அவரே நடித்து பாடியது "வா ராஜா வா" என்ற படத்தில் பாடியது.
அருமையான வரிகள். கேட்டு பாருங்கள்
இன்று இசையோடு நீங்கள் என்று நிகழ்ச்சி மதுரை ரெயின்போ பண்பலையில் கேட்டேன். சினேகிதி நேயர் விருப்பத்தில். ஒரு அம்மா இன்று சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களின் நினைவு நாள் என்றார்கள். அதனால் இந்த பாடலை கேட்டார்கள். எனக்கு பிடித்து இருந்தது, அதனால் இந்த பகிர்வு.
//இசையால் அவனை இரங்க வைப்பது மனிதன் குணமாகும்
இசையால் மயங்கி இரங்கி வருவது இறைவன் மனமாகும்//
இந்த பாட்டில் வரும் வரி அது போல அவர் தன் பாடல் மூலம் இறைவனை இரங்கி வர வைத்தவர் தான்.
நெல்லை அருள் மணி அவர்கள் பாடலை இயற்றி இருக்கிறார். இசை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.
//ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை முன்வைக்க சில தீம்கள் கையாளப்படும். அந்த வகையில் நேற்று செனகலின் டாக்கரில் 9வது உலக நீர் மன்றத்தின் தொடக்க அமர்வில் IGRAC (nternational Groundwater Resources Assessment Centre) தனது கருப்பொருளான நிலத்தடி நீர் - Making The Invisible Visible என்பது முன்மொழியப்பட்டுள்ளது. //
நன்றி - தினமலர்.
இந்த பதிவில் எங்கள் குடியிருப்பு பக்கம் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் . அதனால் பறவைகள் படும் துயரம் இவற்றை இந்த உலக தண்ணீர் தின நாளில் எழுதலாம் என்று எழுதி இருக்கிறேன் .
தங்கி இருந்த இடத்தில் தோட்டத்தில் உள்ள மலர்களும், நடைபாதையில் பார்த்த மலர்களும்
தங்கி இருந்த இடத்தில் இருந்த பூந்தோட்டம்
ஊமத்தம் பூ போல
செடி இல்லை மரத்தில் பூத்து இருக்கும் பூ
அடுக்கு இல்லா செண்டு பூ
இட்லி பூ போல சின்னது
ரோஜா
இலைகள் போல பூ இதழ்கள்
பறங்கிப் பூ போல
கனகாம்பரம் போல பூ
காட்டுச் செடியிலும் அழகான பூ
காலை பனிதுளி இலையில், பூவில்
பென்சிலை சீவிய துகள்களில் பூ மாதிரி வருமே அது போன்ற தோற்றம் தரும் பூ
மலரில் பனித்துளி
வெள்ளை சிவந்தி
நடந்து போகும் போது பாதையில் கண்ட பூ
கண்டங் கத்திரிக்காய் , காய் பழம் இரண்டும் இருக்கு. கீழ் கிளையில் காய் இருக்கிறது. கத்திரிப்பூ கலரில் ஒளிந்து இருக்கிறது பூ. பூக்கள் என்று போட்டு விட்டு காய் , பழம் என்று சொல்கிறாள் என்று நினைக்ககூடாது பாருங்க. பழம் அழகாய் இருந்தது படம் எடுத்து விட்டேன் .
பங்குனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம். பல விழாக்கள் நடைபெறும் கோயில்களில். குறிப்பாக குலதெய்வ வழிபாடு சிறப்பு. எங்கள் குலதெய்வம் கோவில் இப்போது கும்பாபிஷேகம் நடந்து புது பொலிவுடன் இருக்கிறது.
எங்கள் குலதெய்வம் மடவார்விளாகம் என்ற ஊரில் இருக்கிறது.
மகள் குடும்பத்துடன் தேனீ மாவட்டத்தில் உள்ள மேகமலை தேயிலை தோட்டத்தை பார்க்க போய் இருந்தோம். (பிப்ரவரி 12ம் தேதி போய் வந்தோம்.) அங்கு பார்த்த இயற்கை காட்சிகளும் பறவைகளின் ஒலியும், கேட்ட பாடல்களும் இந்த பதிவில் இடம்பெறுகிறது. சின்னமனூர் ஊரிலிருந்து மலைப்பாதை வழியாக மேகமலைக்கு போகலாம்.அழகான