதியில் இருக்கிறார். ஐயப்பன் சன்னதி மாதப்பிறப்பு மட்டும் தான் நடை திறக்கப்படும் . அன்று  காலை, மாலை திறந்து இருக்கும் மற்ற நாள் நடை சார்த்தி விடுகிறார்கள். ஐயப்பனுக்குப் பின்புறம் மஞ்சமாதா இருக்கிறார். பைரவரும் விநாயகரும் அரசமரத்தடியில் இருக்கிறார். கருப்பண்ணசாமி இருக்கிறார். எல்லாவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

திங்கள், 15 அக்டோபர், 2018

கொலுப் பார்க்க வாங்க -- 4


இன்று  மதுரை சோமசுந்தரம் காலனி  கற்பக விநாயகர் கோவில் கொலு 
இக்கோயில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கிறது. எல்லா விழாக்களும் சிறப்பாய் நடைபெறும். பிள்ளையார், சாய்பாபா, துர்க்கை, அனுமன், பெருமாள், மீனாட்சி, சொக்கநாதர், நவக்கிரங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன், பைரவர், ஐயப்பன்  சண்டிகேஸ்வரர்  என்று எல்லோரும் அருள் பாலிக்கும் கோயில்  .

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சனி, 13 அக்டோபர், 2018

கொலு பார்க்க வாருங்கள் -2
"கொலு பார்க்க  வாங்க" தொடர் பதிவில் இன்று இரண்டாவது நாள். நேற்று ஜெயநகர் பிள்ளையார் கோவில் இன்று "பொன்மேனி பொய்சொல்லா அய்யனார் கோவில்" கொலு  பாருங்கள்.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

கொலு பார்க்க வாருங்கள் -1

Image may contain: one or more people
நவராத்திரி  கொலு  என்றால் கோவில்களில். வீடுகளில் பார்ப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். பெரியவர் முதல் சிறியவர் வரை  கொலு பார்ப்பதில் ஆவலாக இருப்பார்கள்.

ஒவ்வொரு படியிலும் கொலுபொம்மைகளை  அமைக்கவேண்டிய விதி முறைகளை  எல்லோரும் சொல்லிக் கொண்டு இருந்தாலும்  அவரவர்களுக்கு மனதில் தோன்றிய மாதிரி அடுக்கி அழகு பார்ப்பதும் உண்டுதானே!

எங்கள் வீட்டில் இந்த வருடம் கொலு இல்லை. அடுத்தவருடம் பொளச்சிக் கிடந்தா இறைவன் அருளால் கொலு வைப்போம்.

பொளச்சிக் கிடந்தா வரேன் தாயி ! என்ற பதிவில் எங்கள் வீட்டுக் கொலுவைப் பார்க்கலாம்.

கோவில்களில், வீடுகளில் வைத்த கொலுவைப் பார்த்து மகிழ்ந்து எடுத்து வந்த படங்களை வரும் நாட்களில் பார்க்கலாம். என்னுடன் கொலு பார்க்க வருவீர்கள் தானே!

திங்கள், 8 அக்டோபர், 2018

ஜன்னல் வழியே!

கீழே என்ன செய்கிறாய்? மேலே வா 
இங்கும் உணவு இருக்கு மேலே வா

திங்கள், 1 அக்டோபர், 2018

முதியோர் தினச் சிந்தனைகள்.அக்டோபர் முதல்தேதி சர்வதேச முதியோர்தினம்  

நான் முன்பு போட்ட முதியோர் தினப் பதிவுகளைப் படித்துப் பார்த்தேன். அதிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.   

  கனவில் வந்த காந்திஜி  என்ற பதிவில்    முதியோர் பற்றிய    கேள்விக்கு   என் பதில்.

கனவில் வந்த காந்திஜி  என்ற தொடர் பதிவு
 தேவகோட்டை கில்லர்ஜி   அழைப்பு . ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை அழைத்தார்கள் அப்படி என்னை அழைத்தவர் சகோ துரை செல்வராஜூ அவர்கள்.

4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

//முதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால்  நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள்.

 அவர்களில் ஏழை முதியோர்கள், ஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்கக் கூடாது என்று அரசாங்கமே  அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க  உணவு, உடை, மருத்துவ வசதி,  அன்பாகப் பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.//