சனி, 22 ஆகஸ்ட், 2020

பிடித்து வைத்தாலும் பிள்ளையார்

இந்த வருடம்  மஞ்சளில் நான் செய்த பிள்ளையார் 

களிமண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல் கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம், போன்ற ரத்தினங்கள் தந்தம்  , வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம் , வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர்  வடிவத்தை அமைக்கலாம். என்று சொல்வார்கள். ஆனால் எளிமையாக மஞ்சள், பசுஞ் சாணத்தில் செய்து வணங்கினாலே மகிழ்ந்து போவார் பிள்ளையார்.

புதன், 19 ஆகஸ்ட், 2020

சிட்டுக்கள்! சின்னச் சிட்டுக்கள்!
என் வீட்டு ஜன்னலில்

சிட்டுக்குருவிகள் பக்கத்துவீட்டுச் சுவரில் ஒவ்வொரு தடவையும்  கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.  இந்த இடம் உங்களுக்குத் தெரிந்த இடம் தான். ஓவ்வொரு முறை குஞ்சு பொரித்துப் போகும்போதும் பதிவுகள் போட்டு இருக்கிறேன்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கிருஷ்ணஜெயந்தி

கண்ணன் பிறந்தான்   மனக்கவலைகள் போக்க மன்னன் பிறந்தான்.
எங்கள் வீட்டில் கண்ணன்!

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே.
-பெரியாழ்வார் திருமொழி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

கன்யாடி ஸ்ரீ ராமர் கோவில், தர்மஸ்தலா

 கர்நாடகா பயணத் தொடரில்  இந்தக் கோவிலும் உண்டு.குக்கி சுப்பிரமணியா கோவில் போய்விட்டு   வழியில் உள்ள இந்த ராமர் கோவில் போனோம்.

ஸ்ரீ ராம ஷேத்ரா என்று அழைக்கப்படுகிறது. 1978 ல்  ஸ்ரீ ஆத்மானந்த சரஸ்வதி என்பவர் மூன்றடுக்குகள் உள்ள இந்த கோவிலைக் கட்டி இருக்கிறார்.
இராமாயணம் பற்றிய  சிற்பங்கள் முகப்பில் உள்ளன.

மங்களூரிலிருந்து 74 கி.மீ,  தர்மஸ்தலாவிலிருந்து 3 1/2 கி.மி தூரத்தில் கன்யாடியில்  ஸ்ரீ ராம க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் இந்த   ஸ்ரீராமர் கோவில்  உள்ளது. 
பட்டாபிஷேகக் காட்சியில்  ராமர்  அழகாய் கொலுவீற்று இருக்கும் கோவில்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

சிறு தேர் உருட்டல்


சிறு தேர்  உருட்டல்

ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு  சிறுதேரை உருட்டி கொண்டு போய்  விளையாடியவர்களுக்கு  நினைவுகள்  வரலாம்.

இன்று ஆடிப் பெருக்கு!  வருடா வருடம் மக்கள் எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடும் பண்டிகை. இந்த முறை மக்களிடம் உற்சாகமாய்க் கொண்டாட முடியாத சூழல்.

ஆடிப் பெருக்கு அன்று குழந்தைகள் சிறு தேர் செய்து ஆற்றுக்கு எடுத்துச் சென்று விளையாடி மகிழ்வார்கள். மாயவரத்தில் இருந்த போது பார்த்த காட்சிகள். 

நடந்தாய் வாழி காவேரி

இன்று காவிரி இருக்கும் நிலை! காவிரியில் ஆடிப்பெருக்குக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட பின்னும் மயிலாடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று மாலை 6 மணிக்கு இப்படி தோற்றமளிக்கிறது! இன்று காலை அகத்தியர் படத்தில் வந்த நடந்தாய் வாழி காவேரி என்ற பாடல் டீ.வீ யில் கேட்டேன். ‘ இன்று ஆடி பெருக்கு அல்ல்வா அதனால் காவேரி பாடல்கள் வைக்கிறார்கள் நாம் போன வருடம் ஆடிப் பெருக்குப் பற்றி எழுதினோம் அல்லவா’ என்று நினைவு வந்தது. நம் ஊருக்கு தண்ணீர் வரவில்லையே ஆத்துக்கு போய் சாமி கும்பிடுபவர்கள் என்ன செய்தார்களோ என்று நினைத்துக் கொண்டேன். அகத்தியர் படப் பாடல்: /அடர்ந்த மலைத் தொடரில் அவதரித்தாய்! அழகு தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்! நடந்த வழி யெல்லாம் நலம் பயத்தாய்! நங்கையர் உன்னை வணங்கவும், அழகு கொஞ்சும் சோலைகள் விளங்கவும் .... .... .... .... நாடெங்குமே செழிக்க நன்மை யெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி./ இப்படி அந்த காலத்தில் காவேரி அகன்ற காவேரியாய்= அவள் நடந்து வந்த பாதையெல்லாம் எல்லோருக்கும் எல்லா வளங்களையும் அள்ளி வழங்கினாள் என்று தெரிகிறது.ஆனால் இன்று சுருங்கி ,வற்ண்டு காவேரி கடலில் கலப்பதும் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை. மறுபடியும் காவேரி நடந்து வர வேண்டும்,நாடு செழிக்க வேண்டும்.எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும். அதற்கு காவேரித் தாய் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆடிக் காற்றில் அம்மியும் அசையும் என்பார்கள்.இப்போது காற்று மருந்துக்குகூட இல்லாமல் வெப்ப சலனமாய் உள்ளது.அங்கு அங்கு மழை பெய்கிறது.இங்கு மழையே இல்லை. சீனா,பாகிஸ்தானில் வெள்ளம்.ஒரு இடத்தில் தண்ணீரால் கஷ்டம்,ஒரு இடத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டம். இயற்கையின் திருவிளையாடல் புரியவில்லை. இயற்கையைப் போற்றுவோம். / ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்./ ”மாரி மழை பொழிய வேண்டும்,மக்கள் சுற்றம் வாழ வேண்டும் காடு கரை நிறைய வேண்டும்,மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.”