"கால் வலிக்குது தூக்கிச் செல்" (நண்பர்கள்)
அமெரிக்கக் கட்டிடக் கலை நிபுணரும் வடிவமைப்பாளரும் ஆகிய மேரி கோல்ட்டர் என்னும் பெண்மணியால் உருவாக்கப்பட்ட காட்சிக் கோபுரம் இங்கு உள்ளது.இதன் உள்ளே படிவழியாக மேலே சென்று கிராண்ட் கென்யானையும் கொலொராடோ ஆற்றையும் காணலாம். இந்தக் கோபுரத்தின் ஒவ்வொரு கல்லும் பேசும் ஓவியங்களைக் கொண்டுள்ளது.முக்கோண வடிவிலும்,வைரத்தின் வடிவிலும் அமைந்த பாறைகளில் வண்ணப்பட்டைகள் அமைந்துள்ளன. T வடிவிலான கதவுகளும்,ஒடுங்கிச் செல்லும் சன்னல்களும் உள்ளன. கரடு முரடாக உள்ள கற்களின் புறப்பரப்புகள் வினோதமான நிழல்களை ஏற்படுத்துகின்றன.
இந்த அறிவிப்புப் பலகையில் இங்கு பருவநிலை திடீர் திடீர் என்று மாறும் அதனால் கவனமாய் இருக்க வேண்டும் என்றும், மழை, இடி, மின்னல், புயல் எல்லாம் திடீர் என்று ஏற்படும் அதனால் உள் பகுதிக்குள் நடந்து போவதை தவிர்க்க வேண்டும் என்றும் வளர்ப்புப் பிராணிகளைக் கவனமாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜிபிஎஸ் உதவி சில நேரம் இதற்குள் வழியைச் சரியாக காட்டாது, கவனமாய் இருக்க வேண்டும் என்றும் போட்டு இருக்கிறது.
காட்சிக் கோபுரம் போகும் வழியில் மண்ணுக்குள்ளிருந்து எலி போன்ற ஒன்று வலை தோண்டிக் கொண்டு இருந்தது.
அதன் முகம் அதன் மீசை சீல் விலங்கை நினைவுபடுத்தியது எனக்கு
அதன் நான்கு பல்லும் நல்ல பெரிதாக இருந்தது
பேரனும் மருமகளும்
கோபுரத்தின் உள் புறம் மேல் புறம்
மர ஆசனம் குளிர் காயும் இடம்
முதலில் ஏறும் இடம் மட்டும் கொஞ்சம் குறுகலாக இருக்கிறது.
அடுத்த தளம் செல்ல நல்ல தாராளமாய் ஏறுவதற்கு வசதியாக உள்ளது படிகள்.
ஏறும் போதே மேல் தளத்தில் வரைந்து இருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
மேல் விதானத்திலும் அழகிய ஓவியங்கள்- பழங்குடியினரின் ஓவியங்கள்
அவர்கள் வாழ்க்கை முறைகள் எல்லாம் ஓவியமாய் இருக்கிறது
மரத்தினால் செய்த ஆசனங்கள்
சோளக் கதிர் சாப்பிடும் பறவை
மேலிருந்து எடுத்தபடம்
மேல் பகுதியில் இருந்து அழகான காட்சிகளைக் காணலாம் சூரியனும் நம்மைப் பார்க்கிறார்
மேல்தளத்திலிருந்து கண்ட அழகிய பள்ளத்தாக்குக் காட்சிகள்.
கொலொராடோ ஆற்றின் அழகைக் காணலாம்
ஆறு வளைந்து வளைந்து போகும் காட்சி அழகு
ஜன்னல் வழியாகப் பார்த்த காட்சி.
மஞ்சள் புற்களும், கரும்பச்சை மரங்களும், நீண்ட தூரம் செல்லும் பாதையும் அழகு
பாதை நடுவில் கற்களால் அழகாய் ஒரு மலர் இதழ்கள்.
இதில் விளக்கு எரிகிறது
கம்பித் தடுப்பு வழியாகப் பள்ளதாக்கின் அழகைப் பார்க்கலாம் பாதுகாப்பாய்.
அமெரிக்கப் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள், மற்றும் அவர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கடை எல்லாம் அடுத்த பகுதியில்.
வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------